இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலில் எரிகிறேன்.....!

காதல் நடைபாதை...... வியாபரமாகிவிட்டது..... தெருவெல்லாம்..... காதல் ஜோடிகள்.....! உற்றுப்பார்தால்...... கண் எரியும்..... உன்னை உற்றுபார்தேன்...... காதலில் எரிகிறேன்.....! பிறக்கும் போதும்.... இறக்கும் போதும்.... வலி தருவது...... காதலே.................! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

பொருளியல் ஆசான்

படம்

உள்ளத்தில் பூவை.....

உள்ளத்தில் பூவை..... மலர வைக்காவிட்டாலும்.... பரவாயில்லை..... பூமரத்தின் வேரை.... சேதமாக்கும்செயல்களை நினைக்காதீர்....... என்றோ ஒருநாள்...... அந்த மரத்தில் பூ மலர்வதற்கு வாய்ப்புண்டு....! @ கவிப்புயல் இனியவன் ஆன்மீக கவிதைகள்

ஒவ்வொரு மனிதனும்....

ஒவ்வொரு மனிதனும்..... ஒவ்வொரு நூலகம்...... ஒவ்வொரு அனுபவமும்.... ஒவ்வொரு நூல்கள்....... ஒவ்வொரு நிகழ்வும்..... ஒவ்வொரு அறிவு.... பெருக்கிக்கொண்டவன்... அறிஞனாகிறான்....! ஒவ்வொரு மனிதனும்.... அறிவுடனேயே பிறக்கிறான்...... அதை கண்டுகொள்ளும்..... அறிவுத்திறன் அனுபவத்தால்..... உதிர்க்கிறது........ கண்டுபிடிக்க முடியாத..... அறிவுகள் உதிர்ந்து விடும்......! ^^^^^ கவிப்புயல் இனியவன்

சிந்தனை கவிதைகள்

கோயிலில் பாலபிஷேகம்..... ஓட்டை சட்டையுடனும்..... ஓட்டை சட்டியுடனும்..... வரிசையில் ஆயிரகணக்கில்..... குழந்தைகள்.....! கோயிலின் வாசலில்...... வரிசையாக முதியவர்கள்..... கைநீட்டியதையும் ...... காணாமல் பட்டுவேட்டியுடன்...... கோவில்தரிசனம்......! கோயிலை நிர்வகிப்பவர்கள்..... அறங்காவளர்கள்...... அறங்காவளரை நிர்வகிப்பது..? ^^^^^ கவிப்புயல் இனியவன் ^^^^^ கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........! 

சிந்தனை கவிதைகள்

கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........! கண்டதை எழுதுவதும்.... கண்டபடி எழுதுவதும்.... கவிதையில்லை....... கண்ணியமாய் எழுதுபவன்..... கவிஞன்........! காதலால் ............. கவிதை வரும் என்பதை.... காட்டிலும்........... காதலோடு கவிதை...... எழுதுபவன் உண்மை..... கவிஞன்..........! சமூக ...... சீர்திருத்தத்துக்காய்..... கவிதை எழுதுவதைவிட.... சமூகத்திலிருந்து...... சீர்திருந்தி வாழ கவிதை..... கவிதை எழுதுபவன்..... கவிஞன்...........! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........!

கவிப்புயலின் கஸல்

சில நேரங்களில்.... கனவுகள் பலித்தால்.... வலியென்ன என்பதை.... உன் காதலில்   கற்றுக்கொண்டேன்.....! நீ..... நினைவில் வரும்போது..... தலைவலி தருகிறாய்.... கனவில் வரும் போது.... தலைவிதியாகிறாய்......! நீ போன ஜென்மத்தில்.... பட்டாம் பூசியாய்.... இருந்திருக்கிறாய்...........! @ கவிப்புயல் இனியவன் கவிப்புயலின் கஸல் 01 ------ கவிதைகள் கண்ணீரை பேனா  மையாக்கி .... வலிகளை வரிகளாக்கி பிரசவிக்கின்றன......! நீ காலை ...... மாலை பூக்கும் ... மலராக இருந்து விடு ... இரட்டை இதயம் ......... படைத்தவளே...........! உன்  பார்வைக்கு அஞ்சி ... அருகில் வரும்போது ... மறு தெருவுக்கு போகிறேன்... உன் பார்வையால்...... கருகியவர்களின்....... அறிவுரை கேட்டு.....! @ கவிப்புயல் இனியவன் கவிப்புயலின் கஸல் 02

