இடுகைகள்

ஜூலை, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைத்து பார்த்தால் வலிக்கிறது

பணத்துக்காக .... திருமணம் செய்தேன்.... என்னை விட பணத்தை .... வட்டிக்கு கொடுப்பவன்..... சந்தோசமாய் ..... இருக்கிறான் .....!!! திருமணத்தை ...... மணவாழ்கையாக ..... செய்யாமல் .... பணவாழ்கையாய் ....... செய்தால் வாழ்க்கையும் .... சந்தை பொருள்தான் ....!!! ^ நினைத்து பார்த்தால் வலிக்கிறது கவிப்புயல் இனியவன் 

கனவில் வர நான் தயார்

இந்த சுகம் போதும் அன்பே ------------- அதிகாலை வேளை.... அகிலமே அமைதியாய் ... இரு விழியை அகன்றேன் ... வான் குருவிகள் வானிசை .. சில்லென்ற காற்று உடல் பட ... எனைமறந்து உன்னை ..... நினைத்தேன் ... (இந்த சுகம் போதும் அன்பே ...) தண்ணிரை மோர்ந்தேன் .... பன்னீரை போல் உன் மென்மை.. ஒருதுளி உடலில் பட ... இணைந்துவிட்டேன் உன் ... நினைவில் ...... (இந்த சுகம் போதும் அன்பே ...) ஒற்றையடி பாதையிலே ஓற்றைசடை முடி தேடி ... பற்றைக்குள் பதுங்கி இருக்க ... பற்றை செடிகள் ஆடியது ... காற்று அசைக்க வில்லை .. என் இதய துடிப்பு அசைத்தத்தடி ...!! (இந்த சுகம் போதும் அன்பே ...) கண் மூடினால் கனவாய் .. கண் திறந்தால் நினையாய் ... கனவில் வந்து நினைவை இழப்பதா ...? நினைவில் வந்து கனவை இழப்பதா ...? வந்தது உன் குறுஞ்செய்தி ... நான் தூங்கப்போகிறேன் நீ ரெடியா ..? கனவில் வர நான் தயார் என்று ...!!! (இந்த சுகம் போதும் அன்பே ...) & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை 

மனைவிக்கு ஒரு கவிதை

அன்னையை .... நினைக்கும் ... போது உன்னை...... அன்னையாக .... பார்க்கிறேன் ......!!! உன்னை பார்க்கும்... அன்னையை .... நினைவுபடுத்துகிறாய்...!!! அன்னையும் ... மனைவியையும் .... இரு கண்களாக .... பார்பபவர்கள் ..... இல்லம் விக்கிரகங்கள் ..... நிறைந்த கோயில் ....!!!

உன் அருகினில் இருப்பவன்..

நினைக்கும் போது உன் அருகினில் இருப்பவன்.. அல்ல நான்...!!! நீ அருகினில் இல்லாத போதும்.... உன்னையே... நினைத்துக்கொண்டு இருப்பவன்.. இருப்பவன் தான் நான் ...!!! அழும் போது கண்ணீர்.. துடைப்பதில்லை ... காதல்...!!! கண்ணீரை ஏற்படுத்தாமல் .. இருப்பதுதான் காதல் ...!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வாடிய பூவில் என்னபயன் .....?

கப்பல் கனமாக .... இருந்தாலும் ..... தண்ணீரில் .... தள்ளாடும் ..... காதல் கனமாக .... இருந்தாலும் .... கண்ணீரில் .... தள்ளாடும் .....!!! நம் காதலுக்கு .. கண் தான் விதை .. கண்ணீர் தான் ... பாசனம் .....!!! பூவின் மீது .... வண்டுக்கு மோகம் .... பூவுக்கும் இருந்தால் .... இன்பம் .... வாடிய பூவில் ..... என்னபயன் .....? & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 142

பிரிவை ஏற்கவில்லை

காதல் சொல்லமுடியாத .... இன்பம் .... சொல்லி அழக்கூடிய... துன்பம் ....!!! நீ என்னைவிட .. அன்பானவள் ... அழகானவள் .. நிலையில்லாதவள் ...!!! நிலா கூட ..... பிரிவை ஏற்கவில்லை அமாவாசையாக .... மாறிவிட்டது .....!!! & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 141

இதய பரிமாற்றத்தை நீ

இதய பரிமாற்றத்தை நீ பண்டமாற்றாய்.... நினைத்து விட்டாய் ...!!! நான் வானம் .. நீ முகில் ... நான் நிலையாக .. நீ அசைந்து கொண்டு...!!! நான்கவிதையை .. உன்னைக்கொண்டு .. எழுதுகிறேன் .. நீயோ ... என்னை கொன்று .... எழுத வைக்கிறாய் ....!!! & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 140

நீ வருவதை தடுக்க ....!!!

