புதன், 24 ஜூன், 2015

பௌதீகவியலும் காதல்விதியும் ....!!!

பௌதீகவியலும் காதல்விதியும் ....!!!

சடப்பொருட்கள் யாவும் ....
தம் திணிவுக்கு நேர் விகிதத்திலும் ....
தமக்கிடையே உள்ள தூரத்தின் ...
வர்க்கத்துக்கு நேர்மாறு விகிதத்திலும் ....
ஒன்றை ஒன்றை ஈர்க்கும் ...
நியூட்டனின் விதி .....!!!

இதயமுள்ள இரு வேறுபட்ட ....
பாலினங்கொண்ட உயிரினங்கள் ....
நேருக்கு நேராக நோக்கி ....
ஒருவரின் இதயத்தை மற்றவரிடம் ...
பரிமாற்றி வாழ்வதே .....
காதலின் விதி .......!!!

ஒரு 
எதிர் தாக்கத்துக்கு சமமான ....
மறுதாக்கம் உண்டு .....
நீ தரும் ஒவ்வொரு தாக்கத்துக்கும் ....
காதலிலும் மறுதாக்கம் உண்டு ......!!!

விஞ்ஞானமும் காதல் கவிதையும்

வேதியியலும் காதலும்

ஐதரசனின் இரண்டு பங்கும் .... 
ஒட்சிசனின் ஒருபங்கும் .... 
சேர்ந்த கலவையே 
நீர் -H2O .....!!! 

என்னுடைய 
நினைவுகளையும் ..... 
உன்னுடைய நினைவுகளையும் .... 
வேதனையுடன் சுமந்து கொண்டு .... 
இருக்கும் நம் காதல் ... 
வேதியல் சூத்திரம் தான் ....!!! 

வேதியல் வகுப்பறையில் .... 
வேதியல் படித்தானோ .... 
தெரியவில்லை .... 
வேளை தவறாமல் ... 
உன் வேடிக்கைகளை 
ரசித்திருக்கிறேன் .....!!! 

வேதியலில் ... 
ரேடியத்தை கண்டு பிடித்த .... 
மேரி கியூரி குடும்பம் .... 
வேதனையான மரணத்தை .... 
அடைந்தார்கள் .... 
புற்றுநோய் ......!!! 

காதலும் .... 
ஒரு புற்றுநோய் .... 
உன் நினைவுகளால் நானும் ... 
என் நினைவுகளால் நீயும் .... 
கொஞ்சம் கொஞ்சமாக .... 
இறந்து கொண்டிருக்கிறோம் ....!!!

செவ்வாய், 23 ஜூன், 2015

மலர் வளையம் ...

கண்ணோடு....
ஆரம்பித்த காதல் ....
கண்ணீரோடு ....
வாழ்கிறது .....!!!

மலர் கொடுத்து ....
காதல் செய்தேன் ....
மலர் வளையம் ...
வரும்போல் இருக்கிறது ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

மலர்வளையம் தருவாய் ....

நீ 
தப்பு செய்ய போவதில்லை 
நான் விரும்பியதையே ...
செய்தாய் .....!!!

நான் ....
மலர் மாலை எதிர்பார்தேன் ....
நீ 
மலர்வளையம் தருவாய் ....
போலிருக்கிறது ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

அனுபவிக்க வேண்டும் ....!!!

இன்னுமொரு ஜென்மம் ....
பிறந்து வந்தது உன்னை ....
காதலிக்க வேண்டும் .....!!!

நீ 
பிரிந்து செல்ல வேண்டும் ....
வலியின் வலியை....
அடுத்த ஜென்மமும் ....
அனுபவிக்க வேண்டும் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

பிரிவு உணர்த்தியது ....!!!

பிறப்பு எத்தனை ....
வலி என்பதை தாய்மை
உணர்த்தியது ....!!!

இறப்பு எத்தனை ....
வலி என்பதை உன் ....
பிரிவு உணர்த்தியது ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

காதல் சிதறல் - கே இனியவன்

நீ 
முகத்தால் ...
வெறுக்கிறாய் ....
இதயத்தால்.... 
அழைக்கிறாய் ..!!!

பாவம் 
உன் கண்கள் ...
படாத பாடு படுகிறது ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

சிறப்புடைய இடுகை

உள்ளத்தில் பூவை.....

உள்ளத்தில் பூவை..... மலர வைக்காவிட்டாலும்.... பரவாயில்லை..... பூமரத்தின் வேரை.... சேதமாக்கும்செயல்களை நினைக்காதீர்....... என்றோ ஒருநா...