இடுகைகள்

நவம்பர் 24, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலையும் விட்டுவிட்டேன்

என்னவள் கோபப்பட்டாள்... என் கோபத்தை விட்டேன் .... என்னவள் ஆசைபட்டாள்.... என் ஆசைகளை விட்டேன் .... காதலையும் விட்டுவிட்டேன் ...!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 32

முகம் புகைப்படமாய்

உன்னை பிரிந்து பலகாலம் .... உன் முகம் புகைப்படமாய் ..... உன் நினைவுகள் திரைப்படமாய் .... உன் கனவுகள் ஒளிதிரையாய்.... வந்துகொண்டே இருக்குதடி ....!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 31

என்னை கருக்கி விட்டாள்

பார்வையில் நெருப்பாய் இருந்தாள்.... பேசுவதில் தீயாய் இருந்தாள் .... கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் .... அன்பில் அழகான சுடராய் இருந்தாள் .... காதலால் என்னை கருக்கி விட்டாள்....!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 30

அதிகமாக நம்பினேன்

அதிகமாக நம்பினேன் .... அளவுக்கு மீறி அன்புகொண்டேன் ..... அகிலத்தையே மறந்தேன் .... ஆதரவற்று நிற்கிறேன் .... அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ....!!! + கவிப்புயல் இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 29

எப்போது ஒரு இனம் அழிகிறது ...?

எப்போது ஒரு இனம் அழிகிறது ...? ------ விடுதலை  போராட்டங்கள் .... எதுவும் பொழுதுபோக்கு செயளல்ல.... மடிந்தவர்கள்  மண் பொம்மைகளல்ல..... போராடிய காலம் எந்தளவோ.... விடுதலைக்காக காத்திருக்கும் காலமும் ....!!! எப்போது ஒரு இனம் அழிகிறது ...? பொருளாதார வளங்கள் அழியும்போது .... பொருளாதார தடை விதிக்கும் போது .... பொருளாதாரமே வாழ்கை எனநினைக்கும் போது.... பொருளாதாரத்தை வாழ்க்கையாக நினைக்காதபோது .... யாவற்றுக்கும் மேலாக ஒரேஒரு காரணம் .... இனத்தின் அடையாளங்களை அடமானம் .... வைக்கும்போதும்  இனம் வரலாற்றை மறக்கும் போதும் ....!!! தந்து விட்டுப்போன சுதந்திரத்தை .... தட்டிகழிக்காமல் புத்திகொண்டு போராடுவோம் .... பக்திகொண்டு போராடுவோம் ..... உணவோடு உணர்வையும் ஊட்டி வளர்ப்போம் .... எமகென்னெ யாரும் போராடட்டும் என்ற .... எண்ணத்தை எண்ணை ஊற்றி எரிதுடுவோம் ......!!!

ஏமாறமாட்டேன்

ஏமாறமாட்டேன் .... எப்படி ஏமாற்றுவது ... என்பதை உன்னிடம் .... கற்றுகொண்டேன் .... இனியாரும் என்னை .... ஏமாற்ற முடியாது ....!!! காதலிக்க மாட்டேன்.... யாரையும் காதலிக்க மாட்டேன் .... இதயமில்லாத உன்னைப்போல் ... யாரையும் காதலிக்க மாட்டேன் ...!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

என்னோடு இருந்தவளே ....!!!

என் ஆனந்த காற்றாய் .... ஆரோக்கிய காற்றாய் .... என்னோடு இருந்தவளே ....!!! சிரிக்கும்போது .... உன்னோடு சத்தமாய் .... சிரித்தேன் .... அழும்போது தனியே .... உனக்கு கூட தெரியாமல் .... அழுகிறேன் .... என் அழுகையால்.... உன்கண்கள் கலங்கிட கூடாது ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

கருகாத பூக்கள் .....!!!

கருகாத பூக்கள் .....!!! ------- எம் ..... மண்ணில் தான் .... கறுப்பு பூக்கள் அழகழகாய் .... பூத்தது - பூத்த பூக்கள் .... வாடிவிட்டதே - நினைக்காதீர் .... எம் மனதில் என்றும் வாடாமலர் .... உலகில் என்றும் வாடாமலர்கள் ....!!! எம்  மண்ணில்தான் கடலில் .... நீலபூக்கள் பூத்தன .... பூத்த பூக்களை அலை .... அடிதுவிட்டதே - நினைக்காதீர் .... கடல் நீரில் பூத்த செந்தாமரைகள் .... காலத்தால் அழியாத தாமரைகள் ...!!! கறுப்பு எண்ணங்களாலும் .... கருப்பு ஜூலையாலும் .... கருத்தரித்ததே எம் கருப்பு பூ .... கறுப்பு சிந்தனைகளால் .... கருக்கபட்டபூக்கள் காலத்தால் .... கருகாத பூக்கள் .....!!!