புதன், 28 செப்டம்பர், 2016

நட்பு கவிதை

இறப்பது எளிதே
எனக்கு...!!!
நண்பா உன்னை ..
மறப்பதைக் காட்டிலும்...!!!

&^&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

----

அடி, முடி தேடினாலும்.....
அகராதியை புரட்டினாலும்.....
முழுமையான அர்த்தம் .....
புரியாது ......
நட்பின் ஆழம் ............!!!

&^&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

நம் காதல் ஆகிவிடும்....!!!

நீயும் காதல்......
சிறகு கொண்ட பறவை.....
பருந்தல்ல......
என்னோடு பறந்து வர.....
தயங்குகிறாய்.....!!!

காதலில்
அதிகமாக எரியாதே....
சாம்பலாகி விடுவாய்
உலகம் ஊதியே மறைத்து....
விடும்............!!!

காதலை ....
உண் - உன் காதல்.....
நம் காதல் ஆகிவிடும்....!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1048
கவிப்புயல் இனியவன்

அணைந்தே விட்டாயே......!!!!

காதலில் நான் ......
மூலவேர் - நீயோ.....
இலை ஒரு நாள்.....
உதிர்ந்து விழுவாய்........!!!

நீ
பனிக்கட்டியில் உருவாகிய.....
கப்பல் தெரியாமல் உன்னில்......
பயணம் செய்துவிட்டேன்.......!!!

என் காதல் தீபமே........
உன்னை அணைத்தேன்........
அணைந்தே விட்டாயே......!!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சமாதானம் ஆவாள்...............!!!

திட்டு வாங்குவாள் .....
சிலவேளை அழுவாள் .....
சில மணி நேரம் பேசமாடடாள் ......
அவளை சமாதான படுத்துவேன் .....
சின்ன சிரிப்போடு .......
சமாதானம் ஆவாள்...............!!!

நீயும் என் அப்பாவும் ......
ஒருதாண்டா என்று திட்டுவாள் .....
ஒருகணம் உறைந்து போவேன் .....
அவள் குழந்தை குணத்தில் ......
அப்பாவாக பார்க்கும் அழகு .....
தூயநட்பிலேயே காணலாம் .....!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி 
ஆண் பெண் நட்பு கவிதை 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

தூயநட்பிலேயே காணலாம் .....!!!

திட்டு வாங்குவாள் .....
சிலவேளை அழுவாள் .....
சில மணி நேரம் பேசமாடடாள் ......
அவளை சமாதான படுத்துவேன் .....
சின்ன சிரிப்போடு .......
சமாதானம் ஆவாள்...............!!!

நீயும் என் அப்பாவும் ......
ஒருதாண்டா என்று திட்டுவாள் .....
ஒருகணம் உறைந்து போவேன் .....
அவள் குழந்தை குணத்தில் ......
அப்பாவாக பார்க்கும் அழகு .....
தூயநட்பிலேயே காணலாம் .....!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி
ஆண் பெண் நட்பு கவிதை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

நான் சுதந்திர பறவை ............!!!

அத்தனை நட்புகளும் ......
ஏதோ ஒரு நலன் தான் ......
உன் நட்பை எப்படி .....
வர்ணிப்பது .........?

நீ எனக்கு தாயா ......?
நீ என் தலைவியா ......?
நீ என் வழி நடத்துனரா .....?
நீ என் இறைவியா .....?

மாஜங்கள் காட்டும் ......
மாஜ உருவ கருவி -நீ
உருவம் தான் மாஜம்.......
உன் செயல்கள் சிற்பம் ......!!!

ஒரு அடைபட்ட இதயத்தில் .....
வாழ்ந்த என்னை .......
பறந்து திரியும் சிட்டு .....
குருவியாக்கியவள் -நீ
நீ என்னருகில் இருக்கும் ...
காலமெல்லாம் நான் ....
சுதந்திர பறவை ............!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி
ஆண் பெண் நட்பு கவிதை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

அழகு தமிழ் பேசும் அழகி நீ

அவன்
----------
அழகு தமிழ் பேசும் அழகி நீ
அலங்காரம் இல்லாவிடினும் அழகி நீ
அகங்காரம் கொண்ட அழகி நீ
அகட விகடமாய் பேசும் அழகி நீ
அகத்தில் முழு நிலா அழகி நீ

அகம் முழுதும் நிறைந்தவளே.....
அழகுக்கு மகுடமாய் இருப்பவளே.....
அகோரமாக்குதடி உன் நினைவுகள்.....
அக்கினியில் எரியுதடி என் இதயம்.....
அணைத்துவிடு காதல் கொண்டென்னை.......!!!

