இடுகைகள்

நவம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நண்பனே விழித்தெழு ...!

படம்
  நண்பனே விழித்தெழு ...!  by கவிப்புயல் இனியவன் on Fri Apr 12, 2013 8:18 pm நண்பனே விழித்தெழு ...!  நண்பனே விழித்தெழு ... இதற்கு மேலும் பதுங்க்காதே ... போராட்டத்தை -நீ சந்தித்தால் தான் உன் வெற்றி உறுதி... போர்வைக்குள் வாழ்ந்துகொண்டிருந்தால் போடா நீயொரு மனிதனா என்று உலகம் உன்னை உதறித்தள்ளும் .... சிந்திக்காமல் சிதறிக்கொண்டு உன் திறமையை சிதறடிக்கிறாய் நண்பா .. அழுகிறது உன் திறமையை பார்த்து திறனற்றுப்போன உன் திறமைகள்.... நீ அதைக்கண்டு கொள்ளவில்லை . உன்னிடம்இருக்கும் திறமையை அறிந்தவன்-நான் உயிர் நண்பன் சொல்லுகிறேன் வாழ்க்கையை எதிர்த்து போராடு வாழும் வரை தலைநிமிர்ந்து வாழ்ந்திடு ....!

உன்னை அப்படி அழைப்பது

மனிதா ..? நீ ஒரு வீடு கட்டுவதற்காக ...... எங்களின்பல நூறு ....... இருப்பிடங்களை அழிக்கிறாய் நாங்கள் .... பறந்த்திடுவோம் என்ற .... நம்பிக்கைதான்... சண்டையிடுவதற்கு ..... சக்தியில்லாதவர்கள் .....!!! இனத்தை ..... அழிப்பவனை இனவாதி என்றால் ...... நீ பிற இனத்தையல்லவா ... அழிக்கிறாய் ... உன்னை அப்படி அழைப்பது .. தெரியவில்லை ...? & இயற்கை வள கவிதை கவிப்புயல் இனியவன்

இயற்கை வள கவிதை

மனிதன் காட்டுக்குள் ..... நுழையும் போது...! குரங்குகள் தாவும் ...! நரிகள் ஊளையிடும் ...! குருவிகள் ஓலமிடும் ..! இத்தனையும் அவை சந்தோசத்தால் .. பயத்தால் செய்யவில்லை.... மரங்களுக்கு அவை .... கொடுக்கும் -சமிஞ்சை... மனிதர்கள் வருகிறார்கள்... மரங்களே விழிப்பாக ..... இருங்கள்  எச்சரிக்கின்றன ....!!! & இயற்கை வள கவிதை கவிப்புயல் இனியவன் 

ஒன்றை நினைவில் வைத்துக்கொள் ...

உனக்கு ...... நல்ல வாழ்க்கை கிடைக்கும் என நீ  கருதினால் .... உன் நிழலைக்கூட நான் நினைக்க மாட்டேன் ..... ஒன்றை நினைவில் வைத்துக்கொள் ... நீ திரும்பி ...... வரவேண்டிய நிலைவந்தால் .... * * * * * * * * * * கவலைப்படாமல் வந்துவிடு ....! உன் உடலையோ உறவையோ நான் விரும்பவில்லை .. நான் வாழ்ந்த காதல் ... வாழ்க்கை எனக்கு தேவை ..! & கவிப்புயல் இனியவன் 

குழிக்குள் நின்று நீ சிரிக்கிறாய் ...!!!

மறப்பதற்காக ..... முயற்சிக்கிறேன் .... நீயோ கவிதையாக வந்து விடுகிறாய் ....!!! மதுவை அருந்தி ..... மறக்க நினைக்கிறேன்... நீயோ போதையாக ...... வந்து விடுகிறாய் ... விஷத்தை எடுத்து .... குடிக்க முயற்சித்தேன் ... உயிராக வந்து தடுக்கிறாய் ... எனக்கு நானே ..... கல்லறைக்குழி வெட்டினேன் .. குழிக்குள் நின்று நீ சிரிக்கிறாய் ...!!! & கவிப்புயல் இனியவன் 

திரும்பி பார்க்கிறேன் ..

எமனின் ..... பாசக்கயிற்றில் தப்பினார் ... மார்க்கண்டேயர் ....!!! எந்தப்பெண்ணின் காதல் கயிற்றில்... தப்பமுடியாது மார்-கண்டேயர்கள் ...!!! யாரவது ஒருவர் காதலில் விழாதவர் .. யாரும் இருந்தால் தயவுசெய்து .. தொடர்புகொள்ளுங்கள் ... அதிசயமனிதனை பார்க்கவிரும்புகிறேன்...? நானிருக்கிறேன் என்றது ஒரு அசதி ...? திரும்பி பார்க்கிறேன் ......!!!!!!!!! * * * * * இறந்த உடலொன்று ....! & நகைசுவை கவிதை (கானா கவிதை ) கவிப்புயல் இனியவன்

கானா கவிதை

சிரித்துக்கொண்டு ...... விளையாடினேன் .. சிறுவயதில் உள்ளே வெளியே ... இப்போ ஏக்கத்தோடு ....... பார்க்கிறேன் ... என் இதயத்துக்குள் .... உள்ளே - வரப்போகிறாயா ...? வெளியே- செல்லப்போகிறாயா ...? & நகைசுவை கவிதை (கானா கவிதை ) கவிப்புயல் இனியவன்

நகைசுவை கவிதை

இடது இதய அறையில் இருந்த ... காதலியை காணவில்லை ... வலது இதய அறையில் தனியாக இருந்து .. அழுதுகொண்டிருக்கிறேன் ....!!! காதலியை கண்டுபிடித்து தாருங்கள் .. என்று கேட்கமாட்டேன் ... அப்படிப்பட்ட காதல் தேவையில்லை ... அவள்வரும் வரை அறை காலியாகவே ... இருக்கும் என்று சொல்லி விடுங்கள் .... தயவு செய்து காலியாகத்தானே ... இருக்கிறது என்று யாரும் வாடகைக்கு ... வரவேண்டாம் ...! அது அவளின் அறை மட்டுமே ....! & நகைசுவை கவிதை (கானா கவிதை ) கவிப்புயல் இனியவன் 

என்னை நீ பிரிந்ததால்...

வானத்தில்..... அமாவாசையன்று .. நட்சத்திரங்கள் அகதிகள் வனத்தில் ..... காடுகள் அழிந்தால் மிருகங்கள் அகதிகள் பூக்கள் ...... வாடி விட்டால்... தேனிக்கள் அகதிகள் என் ..... காதல் தேசத்தில்.... என்னை நீ பிரிந்ததால்... நானும் ஓர் அகதி தான்...!!! & கவிப்புயல் இனியவன் 

சமூக சிந்தனை கவிதைகள்

இன்று ...... குடும்பங்களின் நிலைமை.... குடும்பத்துடன் போசுவதே ........ கிடையாது ......!!! இருந்தால் ....... போல் தனியே இருந்து .... சிரிக்கிறார்கள் ... மௌனமாக ஓரக்கண்ணீர் ..... வடிக்கிறார்கள் .........!!! உரத்த குரலில் திடீரென கத்துகிறார்கள் .... உறவினரை கண்டால் .... வாய்க்குள் ஒரு சிரிப்பு ...........!!! இத்தனைக்கும் ஆட்டிப்படைக்கிறது .... தொலைக்காட்சி .....!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன்

எங்கள் வருங்கால சந்ததி ...!!!

முட்டை .... கூடை சுமப்பவனே ..! கவனம் நீ சுமப்பது .... வெறும் முட்டை அல்ல.... எங்கள் வருங்கால சந்ததி ...!!! & சின்ன கவிதை கவிப்புயல் இனியவன் 

மனைவியின்விருப்பத்தை கண்டறிவோர்

ஒரு கல்லை எடுத்தேன் ..! நண்பன் சொன்னான் .... மரத்துக்குஎறியப்போகிறான் .. என்றான் .....!!! நண்பி  சொன்னால் .... அருகில்குட்டைக்குள் ... எறியப்போகிறான் ......!!! கையில் இருந்த கல் ... கெஞ்சியது என்னை .... ஒருமுறை வானத்தை நோக்கி .... எறிந்து விடு ......... எனக்கும் உயரபோக ..... விருப்பம் இருகிறது ..............!!! நாம் .... பிறர் விருப்பத்தையும் ..... நம் விருப்பத்தையும் ...... நிறைவேற்றுகிறோம் ...... நம்மோடு இருப்பவர்களின் ..... விருப்பத்தை நிறைவேற்ற.... தவறுகிறோம் ...............!!! கணவனின் விருப்தத்தை ..... உறவினர் விருப்பத்தை ..... நிறைவேற்றும் மனைவியின் ..... விருப்பத்தை கண்டறிவோர் சிலரே .......!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கவிஞன் ஆனவன்.....!!!

