இடுகைகள்

செப்டம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உனக்கான கவிதை

உன்னை கண்டவுடன் பொய் சொல்ல முடியாமல் தவிர்க்கும் போது வருவதே உனக்கான கவிதை

சிற்பமாக வடிக்கிறேன் ....!!!

நீ கருங்கல்லாக இரு நான் சிற்பமாக வடிக்கிறேன் இரும்பாக இரு அதிலும் சிற்பமாக வடிக்கிறேன் ....!!!

முத்தம் கிடைக்கும் ....!!!

பலமுறை பார்த்தால் ஒருமுறை காதல் வரும் -காதலின் பின் பலமுறை ஏங்கினால் -ஒருமுறை முத்தம்  கிடைக்கும் ....!!!

எப்போதும் மறக்காமல்

எப்போதும் மறக்காமல் இருப்பது காதல் என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது நட்பு

நீ என்னை வெறுத்து

நீ என்னை வெறுத்து பலமாதங்கள் ஆகிவிட்டது -என்றாலும் நாம் முதல் நாளில் பெற்ற இன்பத்துடன் வாழ்ந்துகொண்டே இருக்கிறேன் ....!!!

எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?

எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?   காற்சட்டை போட்ட வயதில் .... கைகோற்றுக்கொண்டு ஒட்டிபிறந்த உடன் பிறப்புப்போல் ஊர் முழுவதும் சுற்றி திரிவோம் வெய்யில் மழை பாராமல் - உன் பெயரை எனக்கும் என் பெயரை உனக்கும் மாற்றி கூப்பிடும் தாத்தாவின் தர்மசங்கடத்தை இன்று நினைத்தாலும் சிரிப்புவரும் .. சொல்லி சிரிக்க வேண்டும்போல் இருக்கடா எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...? லுங்கி கட்டியவயத்தில் ..... எனக்கு வருத்தமென்றால் -உன் உடல் சோரும் -உனக்கு வருத்தம் என்றால் எனக்கு உடல் சோரும் ஊரிலுள்ள மூலிகை எல்லாம் கொண்டுவந்து தந்து குடியடா .. குடியடா என்று நச்சரித்து நச்சரித்து மூலிகையால் வருத்தம் மாறுதோ தெரியாது உன் அன்பு மூலிகையால் மாறிவிடும் வருத்தம் -இதையெலாம் சொல்லி சிரிக்கணும் போல இருக்கடா எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...? ஜீன்ஸ் போட்ட வயதில் ..... எனக்கு தான் காதல் வலி எனக்கு தான் வாழ்க்கை வலி உனக்கு நான் சொல்லி அழும்போது உன் ஓரக்கண்ணால் வடியுமடா ஒரு துளி கண்ணீர் - நான் குடம் குடமாய் வடித்த கண்ணீருக்கு ஈடாகுமடா உன் ஒரு துளி கண்ணீர் -இப்போ நினைத்தாலும்

அழைக்க மாட்டாயா ...?

ஞாயிறு- முகமுடையாள் திங்கள்- உடல் அழகுடையாள் செவ்வாயால்- மெல்ல சிரித்தாள் மாதுருபாகன்- மயங்கினான் காதலில் வியாக்கியானம் செய்கிறாள் எனக்கு குரு- போல் ... நான் துடிக்கிறேன் தூரத்து வெள்ளி- போல் சனியனே- வந்து விடு என்றாவது அழைக்க மாட்டாயா ...?

பிரிவும் காதலில்

பிரிவின் வலியை நீ தாங்குவாய் என்றால் பிரிவை நான் ஏற்கிறேன் நீ இல்லாத ஒரு வறண்ட வாழ்கை கொடூரம் தான் .. என்ன செய்வது பிரிவும் காதலில் ஒரு அங்கம் தானே ....!!!

Haikoo -05

மரம் பரவசப்பட்டது கிளையெல்லாம் ஜோடிக்கிளிகள்

Haikoo 04

எனக்கும் உனக்கும் தெரியாமல் அழுதேன் கனவில்

Haikoo-03

நிமிடத்துக்கு மாறும் சிரிப்பு அழுகை காரணம் வேறென்ன..? காதல்...!

Haikoo -02

உடல் உயிர் கொல்லி எயிற்ஸ் உள உயிர் கொல்லி காதல்

Haikoo-01

அப்பா மின்னல் அம்மா மழை குடும்பசண்டை

யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....?

