இடுகைகள்

செப்டம்பர் 27, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் இதயத்தில் நீ அழகு ....!!!

சிப்பிக்குள் முத்து அழகு ... என் இதயத்தில் நீ அழகு ....!!! சிறு மழைதுளி ...... சிப்பிக்குள் முத்தாகும் .... உன் கண்ணீர் துளியால் .... என் இதயத்துக்குள் .... நீ முத்தாகி விட்டாய் ....!!! ஆபரணத்துக்கு முத்து அழகு .... என் கவிதைக்கு நீயே அழகு .... கவிதையே என்றும் அழகு ....!!!

காதல் செய் .! இன்றே செய் .! நன்றே செய் .!

இதயத்தால்  கவிதை எழுதினால் ..... இன்பக்கவிதை ....!!! கண்ணீரால் கவிதை எழுதினால் .. சோகக்கவிதை ...!!! ஒரு இதயம் துடிக்க .... மறு இதயம் புரியாமல் இருக்க .... கவிதை எழுதினால் .... ஒருதலை காதல்கவிதை ....!!! கண்ணால் பேசி .... சைகையால் உரையாடி .... கவிதை எழுதினால் ..... காதல் அரும்புக்கவிதை ....!!! இதயங்களால் பிரியாமல் .... உறவுகளால் பிரிக்கப்பட்டால் .... கல்லறை காதல் கவிதை ....!!! காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!