நான் இரவு நேர இதய .... காவலாளி ..... கனவில் கூட நீ வருவதை தடுக்க ....!!! உன் நினைவுகளால் ..... இதயத்தில் தாஷ்மஹால் ... காட்டுகிறேன் .... வலிகள் தான் செலவு ....!!! காற்றில் உரசும் .... மரக்கொப்புக்கு உள்ள .... இன்பம் கூட நமக்குள் .... இல்லை .....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1038

நான் காயப்பட்டு விட்டேன் ...!!!

வெள்ளத்தில் கத்தும் .... தவளைக்கு ஒரு இரவு .... இன்பம் ..... உன்னை பார்த்த .... ஒரு இரவு எனக்கு .... துன்பம் .....!!! ஈர்ப்பால் கோள்கள் .... சுற்றுகிறது .... மோதியத்தில்லை .... உன் ஈர்ப்பில் ... சுற்றும் நான் .... காயப்பட்டு விட்டேன் ...!!! ரோஜா சிவப்பு .... கொடுத்த இதயத்தில் .... இரத்தம் வடிவத்தால் ....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1037

நம் காதல் தோஷம் ....

வலமிருந்து .... இடமாக காதல் ... தேவதையை சுற்றி .... வரவேண்டும் .....(+) நம் காதல் தோஷம் .... இடமிருந்து வலமாக .... சுற்றுகிறேன் .......!!!(-) வாடி விழும் பூவின் .... நெத்து மரமாகி .... மீண்டும் பூக்கும் ...(+) நீ  வாடித்தான் .... விழுந்தாய் ...... பூவின் மென்மை கூட ..... உன்னில் இல்லை ....!!!(-) அடுத்த ஜென்மத்தில் .... என் இதயத்தை .... ஈரமாக படைக்காதே ...(-) வீரமாக படைத்து விடு ....!!!(+) & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1036

தேனிலும் இனியது காதலே

இதயத்தில் இருக்கும் ..... என்னவளை பூவாக .... பார்க்கமாட்டேன் .... வாடிக்கொண்டிருக்கும் .... வலியை தாங்கி கொள்ள .... மாட்டேன் ........!!! என் இதயத்தின் .... ஆணி வேர் அவள் ..... தானும் வாடாமல் ..... என்னையும் வாழ ... வைக்கிறாள் ...............!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

என்னவளை பூவாக பார்க்கமாட்டேன்

இதயத்தில் இருக்கும் ..... என்னவளை பூவாக .... பார்க்கமாட்டேன் .... வாடிக்கொண்டிருக்கும் .... வலியை தாங்கி கொள்ள .... மாட்டேன் ........!!! என் இதயத்தின் .... ஆணி வேர் அவள் ..... தானும் வாடாமல் ..... என்னையும் வாழ ... வைக்கிறாள் ...............!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

அழகு குறைவாக இருக்கிறது ....!!!

என் காதல் கவிதையை.... புகைப்படம் போட்டு .... வர்ணிக்கமாட்டேன் ..... என்னவளின் அழகுக்கு .... ஒரு புகைப்படமும் ..... கிடைக்கவில்லை ....!!! ஒவ்வொரு புகைபபடத்தையும்..... பார்க்கின்ற போதெல்லாம் .... என்னவளின் ஒவ்வொரு .... அழகு குறைவாக இருக்கிறது ....!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

நினைவுகளை இழந்தால் ....

