புதன், 1 ஏப்ரல், 2015

நீ தான் கடவுள் ....!!!

நான்
இப்போ எல்லாவற்ரையும்..
வெறுக்கிறேன் ...
எல்லோரையும் வருகிறேன் ...
நீ - எனக்கு காதலாக ...
கிடைத்ததால் ....!!!


உளப்பயிற்சி தியாணமாம் ...
அதைதான் செய்கிறேன்
தினமும் உன்னை நினைத்து ...
கடவுள் வருவரோ ..?
எதையும் தருவாரோ ...?
தெரியாது -நீ காதல் தந்தாய் ..
நீ தான் கடவுள் ....!!!

  +
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 06

உன் ஒரு சிரிப்பில் ..

ஒவ்வொரு பூக்களுக்கும்
ஒவ்வொரு அழகு இருக்கிறது
உயிரே - உன் ஒரு சிரிப்பில் ..
எல்லா அழகும் குவிந்து ...
இருக்கிறது ....!!!

காதலின் அத்திவாரமே ...
சிரிப்பு என்னும் பூதான் ...
நீ சிரித்தாய் - நான்
பூஞ்சோலையாகிவிட்டேன் ....!!!

+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 06

வியாழன், 26 மார்ச், 2015

என் காதல் பூக்கள்

உன்
ஒவ்வொரு அசைவுக்கும் ..
ஒரு கவிதை எழுதும் நான் ...
உன் ஒவ்வொரு சொல்லுக்கும் ...
ஓராயிரம் கவிதை எழுதாமல் ...
விடுவேனா ...?

எனக்கு கவிதை ...
வரவேண்டும் மழைபோல் ...
நீ தினமும் என்னோடு ...
பேசவேண்டும் ...
சிறு அலைபோல் ....!!!

+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 05

காதல் அர்சனையால் ....!!!

காலை எழுந்து படி ...
காலை எழுந்து ஓடு ...
இதெல்லாம் செய்தேன் ...
அம்மாவின் அர்சனையால் ....!!!

எல்லா நேரமும் ....
உன்னையே நினைக்கிறேன்...
உன்னை பற்றியே பேசுகிறேன் ...
எல்லா இடத்தில் உன்னையே ...
பார்கிறேன் ...
காதல் அர்சனையால் ....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 04

நீ தானே உயிரே நான் ...!!!

உன்
அனுமதி இல்லாமல் ...
இதயத்தை திருடினேன் ...
காதல் சட்டத்தின் படி ...
தினமும் நினைவால் ...
தண்டிக்கிறாய் ....!!!

கோபமாய் ...
இருகிறீர்களா என்று ...
அடிக்கடி கேட்கிறாயே ...
என்னை நானே கோபித்து ...
என்ன பயன் ...?
நீ தானே உயிரே நான் ...!!!

+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 03

அர்சனை செய்கிறேன் ....!!!

என்
இதயம் மற்றவர்களின் ...
இதய வடிவமல்ல ....
என் இதயமே உன் ...
முக வடிவம் உயிரே ....!!!

அதனால் தான் ...
உன்னை உயிராக....
இதயமாக வைத்து ...
காதல் நினைவால் ...
அர்சனை செய்கிறேன் ....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 02

என்னவளே என் காதல் பூக்கள்

இனியவளே ....
உன்னை நினைக்காவிட்டால் ...
இதயம் இருந்து பயனில்லை ...
உன்னை பார்க்கா விட்டால் ...
கண் இருந்தும் பயனில்லை ....
நீ என்னவள் என்று தான் ...
அனைத்தையும் இழந்து ...
வருகிறேன் .....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 01

என் காதல் சாம்பலானது ...!!!

என்
காதல் கனவானது
நான் கவிஞனானேன் ...!!!

ஒரு சின்ன தீ பொறி
இடத்தையே சாம்பலாக்கிடும்...
உன் கண் பட்டு என் காதல்
சாம்பலானது ...!!!

நானும்
ஒரு பிச்சைக்காரன்
உன் பதிலை எதிர் பார்த்து ...
பட்டினியுடன் இருக்கிறேன் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;785

வர மறுக்கிறாய் ....!!!

எல்லோரும்
காதல் செய்து தூர ...
விலகுவர் - நானும் ..
நீயும் தூர இருந்தும் ..
அருகில் காதலிக்கிறோம் ...!!!

கண்ணீரை ...
கடலாக்கி காதல் கப்பல் ...
விடுகிறேன் - நீயோ ..
வர மறுக்கிறாய் ....!!!

எத்தனை கவிதை ...
எழுதினாலும் -நிகரில்லை ...
உன் மௌன மொழிக்கு ...

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;784

இறுதி நொடியில் துடிக்கிறது ...!!!

உன் நினைவுகளின் ...
வலையில் சிக்கி தவிக்கிறேன் ...
வலையை அறுத்து என்னை ...
மீட்டு விடு ....!!!


தயவு செய்து காதல் ...
தந்துவிடு - இல்லையேல்
என் இதயத்தை எட்டி பார் ...
இறுதி நொடியில் துடிக்கிறது ...!!!


என் மனதை பார் ...
நீ கனவில் தான் வந்தாய் ...
நியமென்று பூரிக்கிறது ...
அதற்கு எங்கே புரியபோகிறது ...
என் காதலும் கனவுதான் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;783

வலியிலும் இன்பம் தான் ...!!!

உன்னை நினைப்பதும் ...
முள் பற்றைமேல் ...
தூங்குவதும் ஒன்றுதான் ...
வலியிலும் இன்பம் தான் ...!!!

பட்டாம் பூச்சி ...
அழகை பார்ப்பதில்லை ...
இனிமையை தான் ரசிகிறது ...
நீ எதற்கு அழகை ரசிகிராய் ...?

வா அன்பே ...
நாம் இருவரும் காதல் ...
உலகம் படைப்போம் ...
விண்ணுலகில் இடம் ...
நிறைய இடம் உண்டு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;782

கல்லறையில் காத்திருக்கிறேன்

உனக்கு 
என்ன தைரியம் ...
நான் காதலிக்கிறேன் ...
நீயோ எனக்கு பெண் ...
பார்கிறாய் .....!!!

என் இதயத்தில் ...
இருந்து கொண்டே...
எனக்கு வலிதருகிறாய் ...

நீ என்னை ஏற்கும் ...
நாள் விரைவில் வரும் ...
கல்லறையில் காத்திருக்கிறேன் 
காதல் பூ மலரும் 
நீ சமர்பிப்பாய் .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;781

சிறப்புடைய இடுகை

ஒவ்வொரு மனிதனும்....

ஒவ்வொரு மனிதனும்..... ஒவ்வொரு நூலகம்...... ஒவ்வொரு அனுபவமும்.... ஒவ்வொரு நூல்கள்....... ஒவ்வொரு நிகழ்வும்..... ஒவ்வொரு அறிவு.... பெரு...