கண்டதையும் கேட்டதையும் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? பயணம் பல செல்கிறேன் பயணத்தில் பல பார்க்கிறேன் பட்ட பார்த்த அனுபவத்தை வாழ்க்கை கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? மரம் வெட்டும் போது என் மனதில் இரத்தம் வடியும் எழும் என் உணர்வை சமுதாய கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? அடிமாடாக அடித்து அடுத்த வேளை உணவுக்கு அல்லல் படும் குடும்பங்களை பார்ப்பேன் மனம் வருந்தும் பொருளாதார கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? காதோரம் கைபேசியை வைத்து கண்ணாலும் சைகையாலும் தன்னை மறந்து கதைக்கும் காதலரை பார்க்கிறேன் காதல் கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? சின்ன வயதில் எல்லோருக்கும் காதல் தோல்வி வரும் -அதை மீட்டு பார்க்கும் போது உயிரே வலிக்கும் .வந்த வலியை கொண்டு காதல் தோல்வி கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன்

கண்ணீர் ஆக்கியது நீ ....!!!

நிலா உன்னை கண்டதால் வருத்தபடுகிறது -என்னை காத்திருப்பதை நினைத்து ...!!! நான் பாதை நீ தூரம் காதல் தான் கால் பயணம்தான் முடியவில்லை ...!!! இது கண்ணீர்  கதை இல்லை நம் காதல் கதை கண்ணீர் ஆக்கியது நீ ....!!! கஸல் 501

காதல் மிரட்டி வரகூடாது ...!!!

காத்திருக்கிறேன் காதல் வந்தது நீ வந்தாய் இருந்த காதலும் போனது ....!!! உன்னை விட்டால் என்னை காதலிக்க யாரும் - என்று நினைக்கிறாய் அது காதல் இல்லை ...!!! உனக்கு பயந்து என் வீட்டாரே வந்து விடார்கள் உன்னை பெண் பார்க்க ... காதல் மிரட்டி வரகூடாது ...!!! கஸல் 502

ஜோடிக்கிளிகள்

மரம் பரவசப்பட்டது கிளையெல்லாம் ஜோடிக்கிளிகள்

கனவில்

எனக்கும் உனக்கும் தெரியாமல் அழுதேன் கனவில்

காரணம் வேறென்ன..?

நிமிடத்துக்கு மாறும் சிரிப்பு அழுகை காரணம் வேறென்ன..? காதல்...!

காதல்

உடல் உயிர் கொல்லி எயிற்ஸ் உள உயிர் கொல்லி காதல்

குடும்பசண்டை

அப்பா மின்னல் அம்மா மழை குடும்பசண்டை

அதிகமுறை உண்ணா நோன்பு இருந்தவர்கள்

நித்தம் நித்தம் வேலை செய்து  அடுப்பு மூட்டும் அங்காடிகள் நாம்  நிலையற்ற தொழிலில் நிச்சயமற்ற  வருவாயில் வயிறு காக்கும் தினக்கூலி  அங்காடி குடும்பம் நாங்கள் .....!!! மழை பெய்தால் வேலையில்லை  கடும் காற்றாடித்தால் வேலையில்லை  முதலாளி வராவிட்டால் வேலையில்லை  வேலையில்லாவிட்டால் வேலையில்லை  நிச்சய தொழிலில்லாத தினமும் அலையும்  தினக்கூலி குடும்பங்கள் நாம் ....!!! ஆலயம் செல்வதில்லை -ஆனாலும்  ஆண்டவனிடம் மன்றாடுவோம்  இன்று மழைவரக்கூடாது  கடும் காற்று அடிக்க கூடாது  முதலாளி சுகநலத்தோடு வாழனும்  ஆகாயத்தை நம்பி ஆயுளை நடார்த்துகிறோம்  நோய் என்று இருக்க மாட்டோம்  வந்தாலும் சோரமாட்டோம்  ஒரு வேளை சோறு நாம் உருண்டால் தானே உண்டதுண்டு -உலகிலேயே  அதிகமுறை உண்ணா நோன்பு இருந்தவர்கள்  நாமாகத்தான் இருக்கமுடியும் ....!!! எங்களுக்கும் காலம் வரும்  தேர்தல் வரும் காலம் பொற்காலம்  இலவச உணவு உடுக்க உடை  படுக்க பாய் குடிக்க நீர் -அடிக்க தண்ணீர்  எங்களின் இயலாமையை நன்றாக பயன்  படுத்தும் அரசியல் வாதிகள் .....!!! ஆயிரம் சட்டங்கள் அடுக்கடுக்காய் வரும்  ஒருசட்டம் கூட தினக்கூலியை  காப்பாற்றவில்லை  தினகூலியை காப்பாற்ற அரசிய

காதலை விட்டால் எங்கே உண்டு ....?

உன்னோடு சண்டையிடும் போது அந்த நொடியில் என் மனமே என்னிடம் கேட்கும் -ஏனடா ..? இப்படியேல்லாம் சித்திரவதை செய்கிறாய் ...? வீடு  வந்து சிந்திப்பேன் -இனிமேல் சண்டையிட கூடாது கூடாது ...!!! அடுத்தமுறையும் ஏதோ சண்டை ....!!! நீ மௌனம் நான் கெஞ்சல் நான் மௌனம் நீ கெஞ்சல் -இந்தசுகம் காதலை விட்டால் எங்கே உண்டு ....?

