இடுகைகள்

ஜூலை 30, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆமீக சிந்தனை - நெல் மணி

ஆமீக சிந்தனை - நெல் மணி  ----------------------------------------- ஒருவனின் வாழ்க்கை " நெல் " மணிகள் போல் இருக்கவேண்டும் . இறந்தபின்னும் "சோறு " என்னும் பொருளாய் பிறருக்கு உதவுகிறது . உயிரோடிருந்தால் மீண்டும் தளிர்த்து பல நெல் மணியாக உலகிற்கு  உதவுகிறது .  மனித வாழ்க்கை அவனது ஒழுக்கத்தில் தான் இருக்கிறது. ஒரு நெற்குவியலில் உள்ள (சப்பி நெல்) பயனற்ற நெல் பார்ப்பதற்ற்கு அழகாக இருந்தாலும் .அதோ சோறாகவோ மீண்டும் தளிர் விடவோ முடியாத பொருளாய் தூக்கி வீசப்படுகிறது . ஒழுக்கமற்ற மனிதர்கள் எப்போதே இறந்து விட்டார்கள் . முதலாவது ஒழுக்கமற்ற செயலை செய்யும்போதே அவன் இறந்துவிட்டான் . அவர் உயிரோடு உலாவுவது .பயனற்ற நெல்லுக்கு சமனானவன். + சிந்தனை உருவாக்கம்  கே இனியவன்  வாழ்க வளமுடன்

காதல் வேண்டாம்

பள்ளி பருவத்தில் பரீட்சையில் தோற்றேன் ..... பருவ வயதில் காதலில் தோற்றேன் ..... பள்ளி பருவ காதல் வேண்டாம் நண்பர்களே ....!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன்

அவஸ்தைபடுவது நானே ....!!!

அழகால் உன்னை காதலித்தேனா ....? அழகிய வார்த்தைகளால் காதலித்தேனா ....? ஏதோ அவஸ்தைபடுவது நானே ....!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன்

முகம் வாடி நிற்கிறது

முத்துபோன்ற பற்களால் நீ சிரித்துவிட்டாய் ..... முகம் வாடி நிற்கிறது வீட்டு மல்லிகை பூ .... அழகும் வெண்மையும் பிடிக்கவில்லையாம் ....!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன்

தூக்கி எறியமாட்டேன் .....!!!

காதல் வீட்டில் ஒற்றடையாக இருந்து விடு ..... காதல் வீட்டு முற்றத்தில் குப்பையாக இருந்துவிடு ..... நான் உன்னைப்போல் தூக்கி எறியமாட்டேன் .....!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன் - மூன்றுவரி கவிதைகள்

விழிப்பாக இருந்தால்  நினைவால் துடிக்கிறேன் ... விழிமூடி தூங்கினால் கனவுகளாய் துடிக்கிறேன் ... என் இதயத்தின் துடிப்பு உன் நினைவுகளின் துடிப்பு ....!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன்