திங்கள், 4 நவம்பர், 2013

சஞ்சலப்படுத்துதே

 உன் தலைகுனிவு என்னை சஞ்சலப்படுத்துதே

எனக்கு உன் வலிகள்

எனக்கு உன் வலிகள் வலிப்பதில்லை இதயம் புண்ணாகி போனதால்

நீயும்தான் காதல்

உன் கண்ணில் நானும் என்கண்ணில் நீயும்தான் காதல்

உன் அழகுதான்

உன் அழகுதான் எனக்கு மரண தண்டனை

நெருப்பாய் பார்க்கிறாய்

பூக்களால் கவிதை எழுதுகிறேன் நெருப்பாய் பார்க்கிறாய்

காதலின் பெறுபேறு

நான் விடுவது கண்ணீர் அல்ல காதலின் பெறுபேறு

என்னை திண்டேன்

உன்னை கண்டேன் என்னை திண்டேன்

என் ஆயுள் ரேகை

நீ சொல்லும் வார்த்தை என் ஆயுள் ரேகை

மரணத்தில் வா

நியத்திலும் கனவிலும் வராமல் மரணத்தில் வா

அவள் மௌனம்

அவள் மௌனம்தான் மௌன அஞ்சலியாக்கியது

பெரும் பாக்கியம்

காதலி கிடைத்தது பாக்கியம் இல்லை
நீ கிடைத்தது தான் பெரும் பாக்கியம்

இதயத்தில் பதிகிறது

நீ அருகில் சென்றாலே -உன் பாதசுவடு
என்னில் இதயத்தில் பதிகிறது

கைது செய்யுங்கள்

என் இதயத்துடிப்பு அதிகரித்தத்தற்கு
காரணமான அவளை கைது செய்யுங்கள்

இரு வரி கவிதைகள்

என்னை புரியும் படி உன்னை - அனுப்பிய
கடவுளுக்கு நன்றி

இரு வரி கவிதைகள்

சூரியனும் நீயும் ஒன்றுதான் இருந்தால் இன்பம்
மறைந்தால் மௌனம் ...!!!

நீ முழுமனிதனாவாய்....!!!

காதலித்துப்பார் நீ
காதலில் தோற்றுப்பார் நீ
இரண்டும் செய்தால் நீ
முழுமனிதனாவாய்....!!!

நீ
என்னை விரும்பவில்லை
உன்
நிழல் என்னை விரும்புகிறது
தொடக்கத்துக்கு இது போதும்

காதலில் கல்லெறியும்
சொல்லெறியும்
காதலரின் உரம்தான்
செடியாக நாம் இருந்தால் ....!!!

கஸல் ;561

காதல் அழுதால் தான் வரும்

நிலவோடு
உன்னை ஒப்பிட்டேன்
அமாவாசை ஆகிவிட்டாய்

நெருப்புக்குதான்
சுடும் பண்பு -நீ
நீர் என் சுட்டெரிக்கிறாய்
காதல் எல்லாவற்றையும்
மாற்றும் ....!!!

அழுது புரண்டாலும்
மாண்டார் திரும்பி   வரார்
காதல் அழுதால் தான் வரும்

கஸல் ;562

இரட்டை உடலோடும்

ஒற்றையடி பாதையால்
உன் நினைப்பில் சென்றேன்
ஒற்றை இதயத்தோடு அல்ல
இரட்டை உடலோடும்

உன்னை கண்டால்
ஏங்கிய மனம்
உன்னை கண்டு
ஒழிக்கிறது ....!!!

காதல் சிலந்தி வலையில்
அகப்பட்ட பூச்சிபோல்
பூச்சியும் பாவம்
சிலந்தியும் பாவம் ....!!!

கஸல் 563

கூட வரவில்லையே ....!!!

பகலில் சந்தித்தால்
மறைந்து விடுகிறாய்
இரவில் சந்தித்தால்
பயப்பிடுகிறாய்
காதலின் நேரம்
நீ சொல் ....!!!

உருட்டு கட்டையால்
உனக்காக அடிவாங்கினாலும்
நான் கட்டையில் போகும் வரை
நீ தான் கண்கண்ட காதலி

காதலில் பூ வரவேண்டும்
பிஞ்சு வரவேண்டும்
காய் வந்து கனிய வேண்டும்
நீ இன்னும் மரமாக கூட
வரவில்லையே ....!!!

எனக்காகவும் இல்லை

பார்த்தேன் காதலித்தாய்
பழகினேன் பேசினாய்
பார்க்கிறேன் -ஏன்
திரும்பி போகிறாய் ....!!!

நிலவில்
கால் வைக்கலாம்
உன் நினைவில் கால்
வைத்தால் சுடுகிறது ....!!!

உனக்காக இல்லை
எனக்காகவும் இல்லை
காதலுக்காக காதலிப்போம்
வா அன்பே .....!!!

கஸல் ;565