தேர்த் திருவிழா

தேர்த் திருவிழா ----------------- நினைத்து பார்க்கிறேன்.... கோயில் திருவிழாவை.... பத்து நாள் திருவிழாவில்.... படாத பாடு பட்டத்தை ...! முதல் நாள் திருவிழாவிற்கு.... குளித்து திருநீறணிந்து.... பக்திப்பழமாய் சென்றேன்... பார்ப்பவர்கள்..... கண் படுமளவிற்கு....! இரண்டாம் நாள் திருவிழாவில்... நண்பர்களுடன் கோயில் வீதி..... முழுவதும் ஓடித்திரிவதே வேலை..... பார்ப்பவர்கள் எல்லோரும்..... திட்டும் வரை ....! மூன்றாம் நாள் திருவிழாவில்.... நண்பர்கள்மத்தியில் .... மூண்டது சண்டை ..... கூட்டத்துக்குள்..... மறைந்து விளையாட்டு ....! நாளாம் நாள் திருவிழாவில்.... நாலாதிசையும் காரணமில்லாது.... அலைந்து திரிவேன் ...! ஐந்தாம் நாள் திருவிழாவில்.... சேர்த்துவைத்த காசை.... செலவளித்து விட்டு.... வெறும் கையோடு இருப்பேன் ...! ஆறாம் நாள் திருவிழாவை.... ஆறுதலான நாளாக கருதி..... வீட்டிலேயே இருந்து விடுவேன் ...! காத்திருப்பேன்.... தேர் திருவிழாவை -அப்பாவின்.... ஆசீர் வாதத்துடன் செல்வதற்கு.... அப்பாவும் படியளர்ப்பார்.... அம்மாவும் படியளப்பா ....! தேர் திருவிழா இறைவனின்.... அழ

தினம் வாடி துடிக்கிறேன்......!

என்னை ..... விரும்பு என்று .... கெஞ்ச மாட்டேன் .... என்னை விரும்பாத ... வரை விட மாட்டேன் .... <3 உலகில் ..... பெரிய சித்திர வதை .... பேசிய ஒரு உள்ளம் .... பேசாமல் இருப்பது தான் ...... உலகில் பெரிய குற்றம் ..... காதல் செய்யாமல் .... காதலிப்பது போல்.... நடிப்பது தான் ....! <3 எத்தனை உள்ளங்கள் ... கெஞ்சி கேட்டாலும் .... தனிப்பட்ட கவிதை ... யாருக்கும் இல்லை .... உயிரே எத்தனை கவிதை .... எழுதினாலும் உனக்கு.... தவிர யாருக்கும் இல்லை.....! <3 என்னை ..... காதலால் சித்திர வதை.... செய்கிறாள் .... கண்களால் கைது செய்தவள் .... நினைவு என்னும் .... சிறைச்சாலையில் .... தினம் வாடி துடிக்கிறேன்......! <3 உனக்காக.... எதையும் இழப்பேன் .... என்னவள்.....  என்னை இழந்து நிற்கிறாள் .... எனக்காக எதையும் .... வைத்திருக்காத நான் .... எல்லாவற்றையும் ... இழந்து நிற்கிறேன் .......!!! @@@@@ கவிப்புயல் இனியவன் சின்னச் சின்ன அணுக்கவிதை - 02

சின்னச் சின்ன அணுக்கவிதை

நெருப்பில் கருகியவர்கள் பலர் உன் சிரிப்பில் கருகியவன் நான் தான் ...!!! <3 மன காயப்படும் கூட‌ ஆறுதல் சொல்ல‌ நீ வருவாய் என்று ஏங்குது சொற‌ணை கெட்ட‌ என் இதயம்....!  <3 இதயம் துடிக்க‌ காற்று தேவையில்லை காதல் போதும் ...! <3  நீ காதல் கொண்டு பார்க்கிறாய் -என்ன செய்வது உன்னில் காதல் வரமாட்டேன் என்கிறதே .....! <3 நாம் காதலர் என்று சொன்னால் யாரும் நம்புவதில்லை நம்பும் படியாக நீ மாறவில்லை ....!!! <3 ஒன்றில் நீ பேசு அல்லது உன் கண் பேசட்டும் இரண்டும் பேசினால் நான் எப்படி பேசுவது ...? <3 அவளுக்கு இதயம் இருக்கும் இடத்தில் முள் கம்பிகள் இருக்கிறது போல் இப்படி வலி தருகிறாள் ..? <3 உன் சின்ன சிரிப்பு போதும் என் நெஞ்சில் இருக்கும் வலியை உடைத்தெறிய ....!!! <3 நான் எழுதுவது உனக்கு ஒருவரி கவிதை - அது என் இதய வலி கவிதை <3 நான் தற்கொலை செய்ய மாட்டேன் - நீதான் என்னை தினமும் கொல்கிறாயே...!!! @@@@@ கவிப்புயல் இனியவன் சின்னச் சின்ன அணுக்கவிதை  

காதல் புத்தன்.....!