காதலித்துப்பார் வெற்றி

ஒவ்வொரு இளவயதினரதும் முதல் உணர்வு காதல்  முதல் வெற்றியும் காதல்  காதலில் வெற்றிதான்  வாழ்க்கையை வசந்தமாக்கிறது காதலித்துப்பார் வெற்றியின்  இன்பம் தெரியும் ....!!!

இருமுறை பிறக்கிறான்

ஒவ்வொருவனும் வாழ்க்கையில் இருமுறை பிறக்கிறான் தாயின் மடியில் காதலியின் மடியில் இரண்டாவது பிறப்பு மனிதனாக்குகிறது முதல் பிறப்பு மனிதனாக பிறக்கிறான் ....!!!

காதலின் இரட்டை குழந்தைகள்

எப்போது விடியும் -அவளை எப்போது பார்ப்பேன் ...? எப்போது வருவாள் ..? பார்ப்பாளா ...? பார்த்தும் பார்க்காமல் போவாளா ...? சிரிப்பாளா .....? கடைக்கணால் கூட பார்ப்பாளா ....? பேசுவாளா ...? நான் பேசினால் பேசுவாளா ...? என்றோ ஒருநாள் காதலிப்பாளா ..? காதலித்தால் பெற்றொர் சம்மதிப்பார்களா ...? இப்படிதான் காதலில் .... காதலின் இரட்டை குழந்தைகள் ஏக்கமும் வலியும்.....!!!

சின்ன சின்ன ஆசைதான் ....!!!

தினமும் குடையோடு வருகிறேன் கண்ணே மழை வராது என்று தெரிந்தாலும் குடையோடு வருகிறேன் -திடீரென மழைவந்தால் அப்போது என்றாலும்  நாம் இணைந்து செல்வோமோ என்ற சின்ன சின்ன ஆசைதான் ....!!!

நான் ஏமாறுவது...?

எத்தனை முறை நான் ஏமாறுவது...? நீ இன்று பதில் சொல்வாய் நாளை பதில் சொல்வாய் என்று ....!!! எத்தனை முறை மீண்டும் மீண்டும் ஏமாறுவது ....? உன்னை போல் உடை அணிந்து வந்தவர்களை நீதான் என்று எத்தனைமுறை ஏமாறுவேன் .....!!!

கற்று தந்துவிடாதே ...!!!

காதல் பாடம் சொல்லி தந்தவளே முதலில் நட்பை கற்று கொடுத்தாய் காதல் உணர்வை கற்று கொடுத்தாய் காத்திருக்க கற்று கொடுத்தாய் கோபப்பட கற்று கொடுத்தாய் இன்னும் என்ன கற்றுத்தர போகிறாய் தயவு செய்து எப்படி மறப்பது என்று மட்டும் கற்று தந்துவிடாதே ...!!!

கருணை இருந்தால் நட்பு ....!!!

கண்ணில் ஒரு கவர்ச்சி இருந்தால் காதல் ...!!! கண்ணில் ஒரு கருணை இருந்தால் நட்பு ....!!! முகத்தில் ஒரு அழகு இருந்தால் காதல் ....!!! முகத்தில் ஒரு அடக்கம் இருந்தால் நட்பு .....!!! சிரிப்பில் ஒரு பாசம் இருந்தால் காதல் ...!!! பாசமே சிரிப்பெல்லாம் இருந்தால் நட்பு ....!!!

எல்லையற்றது நட்பு ....!!!

காதலியாக உன்னை நினைத்து துரிகையை எடுத்தேன் ரோஜாவாக நீ தெரிந்தாய்.....!!! நண்பியாக உன்னை நினைத்து துரிகையை எடுத்தேன் பூவின் வாசனைதான் வந்தது ....!!! எல்லையுள்ளது காதல் எல்லையற்றது நட்பு ....!!!

அதிர்ந்தே போனார்கள் ....!!!

உலகிலேயே மிகவும் மோசமான துன்பத்துக்கும் அதை சொல்பவருக்கும் உலக பரிசு என்றார்கள் நம் காதல் கதையை சொன்னேன் முதல் அதிர்ந்தே போனார்கள் ....!!!

உன் நினைவில்லாமல்

நிலவெல்லாம் செல்ல முடியுமோ ..? தெரியாது உன் நினைவில்லாமல் நான் எங்கும் செல்ல முடியாது ....!!!

காதலிக்க தெரியவில்லை ...!!!

மனதைக் கலைக்கத் தெரிந்த உனக்கு என் மனதில் வர தெரியவில்லை ....!!! காதலை தூண்ட தெரிந்த உனக்கு காதலிக்க தெரியவில்லை ...!!!

