இடுகைகள்

ஜனவரி 28, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உயிரே மன்னித்துவிடு

வேண்டாம் என்னை .... விட்டு விடு .... காதலித்தது போதும் ..... விலக்கிவிடு ....!!! தனியாக..... இருக்க என்னை.... அனுமதித்துவிடு .. துணை வேண்டாம் .... அன்பே என்னை .... மறந்துவிடு ....!!! பிணமாக நடக்க ஆசைப்படுகிறேன் உயிர் வேண்டாம் .... உயிரே என்னை .... மறந்துவிடு ....!!! இத்தனையும் சொல்ல .... துடிக்கிறது மனசு முடியவில்லை .... உயிரே மன்னித்துவிடு ...!!! இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ... ஒவ்வொரு மூச்சும் ... அன்பே உனக்காகத்தான் .... என்பதை மறந்துவிடாதே ...!!! ^^^ கவிப்புயல் இனியவன்

இப்போதான் புரிந்தது

அன்பால் அடிமையாகினேன் ... என்று தப்பாய் .... நினைத்துவிட்டேன் ....!!! இப்போதான் .... புரிந்தது என்னை ... அடிமையாக்கவே .... அன்பு வைத்திருகிறாய் ...!!! ^^^ கவிப்புயல் இனியவன்

நினைக்கவும் முடியவில்லை

என்னை விட்டுசென்ற... அவளை இன்னும் காதலித்து ... கொண்டுஇருக்கிறேன்....!!! அவளை மறக்க முடியாமல் இல்லை.... இன்னொருத்தியை நினைக்கவும் முடியவில்லை ...!!! ^^^ கவிப்புயல் இனியவன்

உனக்காய் காத்திருப்பவை

உன் முகம் காண காத்திருக்கிறது நிலா...!!! உன் மூச்சுக்காய் தாத்திருக்கிறது ... இசை....!!! உன் வரவுக்காய் .... நிழல் தரகாத்திருகிறது மரம் ....!!! உன் கண்ணுக்காய்.... காத்திருக்கிறது காட்சி ....!!! ^^^ கவிப்புயல் இனியவன்

ஏக்கத்தை புரிந்தவர்கள்

காதல் இரு உள்ளங்களின் ஏக்கம் ....!!! ஏக்கத்தை புரிந்தவர்கள் வெல்லுகிறார்கள் .. ஏக்கத்தை ... தொலைத்தவர்கள் ... தோற்கிறார்கள் ...!!!

உயிரின் வலிஅறியவில்லை

உன்னோடு இணைந்து திரிந்த நான்..... தனியாக போகிறேன்.. எப்போதோ தொலைத்த ஒன்றை தேடிக்கொண்டு.....!!! வளையல் சத்தம் கேட்கிறது கொலுசின் ஓசை கேட்கிறது சிரிப்பொலிகள் கேட்கிறது எல்லாம் பிரம்மையில் ....!!! தேடித்தேடி அலைகின்றேன் தேடியது கிட்டவில்லை கிடைத்தது ஒன்று .... எனக்கு பிடிக்கவில்லை ...!!! வாழ்க்கையெனும்.... மனச்சோலையில்.... வாழ்ந்து கொண்டுடிருக்கிறேன்.... உயிரின் வலிஅறியவில்லை..... உறங்குகின்றேன் காதலியே..... உன் நினைவோடு.....!!!

நினைத்து விடாதே

நீ போவதென்றால் போ... உன் காதல் என்னை விட்டு போய் விட்டது என்று .... நினைத்து விடாதே ...!!! நீ .. விலகி நிற்கிறாய் ...!!! உன் நினைவு ...!!! என்னை விலகாமலே .. இருக்கிறது ...!!! நான் என் நினைவு .... காதலியுடன் .. அழகாக வாழ்வேன் ...!!! +++ கவிப்புயல் இனியவன்

நெஞ்சை தொடும் காதல் கவிதைகள்

நான் எப்போது உன்னை பார்த்தேனோ .. அப்போதே என்னை மறந்து விட்டேன்...!!! அதனால்தான் என் காதலை உன்னிடம் சொல்லாமல் .. ஒருதலைக்காதலாய் வாழ்ந்துவிட்டேன் ...!!! +++ கவிப்புயல் இனியவன் 

அதிசயக்குழந்தை - கை

அதிசயக்குழந்தை - கை ---- கை தட்டி ஆரவாரமாக .... இருந்தான் அதிசயக்குழந்தை..... என்ன அத்துணை மகிழ்ச்சியோ ....? ஆசான் அதிகாரத்தில் கேட்டேன் ....!!! எனக்கு .... கை கூப்புவது பிடிக்காது ....... கை தட்டுவதே பிடிக்கும் என்றான் .... கை தட்டி பாருங்கள் -ஓசை மட்டும் .... வருவதில்லை .ஓயஷ்சும் (காந்த சக்தி ) கிடைக்கும் என்றான் .....!!! எல்லா மனித நரம்புகளும் .... கையுடன் தொடர்புபடும் .... கை தட்டினால் அனைத்து .... மன அழுத்தமும் பறந்துவிடும் .... தனித்து நின்று கை தட்டினால் .... பித்தன் என்கிறார்கள் ..... கூட்டத்தோடு தட்டினால் ... " பிரார்த்தனை" என்கிறார்கள் ....!!! இன்னும் ஒன்றை கேளுங்கள்   .....!!! கைகளை கொண்டு .... போராடுங்கள் என்றது மாக்சிஷம்....! கைகளை ஆயுதமாக்கியது ..... பாசிஷம்.......! இருகோட்பாடும் தோற்றுவிட்டது... முதலாளிதுவத்திடம் .....!!! இங்கு அலங்கார ஆடையுடன் .... கை கூப்பியவன் ,கை குலுக்கியவன் .... உலகினிலே நிமிர்த்து நிற்கிறான்  ..... எனக்கு கை கூப்பும் கொள்கை .... பிடிக்காது ..............!!! ^ அதிசயக்குழந்தை வசனக்கவிதை கவிப்புயல்