இடுகைகள்

ஏப்ரல் 16, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாக தோஷம்

படம்
அழகான குக் கிராமம் .... கூப்பிடு தூரத்தில் ஆங்காங்கே .... குடிசைவீடுகள் இடையிடையே ... வேற்று காணிகள் ,முற்பற்றைகள் .... முற்பற்றைகள் நடுவே மண் புற்றுகள் ... எந்தபுற்றில் பாம்பு வசிக்கிறதோ .... அந்த புற்று கோயிலாக மாறும் ...!!! வீடுகள் என்னவோ குடிசைகள் ... பாம்பு புற்றுகள் செங்கல் மாடங்கள் ... பல கால நித்திய பூசை , பால் அபிஷேகம்... ஏட்டிக்கு போட்டியாக புற்றுக்கள் .... கோயிலாக மாறும் போட்டியாக ... விதம் விதமான பூசைகள் .... பக்தர்களுக்கு திண்டாட்டம் .....!!! ஊரில் குறி சொல்பவரே நீதிபதி .... ஊரின் நீதிபதி சொன்னால் இறுதி ... யாரும் திருப்பி பேசமாட்டார்கள் ... பேசினால் நாகதோஷம் பற்றிவிடும் .... அவருக்கு வரும் கனவுகள் ... காலபோக்கில் கோயிலாய் மாறிவிடும் .... அயல் கிராமத்தவரும் வந்துசெல்வர் ...!!! திருமணமாக விட்டால் நாகதோஷம் .... குழந்தைகள் படிக்காவிட்டால் நாகதோஷம் .... குடும்ப சண்டைக்கு நாகதோஷம் .... ஊரில் மழைபெய்யாவிட்டால் நாகதோஷம் .... நித்திய பூசைகள் ,அபிஷேகம் பல செய்தும் ... ஊரின் நாக தோஷம் தீரவில்லை .... ஊராரின் தோஷங்களும்

கடவுளும் கவிதையும் ....!!!

கடவுளும் கவிதையும் ....!!! உணர்வதே கடவுள் என்கிறார்கள் .... உருவமே கடவுள் என்கிறார்கள் .... உணர்ந்து பார்த்தால் உருவமில்லை ... உருவமாக பார்த்தால் உணர்வில்லை .... கவிதையும் இப்படிதான் .... யதார்த்தமாக பார்த்தால் கவிதையில்லை...  கவிதையாக பார்த்தால் யதார்த்தமில்லை ...... கடவுளும் கவிதையும் அருவுருவமே ....!!! கடவுள் என்றால் என்ன ....? உணர்ந்த ஞானிகள் மத்தியில் ... ஏராளமான பல்வேறு விளக்கம் ... உணர்வுக்கேற்ப அவரவர் விளக்கம் .....!!! கவிதை என்றால் என்ன ....? விளக்கம் தர உலகில் கவிஞர் இல்லை .... உணர்வுகளின் வெளிப்பாட்டை யார் .... விளங்கபடுத்த முடியும் ....? ஆத்மா திருப்திக்காக அவரவர் கடவுள் ..... ஆத்மா வெளிப்பாடாக அவரவர் கவிதை .... கற்றறிந்தவனும் கவிதை எழுதுவான் ... கல்லாதவனும் கவிதை எழுதுவான் .... உயிர்களுக்கும் எல்லாம் கடவுள் பொது ... சிந்தனையாளனுக்கு கவிதை பொது ... கடவுளில் பெரிய சிறியகடவுள் இல்லை ..... கவிஞர்களில் பெரியவன் சிறியவன் இல்லை .... இறையிருப்பை நம்புகிறான் ஆர்தீகன்....  இறையிருப்பை நம்பவில்லை நார்தீகன் .... இருவருமே விரும்புவது கவிதை ... எழுத்தின் கற்பனை வடிவம் கவிதை ... செயலின்

காதல் எனக்கு பிடிக்காது ...

காதல் எனக்கு பிடிக்காது ... என்றாய் சந்தோசப்படுகிறேன் ... என்னை பிடிக்கவில்லை என்று ... சொல்லாமல் காதல் பிடிக்கவில்லை ... என்றுதானே சொன்னாய் ...!!! + கே இனியவன் அணுக்கவிதை

கே இனியவன் அணுக்கவிதை

என்னை பிடிக்கவில்லை ... என்று சொல் நான் ஏற்கிறேன் ... காதலே பிடிக்கவில்லை ... என்கிறாயே - காதல் உனக்கு என்ன செய்தது ...? + கே இனியவன் அணுக்கவிதை %%%%%% காலமெல்லாம்  காத்திருப்பேன் -உன் .. கரம் பிடிக்கவல்ல ... உன் காதலுக்காக ...!!! + கே இனியவன்  அணுக்கவிதை

காதலித்து கொண்டிருப்பதழகு ...!!!

காதலி அழகு ....!!! அதைவிட அழகு காதல் .... அதையும் விட அழகு ... காதல் காணாமல் போகாதிருக்க ... காதலித்து கொண்டிருப்பதழகு ...!!! + கே இனியவன்  அணுக்கவிதை

பிரிவும் காதல் தான் ...!!!

எண்ணங்களும் வர்ணங்களும் ஒன்றுதான் ... நிலைத்து நிற்காது ...!!! உனக்கும் எனக்கும் உள்ள உறவும் காதல் பிரிவும் காதல் தான் ...!!! என் இதயத்தை பலூனாக நினைத்து... ஊதி விளையாடுகிறாய் ... கவனம் உள்ளே இருப்பது ... நீ ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;790

தீப்பந்தமாக எரிகிறாய் ....!!!

நான் வீதி நீ வீதி விளக்கு செயல்படுவோம் காதல் விபத்தை தவிர்ப்போம் ......!!! காதலில் இறுதி கட்டம் ... மாலையா ....? மரணமா .......? உன் கையில் ....!!! உன்னை காதல் தீபமாக நினைத்தேன் தீப்பந்தமாக எரிகிறாய் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;789

நம் காதலுக்கும் உண்டு ....!!!

இறைவா என்னை மன்னித்துவிடும் இவளை தெரியாமல் ... காதலித்து விட்டேன் ....!!! சந்திரனுக்கு வளர்பிறை தேய்பிறை இருப்பதுபோல் -நம் காதலுக்கும் உண்டு ....!!! கண்ணே என்று உன்னை ... வர்ணித்த என்னை ... கண்ணீரில் நீந்த வைத்து ... அழகு பார்க்கிறாய் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;788

அணுக்கவிதை

காதலித்து பார் ஆரம்பத்தில்  இதயத்தில் பன்னீரும்  இறுதியில் கண்ணீரும் வரும் ...!!! கே இனியவன்  அணுக்கவிதை %%%%%%% சொர்க்கமும் நரகமும்  தீர்மானிக்கும் காரணி  காதல் ...!!! + கே இனியவன்  அணுக்கவிதை