 அவள்
---------
அச்சப்படாதே அச்சுதனே..........
அகம்பை யான் உனக்கேதான்.......
அகந்தையும் இல்லை ஆணவமும் இல்லை
அடர்த்தி கொண்ட நம் காதல்........
அகிலம் போற்றும் காதலடா..........!!!

அடைமழைபோல் இன்பம் தருவேன்.......
அந்தகாரத்தில் இன்பம் தருவேன்......
அபலை என்னை ஏமாற்றிவிடாதே......
அற்ப ஆயுளாய் ஆக்கிவிடாதே....
அன்பரசனே நீ என் இன்பரசன்.........!!!

&^&
அகராதி சொற்களில் கவிதை
கவிப்புயல் இனியவன்

திங்கள், 26 செப்டம்பர், 2016

கவிப்புயல் இனியவனின் கவிதை படைப்புகள் 04

முயற்சித்து பாருங்கள் வெற்றி நிச்சயம் .....!!!
கானா கவிதை
காதலின் இன்பமும் துன்பமும் ...!!!
காதல் அணுக்கவிதைகள்..!!!
காதல் சிதறல்கள்கவிப்புயல்
இனியவன் மூன்று வரிக்கவிதை

போராட்ட கவிதை
கே இனியவனின் பல்வகை கவிதைகள்
ஒரு தலைக்காதல் கவிதை
கே இனியவன் ஹைக்கூகள்
கே இனிவனின் குமுறல்

கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
கே இனியவனின் புதுக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

கவிப்புயல் இனியவனின் கவிதை படைப்புகள் 03

சொல்லாடல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
நெஞ்சத்தை கிள்ளாதே ராசா
 காதல் பூ போன்றது
 இன்றைய sms கவிதை

கே இனியவன் நட்பு கவிதை
அகராதி என் காதல் அகராதி
 முயற்சிசெய் - பயிற்சிசெய்
 என் கவிதை
கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்

 தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
ஒரு சொல் கவிதைகள்
 எப்போதும் நீ - எல்லாம் நீ
 காதல் மன முறிவு கவிதைகள்
 குழந்தைகள் கவிதைகள்
நீ எதை செய்தாலும் அது காதல்
காதல் கவிதையும் தத்துவமும்

 முகநூல் காதலருக்காக கே இனியவன்
உணவு உணர்வை பாதிக்கும் ...!!!
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
 கே இனியவன் ஹைக்கூகள்
நட்பு மலர்களே மலருங்கள்
 காதலில் எதுவும் நடக்கும்
கேள்வி..? பதில்..!!! கவிதை

கல்லறை இதயத்தின் கதறல்
 கவிதையால் அடிக்கிறேன் ......!!!
 கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதை
 கவிப்புயல் இனியவன் கவிதைகள்
ஐந்து வரி கவிதைகள் ......!!!

குடும்ப கவிதைகள்
படம் பார்த்தேன் கவிதை வந்தது
 உயிரே உனக்காக சிலவரிகள்
கவிதையில் பலதும் பத்தும்
  கே இனியவன் தத்துவ கவிதை
இதயத்தின் அழகே காதலின் அழகு
உலகில் வாழ்ந்து பயனில்லை
கைபேசி என் உயிர் பேசி ...!!!

நட்பிலும் காதலிலும் ...!!!
வெற்றியின் பெறு பேறாகும்....!!!
உண்மையை ஊமையாக்காதே ..
நீ இங்கே - நான் எங்கே ...?
 ஏமாளியாக இருக்கவில்லை....!!!
 ஒருவரியில் காதல்கவிதை வரி
தாயே என்னை மன்னித்துவிடு
மைக்ரோ கவிதைகள்

 காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!
மரணம் -கவிதை
 தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!

