கவிதை எழுதும் நேரம் இதுவல்ல

அடுக்கு மொழி பேசி ....... கவிதை எழுதும் நேரம் ..... இதுவல்ல -என்றாலும் ..... அடக்க நினைப்பவனை .... அடுக்கு மொழியால் ..... சாட்டை அடி அடிக்கவே ..... அடுக்கு மொழியை ...... பயன்படுத்துகிறேன் ......!!! ஜல்லியாய் பாயும் காளையை ...... கில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ...... தமிழினத்தை - கிள்ளி எறியலாம் ..... என்று தப்பு கணக்கு போடும் ..... சில்லறைகளே - நாம் கல்லறை .... என்றாலும் நிறைவேறாது ..... உங்கள் எண்ணம் ..............!!! பாய்ந்து வரும் காளைகள் ...... எங்கள் நெஞ்சின் மேல் ..... பாய் வதில்லை நாங்கள் ..... நெஞ்சுசோடு அணைக்கவே ..... பாய் கின்றான் - அடக்காதீர் .... அடக்கினால் உங்கள் நெஞ்சின் ..... பாய் வதற்கு வெகு தூரமில்லை .....!!! & கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்