இடுகைகள்

மார்ச், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

தானும் நிம்மதியாய் வாழ்வதில்லை பிறரையும் நிம்மதியாய் வாழவிடுவதில்லை பொறாமை & ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

குப்பை தொட்டி நிரம்புதில்லை பெருக்க பெருக்க பெருகுகிறது மனக்குப்பை & ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

காதல் பிரமிட்

நீ...............................................01 நான்........................................02 காதல்.....................................03 கற்பனை...............................04 நினைவுகள்............................05 வாக்கு வாதம்.........................06 காதலுக்கு வலி......................07 காதல் பிரிவு...........................06 முரண்பாடு............................05 விலகல்.....................................04 சோகம்.....................................03 வலி............................................02 போ.............................................01 & கவிப்புயல் இனியவன் காதல் பிரமிட்

புதிராய் தொடர்கிறது....!!!

கண்ணால் தோன்றிய காதலுக்கு ..... கண்ணூறு பட்டு விட்டுவிடுகிறது........ கண்ணுக்கு தெரியாத காதலுக்கு .... கனவு தான் மிஞ்சியது ..... காதல் புரியாத புதிராய் தொடர்கிறது....!!! ^^^ கவிப்புயல் இனியவன் பஞ்ச வர்ணக்காதல் கவிதை 06

நீ காரணத்தோடு பிரிந்தாலும் .....

நீ காரணத்தோடு பிரிந்தாலும் ..... நான் காலமெல்லாம் காதலிப்பேன் .... எப்படியும் வாழ்வது உன் புத்தி .... உன்னோடே வாழ்வது என் பக்தி .... தனியே இருந்தாலும் நினைவில் -நீ ^^^ கவிப்புயல் இனியவன் பஞ்ச வர்ணக்காதல் கவிதை 05

நீ வேதனைபட்டால் ......

மனம் நினைக்கும் வார்த்தைகள் ..... பேச உதடுகள் துடியாய் துடிக்குது .... தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் ..... என்னுள் இருக்கும் நீ வேதனைபட்டால் ...... இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் பஞ்ச வர்ணக்காதல் கவிதை 04

SMS கவிதை

நீ தந்த ரோஜா மலர் மென்மை.... நீ பேசும் வார்த்தைகள் மென்மை ... காதல் ஏனடி வலிக்கிறது ....!!! & கவிப்புயல் இனியவன் SMS கவிதை

நினைவையே ஆக்கிரமித்ததால்......!

உனக்கெங்கே புரியப்போகிறது நீ இல்லாமல் நான் படும் துன்பம்...? என் நினைவில்லாம்ல் நான் ..... தூங்கியிருக்கிறேன் நீ என் ..... நினைவையே ஆக்கிரமித்ததால்......! ^^^ கவிப்புயல் இனியவன் பஞ்ச வர்ணக்காதல் கவிதை 03

இறந்தும் துடிக்கும் இதயம்

நீ மின்னல் இதயத்தை கருக்கிவிட்டாய்.......! தலை குனிந்தாய் நாணம் என்றுநினைத்தேன்.... நாணயம் இல்லாததை.... புரிந்தேன்...............! நான் .... மெழுகுதிரி ஒளி...... நீ மின்னொளியை........ எதிர்பார்கிறாய்................! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 11 & என் மனம் சொறணை கெட்டது.... உன்னையே நினைக்கிறது....! நிலவை காட்டி சோறு ஊட்டலாம்..... காதல் செய்ய முடியாது..... நிலவோடு உன்னை.... ஒப்பிட்டதே தவறு..........! என்னோடு... இணைந்து பயணம்செய்..... காதல் கோட்டை தொடலாம்... நீ அன்ன நடை போடுகிறாய்.......! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 12