கவிப்புயல் இனியவனின் கவிதை படைப்புகள் 02

 நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 
பெண்ணியம் கவிதை
எழுந்திரு போராடு வெற்றி 
உருக்கமான காதல் கவிதைகள் 
முள்ளும் ஒரு நாள் மலரும்
 என் காதல் பைங்கிளியே
கே இனியவன் ஹைபுன்
ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூ

என்னவளின் காதல் டயறியிலிருந்து
அர்த்தமுள்ள கவிதைகள் 
கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
உண்மையின் மறு பக்கம் பார்கிறேன் 
ஒரு வார்த்தை கவிதைகள் 
கவிதையால் காதல் செய்கிறேன்
என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் .
நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது 
பழமொன்ரியு 

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 
 கனவாய் கலைந்த காதல் 
 பூக்களால் காதல் செய்கிறேன் 
மின் மினிக் கவிதைகள் 
எனக்குள் இருவர் 
சிந்தித்து சிரிக்க சென்ரியூ 
 உடலும் நீயே...! உயிரும் நீயே..
தாயே.. அம்மா... அன்னையே ..
 வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை 

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள் 
 கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்
கவிப்புயல் இனியவன் சென்ரியூ 
கவிப்புயல் இனியவன் காதல் கவிதை 
 இனிய தமிழ் கவிதைகள் 
 காதல் " இரு " வாசகங்கள்
 நட்பென்றால் இதுதான் நண்பா
 கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை 
காதல், நட்பு , கவிதைகள் 
காதலை காயப்படுத்தாதே 
 காதல் துளிக்கவிதைகள்

கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
பொங்கல் சிறப்பு கவிதைகள் 
திருக்குறள் வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன் ஹைபுன்
 முயன்றால் முடியாதென்றொன்றில்லை 
கவிப்புயலின் வசனக்கவிதைகள்
காதல் ஒன்று கவிதை இரண்டு 

 காட்சிப்பிழைகள் 
கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்
 கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள் 
பேச்சுத்தமிழ் கவிதைகள்
அடுக்கு தொடர் கவிதைகள் 

கவிப்புயல் இனியவனின் கவிதை படைப்புகள்

வலிக்கும் இதயத்தின் கவிதைகள் 
தேனிலும் இனியது காதலே 
அகராதி நீ என் அகராதி 
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கதைக்கும் கவிதைக்கும் காதல் 
கவிப்புயலின் பல இரசனை கவிதை
முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை 
என்னவளே என் கவிதை 
நீ காதலியில்லை என் தோழி 

என் பிரியமான மகராசி
கடந்த காதல் - குறுங்கவிதை 
ஒருவரியில் கவிதை வரி
சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
இவை எனக்கு சிறந்தவை 
பஞ்ச வர்ண கவிதைகள் 
திருமண வாழ்த்து மடல்கள் 
முதல் காதல் அழிவதில்லை 
கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
மனைவிக்கு ஒரு கவிதை 
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

கவிப்புயல் வெண்பா கவிதை 
கவிதைமூன்றுவரி - இரண்டுகவிதை 
நினைத்து பார்த்தால் வலிக்கிறது 
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை 
சமுதாய கஸல் கவிதை

உனக்காகவே உயிர் வாழ்கிறேன் 
கடல் வழிக்கால்வாய் 
என் காதல் நேற்றும் இன்றும் ....!!!
விழிகளால் வலிதந்தாய் 
ஒரு வழிப்போக்கனின் கவிதை 
K இனியவன் நகைசுவை கவிதைகள்
இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்
காலமெல்லாம் காதலிப்பேன்

சுகம் தேடும் சுயம் 
காதல் சோகக்கவிதைகள் 
கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை 
காதல் எஸ் எம் எஸ் 
காதல் தோல்விக்கவிதைகள்
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
தேர்தல் 
உன்னை விட்டால் எதுவுமில்லை 
அதிசயக்குழந்தை 

கவிதை காதலின் தூதுவன் 
விடுகதைக்கவிதைகள் 
எனக்குள் காதல் மழை 
காதல் சோகக்கவிதை 
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
ஒரு நிமிட உலகம் 

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

என்னவளின் நினைவை ......!!!

மனதோடு மட்டுமல்ல.,.,
மரணத்தோடும் வைத்திருப்பேன்
அவள் என்னை பிரிந்தாலும்,
என் உயிர் பிரியும் வரை .......
என்னவளின் நினைவை ......!!!

