இடுகைகள்

செப்டம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேனே என்னை இழந்தேனே

அழைத் தேன்  நின்றாய் பார்த் தேன் பார்த் தேன்  என்னை மறந் தேன் மறந் தேன்  உன்னிடம் விழுந் தேன் விழுந் தேன்  உன்னோடு மகிழ்ந் தேன் மகிழ்ந் தேன்  உயிராய் நினைத் தேன் நினைத் தேன்  காற்றாய் சுவாசித் தேன் சுவாசித் தேன்  உன்னையே நேசித் தேன் நேசித் தேன்  காதலாய் வாழ்ந் தேன்

காதலித்- தேன்

நினைத்- தேன்  கேட்டதை தந்தாய் ...! திகைத்- தேன்  முத்தம் தந்தாய் .......! சிரித்- தேன்  காதலை தந்தாய்.......! மகிழ்ந்- தேன்  உன்னை தந்தாய் ....! சுவைத்- தேன்  வாழ்க்கை தந்தாய் ..! வாழ்ந்- தேன்  உயிரை தந்தாய் ..........! துடித்- தேன்  நினைவுகள் தந்தாய் ......! அழைத்- தேன்  பிரிவை தந்தாய் ....!

காதல் செய்யாதே ...!!!

நீ என்னில் வாழ்வதும் நான் உன்னில் வாழ்வதும் -தான் காதல்....! என் பிரிந்தாய் ...? குத்துவிளக்கு.. ஏற்றினாலும்... மின்விளக்கு... ஏற்றினாலும்... வெளிச்சம் .... ஒன்றுதான் ... வசதிக்காய் ... காதல் செய்யாதே ...!!! நீ பேசினாலும் பேசாவிட்டாலும் வலிப்பது என் இதயம் தான் கே இனியவன் - கஸல் 79

சாம்பலாகி விட்டேன்

நான் இறந்தால் ... புதைப்பார்களா ...? எரிப்பார்களா ...? என்றோ அவளின் .... வார்த்தையால் ... சாம்பலாகி விட்டேன் ...!!! அழகுக்கு அழகுதருவது காதல் உண்மைதான் ... உன்னோடு இருக்கும் .. காலத்தில் உணர்ந்தேன் ...!!! தட்டிய தீக்குச்சி விரைவாக அணைந்துவிடும் அந்த மன வேதனைதான் எனக்கும் ...!!! கே இனியவன் - கஸல் 78

கே இனியவன் - கஸல் 77

நீ மூட்டிய காதல் தீயை -நீயே கண்ணீரால் அணைக்க சொல்லுகிறாய்...!!! வீட்டு தோட்டத்தில் பூத்தும் வாடியும் ... இருக்கும் மலர்கள் ... உன்னை நினைவுக்கு ... கொண்டு வருகிறது ....!!! உயிர் பிரிந்தபின்பும் வாழும் ஒரே ஒரு விடயம் காதல் ...!!! கே இனியவன் - கஸல் 77

ஏமாளியாக இருக்கவில்லை....!!!

ஏழையாக இருக்கிறேன் ஏமாளியாக இருக்கவில்லை....!!! ஏழ்மையில் வாழ்கிறேன் எடுப்பார் கைப்பிள்ளையக இருக்கமாடேன்....!!! மன்னிக்க மனம் அதிகமில்லை மனம் புண்படுமாறு நடப்பதில்லை....!!! கற்காதவர் மத்தியில் பேசமாட்டேன் கற்றவர் மத்தியில் கவனமாக பேசுவேன்...!!! அறிவாளியாக என்னை கருத மாட்டேன் அறிவை தேடாமல் இருக்க மாட்டேன்....!!! எல்லாம் முடியும் என்னால் என்று கூறமாட்டேன் எதுவும் முடியாது என்று இருக்கமாட்டேன்....!!! எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு... என்பதை நிச்சயம் நம்புகிறேன் .. முடிவு இல்லையென்றால் ...... முடிவில்லையென்று கலங்கமாட்டேன் ..!!! + கவிப்புயல் இனியவன் 

உண்மையை ஊமையாக்காதே ..

உண்மையை ஊமையாக்காதே .. உறவுகளை அதிகம் நம்பாதே .. உணர்வுகள் இறந்தாலும்.... உயிர் இத்துப்போனாலும்.... உறுதியிழந்து வாழாதே.... உறுதி கொள் -நிச்சயம்.... உறுதியான வெற்றிஉண்டென்று.... உன் முகத்தை திருத்து.... உலகத்துக்கு நீ ஒரு கண்ணாடி.... உள்ளத்தில் கசப்பு ஏற்பட்டாலும்.... உதட்டில் உண்மைபேசு.... உலகம் இப்போ விலை உலகம்.... உலகமயத்தில் இது சாதாரணமப்பா .. உன்னை நீ மதிப்பீடு செய்.... உண்மையில் கிடைக்கும் பெரு வெற்றி ....!!!