உவமைகளையே பொயாக்கியவள் நீ

உன்னை அழகி என்பேன் ....? பூப் போன்ற முகமுடையவள் பால் போன்ற பல் அழகி நிலா போன்ற நெற்றி யழகி நதி போன்ற கண்ணழகி உனக்கு மட்டும் தான் உலக அழகி என்பேன் ....!!!! மான் போன்ற நடையழகி அன்னம் போன்ற பேச்சழகி கிளிபோன்ற பாட்டழகி உவமைகளையே பொயாக்கியவள் நீ உலக பேரழகி .....!!!

இதயத்தை விட்டு சென்று -விடாதே ....!!!

பூப் போன்ற என் இதயத்தை மரம் வெட்டும் வாளால் வெட்டுகிறாய் -இந்த துணிவு இங்கு யாருக்குவரும் சொல்..? வெட்டுவதற்கு உனக்கு அனுமதிக்காமல் விட்டு எனக்கேன் .? என் இதயம் ...? இதயத்தை வெட்டு இதயத்தை விட்டு சென்று -விடாதே ....!!!

உன்னை எனக்கு பிடித்தது

என்னவளே உன்னை எனக்கு பிடித்தது உனக்கும் என்னை பிடித்தது .-இதற்கு மேலாக காதலுக்கு நம்மை பிடித்தது காதலித்தோம் ....!!! கவிதை பிடிக்குமென்றாய் கவிதை எழுதினேன் திருமணம் பிடிக்கும் என்று எப்போது சொல்வாய் ....?

எப்படி தாங்கும் என் இதயம் ....?

தனிமையில் இருக்கும் போதெல்லாம் நீ தந்த வலிதான் நெஞ்சில் ஊசியாய் குத்துகிறது உன் வலி மட்டுமல்ல -உன்னால் கடவுளை தரிசிக்க மறந்தேன் உறவுகளை மறந்தேன் உற்ற நண்பனை மறந்தேன் காதல் வலி என்றால் தாங்கி இருப்பேன்  மொத்தவலியை எப்படி தாங்கும் என் இதயம் ....?

காதல் தான் மறந்து விடாதீர் ....!!!

இதயத்துக்கு உச்ச மகிழ்ச்சி காதல் என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன் அதே இதயத்துக்கு உச்ச வலியும் காதல் தான் மறந்து விடாதீர் ....!!!

தப்பிக்கொள்ளுகிறான்....!!!

ஒவ்வொரு காதல் சொல்லிலும் ரோஜாவும் முள்ளும் இருக்கும் ...!!! கவனித்தவர் தப்பிக்கொள்ளுகிறான்....!!!

காதல் உடல் உள பயிற்சி நிலையம் .....!!!

உடல் கட்டழகுக்கு உடற்பயிற்சிக்கு சென்றேன் உள பயிற்சிக்கு ஆன்மீக நிலையம் சென்றேன் உன்னை சந்தித்திருந்தால் எங்குமே சென்றிருக்க மாட்டேன் காதல் உடல் உள பயிற்சி நிலையம் .....!!!

அழுதுகொண்டிருக்கிறது என் இதயம் ....!!!

திருடிய இதயத்துக்கு என் இதயத்தை கொடுத்தேன் என் சந்தேகம் அவளின் இதயத்தை கருக்கியது ....!!! இப்போ யாருக்குமே கொடுக்க முடியாத இதயமாகி விட்டது என் இதயம் ....!!! ஓரத்தின் ஒரு மூலையில் தனியே அழுதுகொண்டிருக்கிறது என் இதயம் ....!!!

நினைவுகள் முள்ளாய்

கவலைப்படாமல் -அவள் இதயத்தை திருடினேன் திருடிய குற்றத்துக்காக காதல் தோல்வி-என்னும் சிறையில் வாழுகிறேன் நினைவுகள் முள்ளாய் குற்றுகிறது ....!!!

வரி

குதிரைக்கு அழகு   மக்களுக்கு சுமை   வரி

காதல் நம்மை மீட்கும் ...!!!

படம்
காதலை கம்பி எல்லையால்   தடுத்து விட முடியாது   கலங்க்காதே கண்ணே ... காதல் நம்மை மீட்கும் ...!!!

பனிக்கட்டியாவேன் ....!!!

படம்
பனிக்கட்டியையே உருகவைக்கும்   காதல் - என்னை விட்டுவைக்குமோ ..? எத்தனை முறையும் அவளுக்காக   பனிக்கட்டியாவேன் ....!!!

விடியபோகும் இரவு

படம்
விடியபோகும் இரவு   நாம் விடியலாக இருக்கட்டும்   வரப்போகும் கனவு   இனிமையாக இருக்கட்டும்   பகலில் கழுகுகளின் கண்ணில்   பாடுகிறோம் -இரவிலாவது   சந்தோஷமாக சந்திப்போம்...!!! * * *   போடா -இரவு ஆந்தைகளும்   இருக்க தான் செய்கின்றன ....!!!

கண்ணீர்

படம்
கண்ணீர் என்ற ஒன்று   இல்லாவிட்டால் காதல்   தோல்விக்கு முடிவு   மரணம் தான் -நல்ல   வேளை இறைவன் கண்ணீரால்   கவலையை அழித்துவிடுகிறான்

ஆனதடி சிகப்பாய் ....!!!

படம்
நீ தரும்போது ரோஜா வெள்ளை   நிறம் என்று உனக்கு தெரியும்   நீ தந்த வலிகளால் ஆனதடி   சிகப்பாய் ....!!!

காதலில் தோற்றவன்

படம்
காதலில் தோற்றவன்  இப்படித்தான் -இணையாத  தண்டவாளம் போல்  தனியாக  செல்லவேண்டியது தான் ...!!! (காதல் படமும் கவிதையும் )

நான் ரசித்து கொண்டே இருப்பேன் ....!!!

நீ தூங்கும் அழகை ரசிக்கிறேன் அப்படி என்ன அழகு இருக்கிறது என்று கேட்கிறாயா ...? நீ தான் தூக்கம் என்று நினைக்கிறாய் ...!!! உன் கண் மட்டுமே மூடியுள்ளது இதயம் என் பெயரை சொல்லி துடிப்பதை நான் அறிவேன் மூச்சு என்னிடம் வந்து வந்து போவதை நான் அறிவேன் இத்தனை  இன்பத்தை யார்தான் இழப்பார்கள் ...??? நீ நன்றாக தூங்கு நான் ரசித்து கொண்டே இருப்பேன் ....!!! (கதை கதையை கவிதையாய் )

வீண் சண்டை போட்டு அழுகிறாய் ....!!!

போடி கள்ளி -நீ வேண்டுமென்றே அழுகிறாய் என் தோலில் சாய்வதற்காக வீண் சண்டை போட்டு அழுகிறாய் ....!!! நானும் வேண்டுமென்றே முகத்தை திருப்பி வைத்திருக்கிறேன் நீ அழுவதை கடைக்கண்ணால் ரசித்தபடி .....!!! ( கதை கதையாய் கவிதையாய் )

சேலை எடுத்து விட்டதே ....!!!

நீ சேலையுடன் வந்தபோது அழகோ  அழகு என்றாலும் சுடிதார் உனக்கு சூப்பரோ சூப்பர் எனக்கு ஒரு கவலை உன்னை அன்பால் கட்டிவைத்தேன் -சேலை உடலால் கட்டிவைத்துவிட்டது என்னுடைய சந்தர்ப்பத்தை சேலை எடுத்து விட்டதே ....!!!

இருநிலையில் ...?

உன்னை பார்ப்பதே என் கடன் -நீ யோ என்னை பார்க்காமல் இருப்பதே கடன் என்கிறாய் ...!!! சரி காதலிக்காமல் விட்டுவிடு என்றால் இடைக்கிடையே சம்மத சிரிப்பும் சிரிக்கிறாய் -உலகில் எது கொடுமை தெரியுமா ...? காதல் தோல்வியல்ல ... இருநிலையில் உன்னைப்போல் இருப்பதுதான் ....!!!

என்னிடம் இடமில்லை ....!!!

நல்ல வார்த்தையால் உன்னை வர்ணித்தேன் நீ போதாது என்கிறாய் எனக்கு கேட்ட வார்த்தை வராது ....!!! காதலை புனிதமாக பார்க்க முடியுமே தவிர காம உணர்வுக்கு என்னிடம் இடமில்லை ....!!!

காதல் போய் விட்டது ...!!!

எனக்கு தெரியும் உனக்கு பொருத்தமானவன் நான் இல்லை என்று -உனக்கு காதல் விளையாட்டு எனக்கு நீயே உயிர் ....!!! புகையிரதத்துக்கு இருபக்கம் இயந்திரம் போல் நீயும் இருபக்கம் பேசுகிறாய் ...!!! எனக்கு வவலை என்ன ..? நீ போகாமல் - உன் மீது இருந்த காதல் போய் விட்டது ...!!! கஸல் 490

இதய வலிக்கு தண்ணீர் தருகிறாய் ....!!!

நீ என்னை நினைக்க முடியாத படி நான் போகப்போகிறேன் காலையில் சூரிய உதயம் தானே வரும் நீ சந்திரன் போல் வந்து விடுகிறாய் ....!!! நீ விசமாக இருந்தால் கூட குடித்து விடுவேன் இதய வலிக்கு தண்ணீர் தருகிறாய் ....!!! கஸல் ;489

காதல் ஒரு கண்ணாடி

உன் இதயம் பலாபழம் முள்ளும் இருக்கிறது இனிப்பும் இருக்கிறது ...!!! என் இதயம் ரோஜா அழகும் இருக்கிறது ஆபத்தும் இருக்கிறது காதல் ஒரு கண்ணாடி பார்க்க அழகு விழுந்தால் முடிவு ...!!! கஸல் 488