மனிதன் ..... சில நிமிடங்கள் .... நினைவுகளை இழந்தால் .... அவன் இறக்கிறான் .... என்கிறது விஞ்ஞானம் ....!!! உன் நினைவுகள் .... ஒவ்வொரு நொடியும் ..... என்னை கொல்கிறது..... இதை விஞ்ஞானம் .... ஏன் விளக்கவில்லை .....? & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

முள் மேல் தூங்கிய என்னை

முள் ............. மேல் தூங்கிய ..... என்னை பூக்களின் .... மேல் தூங்க வைத்தவள் .... நீ ....................................!!! வாழ்க்கை என்றால் ..... ஆனந்தம் இருக்கும் ..... அந்த அத்திவாரத்தை ..... பலமாக போட்டவள் ....... நீ ...................................!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை 

என்ன சந்தேகம் ....?

என் கவிதைகள் .... உன்னை காந்தமாக .... கவர்கிறது என்கிறாய் .... அதில் என்ன சந்தேகம் ....? துருப்பிடித்து இருந்த .... என் இரும்பு இதயத்தை ..... காந்த கண்ணால் கவர்ந்த .... உன் கண்கள் தான் .... காரணம் ......!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

காதல் என்றால்புரிவதில்லை...!

நீ அருகில் ... இருக்கும் போது ... காதல் என்றால்... புரிவதில்லை...! பேசுவேன் ..... தொடர்பில்லாமல் ..... தொடர்ந்து பேசுவேன் ..... உன்னை பிரிந்திருக்கும் ..... ஒவ்வொரு நொடியும் .... காதலை தவிர வேறு ஏதும் தெரிவதில்லை...! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

மனிதன் எங்கே எங்கே ..??

உன்னில் இருக்கும் மனிதன் எங்கே எங்கே ..?? அதை வெளியில் தேடுகிறாய் ...??? மனிதம் என்ற பொருள் தெரியாது .. மாறி மாறி ஆடையை ..... மாற்றுகிறாய் ...!!! நீ மனிதனை..... காணவில்லை என்கிறாய் ...!!! மனித நீ மனிதம் ஆகும் வரை...... மனிதனை தேடிக்கொண்டே ...... இருப்பாய் ...!!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன் 

உன் அணையாத நட்பில் ....!!!

தென்றல் காற்றின் சுகம் ..... அர்த்தமுள்ள கவிதை சுகம் .... அறியாத பொருள் இதம் ..... கலையாத கனவு இன்பம் .... இன்னும் எவ்வளவோ... அத்தனையும் கண்டேன்.... உன் அணையாத நட்பில் ....!!! விழுந்தவுடன் மறைந்து விட நாம்  மழைத் துளி அல்ல... இறுதிவரை நம்முடன் ..... இருக்கும் கண்ணீர் துளி...!!! + கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

சில நட்பை நாம்

அனுபவத்தால் வந்த கவி ... ******************** சில நட்பை  நாம் புரிந்து கொள்ளாததால் வெறுக்கிறோம்.....!!!! சிலரை, நாம் வெறுப்பதால் புரிந்து கொள்ளமறுக்கிறோம்...!!! + கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

நட்பே நீ மட்டும் .....

உலகுக்கு ஒளி தரும் ..... சூரியனே.. கடமையை .... முடித்து விட்டு ..... உறங்க சென்று விட்டது...! என் ..... உயிருக்கு ஒளி தரும் .... நட்பே நீ மட்டும் ..... ஏன் விழித்திருக்கிறாய்.....? போய் கண் உறங்கு...! உனக்காக நானும் ..... எனக்காக நீயும் .... விடியல் நமக்காகத்தான் ...!!! + கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை 

நட்பு ஆழ்கடல் போன்றது...

உரிமை கொள்ள ஆயிரம் உறவுகள் இருந்தாலும், உள்ளதைப் புரிந்து கொள்ள நண்பா உன் ஓர் உறவுபோதும்...!!! நட்பு ஆழ்கடல் போன்றது... கரையில் தேடினால், சிப்பிகள்  கிடைக்கும்... மூழ்கி தேடினால் தான் உன்னைப் போல... முத்துக்கள் கிடைக்கும்....!!! + கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

பூக்களில் அழகிருக்கும் ....

