இடுகைகள்

செப்டம்பர் 10, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விலகவில்லை உன் நினைவுகள்...!

நீ கலைந்தே போனாலும் கலையவில்லை.... உன் கனவுகள். . ! நீ பிரிந்தே போனாலும் விலகவில்லை உன் நினைவுகள்...! நீ மறந்தே போனாலும்..... மறக்க வைக்கவில்லை..... உன் நினைவு பரிசுகள்....! நீ சேர்ந்தே போனாலும்.... சேதமாகவில்லை.... என் காதல்.......! & கவிப்புயல் இனியவன்

நீ ஒன்றுமேசெய்ய வேண்டாம்

தமிழ் முதல் மொழி .... சீனத்திலும் உண்டு .... சீமையெல்லாம் உண்டு..... உன் விழிகள் பேசும் .... வார்த்தை மட்டும் ...... என்னிடம்  தான் உண்டு ...! போதும் போதும் ....... நீ விழியால் பேசியது..... வலிமேல் வலி தந்து...... விளையாடுவது போதும்....! நீ ஒன்றுமே ..... செய்ய வேண்டாம்... காதலிக்கிறேன் என்று..... மட்டும்சொல்.......... அந்த வார்த்தையை...... வைத்துக்கொண்டே.......... அகராதி எழுதிவிடுகிறேன்...! & கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்