இடுகைகள்

செப்டம்பர் 25, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எகிப்தின் மம்மியில் வைத்தால்...!

நான் ஒன்றும் விஷம் ... அருந்த தேவையில்லை...! உன் நினைவே போதும் நான் மெல்ல மெல்ல இறப்பதற்கு ....!!! என் உடலை எகிப்தின் மம்மியில் வைத்தால்...! இரண்டு நிகழ்வுகள் ஒன்று என் உடல் அழியாது மற்றையது உன் நினைவுகள் அழியாது ....!!! நினைவு என்பது ஒரு மலர்தான் .... உதிக்கும் போது அழகு வாடும் போது அழுகை ....!!!

வாழவைக்கிறாய் -நீ

எப்போது ஒரு மனிதன் இறக்கின்றான் ....? மூளையில் நினைவாற்றல் நின்றவுடன் ...!!! அன்பே உன் நினைவாற்றல் என்னை வாழவைக்கிறது வாழ்கிறேன் என்பதைவிட வாழவைக்கிறாய் -நீ நீ பேசாத நிமிடங்கள் நான் புதைகுழிக்குள் வாழும் நிமிடங்கள் என் கடவுளும் நீ காலனும் நீ ....!!!

காதலின் தலைவிதி

நான் காத்திருக்கிறேன் காத்திருப்பேன் அன்பே உன் கனமான வார்த்தைக்காக ....!!! நீ காரமாக பேசினாலும் கண்டு கொள்ளாமல் விட்டாலும் காத்திருப்பேன் உன் கனமான வார்த்தைக்கு ....!!! காதலின் தலைவிதி காத்திருப்பதும் கலங்கிக்கொண்டு வாழ்வதும் நான் மட்டும் விதிவிலக்கா ...?

துன்பம் கூட கடுகளவுதான் ....!!!

எத்தனை முறை என்னை கோபப்படுத்தினாலும் பறவாயில்லை ....!!! அத்தனை முறை உன்னை பலமடங்கு நேசிக்கிறேன் நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து விடு ....!!! காதலோடு இருந்துவிடு நீ காதலோடு இருந்தால் கடலளவு துன்பம் கூட கடுகளவுதான் ....!!!

உன் நினைவோடு வாழ்கிறேன்

என் நினைவோடு .. உன் நினைவுகளை இணைத்து பார் உயிரே ....!!! என் நினைவுகள் படும் வேதனை உனக்கு புரியும் ... என் நினைகளின் காயங்கள் தெரிய வரும் ....!!! அத்தனை காயங்கள் வந்தபோதும் உன் நினைவுகள் நான் வாழும் ஆலயம்