தோல்விக்கு விடுதலை ... வெல்லும் வரை ....!!! கண்ணீருக்கு விடுதலை ... சிரிக்கும் வரை ....!!! பூக்களில் அழகிருக்கும் .... உதிரும் வரை .....!!! நிலவு அழகிருக்கும் ... மறையும் வரை ....!!! மரணம் வரை தான் ... காதலிருக்கும்.... மரணத்தின் பின்னும்... நட்பிருக்கும் ....!!!

மரணத்தின் பின்னும் நட்பிருக்கும் ....!!!

தோல்விக்கு விடுதலை ... வெல்லும் வரை ....!!! கண்ணீருக்கு விடுதலை ... சிரிக்கும் வரை ....!!! பூக்களில் அழகிருக்கும் .... உதிரும் வரை .....!!! நிலவு அழகிருக்கும் ... மறையும் வரை ....!!! மரணம் வரை தான் ... காதலிருக்கும்.... மரணத்தின் பின்னும்... நட்பிருக்கும் ....!!!

ஆசைப் பட்டேன்பார்த்தேன் ......!!!

அன்று ..... கண் சிமிட்டாமல் உன்னைப் பார்க்க ஆசைப் பட்டேன்... பார்த்தேன் ......!!! இன்று ..... இப்போதெல்லாம் .... கண் சிமிட்டும் நேரமாவது ... உன்னைப் பார்க்க .... ஆசைப் படுகிறேன்... கண்ணீர் மறைக்கிறது .. உன் உருவத்தை .....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

கூலிக்கும் காதல் வரும்.....!!!

கூலிக்கும் காதல் வரும்.....!!! -------- கூலி வேலை செய்தேன்........ உன் வீட்டில் ............................ யார் கண்டது நீ ..................... கண்ணில் படுவாய் -என்று ? கூலிக்கும் உன்மீது ஆசை .... உனக்கும் தான் .................... கூடி ஒருநாள்கூட போசமுடியாத ....... தினக்கூலினான் ............... வீட்டுவேலை முடிந்ததும் .............. முடிந்தது என் காதல் ...............!!! கண்ணே முடியவில்லை .............. உன் நினைவுகளை மறக்க ............... முடியவில்லை யாருக்கும் சொல்ல . ............. கூலிக்கு தேவையா.............? இந்தக்காதல் என்பார்கள்........!!! கூலிக்கும் இதயம் இருக்கு ............ என்று ஏன் புரிவதில்லை ............ இந்த உலகத்துக்கு .................. கூலிக்கும் காதல் வரும் -என்று ............. இன்னுமொரு கூலிக்கு புரிந்தால் ............. போதும் - ஆனால் கூலியே ..... காதல் செய்யாதே .........!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் 

வாழ்க்கை கவிதை

மரத்திலிருந்து விழும் ... பழுத்த இலை சொன்னது ...!!! நான் எத்தனையோ முறை .. வானத்தை தோட முயற்சித்தேன் .. முடியவில்லை -என்றாலும் .. கலங்கவில்லை என் அடுத்த .. வாரிசு நிச்சயம் தொடும் ...!!! என் குழந்தை துளிர் .. நிச்சயம் எட்டுவான் ... தந்தை செய்து முடிக்காத .. நாற்காரியத்தை -மகன் நிறைவேற்றியே ..... ஆகவேண்டும் .....!!! & கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை 

கவிதை அதை உணர்வாயா ....?

உனக்கு .... நான் கிறுக்குவது ....  எல்லாம் கவிதை .... என்கிறாய் .......!!! நீ  எனக்குக் கொடுக்கும்  காதல் தான் கவிதை ... அதை உணர்வாயா ....? கவிதையை .. நீ ரசிக்க ரசிக்க  என் கவிதை  உயிர் பெறுகிறது ..!!! ^ தேனிலும் இனியது காதல்  கவிப்புயல் இனியவன்

உன்னை நினைத்தபடி வாழ‌....!!!

உள்ளத்தில் காதல்.....! வேண்டாம் ‍போதும்..... அவஸ்தை...... தயவு செய்து இன்னும்...... கொஞ்சம் காயப்படுத்து..... உன்னை நினைத்தபடி வாழ‌....!!!  ஒவ்வொரு இமை.... சிமிட்டலும் உன்னை.... நான் இழப்பதாகவே.... வருந்துகிறேன்... கண்சிமிட்டும் ... நேரம் வராதே....!!! காதல் என்பது.... உடல் முழுவதும்.... உள்ளமாக‌ மாறும்... இயற்கை நிகழ்வு.....!!! கஸல்;137

உடைத்தது நீ

மனம் உன் பார்வையால் உடைந்து சிதறி விட்ட்து கவலைப்படவில்லை உடைத்தது நீ காதலில் மின் சுழற்சியில் வருவதுபோல் வருகிறாய் எப்போது நிரந்தரமாக‌ வரப்போகிறாய் ...? உன் அன்பு உன்னையும்..... கடந்து என்மீது பட்டதால்.... இந்தவலி.....!!! கஸல் ;136

என் இதயத்தை பார்ப்பேன்

வயலில் புற்கலாக‌ வளர்கின்றன‍ நான் பசுவாக‌ நின்று மேய்கிறேன் கண்சிமிட்டும் நேரம் பார்த்துவந்தாய் நான் புகைப்படமாக‌ உன்னை வைத்திருக்கிறேன் இதயத்தில் கண்ணில் உன்னை இனிபார்க்க‌ துடிக்க‌ மாட்டேன் என் இதயத்தை பார்ப்பேன் கஸல் ;135

சின்ன இன்பக்காதல் வரி

பூக்கள் உன்னிடம் .... கற்று கொள்ள வேண்டும் .... மென்மையாக சிரிப்பதை .....!!! ^ சின்ன இன்பக்காதல் வரி ^ நெருப்பில் கருகிவிடலாம் ...... உன் சிரிப்பில் கருகுவதை விட ... அதுவொன்றும் கொடுமையில்லை....!!! ^ சின்ன வலிக்காதல் வரி ^ நீ  இதயத்தில் காதலாய் .... வந்தநாளே என் வசந்த காலம் ... ஒவ்வொரு இதயமும் பூக்கும் நாள் ....!!! ^ சின்ன இன்பக்காதல் வரி  ^ உன்னால் காயப்படும் கூட‌..... ஆறுதல் சொல்ல‌ நீவருவாய் .....  ஏங்குதுசொற‌ணை கெட்ட‌இதயம்....!! ^ சின்ன வலிக்காதல் வரி  ^ இதயம்துடிக்க‌ காற்று..... தேவையில்லைகாதல் ..... வந்தவுடன் துடிக்கும் .....!!! ^ சின்ன இன்பக்காதல் வரி  ^ நீ காதல் செய்ய முனைகிறாய் .... என்னசெய்வது உனக்கு வராது ..... காதல் இறைவனின் கொடை.....!!! ^ சின்ன வலிக்காதல் வரி  & கவிப்புயல் இனியவன்

உன் இதயம் மர்மதேசம்

உன் இதயம்.... மர்மதேசம் ...... புரியாத புதிர் -நீ ....!!! நடந்துவந்தேன் வீதியால் -உன் சிரிப்பில் தடக்கி விழுந்துவிட்டேன் ....!!! காதல் கிணற்றில் .... மூச்சு திணறுகிறேன்..... காப்பாற்றுவாய் .... என்றால் அமுக்கி ... விடுகிறாய் ......!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1035

காதல் உறவாகப்போகிறாய் .....?

காதலில் பூக்கள் சிரித்ததை விட வாடியதுதான் அதிகம் .......!!! நான் கண்ணால் ... காதல் கோலம் .... போடுகிறேன் -நீ கண்ணீரால் ..... அழிக்கிறாய்.....!!! உனக்கு நான் காதலன் உறவு நீ எனக்கு எப்போ ...? காதல் ....... உறவாகப்போகிறாய் .....? & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1034

வெளிச்சமாக இருக்கவா ..?

உன் காதலை .. நான் பெறுவதற்கு ... விளக்காக இருக்கவா ..? வெளிச்சமாக இருக்கவா ..? விளக்காக இருந்தால் .. ஊதி நூர்கிறாய் ... வெளிச்சமாக இருந்தால் .. ஓடி ஒழிக்கிறாய் ....!!! காதல் மனத்தால் .. கட்டும் கோயில் .. சாமி யார் ..? பூசாரியார் ..? நீதான் முடிவு சொல் ...!!! கஸல் 

இதயத்தில்காதல் முத்தானாய் ...!!!

