இடுகைகள்

ஜூலை 26, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறுங்கவிதை

நாம் ஒவ்வொருவரும் ... பொய்யர்கள் தான் ... நம் நிழல் காட்டுகிறது ....!!! + கே இனியவனின் பல்வகை கவிதைகள் குறுங்கவிதை

ஒரு உடலில் இரண்டு இதயம்

ஒரு உடலில் இரண்டு .... இதயம் - என்ன ஆச்சிரியமா ....? ஒவ்வொரு தாயும் .... கருவுற்றிருக்கும் போது .... இரண்டு இதயம் தானே ....!!! வாழ்கை ஒரு சுமை .... சுமந்து காட்டியவர் -நம்  அன்னை .....!!! வாழ்கையை சுமையாய் .... நினைக்காதே -வாழ்ந்து  காட்டியவர் - அன்னை ....!!! + கே இனியவனின்  பல்வகை கவிதைகள்  அம்மா கவிதை

முயற்சிக்காமல் இருக்காதே ....!!!

முயற்சிக்க கூடாததை ... முயற்சிக்காதே .... முயற்சிக்க கூடியதை .... முயற்சிக்காமல் இருக்காதே ....!!! முயற்சி  தெருவில் இருப்பவனையும் .... திருவினையாக்கும்  முயற்சி இல்லாதவன் ... முழுவதையும் இழப்பான் ....!!! + கே இனியவனின்  பல்வகை கவிதைகள்  முயற்சி கவிதை

இன்று நான் இறக்கபோகிறேன்

காற்றோட்டம் பெற ..... மரங்களுக்கிடையில் .... நடந்துசென்றேன் ..... மரங்கள் என்னோடு .... பேசத்தொடங்கின .....!!! வேப்பமரம் ....! ஏய் இனியவரே ..... எனக்கு கீழ் ஒரு அம்மன் .... உருவத்தை வைத்துவிட்டு .... செல் என்றது - திகைத்தேன் .... நான் என்ன ஞானியா ...? மந்திர வாதியா ....? சிலையை உடன் வரவழைக்க ....? அரசமரம் .....! ஏய் இனியவரே .... எனக்கு கீழ் ஒரு பிள்ளையார் .... சிலையொன்றை வைத்துவிட்டு ... செல் என்றது - புன்னகைத்துவிட்டு .... மேலும் சென்றேன் .....!!! ஆலமரம் .....! ஏய் இனியவரே .... எனக்கு கீழ் ஒரு பைரவர் ... சூலத்தை வைத்துவிட்டு ... செல் என்றது - ஒரு பெரு மூச்சை ... ஆழமாக எடுத்துவிட்டு சென்றேன் .... அடுத்த மரம் என்னிடம் ..... எதையும் கேட்கவில்லை ..... வியப்படைந்தேன் - ஏய் மரமே .... உனக்கு கடவுள் நம்பிக்கை .... இல்லையா ...? ஏன் எதையும் .... கேட்கவில்லை என்று நான் ... வினாவினேன் .....!!! போங்க இனியவரே .... அவைகளெல்லாம் ஞானத்தால் .... சிலைகளை கேட்கவில்லை .... தம்மை விட்டிவிடகூடாது ... என்ற பயத்தால் கேட்கிறார்கள் .... அப்படியென்றாலும் தம்மை .... வெட்டும் அளவு குறையுமே .... அற்ப ஆசை தான் இனிய

எங்கள் தமிழ் மொழியே .....!!!

தமிழ்மொழி இனிமை மொழி ..... உலகின் பழமொழி தோற்றதுக்கு .... உயிர் கொடுத்த மூலமொழி ..... " ழ் " என்ற சிறப்பு உச்சரிப்பை ..... உன்னதமாய் கொண்ட மொழி ....!!! என் தமிழ் மொழி .... தேன் சுரக்கும் இனியமொழி .... உச்சரிக்ககூடிய் எளிய மொழி ,,,,, மொழிகளில் பழமை மொழி ..... மொழிகளில் சிறப்பு மொழி ..... உலகத்திலே தனித்துவ மொழி ....!!! தமிழன் என்றால் ஒழுக்கமே .... தமிழன் என்றால் பண்பாடே ..... தமிழன் என்றால் கற்பே ...... தமிழன் என்றால் வீரமே .... கற்று கொடுப்பது என்றும் .... எங்கள் தமிழ் மொழியே .....!!! + கே இனியவனின்  பல்வகை கவிதைகள்  தமிழ் மொழிகவிதை

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உ ள்ளம் தூய்மையாக இருப்பின்... உ ள்ளிருக்கும் மனது இறைவன்......! உ ள்ளதூய்மை என்பது .... உ யிரினங்கள் அனைத்திலும் .... உ ள்அன்பை செலுத்துவதாகும் ....!!! உ றவுகளே எனது இனிமையான .... உ ள்ளங்கனிந்த வாழ்த்துக்கள் .... உ ழைப்பை உயிராய் மதிப்போம் .... உ ற்றார் உறவினரை மகிழ்விப்போம் ..... உ ற்சாகமாய் வாழ்ந்திடுவோம் .....!!! உ ள்ளொன்று வைத்து புறம்பேசாதே..... உ ள்ளவனுக்கு பகட்டுக்கு உதவிசெய்யாதே ..... உ ண்டு களித்தே உடலை நோயாக்காதே..... உ ண்மை அன்பை உதறி விடாதே ..... உ ள்ளத்தை ஊனமாக்கிடாதே.....!!! உ ள்ளதை கொண்டு இன்பமாய் வாழ்வோம் .... உ லகிற்கு ஏதேனும் செய்துவிட்டு இறப்போம் ..... உ ள்ளதில் ஓரளவேணும் ஈகை செய்வோம் .... உ ள்வரவு எதிர்பார்க்காமல் உதவி செய்வோம் உ யிர்பிரிந்தபின்னும் உலகோடு வாழ்வோம் ......!!!