புதுக்கவிதை
அகோர மழை ----------------------- சாதாரண துளியுடன் ஆரம்பித்தது ... கொட்டி தீர்த்த அகோர மழை ....!!! வீதியோரகடையொன்றில் கூரையில் ... கூட்டத்தோடு கூடமாய் நடப்பதை.... பார்த்துக்கொண்டிருந்தேன் ......!!! வீதியிலிருந்த குழிகள் பள்ளங்கள் ... எவையும் தெரியாமல் நிரம்பிவழிய ..... சிற்றாறொன்று சிறுவீதியால் திசை ... திரும்பி வந்ததோ என வாயை ..... பிளக்கும் பெருவெள்ளம் .....!!! தள்ளுவண்டியில் காய்கறிகாரன் ..... தள்ளிவந்த வண்டிதான் மிஞ்சியது ... காய்கறிகளைகாணோம்...... பள்ளத்திலா குழிக்குள்ளா....? தேடிப்பார்க்கும் நிலையிலில்லை .....!!! நடைபாதையருகில் பெட்டிக்கடை ... பழவியாபாரி தான் நனைந்தபடி .... பழங்களுக்கு போர்வை போத்து ... இழந்த வருமானத்தை வரண்ட ... மனத்துடன் காத்திருக்கும் நிலை ...!!! சிரித்தபடி வந்த காதல் ஜோடியின் ... மோட்டர்சைக்கிள் செயலிழக்க ... உயிரை கொடுத்து உதைக்க .... இயங்கமறுக்கும் சைக்கிளை .... கவலையோடு பார்க்கும் காதலர் நிலை ....!!! என்னருகில் நின்ற சிறுபையன் ... மழையில் நனைய ஆசைப்பட்டு .... தாயின் கையை உதறியபடி கூரை ... தண்...