கண் முன் நீ தந்த வலி

விடிய விடிய உனக்காக காத்திருந்தேன் கனவில் கூட வரவில்லை வா காதலே இல்லாத கிரகத்தில் காதல் செய்வோம் -இங்கு காதலர்கள் அதிகம் உனக்கு இந்த இடம் பொருத்தமில்லை நான் விடுவது கண்ணீர் அல்ல கண் முன் நீ தந்த வலி கஸல் 487

காதல் தோற்றது என்கிறாய்

காதல் வலி என்றால்  என்ன என்று மனதில்  கேட்டேன் -பதில் வந்தது  நீ தான் என்று ....!!! நான் கடல் நீ  தோனி -துடுப்பு  உடைந்த கடல்  பயணம் ....!!! காதல்  தோற்பதில்லை  காமம் தோற்றால்  காதல் தோற்றது என்கிறாய்  கஸல் ;486

காதலித்து தோற்றுப்பார்

இறந்தபின் நரகத்துக்கு  போகவேண்டும் என்றில்லை  காதலித்து தோற்றுப்பார்  பூலோகமே நரகலோகம் தான்

எல்லா காதலர்களும் முட்டாள்கள்

எல்லா காதலர்களும் முட்டாள்கள் தான் தாங்கள் காதலிப்பது யாருக்கும் தெரியாது என்று நினைப்பதில் ....!!!

காதலிக்காமல் இருந்திடாதீர்

திருமணம் ஆகாவிட்டால் பறவாயில்லை காதலிக்காமல் இருந்திடாதீர் பிறப்புக்கே அர்த்தமில்லாமல் போய் விடுவீர் ....!!!

கே இனியவனின் காதல் தத்துவங்கள்

ஆண்களை விட பெண்ணிடம் தான் காதல் பொக்கிஷம் உண்டு அந்த பொக்கிசத்தை கண்டுபிடிக்கும் இளைஞன் அறிவாளி அவனே சிறந்த காதலன் பெண்கள் இவனையே தேடுகிறார்கள் ....!!! ************************* உயிருக்காக வாழாதீர் உயிரே நீ என்று வாழுங்கள் ************************* காதல் தோற்றபின் இதயம் கல்லாகலாம் காதலே இல்லாமல் கல்லாக்காதீர் ************************ மாப்பிள்ளை பார்க்கும் போது பெண்களே -நீங்கா யாரையும் காதலித்தீர்களா ...? என்று கேழுங்கள் -இல்லை என்றால் அந்த திருமணத்தை விரும்பாதீர்கள் -உன்னிடம் ஒரு எந்திரன் வருகிறான் ....!!! ************************* திருமணம் ஆகாவிட்டால் பறவாயில்லை காதலிக்காமல் இருந்துடாதீர் பிறப்புக்கே அர்த்தமில்லாமல் போய் விடுவீர் ....!!!

காதலை பகுத்தறிவாளர்கள்

படம்
காதலை பகுத்தறிவாளர்கள்  நிச்சயம் விரும்புவர்  காதலில் தான் சமத்துவத்தை  தோற்றிவிக்க முடியும் ....!!!

கண்ணீர் என்ற ஒன்று இல்லாவிட்டால்

படம்
கண்ணீர் என்ற ஒன்று  இல்லாவிட்டால் காதல்  தோல்விக்கு முடிவு  மரணம் தான் -நல்ல  வேளை இறைவன் கண்ணீரால்  கவலையை அழித்துவிடுகிறான்

என்னைப்போல் ஆகிவிடாதே ....!!!

படம்
கடும் உழைப்பாளிகள்  காலுக்கு கீழ் மிதிக்கப்படுவார்  மிதித்தாலும் பறவாயில்லை  தூக்கியும் வீசப்படுவார்  மனிதா -காற்றுக்க போது  தூற்றிக்கொள் விசுவாசம் என்று  என்னைப்போல் ஆகிவிடாதே ....!!!

மறையாது -நட்பு

பெற்ற வெற்றி தோல்வியால் மறையும் ....!!! இருந்த சிரிப்பு சோகத்தால் மறையும் ....!!! வட்டநிலா அமாவாசையால் மறையும் ....!!! கண்ணோடு காதல் தோல்வியால் மறையும் ....!!! மறையாது மறையாது மரணம் வரை மறையாது -நட்பு

நட்பு என்பது பொதுவுடமை

காதல் என்பது தனியுடமை  நட்பு என்பது பொதுவுடமை  எல்லோரையும் காதலித்தால்  நோய் ...!!! எல்லோரையும் நட்பு செய்யாது  விட்டால் நோய் ...!!!

பௌர்ணமியாக இருக்கிறாயே ...!!!

இருட்டில் நின்று உன்னோடு பேசுவதற்கு எனக்கு ஆசை காதலர் எல்லோருக்கும் இருக்கும் ஆசைதான் ......!!! என்னசெய்வது நீ பௌர்ணமியாக இருக்கிறாயே ...!!!