இவன் .... காதல் தோல்வியால் ... கவிஞனாக வில்லை ... எல்லாவற்றிலும் ... காதல்  கொண்டதால் ... கவிஞன் ஆனவன்.....!!! & கவிப்புயல் இனியவன் இதுதான் உண்மை 

நான் பறித்த கடைசி பூ

நான் பறித்த கடைசி பூ கவிப்புயல் இனியவன் 2013 ----------- சாமிக்கு பூ பறித்து .. வைப்பதை பழக்கமாக கொண்டவன் .. சட்டென்று ஒருநாள்-பூவை பறித்த என்மனதில் ஒரு -சஞ்சலம் மரத்தை பார்த்தேன் -அதன் அழுகையை மலரை பார்த்தேன் -அதன் ஏக்கத்தை தாயையும் பிள்ளையையும் பிரித்த சோகம் இதுதான் நான் பறித்த கடைசி பூ

அழுவதற்காக பிறந்தவன்

உன் ..... மடியில் உறங்க .... அனுமதி கொடு .... இதயத்தின் சுமையை .... உன்னோடு பகிர்ந்து .... கொள்கிறேன் ...... எனக்காக நீ ..... அழுதுவிடாதே....... அழுவதற்காக...... பிறந்தவன் நானாகவே .... இருந்து விடுகிறேன் .......!!! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

எங்கு கற்றுக்கொண்டாய் ......

நீ என் இதயத்துக்குள் .... புகுந்தபோதும் .... விலகிய போதும் ... மெதுவாக வந்து ....... மெதுவாக விலகிவிட்டாயே .... எந்த வித வலியுமில்லாமல்.... எங்கு கற்றுக்கொண்டாய் ...... இந்த கலையை ..? & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை 

காதல் பைத்தியம்

காதல் பைத்தியம் ------- காதலரின் பெயரை சுவரில் மற்றும் கையில் எழுதுபவர்கள் ..! காதல் முட்டாள்கள் ------- காதலருடன் சண்டையிட்டபின் காயங்களை ஏற்படுத்துபவர்கள் தனக்கு தானே கையை வெட்டுதல் .மற்றும் சூடு வைத்தல்..! காதல் கோழைகள் -------- காதலில் தோற்றதும் தற்கொலை செய்பவர்கள் ...! காதல் வெறியன் -------- காதலின் பெயரில் ஏமாற்றி கற்பை சூரையாடுபவன் ...! காதல் கொலைகாரன் -------- காதல் நிறைவேற்றவில்லை என்றவுடன் பழிவாங்க துடிப்பவன் ...! காதல் பயங்கரவாதி --------- காதலியின் முகத்தில் அசிட் வீசுபவனும் கொலைசெய்பவனும்...! & கவிப்புயல் இனியவன் 

தனிமை கொடுமையல்ல இனிமை ...!!!

தனிமை கொடுமையல்ல இனிமை ...!!! கவிப்புயல் இனியவன் 2013 --------- தனிமை... எல்லோருக்கும் கிடைக்காத தவம்...! அதுவே ஒரு சிலருக்கு வரம்..! கவிதைகளின் .... கதைகளின் பிறப்பிடம்...! கனவுகளின் உறைவிடம்..! கடந்தகாலத்தை மீள்படிக்க உதவும் நாற்குறிப்பேடு..! என்னை நானே உற்றுப்பார்த்திட வழி செய்யும் கண்ணாடி...! மெளனத்தின் வழி பலநூறு கதை சொல்லும் கருவூலம்..! காதடைக்கும் இரைச்சல்விடுத்து இதம் சேர்க்கும் தியானபீடம்...! இது………. எல்லாம் இருந்தும்…. இளைப்பாற சில பொழுதுகள் தனிமை சேர்பவன் மனநிலை....!! தனிமை கொடுமையல்ல இனிமை ...!!! & கவிப்புயல் இனியவன்

கடலுக்குள் செல்ல ஆசை.....!!!