முகத்தில் ரோஜாவையும் இதயத்தில் முள்ளையும் வைத்து காதலிக்கிறாய் நான் ஏற்கிறேன்..... காதல் பித்தனில்லை.... காதல் புத்தன்.....! @ நெஞ்சை கிள்ளும் நினைவோடு கவிப்புயல் இனியவன்

நெஞ்சை கிள்ளும் நினைவோடு

நான் தூரத்தில்....... இருப்பதுதான் உனக்கு.... சந்தோசம் என்றால்..... தூரவே இருந்து விடுகிறேன்.... உன் அருகிலிருந்த ...... நினைவுகலோடு....! @ நெஞ்சை கிள்ளும் நினைவோடு கவிப்புயல் இனியவன்

முதுமையின் வலிகள்

முதுமை..... இளமையின் நினைவை..... எரிந்த சாம்பலாய்..... சுமர்ந்து கொண்டிருக்கும்.... சுமைதாங்கி..........! மரணத்தின் வாசலை....... ஏக்கத்தோடும் பயத்தோடும்....... வரவேற்றுக்கொண்டிருக்கும்...... மர்ம அறை............! அனுபவங்களை....... முற்களாகவும்...... பூக்களாகவும்...... ரசித்துக்கொண்டிருக்கும்..... ரோஜாச்செடி.....! வார்த்தைகளின்..... வீரியமும்....... இன்பங்களின்....... வீரியமும்...... அடங்கியிருக்கும்....... பெட்டிப்பாம்பு..........! எழும்பு கூட்டை..... தோலால் மறைத்து வைத்து...... கிறுக்கள் சித்திரத்துக்கு...... உயிர் கொடுக்கும்..... உன்னதமான உயிர்.........! நூறு மீற்றர் ஓட்டத்தை...... நொடிக்குள் ஓடியவனும்..... மெதுவாக நடக்க .... கற்றுக்கொடுக்கும் ஆசான்......! கொரட்டைத்தான் ....... மூச்சு பயிற்சி........ இருமல் தான் செய்தி..... தொடர்பாளன்........! அனுபவத்தை  மூலதனமாய்...... கொண்டு ஞானியாகும் நிலை..... அனுபவத்தை தவறாக கொண்டு...... பித்தனாகும் நிலை....... முதுமை.....................! @ கவிப்புயல் இனியவன்

மூன்றாம் அறிவு

மூன்றாம் அறிவு -------------------------- "அ" எழுதியவுடன்...... ஆரம்பமாகிவிடும்..... ஏட்டறிவு........! ஏட்டறிவில்..... ஏற்றம் கண்டவரும்........ உள்ளனர்...... ஏட்டறிவு எட்டாதவரும்..... உள்ளனர்.........! ஒவ்வொரு வயதுக்கும்..... ஒவ்வொரு பட்டறிவு....... ஏட்டறிவில்லாமல்....... பட்டறிவால் வாழ்வியலில்..... பட்டதாரியானவர்களும்..... ஏராளம்.........! ஏட்டறிவும் பட்டறிவும்..... போராட்டத்தாலேயே....... பெறப்படுகிறது.......! ஏட்டறிவும் பட்டறிவும்..... ஏதோ ஒருவகையில்..... யாரோ ஒருவரின் சாயல்.... அல்லது நிழலாகவே..... இருக்கிறது...........! சாயல்களும் நிழல்களும்..... காலத்தால் மறைந்துவிடும்... இல்லையேல் அவரவர்...... காலத்துக்கே பொருந்தும்......! இன்றைய உலகுக்குதேவை...... மூன்றாம் அறிவே....... யாருடைய சாயலோ நிழலோ..... இல்லாமல் உனக்கே உரிய...... அறிவே மூன்றாம் அறிவு.......! மூன்றாம் அறிவை...... தன்னுள்ளே அறிந்தவனே..... இன்றைய சாதனையாளன்...... இது ஆளுக்காள் வேறுபடும்..... நிழலாகவும் சாயலாகவும்..... இன்னொருவருக்கு தொடராது..... தொடரவும் முடியாது.....!