நான் பார்க்கமுடியும் ....!!!

நீயும் பௌர்ணமியும் சேர்ந்தால் ஆயிரம் சூரியன் அதனால்தான் சொல்கிறேன் நீ அமாவாசை அன்று வா உன்னை அப்போதுதான் நான் பார்க்கமுடியும் ....!!!

அற்புத நிகழ்வு ....!!!

ன்னை வைத்து ஒருநாள் துவிசக்கர வண்டியில் பயணம் செய்தபோது -நான் துவிசக்கரவண்டியை ஓடவில்லை அது காற்றில் பறந்ததாகவே உணர்ந்தேன் என்றும் நினையில் இருக்கும் அற்புத நிகழ்வு ....!!!

சரணடைந்து நின்றோம் ....!!!

உன்னை திருவிழாவில் முதல் முதலில் பார்த்ததை இப்போது நினைத்தாலும் இனிமைதான் ....!!! நீயும் சுவாமியை பார்க்கவில்லை நானும் சுவாமியை பார்க்கவில்லை ஆனால் இருவரும் சுவாமிக்கு அருகில் தான் நின்றோம் உனக்கு நான் சுவாமி எனக்கு நீ சுவாமி போல் சரணடைந்து நின்றோம் ....!!!

இதயத்தில் தேன் சுரக்கிறது

உன்னை நினைக்கும் போது இதயத்தில் தேன் சுரக்கிறது இதயம் தேனை சுவைப்பதை உணர்கிறேன் ....!!! அறுசுவையை நாக்கு உணர்வதுபோல் -காதல் சுவையை இதயம் சுவைக்கும் காதலை சுவையுங்கள் காதலர்களை சுவைக்காதீர்கள் அத்தனை பிரச்சனைக்கும் காரணம் காதலை சுவைக்காமல் காதலர்கள் சுவை காண்பதுதான் ...!!! (கதை கதையாய் கவிதையாய் )

பூவாக மாறிவிடும் ....!!!

காதலித்த எந்த இதயமும் கல்லாக இருந்ததில்லை காதலின் பின் அனைத்து இதயமும் பூவாக மாறிவிடும் ....!!! அந்த மேன்மை வரவில்லை என்றால் அது தூய்மையான காதல் இல்லை மென்மை தோன்றிய காதல் தோற்பதுமில்லை - காதலித்தபின் அவன் உலகையே நேசிக்கிறான்

எனக்கு ஒரு பரிசு தருவாயா ...?

உன் வீட்டுக்கு ஏதோ ஒரு பொய்யை சொல்லி வந்தேன் வந்த வேளை என் அதிஸ்ரம் மழையும் பெய்தது -நீ ஒரு துவாயை தந்து துவட்ட சொன்னாய் -துவட்டியது நான் ஆனால் நீயே துவட்டியதுபோல் உணர்வு -நீ தந்த துவாய் அல்லவா ...? எனக்கு ஒரு பரிசு தருவாயா ...? அந்த துவாயை நினைவு பரிசாக தருவாயா ....? (கதை கதையாய் கவிதையாய் ) 

வேண்டாம் அவளை தீண்டாதே

உன்னிடம் கொடுக்க பூவோடு வந்தேன் -உன் முகம் பார்த்து பூ வெட்கப்பட்டது -என்னிடம் கெஞ்சியது என்னை அவளிடம் கொடுக்காதே கொடுக்காதே ...!!! பூவின் விருப்பத்தையே நிறைவேற்றினேன் ....!!! வண்டாக வருவோம் என்றால் கையில் இருந்த பூ சொன்னது வேண்டாம் அவளை தீண்டாதே வேண்டுமென்றால் என்னிடம் வா என்றது ...!!! (கதை கதையாய் கவிதையாய் )

நான் கவிதை எழுத போகிறேன்

உனக்கு கவிதை எழுத என்று தனியே ஒரு பேனாவும் காகிதங்களும் வைத்திருக்கிறேன் நான் கவிதை எழுத போகிறேன் என்றவுடன் அந்த பேனாவும் காகிதமும் முதலில் தம்மை காதலிக்கும் -அன்பே அதை பார்த்துகொண்டே இருக்கலாம் -அத்துணை இன்பம் ...!!!

நானே எறிகிறேன் ....!!!

நீ எண்ணை நான் தண்ணீர் எப்படி காதல் வரும் ...? நீ விறகாக மட்டும் இரு உனக்கும் சேர்த்து நானே எறிகிறேன் ....!!! மின்னியபோது உன் நினைவு இப்படித்தான் முதல் முதல் நீ சிரித்தபோது -நான் கருக்கினேன் ....!!! கஸல் 481

கவிதை வந்தது ...!!!