கடலில் சுதந்திரமாக .. தூண்டிலிலும் வலையிலும் ... சிக்காத கடல் மீனுக்கு -வீட்டில் உள்ள கண்ணாடி பளிங்கு தொட்டிக்குள் குமிழியுடன் வரும் கற்றை சுவாசிக்க ஆசை ........!!! கண்ணாடி தொட்டிக்குள் இருக்கும் மீனுக்கோ சொகுசு சிறையில் இருந்து வெளியேறி சுதந்திரமாக திரியும் கடலுக்குள் செல்ல ஆசை.....!!! & முரண் பட்ட ஆசைகள் கவிப்புயல் இனியவன் 

தனிமை கொடுமையிலும் கொடுமை ...

தனிமை... அது ஒரு பெரும் வலி...! ஒரு கிடைக்கக்கூடாத சாபம்..! தவறுகளின் பிறப்பிடம்...! தண்டனையின் உறைவிடம்..! பிரிவுத்துயர் சொல்லித்தரும் கலாசாலை..! கவலைகளுக்கு தூபமிடும் பலிபீடம்..! வெறுமையின் வாசிகசாலை..! பசிப்பவனின் வெற்றுக்கோப்பை..! வாய் இருந்தும் நாவறுந்ததாய்.. கேள்செவியிருந்தும் செவிடானதாய்... எண்ணத்தோன்றும்  கொடிய நிலை ....!!! உறவுகள் பிரிந்து.... தனிமையின் பிடியில்....... கோரமாய் சிக்கிக்கொண்டவன் ...... மனநிலை…!! தனிமை கொடுமையிலும் கொடுமை ... & கவிப்புயல் இனியவன் சமுதாய கவிதை 

பிணக்கு இல்லாமல் பிரிவதே ...!

நானோ ..... பூவின் மென்மையில் .. இருக்கிறேன் ....! நீயோ ...... வண்டின் குணத்தில் ....... இருக்கிறாய் ...! காதல் என்றால் ...... ஒன்று பட்டு வாழவேண்டும் ..! இல்லையேல் ....? நல்ல காதலுக்கு அழகு ...! பிணக்கு இல்லாமல் பிரிவதே ...! & கவிப்புயல் இனியவன் சின்ன சின்ன கிறுக்கள்

எத்தனை ஜென்மாவும் பிறப்பெடுப்பேன் ..........!!!

உன்னை காதலிக்கும் ..... பாக்கியத்தை நான் இந்த .... ஜென்மத்தில் பெறவில்லையடா .... எனக்காக அடுத்த ஜென்மம் .... பிறந்துவிடு உன்னை .... காதல் செய்தே ஆகவேண்டும் .....!!! உன் கவிதைக்காக .... எத்தனை ஜென்மாவும் பிறப்பெடுப்பேன் ..........!!! & கவிப்புயல் இனியவன் சின்ன சின்ன கிறுக்கள்

இறந்து விடு என்று சொல்...!!

இறந்து விடு என்று சொல்...!! மறுபடியும் பிறந்து வருவேன்.. மறந்து விடு என்று...!!! சொல்லாதே ஒரு நொடி கூட இருந்துவிடமாட்டேன் ...!!! & கவிப்புயல் இனியவன் சின்ன சின்ன கிறுக்கள்

நட்பும் காதலும் கவிதை

இறைவா எனக்கு ஒரு வரம் தா ..? காதல் உணர்வை என்னில் இருந்து தயவு செய்து எடுத்துவிடு ....! அவனை உயிர் நண்பனாகவோ உயிர் காலம் வரை நினைக்க .......... விரும்புகிறேன் இடைக்கிடையே பாழாய்ப்போன மனம் காதலையும் எட்டிப்பார்க்கிறது ....! நட்பு ஒன்றில் விட்டுக்கொடுப்பு அதிகம்...... அவன் விட்டுக்கொடுத்துவிட்டான் -காதலை இறைவா ....... என் காதல் நரம்பை துண்டித்து விடு ...! & கவிப்புயல் இனியவன் நட்பும் காதலும் கவிதை

அவள் கண்ணீரில் ......!!!

