திங்கள், 12 அக்டோபர், 2015

காதலிக்கும் போது குழந்தையாக இருங்கள் !!!

காதலிக்கும் போது
குழந்தையாக இருங்கள் !!!
உன்னை கேவலப்படுதினாலும்
குடும்பத்தை  கேவலப்படுதினாலும் ...
நேரம் தாண்டி சந்திக்கும் போது....
கண்ணா பின்னா என்று ,,,,
பேசினாலும் ...
அசடு வழிய சிரிக்கவேண்டும் .....
காதலிக்கும் போது
குழந்தையாக இருங்கள் !!!

+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்

நீ தாண்டா சூப்பர் மேன்

'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''

வீதியில் எச்சில் துப்பாதவன் .. ...
பொது இடத்தில் புகைப்பிடிக்காதவன்..... 
சிறுவர் பூங்காவில் காதல் செய்யாதவன் ....
கழிவறையில் சிறுநீர் கழிப்பவன் ....
தலைக்கவசம் அணிந்து செல்லுபவன் ....
ஸ்கூல் மாணவிகளுக்கு குறும்பு செய்யாதவன் ...
பேரூந்தின் வாசலில் தொங்கிசெல்லாதவன்.... 
மூடநம்பிகையை நம்பாதவன் ...
பந்தா லொள்ளு செய்யாதவன் ...
குடியால் குடியை அழிக்காதவன்.. ..

'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''

+
கவிப்புயல் இனியவன் 
நகைசுவை கவிதைகள்
( சிரிக்க மட்டுமல்ல .....)

காலை தொட்டு வணங்குகிறாள்

வீட்டை ....
விட்டு வெளியேறும் போது... 
தாலியை .....
கண்ணில் ஒற்றி வணங்குவாள் ....
வீ ட்டுக்குள் ....
தனியான் அறைக்குள் ....
அறைகிறாள் ....!!!

தூங்கும் போது.... 
காலை தொட்டு வணங்குகிறாள்....
விழித்தால் வீண் சண்டை போடுகிறாள் ......
இத்தனை வருடங்களாகியும் ....
புரிய முடியவில்லை என்னவளை ....?

+
கவிப்புயல் இனியவன் 
நகைசுவை கவிதைகள்

எனக்கு பெயர் கைபேசி....!!!

என்னதான் நீ
வாய் கிழிய கிழிய கத்தினாலும் ....
காதில் மாற்றி மாற்றி பேசினாலும் ...
எனக்கு பெயர் கைபேசி....!!!

உழைப்பு ஒன்றாக இருக்க ....
உடமை ஒன்றாக இருக்கும் ....
உழைப்பு வாய் ,காது....
உடமை கைபேசி ....!!!

+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள் 

K இனியவன் நகைசுவை கவிதைகள்

வெற்றி 
வளர்ச்சி கொடுக்கும் 
வளர்ச்சி 
மாற்றம் கொடுக்கும் 
காதலில் 
வெற்றி பெற்றேன் 
கணவன் 
என்ற பதவி பெற்றேன் 
காதலி என் மனைவி 
*
*
அன்று 
பாப்பா என்று அழைத்தேன் 
இன்று 
பீப்பாவாகி விட்டாள்....!!!
அன்று ...
ஆணழகனாய் இருந்தேன் ...
இன்று ....
ஆணை அழகனாய் இருக்கிறேன் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
நகைசுவை கவிதைகள் 
ரசிப்பதுக்கு மட்டும்

இதய கதவை பூட்டி ....

உன்னை 
நினைக்கும்போது .....
கண்ணீராய் வந்தாலும் 
ஏற்றுகொள்வேன்.....
அப்படியென்றாலும் ...
என்னோடு வருகிறாய் ....!!!

என் கண்ணீர் இருக்கும் ....
உன்னை பற்றிய கவிதை ....
எழுதிக்கொண்டே இருப்பேன் ...!!!

நீ 
ரொம்ப புத்திசாலி ...
இதய கதவை பூட்டி ....
சாவியையும் வைத்திருகிறாய் ...
யாரும் நுழைய கூடாது ....
என்பதற்காக ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 871

நீ காயப்படுத்துகிறாயா

காதல் மழையில் ...
நனைய வந்தேன் -நீயோ ...
காதல் நெருப்பாய் ...
இருகிறாயே ....!!!

என்னை
நீ வேண்டுமென்றே ....
காயப்படுத்துகிறாயா ...?
காயப்படுதுவத்தில் ....
இன்பம் காணுகிறாயா ...?

தயவு செய்து
என் முகவரியை கொடு ....
நானும் வாழ ஆசைப்படுகிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 866

உனக்கேன் நான் முள் ...?

உன்னை நான் நேரில் ....
பார்த்த நாட்களை விட ....
கவிதையில் பார்ப்பதே ...
அதிகம் .....!!!

மற்றவர்களுக்கு ...
நான் அழகான ரோஜா ....
உனக்கேன் நான் முள் ...?

நீ 
சொல்லாவிட்டால் என்ன ...?
உன் செயல் சொல்கிறது ...
என்னை விட்டு விலகிறாய்...
எனக்கு வேண்டும் -உன்னை ...
காதலிக்கும்போது உன்னிடம் ...
அனுமதியில்லாமல் காதல் ...
செய்ததற்கு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 870

கண்ணீரின் வலி -நீ

மூச்சுக்கும் காதலுக்கும் ...
ஒரு வேறுபாடும் இல்லை ...
நின்றால் ஒருவன் மரணம் ...!!!

நீ 
வாசிக்கும் வீணையின் .....
நாதம் நான் - இழையை ....
அறுத்துவிட்டு வாசிக்க ...
சொல்கிறாய் ,,,,,,!!!

கவிதையின் வரி -நீ 
கண்ணீரின் வலி -நீ 
காதலில் கானல் -நீ 
உன்னின் காதலை ...
தேடுகிறேன் நான் ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 869

எப்போது உணர போகிறாய் ...?

இலை
உதிர்ந்த மரத்தில் ...
ஒரு அழகு உண்டு ...
என் காதல் உதிர்ந்த ...
பின்னும் வாழ்கிறேன் ...!!!

உன் கனவுக்குள் ...
நான் வந்துவிட கூடாது ....
என்பதற்காக தூங்காமல் ...
இருந்துவிடாதே -உன்
கண்ணுக்குள் இருக்கும் ...
நான் இறந்துவிடுவேன் ...!!!

நீ
மௌனமாய் இருக்கும் ....
ஒவ்வொரு நொடியில் ...
என் இதயத்தில் உயிர் ....
நிற்கும் நொடியென்று ....
எப்போது உணர போகிறாய் ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 868

காணாமல் போனது காதல்

காதலை
மறைத்து வாழ்வதும் ....
மறந்து வாழ்வதும் ...
இரட்டை துன்பம் ....
இரண்டையும் ....
தருகிறாய் ...?

காணாமல் போனது ...
ஆரம்பத்தில் இதயம் ....
இப்போ காதல் ....!!!

உன் நினைவுகள் தேன் ....
உன் பேச்சுகள் தேனி ....
தேன் எடுக்க தேனியிடம் ...
துன்பபடத்தானே வேண்டும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 867

சிறப்புடைய இடுகை

அழுதவலி வலி புரியவில்லை .....

பிறந்தவுடன் ..... அழுங்குழந்தையே.... உயிர் வாழும் .....!!! இப்போதுதான் .... புரிகிறது ..... உன்னை பிரியும்போது .... அழுவதற்கு ..... ...