இடுகைகள்

ஜனவரி 12, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நட்புக்கு பொய்

காதலுக்கு பொய் ... துன்பத்தை  ஏற்படுத்தும் ... நட்புக்கு பொய் ... இன்பத்தை ஏற்படுத்தும் ... உண்மையாக இருந்தாலும் ... பொய் தானே என்றுவிட்டு போவான் நண்பன் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் நட்பு கவிதை கவிப்புயல் இனியவன்

நண்பணின் நினைவுகள்

நான் எப்போதுமே தனியே .... வாழ்ந்ததில்லை .... நண்பணின் நினைவுகள் ... எப்படி தனியே வாழவிடும் ....? தனியே எங்கும் போனதுமில்லை .... நிழலாக நண்பன் வந்துகொண்டே இருக்கிறான் ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் நட்பு கவிதை கவிப்புயல் இனியவன்

நட்பு என்னும் விதை

நட்பு என்னும் விதையை ... எங்கு தூவினாலும் .... வளரும் .... நட்புக்கு வரண்ட ... பிரதேசம் என்று ஒன்று ... இல்லவே இல்லை ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் நட்பு கவிதை கவிப்புயல் இனியவன்

அவனுக்காக

காத்திருப்பேன் விழித்திருப்பேன் ... பொறுத்திருப்பேன் .... தனித்திருப்பேன் ... அவனுக்காக .... உயிரும் துறப்பேன் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் நட்பு கவிதை கவிப்புயல் இனியவன்

கலங்க விடவில்லை நண்பன்

இத்தனை காலமும் என் துன்பத்துக்காக .... நான் கண்கலங்கியதே... இல்லை .....!!! கலங்க விடவில்லை ... என் நண்பன் .... ஒருமுறை அவன் துன்பத்துக்காக கண் ... கலங்கினேன் ... எத்தனை வலிகளை... தாங்கியிருகிறான்... எனக்காக .... வலிக்குதடா நண்பா .....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் நட்பு கவிதை கவிப்புயல் இனியவன்

கவிதை எப்படி வரும் ,,,?

உனக்கு எழுத கவிதை வராது .... என்கிறாய் - எனக்கு .... கவிதையாய் - நீ இருப்பதால் உனக்கு ... கவிதை எப்படி வரும் ,,,? ^^^ மின் மினிக் கவிதைகள் (காதல் கவிதை) கவிப்புயல் இனியவன்

மொழியே காதல்

நீ பேசிய ... மொழியே காதல் ...... பொது மொழி .... நீ கொஞ்சிப்பேசினால் .... இலக்கணம் ..... கோபப்பட்டால் .... காவியம் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (காதல் கவிதை) கவிப்புயல் இனியவன்

இந்த அடைமழை ....!!!

இத்தனை அடைமழை .... பொழிந்துமா உன் இதயம் .... ஈரமாக வில்லை ....? எத்தனை காதலை .... இணைத்து வைத்துள்ளது ... இந்த அடைமழை ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (காதல் கவிதை) கவிப்புயல் இனியவன்

நிரந்தர வசிப்பிடம் காதல் .

உன்னிடம் என்னை பற்றி சொல்ல ... என்ன இருக்கிறது ...? என் பிறப்பிடம் காதல் ... நிரந்தர வசிப்பிடம் காதல் ... தற்போதைய முகவரி ... உன் மீது வைத்த காதல் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (காதல் கவிதை) கவிப்புயல் இனியவன்

பூக்களில் வாழ்கிறது ....!!!

இத்தனை ரணகளத்திலும் என் இதயத்தை அதிர வைத்தது உன் காதல் தான் ....!!! உன்னை சந்திக்கும் நிமிடமே என் இதயம் பூக்களில் வாழ்கிறது ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (காதல் கவிதை) கவிப்புயல் இனியவன்

கல்லால் எறிந்தால் - கஸல்

நீ .. காதல் .... கல்லால் எறிந்தால் ..... காயப்பட்டிருப்பேன் .... கற்கண்டால் அல்லவா ... எறிகிறாய்....!!! சுண்டினால் ஓடிவரும் .... நாய் குட்டிபோல் ... உன் இதயம் சுண்டியது .... வந்துவிட்டேன் ....!!! நீ என்ன ஆங்கிலேயர் ... காலணித்துவ பெண்ணா .... ஞாயிறு விடுமுறை   எடுகிறாய் ....? ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 940

