இடுகைகள்

பிப்ரவரி 9, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கை ஹைக்கூ

விவாகரத்து உறுதி உறவும் உறுதி பிள்ளைகளை பார்க்கலாம் ^ சமுதாயஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

வீட்டோடு மாப்பிள்ளை

திருமணமாகாத தங்கைகள் அவசர திருமணம் அண்ணன் வீட்டோடு மாப்பிள்ளை ^ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

வாசல் பூட்டு

யாமிருக்க பயமேன் கந்தன் திருவாசகம் கோயில் வாசல் பூட்டு ^ கவிப்புயல் இனியவன் சென்ரியூ

மின்னல்

கரும் முகில் மேகம் புகை படம் எடுத்தது மின்னல் ^ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன் 02

திருமண வங்கி கடன் பிள்ளை கழுத்தில் தாலி தந்தை கழுத்தில் கயிறு ^ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

பெற்றோருக்கு பொறுப்பு மகளுக்கு வெறுப்பு முறைமாமன் திருமணம் ^ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

இனியவன் சென்ரியூ

நண்பர்கள் கடும் சண்டை காயம் ஏற்படவில்லை முகநூல் நட்பு ^ கவிப்புயல் இனியவன் சென்ரியூ

ஹைக்கூ கவிதை

அடைக்கப்பட்ட அறை செயற்கை சுவாசம் கவலையில் தொட்டி மீன் ^ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன் 

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 03

ஆதவனின் தந்தை சாமி ... தினக்கூலி அன்று உழைத்தால் ... அன்று உணவு என்ற வாழ்கை ... இதுதான் தொழில் என்று இல்லை .... எந்த வேலை கிடைக்குமோ .... அந்த தொழிலை செய்வார் ....!!! ஆதவனுக்கு அடுத்த ஒரு ... தங்கை அவளுக்கும் இவனுக்கும் .... இரண்டு வயது வேறுபாடுதான் .... தங்கைக்கு திடீரென பெரும் .... நோய் - கடவுளின் சோதனை ... ஆதவனும் நோய்வாய் பட்டான் ....!!! இருவரையும் ஒரே வைத்தியசாலை .. ஆதவன் தந்தை வைத்தியசாலை ... மேல்மாடியில் ஆதவனையும் .... கீழ் மாடியில் ஆதவனின் தாய் ... தங்கையையும் வைத்திருகிறார்கள் ...!!! உழைப்புகள் இரண்டும் முடங்கின ... வீட்டில் அடுப்படியில் பூனை ... நிம்மதியாய் தூங்கியது ....!!! ^^^ தொடரும் இவன் போராட்டம்  ^^^ வாருங்கள் இவனின் வாழ்கையை கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் வசனக்கவிதை ^^^ கவிப்புயல் இனியவன்

கனவாய் கலைந்து போன காதல் 04

புதிய சினேகிதி நாளை .... வரப்போகிறாள் .... எப்படி இருப்பாளோ ...? எந்தளவு படித்தாளோ...? வெளியூர் என்பதால் .... அழகாகவும் இருப்பாள்.... சுமாரான என்னோடு ... பேசுவாளா .....? இத்தனை மனவோட்டத்துடன் .... பூவழகனின் இரவு .... விடியாமல் இருண்டு ... துடித்துகொண்டிருந்தது ...!!! பொழுது விடிந்தது .... தன்னுடன் இருக்கும் ஆடையை ... இயன்றவரை அழகு படுத்தி .... பழைய துவிசக்கர வண்டியில் .... பாடசாலை நோக்கி சென்றான்  ... பூவழகன்........!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல் இனியவன்

நினைவு மட்டுமே

திரும்பி பார்க்கிறேன் அலைந்து பார்க்கிறேன் எங்கும் நீ நிற்பதுபோல்.... உணர்கிறேன் ....!!! உன் விழிகள் இன்னும்.... என் விழிகளுக்குள்... ஊடுருவிக்கொண்டே .... இருக்கிறது .....!!! நிஜம் என்று பார்கிறேன் அது வெறும் நினைவு மட்டுமே....!!! ^ காதல் கவிதை கவிப்புயல் இனியவன் 

காதலால் செய்யுங்கள் ...!!!

அன்பு - காதலின் - பிறப்பு ஆசை -  காதலின் - வெளிப்பாடு இன்பம் - காதலின் - பெறுபேறு ஈர்ப்பு - காதலின் - மூலதனம் உயிர்- காதலின் - இறுதி ஊடல் - காதலின் - நாடகம் எண்ணம் - காதலின் - கனவு ஏளனம் - காதலின் - எதிரி ஒற்றுமை - காதலின் - நேர்மை ஓர்மம் - காதலின் - உறுதி காதலின் - திருமணம் - ஒளடதம் ஃ காதலை காதலால் செய்யுங்கள் ...!!!