ஆழம் .... அதிகமில்லைதான் .... என்றாலும் .... விழுந்துவிட்டேன் ..... அவள் கன்னக்குழியில் ...!!! தண்ணீர் ..... அதிகம் இல்லைத்தான்.... என்றாலும்... நனைந்துவிட்டேன்...... அவள் கண்ணீரில் ......!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதைகள்

தனியே இருந்து சிரிக்கிறேன் ...

இனியவன் .......!!! ---------------- அது எப்படி நீ மட்டும் .. சாதாரணமாக வந்துபோகிறாய் ....? நானோ உன்னை கண்டவுடன் ... காற்றில் பறக்கிறேன் ... கனவில் மிதக்கிறேன் ... தனியே இருந்து சிரிக்கிறேன் ... இனியவளே .......!!! ----------------- போடா அம்மு ....... நீ வேதனை மட்டும் ...... படுகிறாய் ...நானோ .. உன்னை கண்டவுடனேயே செத்து செத்து பிழைப்பதை யாரறிவார் ...? & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதைகள்

வருத்தினாலேவெற்றி...!

 வருத்தினாலேவெற்றி...! ---------------- மாணவன் தன்னை வருத்தினாலே சிறந்த பெறுபேறு விளையாட்டு வீரன் தன்னை வருத்தினாலே- வெற்றிக்கிண்ணம் முயற்சியாளன் தன்னை வருத்தினாலே- கோடீஸ்வரன் இறைவனை காண வேண்டுமாயின் ஞானி தன்னை வருத்த வேண்டும் உலகில் வெற்றிகண்ட மனிதர்களில் யாராவது ஒருவர் தன்னை வருத்தாமல் வெற்றி பெற்று இருந்தால் கூறுங்கள் பார்க்கலாம் ..? & வாழ்க்கை கவிதை கவிப்புயல் இனியவன் 

ஏன் ஒப்படைக்கவில்லை ....?

உன்னை உன்னிடத்தில் ... ஒப்படைத்து விட்டாய் ..... என்னை என்னிடத்தில் ..... ஏன் ஒப்படைக்கவில்லை ....? உன்னை உன்னிடத்தில் .... ஒப்படைக்க வந்த துணிவு .. என்னை என்னிடத்தில் ...... ஒப்படைக்க வரவில்லை ..? உன்னை என்னிடத்திலும் .... என்னை உன்னிடத்திலும் .... ஒப்படைத்தமைக்கு ........ காதல் என்றே அர்த்தம் ....! என்னை என்னிடத்தில் ...... ஒப்படைக்காமல் ... உன்னை உன்னிடத்தில் ஒப்படைத்ததை எப்படி ..? சொல்லுவது ...? நிச்சயமாக இது பிரிவு இல்லை..! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதைகள்

புன்னகைத்துக்கொண்டு

நீ கை அசைத்து .... தூர செல்ல செல்ல.... என் தூரப்பார்வை ....... குறைந்து வருகிறது ....! நீ ............... புன்னகைத்துக்கொண்டு .................. அருகில் வர வர ............... கிட்டியபார்வை குறைந்து வருகிறது ....! நீ ஒரு நாள் ............... வராத போது ................ என் கண்ணுக்கு ............ அமாவாசைதான் ...! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே 

பொருளாதார கவிதை

உண்டி சுருங்குதல் ... பெண்டிற்கழகு - என்றார் என் மூதாதைப்பாட்டி ...!!! உண்டி சுருங்குதல் .. உலகுக்கே அழகு ... என்கிறேன் நான் ...... உணவுப்பொருளின் ...... விலையேற்றத்துக்கு ... உண்டி சுருக்காமையே உற்பத்தி குறைவல்ல ...!!! & பொருளாதார கவிதை கவிப்புயல் இனியவன் 

கையில் கிடைத்தால் ....

தேடிக்கொண்டு இருக்கிறேன் .. என் இதயத்தை திருடியவளை ... கையில் கிடைத்தால்  .... கலியாணம் தான் ...! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

யாருக்கு தெரியும்....?

