புதன், 22 ஜூலை, 2015

ஈகோ காதல் கவிதை

எனக்கும் அவளுக்கும் ....
உயிர் பிரியும்வரை ....
காதல் பிரியாத காதல் ....
இருக்கிறது .....!!!

அவளூக்கு ஏதும் நடந்தால் ....
நான் இறந்து பிறப்பேன் ....
எனக்கு ஒன்றென்றால்....
அவளும் இறந்து பிறப்பாள்.....!!!

நாம் ஒருவரை ஒருவர் ....
சந்திக்கும்போது .....
கீறியும் பாம்புமாய் ....
இருப்போம் -காதல்
நகமும் சதையும்போல்
இனிமையாய் இருக்கும் ....!!!

+

கே இனியவன்
ஈகோ காதல் கவிதை 

எந்த மாலையாக்குவாய் ,,,,?

உன் மீது காதலை ....
நிறுத்துவதென்றால் ....
வீசும் காற்றை  நிறுத்து ....
நானும் நிறுத்துகிறேன் ......!!!

புரிகிறதா ....?
என்னில் காற்று இருக்கும்....
காலம் வரை உன் மீது ...
காதல் இருந்தே தீரும் .....
நீ என்னை பார்த்த ஒவ்வொரு ...
பார்வையும் மாலையாய் ....
கோர்த்துவைதிருகிறேன்....
எந்த மாலையாக்குவாய் ,,,,?

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

என் இதயம் பட்டினியால் ...

பசிக்கும் போது ஏதோ....
கிடைப்பெதேல்லாம் ....
வயிற்றுக்குள் போட்டு .....
தணிக்கமுடியும் உயிரே ....!!!

காதல் இதயத்தில் ....
பூக்கிறது  உன்னைத்தவிர ...
அதற்குள் யாரையும் ...
திணிக்கமுடியாது .....
உன் பதில் கிடைக்கும்வரை ....
என் இதயம் பட்டினியால் ...
வாடும்  மறந்துடாதே ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

இனிய வரவேற்பு கவிதை

தவன் துயில் எழமுன் ....
ராவாரத்துடன் எழுந்த .....
ருயிர் நண்பர்களே ....
ண்டவன் கிருபையால் .....
சீர் வதிக்கப்படுகிறோம்.....!!!

னந்தம் பொங்கிட ....
த்மா திருப்தியுடன் ....
ரம்பிப்போம் பணிகளை ....
யிரம் பணிவந்தாலும் ....
ர்வத்துடன் பணிசெய்வோம் ....!!!

ரம்பிக்கும் வாழ்க்கை ...
லயத்துக்கு சமனாகட்டும்....
ண்டவன் வீட்டில் குடிகொள்ளடும் ....
னந்தத்தால் பொங்கி வழியட்டும் ...
ருயிர் உறவுகளே வாழ்க வளமுடன் ......!!!

த்திரமே பகையின் சூத்திரவாதி ....
த்திரத்தை வென்றவன் ...
ண்டவனை வெல்கிறான் ....
ண்டாண்டுகாலம் நட்புடன் ....
ட்சி செய்கிறான் உலகை .....!!!

தியும் அந்தமும் இல்லாத ....
ண்டவனை தினமும் தொழு ....
யிரமளவு அதிஷ்டம் குவியும் ....
ருயிர் குடும்பத்துடன் ....
னந்தமாய் வாழ்ந்திடுவோம் ....!!!

நகை சுவை கவிதைவரிகள்....!!!