"அ" தரும் அழகுக்கவிதை

அ ன்பினால் ... அ கிலத்தையே வெல்லலாம் .... அ ங்கிகள் தொடக்கம் ... அ ருகில் உள்ள உயிர்வரை ... அ ன்பு செலுத்துங்கள் .....! அ ற்புதங்கள் என்பது .... அ திசயம் செய்வதல்ல ... அ ன்புக்கு கட்டுப்பட்டு ... அ ண்ட சராசரத்தோடு .... அ டக்கமாவதே .........! அ ன்று நடந்த துயரை .... அ ன்றே மறப்பவனே .... அ தி உயர் மனிதன் .... அ தையே நினைத்தால்... அ ன்றும் இறக்கிறாய்....! அ ந்தி சாயும் நேரம் .... அ ன்றைய நிகழ்சிகளை ... அ சைபோட்டுபாருங்கள் .... அ ருவருப்பான செயல் எது ...? அ ரவணைப்பு செயல் எது....? ^^^^^ கவிப்புயல் இனியவன் "அ" தரும் அழகுக்கவிதை

அணுக்கவிதை

சுற்றி சுற்றி வருகிறேன் கொத்தி கொத்தி கலைக்கிறாய் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,! @ காதலி உள்ளம் சுத்தமாகும்.... கவிதை எழுது எண்ணம் சுத்தமாகும்..... இரண்டும் செய் வாழ்கை வளமாகும்...! @ கவிப்புயல் இனியவன் சின்னச் சின்ன அணுக்கவிதை

காதல் தந்த காயம்....

நீ ................ காதலோடு பார்கிறாய்.... என்ன செய்வது எனக்கு...... உன்மேல் காதல் செய்ய.... கடந்த காதல் தந்த காயம்.... தடுக்கிறதே......! @ கவிப்புயல் இனியவன் சின்னச் சின்ன அணுக்கவிதை

சின்ன அணுக்கவிதை

நீ தான் பிரிந்தாய்..... சொறனைகெட்ட இதயம்... நீ வருவாய்யென..... கதவை திறந்துவைத்து... காத்துக்கொண்டு இருக்குது......! @ கவிப்புயல் இனியவன் சின்னச் சின்ன அணுக்கவிதை

சின்ன அணுக்கவிதை

உன் சிரிப்பில் கருகாமல்..... நெருப்பில் கருகியிருக்கலாம்.... காயம் தான் இருந்திருக்கும்.... வலி காலத்தல் இறந்திருக்கும்.... @ கவிப்புயல் இனியவன் சின்னச் சின்ன அணுக்கவிதை

தை பிறந்தால் வழி பிறக்க வருக

தை - திருமகளே வருக வருக .... தைரியம்  சிறக்க வருக வருக .... தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக .... தைத்தியரை அழிக்க வருக வருக ....!!! முற்றத்தில் கோலமிட்டு ..... முக் - கல் அடுப்பு வைத்து .... முத்திரி விளக்கேற்றி ..... முக்குணத்தை அழிக்க ... முக்காலமும் சிறப்பாக அமைய .... கரம் கூப்பி அழைக்கிறேன் தை- திருமகளே வருக வருக ....!!! உன்னையே உயிராய் ..... உன்னையே தொழிலாய் .... உன்னையே மூச்சாய் வாழும் .... உன்னையே தெய்வமாய் ..... உழைத்து வாழும் உழவு விவசாயம்... செழித்து வாழ என் உயிர் தாயே .... தை- திருமகளே வருக வருக ....!!! ^ பொங்கல் கவிதை கவிப்புயல் இனியவன் 2018 . 01 .14

உயிர் தோழன் நீ....

மறக்க நினைக்கிறேன் பலவற்றை ... நினைக்க விரும்புகிறேன் சிலவற்றை....! மறக்கவே முடியாதவை நினைக்கவே முடிந்தவை ஒன்றே ஒன்றுதான் நட்பு ....! தோள் கொடுக்க.... உயிர் தோழன் நீ.... இருக்கும் வரை... தோல்விகள்........! ஆயிரம் ஆயிரம்..... தோன்றினாலும்...... துவண்டு விழமாடேன் உன் சுட்டு விரல் எனக்கு சுட்டிக்காட்டும் வெற்றியை ....! @ கவிப்புயல் இனியவன்

முடிந்த கதை....!

பட்ட மரத்தில் பட்டாம் பூச்சிக்கு... என்ன வேலை....? என்னை..... பட்ட மரமாக்கி விட்டாய்....... இப்போ........ பறக்கத்துடிக்கும் பட்டாம் பூச்சி -நீ.........! கனவுகளுக்கும்..... கற்பனைகளுக்கும் ...... இந்த மரம் பொருத்தமில்லை ... தயவு செய்து....... மரத்தை மாற்றிவிடு ...! பிரிந்து சேரத்துடிக்கும் இதயம் ............ உடைந்த பானையின்..... முடிந்த கதைதான்....! @ கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

இதய அறைக்குள் .....

தமிழ் மொழியே...... முதல் மொழி..... உன் விழிகள் பேசும்.... மொழியே...... உலக மொழி .........! @ நீ ..... சிப்பிக்குள் ....... முத்தைப்போல் ..... என்....... இதய அறைக்குள் ..... இருக்கிறாய் ....! @ கவிப்புயல் இனியவன் கவிதைத்துளிகள்