அவள் மனித தேவதை

அவள் மனித தேவதை -------------------------------- சூரியனின் பிரகாசதுக்கும்....... சந்திரனின் குளிர்மைக்கும்..... பிறந்தவள் என்பதால்............. என்னவள் மனித தேவதையவள்.............! பூக்களின் இதழ்களால்..... திருமேனியானவள்..... இசைக்கருவியின் இழைகளால்.... உடல் நரம்பானவள்.......... மெல்ல பேசினால் கூட........ மேனியது சிவக்கும்........... நரம்புகள் இசைபாடும்.............! மின்னல் கூட அவளை............ தீண்டமுடியாது மின்னனைவிட....... சக்திகொண்ட கண்ணை...... கொண்டவள் என்பதால்............ கொவ்வை பழத்தை உதடாக...... கொண்டவள் என்றில்லை......... கொவ்வைப்பழம் இவளிடம் ..... அழகை பெற்றதென்பேன்...................! & கவிப்புயல் இனியவன் அவள் மனித தேவதை 01

உயிர் காக்கும் விவசாயின் உயிர்

உயிர் காக்கும் விவசாயின் உயிர் ------------------------------------------------ ஆண்டவன் படைப்பில் அதிசயப்பிறவி....... உலகுக்கே உணவுகொடுக்கும் விவசாயி........ தன் கையில் சேற்றுடன் சோற்றை உண்பார்..... எம் சோற்றில் ஒருகல் வராமல் காத்திடுவார்.....! ............................ஆளவேண்டிய விவசாயியின்று ............................அடங்கிகிடக்கிறான் வீட்டினிலே ............................கூழைபிசைந்து குடிக்கவழியில்லாமல் ............................குறுகிக்கிடக்கிறான் குடிசையிலே நிலத்தை பண்படுத்தியவன் வாழ்க்கை....... நிலைகுலைந்து போனதெதனால்......... பணத்தை பத்துவட்டிக்கு கொடுக்கும்..... பாழாய்போன பணப்பிணம் தின்னிகளால்....... ..........................ஒட்டு துணியோடு வயலிலே ..........................உச்சிவெயிலில் உலாவிவருவர் ..........................நட்டு நடு ராத்திரியில் காவலிருந்து ..........................அறுவடையை காத்திடுவர் கண்விழித்து பயிருக்கு அடிக்கும் நஞ்சை எதற்காய்.... பாடையில் போகவதற்கு குடிக்கிறார்கள் பயிர்கடனை கொடுக்க வழிதெரியாமல் பாதியிலே உயிரை மாய்க்கிறார்கள

ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 03

உச்சிவெயில் சுட்டெரிக்கும்...... குதிப்பாதம் வெந்து துடிக்கும்....... வேண்டுமென்றே மெல்லனடந்து..... இரண்டு மணிக்கே வீடுசெல்வோம்..... அவன் வீட்டில் எனக்கும்..... என்வீட்டில் அவனுக்கும்.......... திட்டியே கொட்டிதீர்த்துடுவர்.........! தும்பியை பிடித்து வாலில்...... நூல்  பட்டமாய் பறக்கவிட்டு...... புல்வெளியில்பட்டாம்பூச்சியை...... வேர்வைசிந்த கலைத்துபிடித்து..... ஒற்றை சிறகு ஒடிந்த பூச்சியை...... மெல்ல தடவி கண்ணீர் விட்டு....... வரும் வழியில்மாமரத்துக்கு..... கல்லெறிய வீட்டின் ஓட்டில் பட...... ஒளிந்து ஒளிந்து வீட்டுக்கு வந்த நாள்...... வாழ்ந்த நாளில் வசந்த காலம்.........! & ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 03 கவிப்புயல் இனியவன்

பஞ்ச வர்ணக்காதல் கவிதை

விழியால் அனுமதி கொடுத்தாய்...... மொழியால் இதயம் நுழைந்தாய்.... அசைவுகளால் ஆட்டிப்படைக்கிறாய்.... துடிக்கும் இதயத்தை வலிக்கவைக்கிறாய்.... எப்போது நொடிக்கு நொடி பார்ப்பது...? ^^^ கவிப்புயல் இனியவன் பஞ்ச வர்ணக்காதல் கவிதை

இறந்தும் துடிக்கும் இதயம்

நான் எழுதும் எழுதுகருவியில்.... கண்ணீர் வலிகள்.... மன்னித்து கொள்... கவிதை வலித்தால்....!!! திருமணம் ஒன்றுக்கு.... மொய் எழுதபோனேன்...... மெய் மறந்தேன் திருமணம்.... அவளுக்கு...............!!! புல்லுக்கும் நிலாவுக்கும் காதல் தோல்வி புல் நுனியில் பனித்துளி..........!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 10 

இருந்தென்ன வாழ்ந்தென்ன ....?