நான் ..... இதயத்தோடு இருப்பதாக... எல்லோருக்கும் .... நினைக்கிறார்கள்.....!!! ஆனால்.... என் இதயம் உன்னிடம் ... இருப்பது..... யாருக்கு தெரியும்....? & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கவி நாட்டியரசர் , கவிப்புயல்

நானும் அழகாய் இருக்கிறேன் என்னை சுற்றியும் அழகான பெண்கள் கண் மூடி இருக்கிறேன் & சிந்திக்க வைப்பதே ஹைக்கூ கவி நாட்டியரசர் , கவிப்புயல் கே இனியவன் @@@ நடிகைக்கு கவர்ச்சி துளி நாற்று நடுப்பவனுக்கு உழைப்பு துளி வியர்வை & சிந்திக்க வைப்பதே ஹைக்கூ கவி நாட்டியரசர் , கவிப்புயல் கே இனியவன்

சிந்திக்க வைப்பதே ஹைக்கூ

சடப்பொருளும் என் வீட்டில் கவிதை எழுதுகிறது பேனா & சிந்திக்க வைப்பதே ஹைக்கூ கவி நாட்டியரசர் , கவிப்புயல் கே இனியவன் @@@ ஒரு மரத்தை கூட காணவில்லை வறண்ட ஊரின் பெயர் பூந்தோட்டம் & சிந்திக்க வைப்பதே ஹைக்கூ கவி நாட்டியரசர் , கவிப்புயல் கே இனியவன்

உன்னை விட்டு பிரிவேன்....?

ஏன் ஏங்குகிறாய் ..... உன் அருகில் தானே .... எப்போதும் இருக்கிறேன் .... திரும்பிப்பார்  இருக்கிறேன் .... முன்னே பார் இருக்கிறேன் .... அருகில் பார் இருக்கிறேன் ..... தொலைவில் பார் இருக்கிறேன் .... நீ பார்க்கும் இடமெல்லாம் .... நான் இருக்கிறேன் ..... நீ என்னில் பாதியான சக்தி ... சிவன் நான் எப்படி .... உன்னை விட்டு பிரிவேன்....? & தேனிலும் இனியது காதல் +++++++++++++++++++++++++++ கவி நாட்டியரசர் , கவிப்புயல் ++++++++உங்கள்++++++++++++ ^^^^^^கே இனியவன்^^^^^^^^^

உயிரேகாலை வணக்கம்

நீ ... என் இதயம் ... உன்னை விட்டு ... எப்படி பிரிவேன் இறப்புக்கு முன் ....? காலை வணக்கம் ... என் உயிரே ..... சூரியன் போல் .... பிரகாசமாய் இரு .... உன்னில் ஒளி .... பெரும் சந்திரன் நான் .....!!! & ........காலை வணக்கம்......... கவிப்புயல் இனியவன் கவி நாட்டியரசர் இனியவன்

முள்ளில் மலர்ந்த பூக்கள்

ஈரமான நாக்கில்  எரிகிறது ... காதல் வார்த்தை .....!!! காதல் ஒரு  பயிரிடல் பருவம் ... அறுவடை ... திருமணம் ....!!! உன் மனதில் ... வில்லனாக நான் ... தூக்கி எறிந்து விடாதே ... வலியை நீயும் .... சுமக்க வேண்டும் ...!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள்  கஸல் கவிதை  கவிப்புயல் இனியவன்  1023

வலியும் சுகம்தான்.......!!!

எரிவேன் ... தெரிந்துகொண்டு... விட்டில் பூச்சி ...... விளக்கில் விழுந்து ... எரிகிறது ...... எரிவதில்....... அது சுகம் காணுகிறது.........!!! நானும் உன்னில் ..... வலியை எதிர்பார்த்தே ... காதலித்தேன்.... உன்னால் வரும் ..... வலியும் சுகம்தான்.......!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

கடுகு கவிதை கவிப்புயல் இனியவன்

என் கையில் கிடைக்காத நிலவு நீ....! ஆனாலும் தினம் சலிக்காமல் உனை இரசிக்கும் ரசிகன் நான்....!!! & கடுகு கவிதை கவிப்புயல் இனியவன் @@@ என் கவிதைகளை, ஏனடி சேமிக்கிறாய்...? நீ தான் கவிதைகளின், சொந்தகாரனையே திருடி விட்டாயே. & கடுகு கவிதை கவிப்புயல் இனியவன் @@@ எழுத எதுவுமே .... தோன்றவில்லையென்றால்.... உடனே கண்களைமூடி....... உன்னை நினைத்துவிடுகிறேன்....! ஏனென்றால்... நான் எழுதிக்கொண்டிருப்பதே உனக்காகத்தானே....!!! & கடுகு கவிதை கவிப்புயல் இனியவன்

நீ புனிதமானவள் ........!!!

