இடுகைகள்

மார்ச் 3, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூன்று வரி கவிதை

காதலை தானம் செய்வோர் சங்கம் .... தானம் செய்யுங்கள் காதலை .... காதல் பிரம்மசாரியாக வாழ்வோம் ....!!! + மூன்று வரி கவிதை ***** ஒருமுறை உண்மையாக காதலித்து விடு ... உனக்காக பலமுறை இறக்க தயார் ... மறுமுறையும் உனக்காக பிறப்பேன் ...!!! +  மூன்று வரி கவிதை

மூன்று வரி கவிதை

என் இதயத்துகூட நன்றியில்லை .... என்னில் இருந்து கொண்டு உன்னை ... நினைக்கிறது ....!!! + மூன்று வரி கவிதை

ஒன்றுதான் உயிரே ...!!!

இறந்த பின் பாடையில் போவதும் .... இருக்கும் போது காதலை இழப்பதும் ... வாழ்க்கையில் ஒன்றுதான் உயிரே ...!!! + மூன்று வரி கவிதை

நீ காதலை தந்து ...

நெருப்பின் மீது விழுந்த நீர்த்துளி .... ஆவியாவது போல் - நீ காதலை தந்து ... காணாமல் போய் விட்டாயே ....!!! + மூன்று வரி கவிதை 

மூன்று வரி கவிதை

நான் உன்னிடம் காதலை கேட்டேன்.. நீ உன் காதலனை  காட்டுகிறாய் ... அவசர காதல் அவஸ்தையை தரும் ...!!! + மூன்று வரி கவிதை 

புதுக்கவிதையில் பொதுக்கவிதை

ஈர விறகு எரியாது ... ஈரமான நாக்கு பேசும் போது ... எரிக்கிறது ....!!! வறண்டு இருக்கும் மனதை .... பசுமை செய்யக்கூடியது ... ஈரமான நாக்கு ....!!! எரிக்கும் சக்தியும் -நீ பசுமையாக்கும் சக்தியும் -நீ மறைந்திருக்கும் நாக்கை .. பயன்படுத்துவதை பொறுத்து ...!!! + புதுக்கவிதையில் பொதுக்கவிதை 

கல்லறையாகிவிட்டேன் ....!!!

நான் உனக்கு காதல் .. கடிதம் தந்தேன் - நீ திருமண அழைப்பிதலாய் மாற்றி விட்டாயே ...??? நீ என் கண்ணுக்கும் கண்ணீருக்கும் இடைபட்டவள் இருப்பாயோ ..? போய்விடுவாயோ ...? உன்னை காதலித்த .. போதே நான் சமாதியாகி .... கல்லறையாகிவிட்டேன் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;775

பெரிய கொடுமை

என் காதல் கவிதை ... பார்த்த நண்பனும் அழுகிறான் என்னைப்போல் அவனுக்கும் ... ஒரு காதலிபோல் ....!!! உலகில் பெரிய கொடுமை ... மணமாலையில் அவளை ... காதலன் பார்ப்பது ...!!! காதல் இல்லாத இதயத்தில் ... காதலை பார்ப்பது ... கருங்கல்லில் தண்ணிரை பார்ப்பது போல் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;774