ஒன்றை இழந்து  ஒன்றை ஒன்றை பெற்றேன் கவிதை வந்தது ...!!! கண்ணால் பார்த்தேன் இதயம் வந்தது -கண்ணீர் விட்டேன் கவிதை வந்தது உன் பெயரை பேனையால் தான் எழுதினேன் மின்னலாய் தெறிக்கிறதே...? ஏன் கோபமாய் இருக்கிறாய் ...? கஸல் 482

கசக்கிறதே கடல் நீர்

உனக்கு வாழ்க்கை வரும் என்றால் நான் வாழ்க்கையை இழக்கத்தயார் ....!!! உன் வீட்டில் வந்து நிற்கிறேன் உள்ளே வா என்று கூப்பிடாமல் தயங்குகிறாய் ....!!! வற்றாத கடல்  நீர் உன் நினைவுகள் -ஆனால் கசக்கிறதே  கடல் நீர் கஸல் ;483

நினைவுகள் சுனாமி ...!!!

உனக்கு என் இதயம் உதைப்பந்தாட்ட மைதானம் எப்படி வேண்டுமென்றாலும் உதை.....!!! என் தென்றலும் நீ சூறாவளியும் நீ நினைவுகள் சுனாமி ...!!! நீ என்னை விட்டு யாரிடம் போனாலும் உன் காதலன் நான் தான் கஸல் ;484

இதயத்தில் நுழைய விடுகிறாயில்லை

என் இதயத்தில் நுழைந்த நீ -ஏன் உன் இதயத்தில் நுழைய விடுகிறாயில்லை எட்டாத பழம் புளிக்கும் என்ற சிறுவயது கதை நினைவுக்கு வருகிறது நம் காதலில் ....!!! உனக்கு தந்த பூ என்னை பார்த்து ஏளனம் செய்கிறது ....!!! கஸல் 485

கைபேசிக்கு கவிதை

நான் எழுதும் கவிதை வரிகளின் வலியல்ல வலிகளின் வரி

கைபேசிக்கு கவிதை

என் வீட்டில் பூக்கும் பூக்கள் நீ அருகில் இருந்த போது -சிரித்த சிரிப்பை நினைக்கவைக்கிறது

கைபேசிக்கு கவிதை

பார்த்ததால் பார்வை இழந்தவன் நான் பேசியதால் பேச்சை இழந்தவன் நான் காதலால் வாழ்வை இழந்தவனும் நான் ....!!!

கைபேசிக்கு கவிதை

நானும் ஒரு பிச்சை காரன் தூக்கத்தில் நீ கனவில் வரவேண்டும் -என்று உன்னிடம் கையேந்தி நிற்கிறேன் .....!!!

கைபேசிக்கு கவிதை

பகலில் உன்னை பார்க்கிறேன் இரவில் நிலாவை பார்க்கிறேன் பூக்களில் உன் சிரிப்பை பார்க்கிறேன் ....!!!

கதை கதையாய் கவிதையாய்

உன்னை விட்டு வெளியூர் செல்லப்போவதை நினைத்தால் இதயமே நொருங்கி விடும் போல் இருக்கிறது ....!!! மூச்சு வருவதும் நிற்பதுமாய் அடைத்து அடைத்து வருகிறது இரவு முழுவதும் அழுதேன் பகல் அழமுடியாத சக்தியில் இருக்கிறேன் பிரிவின் கொடுமையை இப்போதான் உணர்கிறேன் ....!!! (கதை கதையாய் கவிதையாய்)

நிரந்தரமாக தூங்கிவிடும் ....!!!

என் இதயம்  நரம்புகளாலும்  சதைகளாலும் இல்லை  உன் நினைவுகளாலும்  கனவுகளாலும் இயங்குகிறது  என் இதய அறைக்குள்  இருக்கும் நீ அடிக்கடி  கண்ணை விழித்தெழு  இல்லாவிட்டால் என் இதயம்  நிரந்தரமாக தூங்கிவிடும் ....!!!

நான் வருவேன் கனவில் .....!!!

நீ தூங்கும் அழகை தூரத்தில் இருந்தே ரசிக்கிறேன் -துன்பப்படுகிறேன் கண்ணே உன் கண்கள் தான் அங்கே தூங்குகிறது .இதயம் என்னீடம் இருக்கிறது சற்று நேரத்தில் நான் வருவேன் கனவில் .....!!!

கைபேசியை களவு எடுத்து விட்டேன்

உன் கைபேசியை களவு எடுத்து விட்டேன் -நீ என் இதயத்தை களவெடுத்தாய் நான் உன் கைபேசியை களவெடுத்தேன் -ஒன்றுக்கு ஒன்று சமமாகிவிட்டது ....!!! ஏன் எடுத்தேன் தெரியுமா ....? உன் உதட்டோடு உன் கண்ணத்தோடு உன் காதோடு உரசிய அந்த கொடியவனை களவெடுத்து விட்டேன் தப்பா .....?