நகை சுவை கவிதைவரிகள்....!!!
-----------

புஷ்பத்தை உச்சரித்தார் தாத்தா பல் ஷெட் பறந்தது 
------------

உறக்கத்தில் உண்மைசொன்னார் அரசியல் வாதி 

-----------

வளர்ந்த குழந்தை விசில் ஊதுது பஸ் நடத்துனர் 

-----------

இல்லத்தில் தாக்குதல் குழந்தையும் கணவனும் அழுகை 

என் கவிதை வடிப்புகள்

காதல் கவிதைகள்
-----------------------------

01) கே இனியவன் கஸல் கவிதைகள்
02) வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
03) காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
04) விஞ்ஞானமும் காதல் கவிதையும்
05) உதிர்ந்து கொண்டிருக்கும் காதல்
06) காதல் பிரிவு
07) தேவதாஸை காணவில்லை....?
08) கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!
09) நீ போகும் பாதை உன் பாதை ....!!!
10) வலிக்கும் கவிதைகள்
11) என்னவளே என் காதல் பூக்கள்
12) என் காதலும் நீ என் கவிதையும் நீ
13) உயிரான காதலை உணர்வோம் காதலரே ....!!!
14) உயிர் எழுத்தும் நீதான் உயிரே ....!!!
15) காதலால் காதல் செய்
16) கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்
17) அன்புள்ள காதலே .....!!!
18) இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை
19) கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
20) அன்பே கவிதையோடு வாழ்வோம்
21) உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
22) காதல் வலிக்குது
23) இதயம் தொடும்காதல் கவிதை
24) காட்சியும் கவிதையும்
25) காதல் இருக்க பயமேன் ...?
26) என் இதயத்தில் வாழ்பவளே .....!!!
27)  காதலில் வென்றுபார் வேதனை புரியும் ....!!!
28) என்னவளே... என்னவளே ...!!!
29) பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!
30) என் மூச்சே காதல் தான் ....!!!
31) ஒரு இதயத்தின் காதல் ....!!!
32) காதலை தவிர வேறு ஏதுமில்லை 

என் கவிதை வடிப்புகள்

சமுதாய வாழ்க்கை கவிதைக்ள்
-------------------------------------------------

01) இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை
02) தத்துவ சிதறல்கள்
03) நான் சொல்லும் தீர்ப்பு ....!!!
04) தொழிலாளர் தினம் ......!!!
05) நன்றாக நடிக்கிறோம்..!!! நல்லவனாக நடிக்கிறோம் ....!!!
06) தொழிலாளர் தின வாழ்த்துக்கள்
07) நடுவரின் தீர்ப்பே இறுதி
08) சாதி... சாதி...சாதி .....!!!
09)  நாக தோஷம்
09) கடவுளும் கவிதையும் ....!!!
10) புதுக்கவிதை
11) கே இனியவன் தத்துவங்கள்
12) இனிய வரவேற்பு கவிதைகள்
13) தொடரும் ஏக்கங்கள்
14) அறிவுரை காதல் கவிதைகள்
15) புதுக்கவிதையில் பொதுக்கவிதை
16) குடும்ப கவிதைகள்
17) எமக்காக சுமப்பவரே ....!!!
18) நினைவெல்லாம் அம்மா ....!!!
19) கே இனியவன்- இல்லறக்கவிதைகள்
20) கவிதை தாய்க்கு கவிதை
21)அகராதி தமிழில் கவிதை
22) தேர்திருவிழா
23) யாருக்கு வரும் இந்த தைரியம் ..?

என் கவிதை வடிப்புகள்

என் கவிதை வடிப்புகள்
------------------------------------

திருக்குறள் கவிதைகள்
-------------------------------------

01) திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
02) திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
03) இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்

ஹைக்கூ கவிதைகள்
-----------------------------------

01) மனித உறுப்புக்கள் ஹைக்கூக்கள்
02) கே இனியவன் ஹைக்கூக்கள்
03) கே இனியவன் சென்ரியூக்கள்
04) கே இனியவன் தாவரம் ஹைக்கூகள்

சிறு கவிதைகள்
--------------------------

01) கே இனியவன் - கடுகு கதைகள்
02) இனியவன் மூன்று வரிக்கவிதை
03) குறுஞ்செய்திக்கு கவிதை
04) அம்மா -கடுகு கவிதை
05) அணு அணுவாய் காதல் கவிதை
06) எனது சிந்தனையில் உதிர்த்தவை
07) கே இனியவன் - சிந்தனை கிறுக்கல்கள்
08) முத்தான மூன்று வரி கவிதைகள்
09) சிறு வரியில் சமுதாய கவிதை
10) குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
11) கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
12) குறட்கூ கவிதைகள்

நட்புகவிதைகள் 
--------------------------

01) நட்பு சிதறல்கள்
02) கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

செவ்வாய், 21 ஜூலை, 2015

மனிதஉறுப்புக்கள் ஹைக்கூக்கள் (இதயம் )

மனிதஉறுப்புக்கள் ஹைக்கூக்கள் (இதயம் )
---

முழுநேர உழைப்பாளி 
மறைமுக தொழிலாளி 
" இதயம் "

---

காதல் மன்னன் 
காதலின் சின்னம் 
" இதயம் "

---

நல்லவன் மனசாட்சி 
கெட்டவன் மனசாட்சி 
" இதயம் "

---

நன்னீர் வாய்க்கால் 
கெட்டநீர் வாய்க்கால் 
" இதயம் "

---

அறுவை சிகிச்சை 
மரணம் தப்பியது 
" இதயம் "

மனித உறுப்புக்கள் ஹைக்கூக்கள்

மனிதஉறுப்புக்கள் ஹைக்கூக்கள் (விரல்கள் )

------

வலது கை விரல்கள் 
மெருமை காட்டியது 
" மோதிரவிரல் "

-----

கும்பிடுகிறேன் 
பெருமை படுகிறது 
"சின்ன விரல்கள் "

----

கோபத்தின் தொடக்கி 
சண்டையில் தொடக்கி 
"சுட்டுவிரல் "

----

குட்டை கவலையில்லை 
அம்பு எய்வேன் 
"கட்டை விரல் "

---

நான் தான் வீமன் 
உயரமானவனும் 
"நடுவிரல் "

இனிய வரவேற்பு கவிதைகள் ( தொடர் 02 )

 ன்பு உள்ளங்களே..... 
அ ன்பு காலை வணக்கம் .....
அ திகாலை எழுத்தவன் ......
அ திசக்தி ஆதவ்னையே.....
 ருகில் வரவைப்பான்......!!!

 ன்பினால் ...
அ கிலத்தையே வெல்லலாம் ....அ ங்கிகள் தொடக்கம் ...
 ருகில் உள்ள உயிர்வரை ...
அ ன்பு செலுத்துங்கள் .....!!!
 ற்புதங்கள் என்பது ....
 திசயம் செய்வதல்ல ...
 ன்புக்கு கட்டுபட்டு ...
அ ண்ட சராசரத்தோடு ....
அ டக்கமாவதே .........!!!

 ன்று சொன்னதை செய்ததை ....
அ ன்றே மறப்பவனே ....
 தி உயர் மனிதன் ....
அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...
 ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!!!

 ந்தி சாயும் நேரம் ....
 ன்றைய நிகழ்சிகளை ...
அ சைபோட்டுபாருங்கள் ....
 ருவருப்பான செயல் எது ...?
அ ரவணைப்பு செயல் எதுவென .....!!!

மறந்துபோய் நினைத்துவிட்டேன் ...

சுடராக
இருந்த நம் காதல் .....
நிழலாக மாறியதேன் ...?
நீ நிழலாக என்னை தொடர் ....
நான் வெளிச்சாக வருகிறேன் ....!!!

நம்
காதல் பூமாலையில் ....
நார் உள்ளது பூவை யார் ....
யார் கோர்ப்பது ....?

மறந்துவிட்டேன் - நீ
என்னை மறக்கசொன்னதை .....
மறந்துபோய் நினைத்துவிட்டேன் ....
மன்னித்துவிடு .....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;816

திங்கள், 20 ஜூலை, 2015

நினைவுகள் இறக்காது உயிரே .....!!!

இத்தனை நாள் வரையும்....
எத்தனையோ உறவுகள் ...
என்னை தூக்கி எறிந்தபோது ....
இதயம் வலிக்கவில்லை  ....!!!

ஒரு நொடியில் என்னை ....
மறுத்துவிட்டாய் தூக்கி ....
எறிந்து விட்டாய் ....
வலிக்கவில்லை இதயம் ....
இறந்துகொண்டிருக்கிறது ....!!!

என்றோ ஒருநாள் .....
என்னை திரும்பி பார்ப்பாய் ....
என் உடல் வலுவிழந்தாலும் ....
நினைவுகள் இறக்காது உயிரே .....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

இனிய வரவேற்பு கவிதை

னிய 
னிமையான 
ன்பமான 
ல்லத்தில் 
றையருள்மிக்க 
ல்லறவாழ்க்கை 
ன்றும் என்றும் 
றையருளால் 
டையூறுகள் நீங்கி 
ன்பமே 
டைவிடாமல் கிடைக்க 
ந்தநாள் மட்டுமல்ல 
தயத்துடிப்பு உள்ளவரை 
ன்பலோகத்தில் வாழ 
ந்த 
இனியவனில் 
தயம் கனிந்த 
னிய வணக்கம் 
யன்றவரை அயலவரையும்
ன்பமாய் வைத்திருங்கள் 
றைவன் விரும்புவதும் 
வ்வுலகில் எல்லோரும் 
ன்பமாய் வாழவைக்கும் 
இயல்புடைய மனிதனை தான் ....!!!

தனிமை இனிக்கிறது ....!!!

