இடுகைகள்

ஆகஸ்ட் 11, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலிக்காவிட்டால்

படம்
மலராவிட்டால்  மலருக்கு அழகில்லை  மின்னாமல் விட்டால்  விண்மீணுக்கு அழகில்லை  கூவாவிட்டால்  குயிலுக்கு அழகில்லை  ஆடாவிட்டால்  மயிலுக்கு அழகில்லை  சிரிக்காது விட்டால்  மழலைக்கு அழகில்லை  காதலிக்காவிட்டால்  மங்கையே உனக்கழகில்லை....!!!                                                                                

நீ கவிதையை ரசிக்கவில்லை .....!!!

படம்
கவிதை எழுதிய போது  காதல் இருக்கவில்லை  காதல் இருக்கும் போது  காதலி நீ கவிதையை  ரசிக்கவில்லை .....!!! நீ தந்த நினைவுகள்  கவிதையாக வரும் போது  கவிதை அழகாக உள்ளது  காதலியே நீ எங்கிருக்கிறாய்  கவிதை என்பது  எண்ணாத்தால் வரும்  கலைப்படைப்பு காதால் என்பது பருவத்தால்  வரும் மனப்படைப்பு .....!!!    

நீ ஒரு புள்ளியில் கோடு ...?

படம்
கற்பூரம் போல்  வாசமாக இருக்கிறாய்  விரைவாக எரிகிறாயில்லை ...!!! கடலில்  உப்புத்தான் விளையும்  நீ சக்கரையை  உருவாக்கா சொல்கிறாய் ...!!! இரு புள்ளி வேண்டும்  கோடு வரைய  நீ ஒரு புள்ளியில்  கோடு வரையச்சொல்கிறாய்  கஸல் 340                     

காதலுக்காய் காத்திருக்கிறாய் ...!!!

படம்
அழிக்க முடியாத  வலி காதல்  நீ அழிக்க சொல்கிறாய் ....!!! காதலில் உவமை அழகு  உபத்திரம் எப்படி ...? அழகு ....? நான் உன்னுடன்  வாழ்கிறேன் -நீ  காதலுக்காய்  காத்திருக்கிறாய் ...!!! கஸல் ;339                

நீ நெருப்பாய் வருகிறாய் ....!!!

படம்
வானமும்  காதலும்  ஒன்றுதான்  எல்லையில் ....!!! நடுக்காட்டில்  கண்ணை கட்டி  விட்டதுபோல்  உன் காதல்  காட்டில் நான் ...!!! மூச்சு விட்டால்  காற்றுத்தான் வரவேண்டும்  நீ நெருப்பாய் வருகிறாய் ....!!! கஸல் 338                     

நிழலாய் வருகிறாய் ....!!!

படம்
காதலில்  வலி  சிரிப்பு  சோகம்  தருபவள் நீ  கடலில் மீன்  மீண்டும் மீண்டும்  மேலே வந்து சுவாசிப்பது  போல் -உன்னை சுவாசிக்கிறேன்  கண்ணாடியில்  உன் முகத்தை தேடினேன்  நிழலாய் வருகிறாய் ....!!! கஸல் 337                   

நீயோ முள்ளால் போடுகிறாய் ....!!!

படம்
காதல்  உன்னையும் விடாது  என்னையும் விடாது  யாரையும் விடாது  விடாது கறுப்பு .....!!! நீ  வலியை தொடர்ந்து  தருகிறாய் அப்போ  பிரியப்போகிறாய் ....!!! காதல் விலங்கு  பூவால் போடணும்  நீயோ முள்ளால்  போடுகிறாய் ....!!! கஸல் 336              

அதுதான் முடியவில்லை ....!!!

படம்
நீ பேசினாய்  நானும் பேசினேன்  நீ சிரித்தாய்  நானும் சிரித்தேன்  நீ அழுதாய்  நானும் அழுதேன்  நீ பிரிந்தாய்  என்னால் அதுதான்  முடியவில்லை ....!!!                                                   

நீ தந்த வலி

படம்
எப்படி காதலிப்பது என்பதை ... கற்றுக்கொண்ட நான்  உன்னிடமிருந்து எப்படி  விலகுவது என்பதை  கற்றிருந்தால்  நீ தந்த வலி  தெரிந்திருக்காது ....!!! 

இதயத்தை கடத்திய ....?

படம்
இதயத்தை கடத்திய  உன்னை கைதுசெய்ய  காவல் நிலையம் தான்  இல்லை ....!!! 

மந்திரம் தான் என்ன ...?

படம்
நான் விட்ட தவறை நானே உணர்ந்தேன் மீண்டும் உன்னையே சுற்றி வருகிறது -மனம் உன்னிடம் உள்ள மந்திரம் தான் என்ன ...?

காதலியாக இருந்தால்...?

படம்
காதலியாக இருந்தால் ஒன்றில் வலியை தா...? அல்லது இன்பத்தை தா ...? உயிருள்ள நீ சடப்பொருளாக இருக்காதே ...!!!   

நான் சீறுகிறேன்

படம்
பல் பிடுங்கிய பாம்பாக - காதல் மகுடியை ஊதி அடக்கி விட்டாய் என்னை ....!!! அதனால் தான் நான் சீறுகிறேன் நீ சிரிக்கிறாய் ....!!!