காதலே விஷம் தானே - கஸல்

நீ என்னை காயப்படுத்துவது ... எனக்கு காயமல்ல ... என் பாவத்தின் பதிவு ....!!! காதல் தோல்வியில் ... ஏன் விஷம் குடிக்கிறார்கள் ...? காதலே விஷம் தானே ....!!! காதல் திரையை ... கிழித்தேன் .... என்னை மீட்டு ... விட்டேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 939

பன்னீரால் காதல் ....கஸல்

பன்னீரால் காதல் .... மழை பொழிவாய்... எதிர்பார்த்தேன் .... வெந்நீரால் பொழிந்தாய் ....!!! காதல் சேர்ந்து வாழவே ....! நமக்கேன் விலகி வாழ .... ஆண்டவன் எழுதினான் ....!!! உன் காதல் என் உறவுகளை.... பிரித்து வைத்துவிட்டது ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 938

அதிசயக்குழந்தை - உணவு

அதிசயக்குழந்தை - உணவு ----- சாப்பிடாயா என்று கேட்டேன் .... சாப்பிடேன் என்றான் ..... அதிசய குழ்ந்தை  .......!!! என்ன சாப்பிட்டாய் ....? என்ன சாப்பிடாய் என்று கேட்காமல் .... எப்படி சாப்பிடாய் என்று கேளுங்கள் ... என்று சொன்னான் .....!!! எப்படி சாப்பிட்டாய் ....? அடித்து பறித்து சாப்பிட்டேன் .... நீ அத்தனை கொடூரமானவனா ...? நான் மட்டுமல்ல நீங்களும் .... அப்படித்தான் சாப்பிட்டு உள்ளீர் .....!!! தன் இனத்தை பெருக்க வந்தத .... தன் உணர்வை வெளிப்படுத்த வந்த .... அத்தனை உயிரினத்தையும் .... நாம் அடித்து அதன் வாழ்வுரிமையை .... பறித்துதானே - சாப்பிடுகிறோம் .....!!! மாங்காய் தேங்காய் என்று .... அவை முதுமை அடைய முன்னரே .... அடித்து இழுத்து பறித்து சாப்பிடுகிறோம் ..... குடியோடு குடித்தனமாய் தூங்கும் ... ஜீவன்களுக்கு தூக்கத்திலேயே .... கண்ணி வைத்து கொலை செய்து .... சாப்பிடுகிறோம் ...... கூட்டம் கூட்டமாய் பார்க்கும் .... பறவைகள் - சாரை சாரையாய் ... அலைந்து திரியும் மீன்கள் .... அத்தனைக்கும் வலைபோட்டு .... வாழ்வுரிமையை  சாப்பிடுகிறோம் ....!!! எல்லாமே இறைவன் எமக்கே

கே இனியவன் -அழகிய கஸல்

படம்
Sujay Raghu  • 07-Jan-2016 10:37 pm ரசித்துப் படிக்கத்தூண்டும் வரிகள் !! அருமை தோழரே !! -------------- Punitha Velanganni  • 05-Jan-2016 3:50 pm அழகிய கஸல்..அனைத்து வரிகளும் வெகு அருமை தோழமையே..!! ----- ஆண்டன் பெனி  • 04-Jan-2016 12:19 pm அருமை நண்பரே... ----- Thanjai Guna  • 03-Jan-2016 9:10 am கசலை பிழிந்து எடுக்கும் கவியே !......... வாழிய உம கவித்திறம் காலம் உள்ளளவும்...... அன்பின் நல்வாழ்த்துக்கள்...... ------- mani amaran  • 01-Jan-2016 10:22 pm அருமை... வாழ்த்துக்கள் நண்பரே... ---- Shyamala Rajasekar  • 01-Jan-2016 9:13 pm இனியவனின் கஸல் .....எனும்போது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது . அதை பூர்த்தி செய்திருக்கிறீர்கள் . அருமை ! வாழ்த்துகள் ! ------ karthika AK  • 01-Jan-2016 9:12 pm மிக அழகிய கசல் நட்பே....ஒவ்வொரு சொல்லும் அழகியலை சுமந்தபடி.....காட்சிப் பிழைகளின் வகைப்பாடு குறித்த சிறு விளக்கம் மிக அருமை .....அசத்தல்...... ----- அகர தமிழன்  • 01-Jan-2016 9:45 am அருமையான ஆக்கம்