இடுகைகள்

ஆகஸ்ட் 2, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணீர் இல்லை ...!!!

காதல் .... தோற்றபின் பூக்கள்  மட்டும் வாடுவதில்லை .... அலைந்த வண்டும் தான் ....!!! மாதுவை இழந்தேன் .... பரவாயில்லை .... மதுவும் உன்னைப்போல் .... சிற்றின்பம் தான் ....!!! என் கண்கள் .... அழ மறுக்கிறது .... வேறொன்றும் இல்லை ... கண்ணீர் இல்லை ...!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;830

வில்லங்கப்படுகிறேன்....!!!

விரும்பாததை .... விரும்பி .... வில்லங்கப்படுகிறேன்....!!! நீ என்னை பிரிந்து .... கை கழுவி விட்டாய் .... கவிதை தேவதை .... கை கொடுக்கிறாள் ....!!! என்  வாழ்க்கைக்கும் ... மரணத்துக்கும் .... காரணம் காதல் .....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;829

இதயம் எங்கே .....?

உன்னில்....  அழகான கண் .... இருக்கிறது ..... இதயம் எங்கே .....? உன்னிடமிருந்து ... என்னை எடுத்துவிடு .... என்னிடமிருந்து .... உன்னை எடுக்கவே .... முடியாது .....!!! காதல் கலகலப்பில் ... தொடங்கி .... சலசலப்பில் ... முடிந்து விட்டது .....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;828

உடலை பிரித்துவிட்டாய் ....!!!

உன் பாசம் ... எனக்கு விஷம் ... உன் காதல் ... எனக்கு பாச கயிறு ......!!! காதல் தோல்வி .... நீ ஏற்படுத்தவில்லை .... நினைவை தந்து விட்டு ... உடலை பிரித்துவிட்டாய் ....!!! பூவுக்கு  இருந்த மேன்மையை ... கேவலபடுதிவிட்டாய் .... காதல் பரிசாய் தந்து ....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;827

காதல் வலியை சுமக்கிறேன் ....!!!

காதலியோடு ..... பூங்காவில் ... இருந்தேன் -இப்போ ... நினைவு மட்டும்  இருக்கிறது ....!!! இரண்டு இதயம் ... ஒரு இதயமாக மாறி .... காதல் வலியை... சுமக்கிறேன் ....!!! உன்னோடு வாழ்வதும் .... விண் வெளியில் வாழ்வதும் ... ஒன்றுதான் காற்றில்லாமல் ... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;826