காதலே உலகம் ....
வாழ்ந்துவிடாதீர் ....
கடலால் சூழப்பட்ட ....
தீவுப்போல்   ....
கண்ணீரால் சூழப்பட்ட .....
இதயமாக வாழ்வீர்கள்......!!!

தனிமையில் இருந்து ....
சிந்தித்தேன் காதல் இனித்தது ....
காதலோடு இருந்து சிந்தித்தேன் ...
தனிமை இனிக்கிறது ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

அழுவதற்கு நாதியில்லை ...

மீண்டும் 
என்னை காதலிக்காதே .....
அழுவதற்கு  நாதியில்லை ...
கண்ணீரும் இல்லை ...!!!

உன் 
நினைவுகளின் ஈட்டிகள் 
தினமும் இதயத்தை சல்லடை ...
போடுகிறது - அப்போதும் ...
என் இதயம் சிரித்தபடியே ...
துடிக்கிறது ......!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

ஞாயிறு, 19 ஜூலை, 2015

காதல் சாரதி

உயிரே சற்று தூங்கு ....
அப்போதுதான் உன் கண்ணில் ...
இருந்து தப்பிக்கமுடியும் ....!!!

இன்பமாய் பயணித்த ....
காதல் படகில் எதற்கு ...
நடுகடலில்  என்னை ....
தள்ளிவிட்டாய் ....?

நான்
வேகமாக ஓடும் ....
காதல் சாரதி .....
நீ - சிகப்பு நிற சைகை ...
விளக்கு .....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;815

இதயமே காதல் தண்டனை ....!!!

வலையில் சிக்கிய மீன் ...
தப்புவதற்கு வாய்ப்பு உண்டு ...
காதலில் சிக்கிய எவரும் ....
தப்பியதே இல்லை .....!!!


முகத்தில் என் உருவம் ....
இதயத்தில் உன் உருவம் ...
தாங்க முடியாமல்....
தவிக்கிறது இதயம் .....!!!


நினைவுகளை தரும்போது ....
இன்புற என் இதயமே ...
துன்பத்தை தரும்போது ....
தங்கிகொள் - அது தான் 
காதலின் தண்டனை ....!!!


+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;814

காயம் வந்துவிட்டதே .....!!!

காதல் ...
செய்ய முன் இரத்தம் ...
உடலில் ஓடியது ....!
இப்போ கண்ணீர் ...
ஓடுகிறது .....!!!

காதல் 
தண்ணீரால் ....
அபிஷேகம் செய்வாயென ...
எதிர்பார்த்தேன் ....
வெந்நீரால் அபிஷேகம்....
செய்கிறாய் .....!!!

கண்ணால் காதல் .....
வருவதே வழமை ....
உன் கண்ணால் ....
காயம் வந்துவிட்டதே .....!!!


+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;813

வியாழன், 16 ஜூலை, 2015

இல்லறம் ஒரு கோயில் ....

இல்லறம் ஒரு கோயில் ....
அம்மா மூல கடவுள் ....
அப்பா பிரதான அச்சகர் ....
பிள்ளைகள் தொண்டர்கள் ...
உறவினர்கள் உபயகாரர்கள் ....!!!

மூலகடவுள் காளியாககூடாது ....
அச்சகர் தண்டகர்கள் ஆகக்கூடாது ....
தொண்டர்கள் தொல்லைகாரராக கூடாது ....
உபயகாரர் உபத்திரகாரர் ஆகிடகூடாது ....
ஒரு குடும்பத்துக்குள் இரு குடும்பம் ...
ஆழக்கூடாது.....!!!
+
கே இனியவன்
இல்லறக்கவிதைகள்

கே இனியவன்- இல்லறக்கவிதைகள்

இரு
வேறுபட்ட இல்லத்தில் ....
பிறந்து ஒரு வேறுபாடும் ....
தெரியாமல் வாழ்வது ...
நல் இல்லறம் ....!!!

ஆயிரம் கிளைநதிகள் ....
சங்கமிப்பது சமுத்திரத்தில் ....
ஆயிரம் எண்ணங்கள் ....
சங்கமிப்பது , வாழ்வது....
நல் இல்லறம் ....!!!
+
கே இனியவன்
இல்லறக்கவிதைகள் 

சிறப்புடைய இடுகை

உள்ளத்தில் பூவை.....

உள்ளத்தில் பூவை..... மலர வைக்காவிட்டாலும்.... பரவாயில்லை..... பூமரத்தின் வேரை.... சேதமாக்கும்செயல்களை நினைக்காதீர்....... என்றோ ஒருநா...