எல்லாமே நட்புதான்
 மழலைப் பருவத்தில் நட்பு :  -------------  உனக்கு என்னைத்தெரியாது .......  என்னை உனக்கு தெரியாது...........  நீயும் கையசைத்தாய் நானும் ......  கையசைத்தேன் .......  அதில் புரியாத சுகம்.........!!!   குழந்தைப் பருவத்தில் நட்பு :  ------------  நீயும் நானும் விளையாடுவோம் .....  கிடைத்தவற்றால் அடிபடுவோம்....  மீண்டும் சந்திப்போம் ......  பகமையென்றால் ....  என்ன என்றே தெரியாத நட்பு ..!!!   காளைப் பருவத்தில் நட்பு :  ----------  சுற்றுவதற்கு நட்புத்தேவை .....  வீண் சண்டைக்கு நட்புத்தேவை ..  இளங்கன்று பயமறியாத நட்பு ...!!!   வாலிபப் பருவத்தில் நட்பு :  _________  என் வலியையும் சுகத்தையும் ....  சொல்லவும் கேட்கவும் ஆறுதல் ....  தரவும் நட்புத்தேவை ....!!!   முதிர்ந்த பின் நட்பு :  ------------  வாழ்க்கையின் துன்பங்கள் ...  துயரங்கள் இழப்புக்களை ...  அனுபவங்களைப்பகிர்ந்து ....  கொள்ளஒரு நட்பு தேவை ..!   &  நட்புடன்  உங்கள்  கவிப்புயல் இனியவன்