சாதாரண .............. கண்ணுக்கும் ................ காதல் கண்ணுக்கும் .................. வித்தியாசம் ............... கண்டு பிடிக்காதவன் .............. முட்டாள் .................! துடிக்காத இதயமும் ............... காதல் இல்லாத இதயமும்.......... ஒன்றுதான்............... இருந்தென்ன வாழ்ந்தென்ன ....? & கவிப்புயல் இனியவன்

உன்னோடு வாழ்ந்தவன்

உன்னோடு வாழ்ந்தவன் இப்போ உன் நினைவோடு மட்டுமே வாழ்கிறேன் ........! உன்னை நேரே .............. காதலிக்க முடியாது............. கவிதையால்................ காதலிக்கிறேன் .................! & கவிப்புயல் இனியவன் 

இவையே எனக்கு சிறந்தவை

இவையே  எனக்கு சிறந்தவை ------------------------------------ பிறந்த நாட்டில் .... பிறந்த ஊரில் .... ஒருபிடி மண் தான் .... எனக்கு .... பொன் விளையும் பூமி .....! பேசும் மொழிகளில் .... எந்த மொழியில் .... கலப்படம் இல்லையோ .... அந்த மொழி .... எனக்கு தாய் மொழி ..........! பேசும் போது எவரின்..... மனம் புண்படவில்லையோ ...... எந்த சொல் மனதை ...... காயப்படுத்தவில்லையோ ...... அந்த மொழியே எனக்கு ..... செம்மொழி ..............! பேசிய வார்த்தைகளால் ..... கிடைத்த புகழைவிட..... பேசாமல் விட வார்த்தைகளால் ..... நான் பெற்ற இன்பமும் ..... நன்மையும் எனக்கு ..... நோபல் பரிசு ................! நாடார்த்திய விழாக்களில் ...... உறவுகள் நட்புகள் ....... முகம் சுழிக்காமல்...... நாடார்த்திய விழாவே ....... எனக்கு ....... பொன் விழா .........! பாடிய பாடல்களில் ...... இசையமைக்காமல் ..... பாடிய பாடல் ..... அம்மா இங்கே வா வா .... ஆசை முத்தம் தா தா ...... என்ற பாடல் தான் ...... எனக்கு ...... தேசிய விருது பாடல் ....! என் சராசரி அறிவை ..... சாதனையாளர் கற்கும் .... கூடத்தில் என்னை

நம் காதல் தவிக்கிறது........!!!

நாம் ....... காதலில்  இரு..... பிரதான ஒளி ............ நான் பகலில் சூரியன்..... நீ இரவில் சந்திரன்........ அதனால் தானே இன்னும்..... இணையாமல் இருகிறோம்........ வெட்டவெளியில் ஒற்றைமரம்.... தனித்து வேதனைபடுவது போல்..... நம் காதல் தவிக்கிறது........!!! & கவிப்புயல் இனியவன் சின்ன கிறுக்கல்கள் 

சடலமாய் வாழ்கிறேன்......!!!