தாயே என்னை மன்னித்துவிடு

உறுதியில்லாத வாழ்வில்..... உறுதியான நேர்மையுடனும்..... உறுதியான நியாயத்துடனும் ... உண்மையாக வாழ்வாயாக .... என் தாயின்வேண்டுகோள் ...!!! ஆம் என்றேன்...!!! உண்மை பேசினேன்.... உளருகிறான் என்றார்கள்.... நியாயம் சொன்னேன்... நீ என்ன நீதிபதியா....? வினா எழுப்பினார்கள்..... உண்மை கூற ஓயாமல்... உழைத்தேன் -ஆனால்.... கேட்பார் யாரும் இல்லை..... வெடித்தது -இதயம்... வேதனைப்பட்டேன்... வெட்கப்பட்டேன்......!!! ஓயவில்லை நான் ...!!! சமூக சேவை செய்தேன்.... இந்த பூச்சாண்டி வேலையெல்லாம்..... எங்களுக்கு காட்டாதே என்றார்கள்..... சமூக சீர்திருத்தத்துக்காக.... சிந்தனை பேச்சு பேசினேன்.... மாரி தவளைபோல்... கத்துகிறான் என்றார்கள்.....!!! ஓரமாக இருந்து யோசித்தேன்...??? சமூக சிந்தனையை ... சுய சிந்தனையாக்கினேன்.. நியாயம் இல்லாமல்... காலில் விழுந்தேன்.... பிழைக்க தெரிந்தவன்.... என்று பாராட்டினார்கள்......!!! பொருள் வந்தது... பதவி வந்தது.... தலைவா,,,!!! தலைவா ,,,!!! கூச்சல் இட...... ஒரு கூட்டமும்.... சேர்ந்தது........!!! எல்லாம் வந்தது... அன்னையின்... ஆசைபோனது......! மனிதத்தை விற்றுவிட்டு... மனிதனாக நடிக்கிறேன்..... என

என் இதயத்தில் நீ அழகு ....!!!

சிப்பிக்குள் முத்து அழகு ... என் இதயத்தில் நீ அழகு ....!!! சிறு மழைதுளி ...... சிப்பிக்குள் முத்தாகும் .... உன் கண்ணீர் துளியால் .... என் இதயத்துக்குள் .... நீ முத்தாகி விட்டாய் ....!!! ஆபரணத்துக்கு முத்து அழகு .... என் கவிதைக்கு நீயே அழகு .... கவிதையே என்றும் அழகு ....!!!

காதல் செய் .! இன்றே செய் .! நன்றே செய் .!

இதயத்தால்  கவிதை எழுதினால் ..... இன்பக்கவிதை ....!!! கண்ணீரால் கவிதை எழுதினால் .. சோகக்கவிதை ...!!! ஒரு இதயம் துடிக்க .... மறு இதயம் புரியாமல் இருக்க .... கவிதை எழுதினால் .... ஒருதலை காதல்கவிதை ....!!! கண்ணால் பேசி .... சைகையால் உரையாடி .... கவிதை எழுதினால் ..... காதல் அரும்புக்கவிதை ....!!! இதயங்களால் பிரியாமல் .... உறவுகளால் பிரிக்கப்பட்டால் .... கல்லறை காதல் கவிதை ....!!! காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!

கண்ணீரால் பதில் சொல்கிறாள் ....!!!

கண்களால் ஜாடைசெய்தால் ... காதலில் தவிர்க்க விட்டாள் .... காதலின் வலியென்ன ...? கண்ணீரால் பதில் சொல்கிறாள் ....!!! அவளின் இதயம் என்னிடத்தில் அவள் எப்படி உயிர் வாழ்கிறாளோ ....? நான் வாழ்கிறேனே  ...... என் இதயம் அவளிடம் ...!!! நான்  கல்லறையில் இருக்கிறேன் அவளின் கல்லறையை எதிர்க்கிறேன்.. வேண்டாம் வேண்டாம் அவள் வேண்டாம் ... அவளாவது வாழட்டும்  காதலோடு .... எனக்கும் சேர்த்து சில காலம் ..............!

என்னை ஒருமுறை திட்டு.....