இதயத்தில்காதல் முத்தானாய் ...!!! ---- பஞ்ச வர்ணகிளியே.... தினமும் அணியும்.... ஆடைகள் உன்னை... அப்படி அழைக்க... தூண்டுதடி ...!!! பச்சை கிளிக்கு... முன்னால் வந்து விடாதே... உன் கொவ்வை இதழை... கொத்திவிட்டு சென்று.... விடும் .....!!! என்னை பொறுத்த... மட்டில் நீ ஒருகாதல்... முத்து ....!!! ஒருதுளி மழைநீர்.... சிப்பிக்குள் முத்தாகிறது.... உன் சின்ன சிரிப்பு..... என் இதயத்தில் காதல் முத்தானாய் ...!!! & கவிப்புயல் இனியவன்

காதல் மௌனித்து விடக்கூடாது .....!!!

காதல் மௌனித்து விடக்கூடாது .....!!! ---- தயவு செய்து பேசு.... பேசாமல் இருக்கும் நொடி.... இறந்து கொண்டிருக்கிறேன்.... பேசினால் நிற்கப்போகும்.... மூச்சு துடிக்கும் .....!!! மறவர்களுக்கு காதல் நமக்கு மூச்சு தான் காதல் மறந்துவிடாதே .... உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்......!!! கண்ணால் செய்யும் காதலை காட்டிலும் எண்ணத்தால் செய்யும் காதல் அழகு ...!!! அருகில் இருக்கும் காதலை காட்டிலும் தொலைவில் இருக்கும் காதல் அழகு ...!!! பேசிகொண்டு இருக்கும் காதலை காட்டிலும் மௌனத்தால் செய்யும் காதல் அழகோ அழகு ..... அதற்காக காதல் ..... மௌனித்து விடக்கூடாது .....!!!

நானும் காதல் அவதாரம் தான் ....!!!

நீ கண் திறந்தபோது  எரிந்தேன் நீ கண் சிமிட்டியபோது உயிர்த்தேன் நானும் காதல்  அவதாரம் தான் ....!!! ^ கவிப்புயல் இனியவன் ^ நீ வேறு நான் வேறு இல்லை உணர்வுகளும் காதலும் வேறு இல்லை வரிகள் வேறு கவிதைவேறு இல்லை ....!!! ^ கவிப்புயல் இனியவன்

கவிதைமூன்றுவரி - இரண்டுகவிதை 02

காதலித்து உன்னை சுத்தமாக்கு.... கவிதை எழுதி உள்ளத்தை சுத்தமாக்கு... இரண்டையும் செய்பவன் காதல் ஞானி....!!! ^ கவிப்புயல் இனியவன் ^ உலகில் போதை கொடூரம்   உன் கண் போதையை விட கொடூரம் காதல் ஒரு தடுமாற்றம் .....!!! ^ கவிப்புயல் இனியவன் 

கவிதைமூன்றுவரி - இரண்டுகவிதை

இதயமாக இருப்பவளே ....... இதயத்துடிப்பு வலிக்கிறதா ...? துடிப்பையே நிறுத்துகிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் ^ கல்லை செதுக்கினேன் உருவம் கண்ணால் செதுக்கினேன் காதல் இதயம் வலியால் துடிக்கிறது ....!!! ^ கவிப்புயல் இனியவன்

எனக்கு ஒரு உதவிசெய் ....

என் காதல்  இனிமையானது ... இதயம் பாலாப்பழம்போல் ... முட்களால் மூடியுள்ளது ....!!! எனக்கு ஒரு உதவிசெய் .... என்னை விட்டுவிடு ... காதலை வைத்திரு ...!!! இழந்தது  கோடி கணக்கான ... சொத்தென்றால் கலங்க ... மாட்டேன் - கோடி இன்பம்  தந்த காதலை ....!!! கே இனியவன் கஸல் 

இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!

நீ என்னை விரும்மபில்லை .... என் கவிதையையும் ... விரும்பவில்லை - நீ இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!! தூரத்தில் அழகானது .... நிலா மட்டுமல்ல .... காதலில்லாமல் இருக்கும் ... என்னவளும் தான் ....!!! கவிதை எழுதி எழுதி ... ஞானியாகிவிட்டேன்.... தன்னை மறந்த நிலைதானே ... ஞானம் .....!!! கே இனியவன் கஸல்

விரும்பி தொலைத்துவிட்டேன் ....!!!

எதையுமே விரும்பாத ... உன்னை நான் விரும்பி ... தொலைத்துவிட்டேன் ....!!! கருங்கல்லில் -நீர் ... வடியும் என்பதை ... உன் காதலில் இருந்து ... நம்பிவிட்டேன் ....!!! பெண்ணை பற்றி நான் .... கவிதை எழுதியதில்லை ... உன்னை பற்றியே கவிதை ... எழுதுகிறேன் ....!!! கே இனியவன் கஸல்

நீ காலனாய் வருகிறாய் ....!!!

உன் இதயத்தில் காதல் நெல் விதைத்தேன் ... புல்லாய் வளர்கிறது ....!!! சிலந்தி வலைபோல் ... அழகாக இருக்கிறது நம் காதல் -. நானோ சிக்கி தவிக்கிறேன் ...!!! எத்தனையோ.... வடிவமாய் உன்னை .. தரிசிக்க விரும்புகிறேன் ... நீ காலனாய் வருகிறாய் ....!!! கே இனியவன் கஸல்

நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது

அப்படியே நினைத்து பார்க்கவே .... பயமாக இருக்கிறது நம் காதலை .....!!! ஓடாமல் இருக்கும் மணிக்கூட்டில் நான் ... நிமிட முள்ளாய் ... இருந்தென்ன பயன் ....? அணைத்தேன் துன்பம் ... அழைத்தேன் இன்பம் நீ அருகில் இருப்பதை ... விட தூர இரு .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1032

வருகிறேன்அணைந்து விடுகிறாய் ....!!!

நீ காதல் விளக்கு... அருகில் வருகிறேன்..... அணைந்து விடுகிறாய் ....!!! ஒற்றை பார்வை .... பார்த்தாய் அதுதான் .... ஒற்றையாய் நிற்கிறேன் ....!!! கறை படிந்த துணியில் .... அழுக்கு இருப்பதுபோல் .... என் இதயத்தில் நீ .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1031

என் முன்னாள் காதலி ......!!!

அவளுடன் பேசத்துடிக்கிறேன் .... உதடுகள் மறுக்கின்றன .....!!! அவளை .... பார்க்க துடிக்கிறேன் .... கண்கள் மறுக்கின்றன .....!!! அவள் ... நினைவுகள் மட்டும் ... இதயம் சுமக்கிறது .... அவள் என் முன்னாள் ... காதலி ......!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

முடிந்தால் எடுத்துவிடு....!!!

கனவில் வந்து ... கலைந்து விட்டாள்.... நினைவை தந்து .... நீங்கிவிட்டாள்.... உன்னை கனவில் .... மட்டும் காதலித்திருந்தால் .... கலங்கியிருக்க மாட்டேன்.... நினைவில் மட்டும் .... காதலித்திருந்தாலும் ..... வருந்த மாடடேன் .... உயிராக இருக்கிறேன் .... முடிந்தால் எடுத்துவிடு....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

எப்படி மறக்கப்போகிறாய் ....?

முயற்சிக்கிறேன் .... உன்னை கண்டவுடன் .... ஒரு பொய் சிரிப்பு சிரிக்க .... உதட்டுக்கு முன்னரே .... முந்தி கொண்டு .. கண்ணீர் விட்டுவிடுகிறது ..... கண்கள் .......!!! உன்னை நினைக்க  ..... கவலையாக இருக்கிறது...... என் நினைவுகளை எப்படி .... மறக்கப்போகிறாய் ....? ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

என்னிடம் சொல்கிறாயே .....!!!

