இடுகைகள்

நவம்பர் 21, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எண்ணத்தால் எரிகிறேன் .....!!!

படம்
என் இதயமும்  மெழுகு திரியும்  ஒன்றுதான் - தனக்காக  வாழாமல் பிறருக்காக  எரிகிறது -நான்  எனக்காக வாழாமல்  உனக்காக உருகுகிறேன்  அது எண்ணையால் எரிகிறது  நான் எண்ணத்தால்  எரிகிறேன் .....!!!

தந்துவிட்டேன் ...

காதலில் நீ தந்த கடித்தத்தை திருப்பி தந்துவிட்டேன் ... உன்னோடு இருந்த சின்ன சின்ன புகைப்படத்தை தந்துவிட்டேன் .... என் இதயத்தில் நீ கற் சிற்பமாய் இருக்கிறாய் எப்படி உடைத்து எடுக்க போகிறாய் ....?  

உயிரோடு இருக்கிறார்கள் ,,,,!!!

அவன் அவள் இல்லாமல் உயிரற்று இருக்கிறான் அவள் அவனில்லாமல் ஊற்றெடுக்கும் கண்ணீரோடு இருக்கிறாள் ....!!! காதல் வாழ்வதால் இருவரும் உயிரோடு இருக்கிறார்கள் ,,,,!!!

உன் ஆறுதலான

ஆனந்தம் என்பது காதலில் ஆரவாரத்தில் இல்லை -உன் ஆறுதலான வார்த்தையில் தான் இருக்கும்

கற்பனை புதுமைதரும்

காதல் இனிமைதரும் இனிமை நினைவு தரும் காதல் பிரிவு வலிதரும் வலிகள் வரிகள் தரும் வரிகள் கவிதை தரும் கவிதை கற்பனை தரும் கற்பனை புதுமைதரும் புதுமை இளமைதரும் ...!!!