இடுகைகள்

ஜூலை 7, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனக்கு ஒரு உதவிசெய் ....

என் காதல்  இனிமையானது ... இதயம் பாலாப்பழம்போல் ... முட்களால் மூடியுள்ளது ....!!! எனக்கு ஒரு உதவிசெய் .... என்னை விட்டுவிடு ... காதலை வைத்திரு ...!!! இழந்தது  கோடி கணக்கான ... சொத்தென்றால் கலங்க ... மாட்டேன் - கோடி இன்பம்  தந்த காதலை ....!!! கே இனியவன் கஸல் 

இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!

நீ என்னை விரும்மபில்லை .... என் கவிதையையும் ... விரும்பவில்லை - நீ இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!! தூரத்தில் அழகானது .... நிலா மட்டுமல்ல .... காதலில்லாமல் இருக்கும் ... என்னவளும் தான் ....!!! கவிதை எழுதி எழுதி ... ஞானியாகிவிட்டேன்.... தன்னை மறந்த நிலைதானே ... ஞானம் .....!!! கே இனியவன் கஸல்

விரும்பி தொலைத்துவிட்டேன் ....!!!

எதையுமே விரும்பாத ... உன்னை நான் விரும்பி ... தொலைத்துவிட்டேன் ....!!! கருங்கல்லில் -நீர் ... வடியும் என்பதை ... உன் காதலில் இருந்து ... நம்பிவிட்டேன் ....!!! பெண்ணை பற்றி நான் .... கவிதை எழுதியதில்லை ... உன்னை பற்றியே கவிதை ... எழுதுகிறேன் ....!!! கே இனியவன் கஸல்

நீ காலனாய் வருகிறாய் ....!!!

உன் இதயத்தில் காதல் நெல் விதைத்தேன் ... புல்லாய் வளர்கிறது ....!!! சிலந்தி வலைபோல் ... அழகாக இருக்கிறது நம் காதல் -. நானோ சிக்கி தவிக்கிறேன் ...!!! எத்தனையோ.... வடிவமாய் உன்னை .. தரிசிக்க விரும்புகிறேன் ... நீ காலனாய் வருகிறாய் ....!!! கே இனியவன் கஸல்

நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது

அப்படியே நினைத்து பார்க்கவே .... பயமாக இருக்கிறது நம் காதலை .....!!! ஓடாமல் இருக்கும் மணிக்கூட்டில் நான் ... நிமிட முள்ளாய் ... இருந்தென்ன பயன் ....? அணைத்தேன் துன்பம் ... அழைத்தேன் இன்பம் நீ அருகில் இருப்பதை ... விட தூர இரு .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1032

வருகிறேன்அணைந்து விடுகிறாய் ....!!!

நீ காதல் விளக்கு... அருகில் வருகிறேன்..... அணைந்து விடுகிறாய் ....!!! ஒற்றை பார்வை .... பார்த்தாய் அதுதான் .... ஒற்றையாய் நிற்கிறேன் ....!!! கறை படிந்த துணியில் .... அழுக்கு இருப்பதுபோல் .... என் இதயத்தில் நீ .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1031