நேரம் இருக்கின்ற போது .... என்னுடன் பேசுகிறேன் ... என்கிறாய் ...... நேரம் காலம் எல்லாம் .... உன்னையே நினைக்கும் .... என்னிடம் சொல்கிறாயே .....!!! ஒரு முறை என்னைப்போல் ..... துடித்துப்பார்  -காதலின் துடிப்பும் வலியும் அப்போது .... உனக்கு புரியும் ......!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

மாலை கோர்க்க முடியவில்லை ..!!!

கைக்கு எட்டியது .... வாய்க்கு எட்டவில்லை ... என்பதுபோல் தான் .... என் காதலும் ..... திருமண அழைப்பில் ....!!! கை கோர்க்க முடிந்த .... எனக்கு உன்னோடு ... மாலை கோர்க்க .... முடியவில்லை .............!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை  கவிப்புயல் இனியவன்

என்னை அனுமதிப்பாயா .....?

விக்கிரகத்தை ..... அலங்கரிக்கும் பூசாரி .... போல் என்னை அனுமதிப்பாயா  .....? அலகு குத்தி காவடி ... எடுப்பார்கள் ....... உன் அழகு குத்தி .... காதல் செய்கிறேன் .... அடுத்த  நொடி கூட உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன்

அழகு குத்தி காதல் செய்கிறேன்

விக்கிரகத்தை ..... அலங்கரிக்கும் பூசாரி .... போல் என்னை அனுமதிப்பாயா  .....? அலகு குத்தி காவடி ... எடுப்பார்கள் ....... உன் அழகு குத்தி .... காதல் செய்கிறேன் .... அடுத்த  நொடி கூட உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன்

உனக்காகவே உயிர் வாழ்கிறேன்

என்னுடன் பேச .... துடிக்கும் இதயங்கள் .... ஆயிரம் ஆயிரம் .....!!! உன்னோடு மட்டும்... பேசத்துடிக்கும்  என் .... மனசை ஒருமுறை .... நேசித்துப்பார் ....!!! என்னை விட உன்னை ... அப்படி நேசிக்க யாரும் .... இருக்கமாட்டார்கள் .... உனக்காக பலர் வாழலாம் .... நானோ ..... உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் 

முள்ளில் மலர்ந்த பூக்கள் 30

உன் இதய சிறை கைதி நான் .... நினைவுகளால் மீண்டும் ... விலங்கிடாதே .....!!! உன் பார்வையால் ... கவிஞனாகினேன் .... நீ காதலித்தால் ... பித்தனாகிவிடுவேன் ....!!! உன் கண்ணில் காதல் .... இல்லை - கண்ணாடியை .... பார் உன் கண்ணுக்குள் .... நான் இல்லை .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1030

முள்ளில் மலர்ந்த பூக்கள் 29

நிச்சயமாக நீ என் நினைவுகளால் .... வதைக்கப்படுகிறாய் .... இங்கு என் இதயம் ... கண்ணீர் விடுகிறது ....!!! என் இதயம் .... வீதியோர சுமைதாங்கி .... இறக்கிவை உன் சுமையை ... காதல் ... ஊதும் பலூனுனை போல் .... அளவாக காற்றை .... ஊதவேண்டும் .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1029

காதலை இழந்து விடாதே ...!!!

காதலை சொல்லவேண்டிய .... நேரத்தில் சொல்லி விடு .... இல்லையேல் காலம் .... முழுவதும் காதலால் .... காயப்படுவாய் .....!!! என்றோ ஒருநாள் ... சொல்லாமல் விட்ட காதல் .... இதயத்துக்குள் முள்ளாய் .... குத்திக்கொண்டே இருக்கும் .....!!! காதலை சொல்லி வேதனை .... பட்டவர்களை விட  காதலை .... சொல்லாமல் வேதனை .... பட்டவர்களே அதிகம் .....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலர்ந்த பூக்கள் 28

உன்னை காதலிக்கும் .... போதே கற்று விட்டேன் ..... நீ தரும் வலியை எப்படி .... சுமப்பதென்று .....!!! உனக்கு என் ஞாபகங்கள் .... பறக்கும் பஞ்சு .... எனக்கு தலையணை பஞ்சு .... தினமும் அதில் தூங்குகிறேன் ....!!! காதல் இரு வழி பாதை .... எனக்கோ இரு வலி பாதை .... உன்னையும் சுமக்கிறேன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1028