இடுகைகள்

நவம்பர் 19, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விரும்பி கொண்டே இருக்கிறேன்.....!!!

என்னவளே .... நீ இந்த உலகத்தில் ..... விரும்பாத ஒன்றை... நான் இன்னும் விரும்பி .... கொண்டே இருக்கிறேன்.....!!! ஆண்டுகள் கடந்தும் .... என்னில் உனக்கு காதல் .... வரவில்லை - நானோ .... உன்னை காதல் செய்கிறேன்....!!! 

மரணத்தின் தூரத்தை தூரமாக்கியது

இறைவா என் இதயத்துக்கு..... இரண்டு சிறகுகள் தா.... நீண்ட தூரம் சென்று -அவள்.... நினைவுகளோடு உல்லாசமாக .... அலைவதற்கு ..! மரணத்தின் தூரத்தை .... தூரமாக்கியது என்னவளின் .... அருவியாய் வந்த காதல் .... நரகமாக இருந்த வாழ்கையை .... சொர்க்கமாக்கியவள் .....!!!

அவளின்றி நான் இருக்கமாட்டேன்

கண்டேன்  என் தேவதையை கண்டேன் .... கண் குளிர கண்டேன் என்னவளே ....!!! அவளருகில் ..... ஆயிரம் பட்டாம் .... பூச்சிகள் பறப்பதுபோல் .... ஆயிரம் ஆயிரம் பெண்கள் ... அத்தனைக்கும் மத்தியில் .... தேவதையை கண்டேன் ....!!! அவளுக்கு  நான் யாரென்று தெரியாது.....  அவளின்றி நான் இருக்கமாட்டேன் .......  அவளுக்கு தெரியாது ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 21 கவிப்புயல் இனியவன்