இடுகைகள்

நவம்பர் 21, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வருத்தினாலேவெற்றி...!

 வருத்தினாலேவெற்றி...! ---------------- மாணவன் தன்னை வருத்தினாலே சிறந்த பெறுபேறு விளையாட்டு வீரன் தன்னை வருத்தினாலே- வெற்றிக்கிண்ணம் முயற்சியாளன் தன்னை வருத்தினாலே- கோடீஸ்வரன் இறைவனை காண வேண்டுமாயின் ஞானி தன்னை வருத்த வேண்டும் உலகில் வெற்றிகண்ட மனிதர்களில் யாராவது ஒருவர் தன்னை வருத்தாமல் வெற்றி பெற்று இருந்தால் கூறுங்கள் பார்க்கலாம் ..? & வாழ்க்கை கவிதை கவிப்புயல் இனியவன் 

ஏன் ஒப்படைக்கவில்லை ....?

உன்னை உன்னிடத்தில் ... ஒப்படைத்து விட்டாய் ..... என்னை என்னிடத்தில் ..... ஏன் ஒப்படைக்கவில்லை ....? உன்னை உன்னிடத்தில் .... ஒப்படைக்க வந்த துணிவு .. என்னை என்னிடத்தில் ...... ஒப்படைக்க வரவில்லை ..? உன்னை என்னிடத்திலும் .... என்னை உன்னிடத்திலும் .... ஒப்படைத்தமைக்கு ........ காதல் என்றே அர்த்தம் ....! என்னை என்னிடத்தில் ...... ஒப்படைக்காமல் ... உன்னை உன்னிடத்தில் ஒப்படைத்ததை எப்படி ..? சொல்லுவது ...? நிச்சயமாக இது பிரிவு இல்லை..! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதைகள்

புன்னகைத்துக்கொண்டு

நீ கை அசைத்து .... தூர செல்ல செல்ல.... என் தூரப்பார்வை ....... குறைந்து வருகிறது ....! நீ ............... புன்னகைத்துக்கொண்டு .................. அருகில் வர வர ............... கிட்டியபார்வை குறைந்து வருகிறது ....! நீ ஒரு நாள் ............... வராத போது ................ என் கண்ணுக்கு ............ அமாவாசைதான் ...! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே