இடுகைகள்

ஆகஸ்ட் 16, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் தனிமையில் இருப்பேன் ...!!!

உன்னை .... ஆசை வார்த்தையால் .... வர்ணிப்பவர்களை நம்பாதே .... உன் அழகையே ரசிக்கிறார்கள்....!!! நான் ... உனக்கு முள் போல் இருந்தாலும் .... உயிர் உள்ளவரை உன்னையே ... நேசிப்பேன் -என்றோ ஒருனாள் ... நீ என்னை திரும்பி பார்க்கும் ... நான் தனிமையில் இருப்பேன் ...!!! + கே இனியவனின் புதுக்கவிதைகள்

கே இனியவனின் புதுக்கவிதைகள்

நீ தந்த ரோஜா செடியில் .... உணர்வேன் உன் நிலை .... நீ ஆனத்தமாய் இருக்கும் ... போது  வீட்டு முற்றத்தில் ... ரோஜா சிரித்த முகத்தோடு .... பூத்திருக்கும் .....!!! உனக்கு என்ன நடந்தது ....? ஒவ்வொரு ரோஜா பூவும் .... வாடிவருகிறதே.....? இதழ்கள் உதிர்ந்து வருகிறதே ...!!! + கே இனியவனின் புதுக்கவிதைகள்

காதல் விவசாயி

உன் நினைவுகளை.... எனக்குள் விதைத்த..... காதல் விவசாயி நான் .... நினைவுகளாலும் கனவுகளாலும் காதல் கதிரானேன் .....!!! காதல் அறுவடை ஏன்....? செய்தாய் உயிரே .... என் இதயத்தை தரிசு .... நிலமாக்கிவிட்டாயே....!!!

நட்பிலும் காதலிலும்

நட்பு என்றாலும் ... காதல் என்றாலும் .... இதயத்தில் வைக்க .... இரண்டு கல் வெட்டுக்கள்.... பழகும் வரை உறுதியாயிரு ... பழகிய பின் உயிராய் இரு ...!!! நட்பிலும் காதலிலும் .... இதயத்தில் வைக்க கூடாதவை .... சந்தேக படாதே .... சந்தர்ப்பதுகேற்ப பேசாதே ....!!!

கருணை என்பது உதவியல்ல

க ண்ணில் காந்த சக்தியுடன் .... க டமையை மூச்சாய் கொண்டு.... க திரவன் முக மலர்வுடன் ஆசியுடன் ... க ண்ணியத்துடன் பணிகளை தொடர்வோம் ....!!! க ட்டளை செய்துவிட்டு நீ மட்டும் .... க டப்பாட்டில் இருந்து விலக்கிவிடாதே ..... க ண்டதே காட்சி கொண்டதே கோலமாகிவிடதே .... க ண்ணால் கண்டதும் கேட்டதும் பொய் .....!!! க ரும்புபோல் பேச்சில் இனிமையும் ....... க திரவன் போல் மனதில் ஒளிமையும் ......... க ற்பூரம் போல்சிந்தனையில் விரைவும் ....... க ல்வியும் உடையவனே மாமனிதன் .......!!! க ம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் ..... க ண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை .... க ருணை என்பது உதவியல்ல ,அன்பு ...... க டவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே ......!!!

உனக்கு இல்லாத இதயம் வேண்டாம் ....!!!

என்னை நன்றாக காயப்படுத்து ..... உனக்கு அதில் இன்பமென்றால் .... நன்றாக காயப்படுத்து -எதையும் ... தாங்கும் இதயம் என்று சொல்லமாடேன் .... உனக்கு இல்லாத இதயம் வேண்டாம் ....!!! + கே இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 05

நீ என் கவிதை அழகு என்கிறாய் .....

நீ என் கவிதை அழகு என்கிறாய் ..... நீ  அழகாய் இருப்பதால் கவிதை ..... அழகாக இருக்கிறது - நீ என்னை .... பிரிந்துபார் கவிதை அழுது படி ...... உன் மடியிலேயே வந்து தூங்கும் ....!!! + கே இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 04

நீ இருக்கும் வரை துடிக்கணும் ....

என்இதயம் நீ இருக்கும் வரை துடிக்கணும் .... கண்கள் உன்னை மட்டுமே பார்க்கணும் .... உன் தெருவைநோக்கி கால்கள்  நடக்கணும் .... நம் காதல் உலகம் வரை இருக்கணும் .... இல்லை- கல்லறையில் இருவரும் தூங்கணும் ....!!! + கே இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 03