உனக்கு காதல் சின்னமாய்....... தாஜ்மஹால் கட்டிவிட்டு.... உன் நினைவோடு..... எகிப்து பிரமிட்டுக்குள்..... அழியாத நினைவுகளுடன்.... சடலமாய் வாழ்கிறேன்......!!! & கவிப்புயல் இனியவன் சின்ன கிறுக்கல்கள்

காதல் வெண்பா 10

தேடினேன் நீ வரும் வழினெடுகிலும் வாடினேன் உன் நிழல்கூட தெரியாததால் துடிக்கின்ற இதயம் துடிக்க மறந்து வடிக்கின்ற கண்களாய் மாறிவிட்டதடி & கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா 10

கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா

எனக்குள்ளே உயிராய் கலந்திருப்பதால்,இதயம் தனக்குள்ளே பேசி இன்பம் காண்கிறது யாமிருக்க பயமேன் என்கிறார் இறைவன் நானிருக்க பயமேன் நம்காதலுக்குயிரே & கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா 09

என்னவனே என் கள்வனே 08

ஆகாய எரிகல்...... கண்ணில் விழுந்தால்..... அடுத்த நாள் அதே நேரம்.... வரைக்கும் கண்ணில்..... இருந்து வலிதருமாம்.....!!! ஆகாய எரிகல்லாய்..... வந்துவிடு என்னவனே...... அப்போதாவது கண்ணுக்குள்..... இருந்துகொண்டிருப்பாயே.....!!! பாறையில் இருந்து கூழாங்கல்..... உடைப்பதுபோல் உன் கல் நெஞ்சு..... இதயத்தை உடைக்கிறேன்......!!! ^^^ என்னவனே என் கள்வனே 08 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

தோல்வியை ரசி வெற்றியை ருசி

முயற்சி மனிதனின்..... மூலவேர் -அதை....... விருட்ஷமாக்குவது........ பயிற்சி.......................!!! பயிற்சி போதாதெனின்...... தோல்வியென்னும்............ கிளை தோன்றும்.................. முயற்சி  தோற்பதில்லை.......!!! வெற்றியின் போது........ ஓரக்கண்ணில் வருவது........ ஆனந்த கண்ணீரல்ல.......... தோல்வி தந்த வெள்ளை நிற....... இரத்தம்...................!!! & தோல்வியை ரசி வெற்றியை ருசி கவிப்புயல் இனியவன்

ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 02

நட்புக்கு வசந்த காலம்...... மழைக்காலம் தானே...... வேண்டுமென்றே நனைவதும்...... சேற்றுக்குள் உருளுவதும்...... வீட்டுக்கு வந்து அடிவாங்குவதும்..... மழைகாலம் வசந்த காலந்தானே.....!!! வடிந்தோடும் வெள்ளதில்....... பாய்ந்தோடும் காகித கப்பல்...... அப்போதுதான் படித்த குறிப்பு...... சற்றும் தாமதிக்காமல்....... கிழித்து விடும் காகித கப்பல்....... அடுத்த நாள் இருவருக்கும்..... கிழிந்த கால்சட்டைமேல்..... விழும் செமபூசை..........................!!! வாற்பேத்தையை மீன் குஞ்சென..... ஓடியோடி பிடித்து வீட்டுக்கு..... கொண்டுவருவதும் வந்த கையோடு...... அம்மா பறித்தெறிவதும்.......... கடுப்போடு கத்தி பிரழுவதும்...... இன்றுவரை நினைவில் இருக்கும்.... வசந்த காலம்...............................!!! & ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 02 கவிப்புயல் இனியவன்

ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு

ஆறுவயதில் அயல் வீட்டில் - நீ பாதிவயிறு உன் வீட்டில் நிரம்பும்.... பாதி வயிறு என் வீட்டில் நிரம்பும்...... பாதி தூக்கம் உன் வீட்டில் - நான் மீதி தூக்கம் என் வீட்டில் - நீ .........!!! அப்பப்போ சண்டை....... தடியெடுத்து அடிகும் மனதைரியம்..... எனக்கும் இல்லை உனக்கும் இல்லை..... ஒரு பிடி மண்ணால் சண்டையோடும்.... மாவீரர் நாம்...........................!!! சற்று நேரம் கூட ஆகாது......... வீட்டில் கிடைத்த இனிப்போடு....... ஓடிவருவேன் உன் வீட்டுக்கு.......... பாதி கடித்த இனிப்பை....... உன்னிடம் தர பறந்து போகும்..... சண்டையின் பகை...................... நட்பென்பது எப்போதும் இனிமை.....!!! & ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு கவிப்புயல் இனியவன்