எனக்குள் இருக்கும்...
அவளை  தேடி பார்த்தால்...
எதுவும் கிடைக்காது.....
காரணம் என் உயிர்க்குள்......
கலந்திருக்கிறாள் ....................!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை

நான் உனக்காக ....
எரியும் காதல் -தீபம் ...
இருட்டுப்போல் .....
உன் உறவுகளும் ...
காற்றைப்போல்
உன் திருமண பேச்சும் ..
என் தீபத்தை ......
அணைக்க நிற்கின்றன ...
வலிக்குதடி உன் காதல் ....
நினைவுகள் ......................!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

உன் காதல் நினைவுகள்

நான் உனக்காக ....
எரியும் காதல் -தீபம் ...
இருட்டுப்போல் .....
உன் உறவுகளும் ...
காற்றைப்போல்
உன் திருமண பேச்சும் ..
என் தீபத்தை ......
அணைக்க நிற்கின்றன ...
வலிக்குதடி உன் காதல் ....
நினைவுகள் ......................!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

நினைவுகளை நினைத்து ஏங்குவதா…….?

பிரிந்து சென்ற உன்னை
நினைத்து கலங்குவதா…..?
பிரியாத உன் நினைவுகளை
நினைத்து ஏங்குவதா…….?

இதயத்தில் வசிப்பவளே...
நீ சந்தோசமாக இருக்கும் .....
தருணம் என்னை அறியாமல் ....
சிரிக்கிறேன் .........
நீ சோகமாய் இருக்கும் ....
போது என்னை அறியாமல் ....
அழுகிறேன் ......!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை

மௌனமாக வைத்திருக்கிறாய் .....!

ஒரு நாள் உன்னை ......
காணவில்லை ..
என்றால் ஒரு வருடம்....
காணாததுபோல் ......
இருக்கிறது...
நீயோ ஒருசொல்லை...
மௌனமாக .........
வைத்திருக்கிறாய் .....!

பிறவி முழுவதும்....
வேண்டுமானாலும் ....
காத்திருக்கிறேன்...
உனக்காக....
என்னை நீ விரும்புகிறேன்...
என்று சொல்லும்
ஒரு வார்த்தைக்காக.....!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை

சனி, 24 செப்டம்பர், 2016

அகராதி நீ என் அகராதி

அகராதி நீ என் அகராதி .....
அகரம் முதல் அந்தம் வரை.....
அங்குலமாய் வர்ணிக்கும் அகராதிநீ.....
அழகு தமிழ் வார்த்தைகளை......
அடுக்கடுக்காய் உனக்காக தொகுப்பேன்....!!!

அகோராத்திரமும் உன்னை நினைத்து.....
அல்லோலகல்லோலப்படுகிறேன்......
அணைக்கவும் முடியவில்லை.......
அகலவும் முடியவில்லை ........
அகம் படும் பாட்டை எப்போ அறிவாய்......?
அழகு தேவதையே அகத்தரசியே

&
அகராதி சொற்களில் கவிதை
கவிப்புயல் இனியவன்
மேலும் தொடரும்

என் விழி கொண்டு ....!!!

உன்னை ....
சிற்பமாக ....
செதுக்கியுள்ளேன் .....
இதயத்தில் .....
உளி கொண்டு அல்ல.....
என் விழி கொண்டு ....!!!

டிக் டிக் டிக் ..
துடிக்க மட்டும் தெரிந்த
என் இதயத்திற்கு,-இப்போ
திக் திக் திக் என்று ....
தவிக்கவும் கற்றுத் தந்தது
உன் அன்பு...!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

சின்ன கிறுக்கல்கள்

உன்னை....
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

^^^
உன்னை .....
பிரிய சொல்கிறாயே .....
என்னையா ......?
உயிரையா ........?

உன்னை பிரிய .....
நொடிபோதும்.......
உன் நினைவுகளை .....
பிரிய எத்தனை .....
ஜென்மமும் போதாது ....!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்


கதைக்கும் கவிதைக்கும் காதல்

அவன் -இனிமை
--------
எப்படியாவது அவளின் பெயரை கண்டறிய துடித்தான் .இனிமை தண்ணி குடிக்க போவதுபோல் எல்லா இடத்திலும் அவளை தேடினான் . அவள் வேண்டுமென்றே கதவு திரைக்குப்பின்னால் நின்றாள் .தேடிப்பார்க்க இனிமை
அவளை காணாமல் சுவாதிடத்துடன் .வரும்போது . வின்னியாவின் அம்மா குரல் ஒலித்தது .......!!!

வின்னியா ...வின்னியா ....எங்கம்மா இருக்கிற .....? வின்னி வின்னி ....என்று
கூப்பிட்டபோது  திரைக்குப்பின்னால் இருந்து வந்தாள் வின்னியா ......