ஒருமுறை சிரி உயிரே .... உன் கன்னகுழியின்.... அழகை ரசிப்பதற்கு ....!!! என்னை ஒருமுறை திட்டு ..... உதடுகளின் அசைவை .... அழகை ரசிப்பதற்கு ....!!! என்னை ஒருமுறை ..... முறைத்து பார் உயிரே .... உன் கண்கள் கதகளி.... ஆடுவதை ரசிப்பத்தற்கு ....!!! ஒரு முறை கோபித்துவிடு..... உன் மௌனத்தின் வரிகளை ... கவிதையாக வடிப்பதற்கு ....!!!

கேள்வி..? பதில்..!!! கவிதை

கேள்வி ....!!! உனக்கு எப்படி ....? இப்படியெல்லாம் .... கவிதை வருகுது ..? காதலிக்கிறாயா ..?  காதலிக்க போகிறாயா ...? காதல் தோல்வியா ..? பதில் ....!!! கவிதை வருகிறது காதலால் .... காதலுக்காக காத்திருந்தேன் ... கவிதை தொடர்ந்து வருகிறது .... புரியவில்லையா ...? என்னானாலும் புரியமுடியவில்லை.... அவளின் காதலை .....!!! 

நீ இங்கே - நான் எங்கே ...?

இங்கே.....!!! துடித்து கொண்டிருக்கும் .... என் இதயத்தில் உன்நினைவுகள் .... பூத்து கொண்டிருக்கிறது ....!!! அங்கே.....? துடிப்பில்லாத உன் இதயத்தில் ..... நான் என்ன பாடுபடுவேனோ ...? ஒருமுறை என்னை நினைத்துவிடு .... உன்னிடம் இருந்து நான் .... வெளியேறுவிடுகிறேன் ....!!! நீபாதி நான்பாதி தான் காதல் ..... நீ வேறுபாதி நான் வேறு பாதியாய் ..... என்றாகிவிட்டது நம் காதலில் ....? நீ இங்கே  இருக்கிறாய்  நான் எங்கே...?

ஒரு வரியில் காதல்தோல்வி கவிதை

................................ ஒரு வரியில் காதல்தோல்வி கவிதை  ................................. "இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி " ---- "இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் " ----- "இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் " ----- "இரண்டு இதயத்தின் நீண்ட தூக்கம் கல்லறை காதல் " ----- "இரண்டு இதயத்தின் புரிந்துணர்வு காதல் பிரிவு " + கே இனியவன் கவிதைகள்  ஒருவரியில் காதல்கவிதை வரி - 03

"ஒரு வரியில் காதலும் கவிதையும் "

..............................  "ஒரு வரியில் காதலும் கவிதையும் " ............................. " கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் " ------- " உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு " ------- " காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் " ------- "இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் " ------- "காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது " ------- + கே இனியவன் கவிதைகள்  ஒருவரியில் காதல்கவிதை வரி -02

ஒருவரியில் காதல்கவிதை வரி

.................................... ஒரு வரியில் இதயக்கவிதைகள் ....................................... " என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது " ------- " உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது " ------- " தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் " ------- "கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் " ------- "கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்" ------- + கே இனியவன் கவிதைகள்  ஒருவரியில் காதல்கவிதை வரி

எழுத்து தளத்தில் கே இனியவன்

இயற்பெயர் :  கே இனியவன் இடம் :  யாழ்ப்பணம் பிறந்த தேதி :  16-Nov-1965 பாலினம் :  ஆண் சேர்ந்த நாள் :  27-Dec-2012 பார்த்தவர்கள் :  35962 புள்ளி :  12624

காதலுக்கு இது பொருந்தாது ....

சிரித்து வாழவேண்டும் .... காதலுக்கு இது பொருந்தாது .... அழுதுவாழ்வதே காதல் ....!!! நானும் ஞானிதான் .... உள்ளே இருக்கும் உன்னையே ... தினமும் தியானம் .... செய்கிறேன் ....!!! நான் முதல் தோற்றதும் .... இறுதியில் தோற்றதும் ... உன்னிடம் தான் .... காதல் உனக்கு வராதத்தால் ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 865

யார் மூடுவது மற்ற கதவை ...?

இரட்டை கதவை கொண்ட .... நம் காதல் ஒற்றை கதவானது .... யார் மூடுவது மற்ற கதவை ...? காதல் மூறெழுத்தாய் .... இருப்பதுதான் தவறு .... கவலையும் மூன்றெழுத்து ....!!! காதலிப்பது கடினமில்லை .... காதலை சொல்வது கடினம் ... அதைவிட கடினம் .... காதலோடு இறப்பது .....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 864