ஓ பெயர் வின்னியாவா ஓகே ஓகே என்று அவள் காதில் மட்டும் கேட்கும் படி சொல்லிவிட்டு தெரு முனைக்கு வந்தான் நண்பர்களுடன் தெருவை அலங்காரம் செய்வதற்கு ......இன்னும் விடிவதற்கு ஒரு சில மணி நேரமே இருந்தது . ஒரு சின்ன தூக்கம் கூட ஒருவரும் தூங்கவில்லை . விடிந்தால்  கல்யாணம் .

தூரத்தில் இருந்து வின்னியா சைகை கொடுத்தாள். தூங்குங்க என்று
பதில் சொல்ல முடியாமல் இனிமை தானும் சைகையால் நீ முதல் தூங்கு
என்பதுபோல் சொன்னான் .

தலையை அசைத்தபடி தூங்க சென்றாள் - வின்னியா

அவள் - வின்னியா
------
தூக்கம் என்பது கண் ......
மூடுவது மட்டுமல்ல .....
மனமும் மூடவேண்டும் .....
இத்தனை நினைவுகளை ....
தந்து விட்டு தூங்க சொல்லும் ....
அவன்தூங்கி விடுவானா .......?

நினைவுகளால் வெந்து .....
துடிக்கிறேன் விடிய இருக்கும் ....
சிலமணி நேரம் கூட .....
ஜென்மமாய் இருக்குதடா .....
விடிந்து உன்னை பார்ப்பது.....
எனக்கு சூரிய உதயம் ......!!!

&
கதைக்கும் கவிதைக்கும் காதல்
கதையும் கவிதையும் 03
கவிப்புயல் இனியவன்

இன்னும்தொடரும் 

கவலையில்லை ....!!!

கடற்கரையில் ......
பேசியதுபோல் ஆகிவிடாது ....
நம் காதல் ......
தொட்டு தொட்டு .....
சென்று விடுகிறாய் .......!!!

எப்படியும் வாழலாம் .....
என்றால் உன்னை .....
காதலிக்க தேவையில்லை ......
உன்னை காதலித்ததால் .....
இப்படியும் வாழுகிறேன் ....
என்பதிலும் கவலையில்லை ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை

இதயம் இருட்டாக .....
இருந்தாலும் காதல் .....
வெளிச்சமாக்கி .....
விடுகிறது ........!!!

இருட்டறையில்.......
தவிக்கும் குழந்தை ....
வீறிட்டு அழுவதுபோல்......
நானும் அழுகிறேன் .....
இதய விளக்கை .....
நூற்றத்துக்காக ......!!!

துடித்து கொண்டு ....
இருந்த என் இதயத்தை ....
துடி துடிக்க வைத்துவிட்டாய் .....!!!

&
 ^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

வியாழன், 22 செப்டம்பர், 2016

ஒரு நாள்தான் ஆயுள்.... !!!

பூக்களுக்கு .....
ஒரு நாள்..
தான் ஆயுள்.... !!!

அதனை ரசிக்க தெரியாத ..
மனிதன் ..
அதை பறித்து
பூஜை செய்கிறான் ......!!!

தனது ஆயுள் ...
நூறு வருடங்கள் ..
இருக்க வேண்டி ..!!!

&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை

தத்துவ கவிதை

இதயம் துடித்து....
கொண்டு இருந்தாலும் ...
இறந்து போனது ....
போலத்தான் ...
வாழ்கிறேன் .....
நீ அருகில் .......
இல்லாததால் ..!!!

^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்

^

நாம் வாழும் வரை ....
நாம் யாரையும் ..
மறக்கக் கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் ....
மறக்க கூடாது......!!!

&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை 

கொன்றே விடுகிறாய் ....!

நினைவுகளால் ...
ஏங்க வைக்கிறாய் ...!

வார்த்தைகளால் ...
காயாப்படுத்துகிறாய்..!

மௌனத்தால் ...
கொன்றே விடுகிறாய் ....!

காதலில் இத்தனை ....
வலிகளா ..............?

^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள் 

சிறப்புடைய இடுகை

உள்ளத்தில் பூவை.....

உள்ளத்தில் பூவை..... மலர வைக்காவிட்டாலும்.... பரவாயில்லை..... பூமரத்தின் வேரை.... சேதமாக்கும்செயல்களை நினைக்காதீர்....... என்றோ ஒருநா...