என் தப்பு தான் -என் கவிதைகள் உனக்கு .... புரியும் என்று நான் .... புரிந்தது தவறுதான் .....!!! நீ என்னை பற்றி .... ஏதும் சொல்லு கவலை .... இல்லை கவிதையை ..... காயப்படுத்தாதே .......!!! நான் மின் ஒளி .... நீ எண்ணெய் விளக்கு .... என்றாலும் ...... நீ புனிதமானவள் ........!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1055 கவிப்புயல் இனியவன்

நீ மின்னலுக்கு பிறந்தவள்

காதலில் தோற்றவர்கள் ..... காதலை விமர்சிக்க .... கூடாது ....................!!! நீ மின்னலுக்கு ...... பிறந்தவள் .... இதயத்தை கருக்கி ..... விட்டாய் ...............!!! நீ நாணத்தால் தலை ..... குனிகிறாய் என்று ..... நினைத்தேன் ........ காதல் நாணயம் ..... இல்லாமல் குனிந்து ... இருக்கிறாய் ........!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1054 கவிப்புயல் இனியவன்

எங்கே நிம்மதி ....?

காதலுக்கு முன் ..... நிம்மதி ..... காதலுக்கு பின் .... எங்கே நிம்மதி ....? இன்று  உன் காதல் முடிவு .... பூவா தலையா ....? பதட்டம் ............!!! என் கவிதையில் .... நீ பயன் பெறவில்லை ..... காதலர்கள் ..... பயன் படுகிறார்கள் .....!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1053 கவிப்புயல் இனியவன்

நீ இதழ்களாய் உதிர்கிறாய் ....!!!

சொற்களால் .... கவிமாலை தொகுக்கிறேன் ..... நீ இதழ்களாய் உதிர்கிறாய் ....!!! உன் புன்னகை அவ்வளவு .... கொடுமையா ......? இதயத்தில் ஒளியே .... இல்லாமல் போகிட்டுதே ....!!! நீ என்னை நோக்கி வருகிறாய் ..... என் இதய கதவு தானாக முடுக்கிறது .....!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1052 கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதைகள்

மரமாக இருந்தபோது .... நிம்மதியாக இருந்தேன் ..... பலகை ஆகினேன்..... படாத பாடு படுகிறேன் .....!!! அடை மழைக்கு..... கிழிந்த குடைக்கும்.... மதிப்பிருக்கும்........!!! சேர்ந்த செல்வம் .... கரைகிறது ...... தண்ணீரை ..... வீணாக்கியதால்.......!!! & சமுதாய கஸல் கவிதைகள் கவிப்புயல் இனியவன் 2016 . 11 . 12

கவிப்புயலின் சமுதாய கஸல்

ஓலை வீடு .... வறியவனுக்கு வசிப்பிடம் .... செல்வந்தனுக்கு வாடி வீடு .....!!! வியர்வை .... உழைப்பாளிக்கு நாற்றம் ..... முதலாளிக்கு துற நாற்றம் .....!!! உழைப்பு முழுதும் .... செலவு  செய்தால் ..... ஊதாரி என்கிறார்கள் .... செலவு செய்தது .... உணவுக்கு மட்டும் .....!!! & சமுதாய கஸல் கவிதைகள் கவிப்புயல் இனியவன் 2016 . 11 . 12 

சோகங்களை மறைக்கலாம்....

என்னுயிரே  உனக்கேன் இவ்வளவு சோகம் ...? நான் இருக்கையில் உனக்கேன் .... சோக கவிதை என்று ..... எப்போதாவது கேட்டிருக்கிறாயா....? என் உள்ளத்தில் ..... காதல் சோலைகளைவிட ... சோகங்களே அதிகம் ... சோகங்களை மறைக்கலாம்....  மறக்கமுடியாது ...!!! சோகங்களை......  மறைக்கத்தான் சோகக்கவிதைகள்... எழுதுகிறேன் கண்ணே..... சோலையில் நின்றவனைவிட .. சோகத்தில் நின்றவன் தான் .. சாதித்துள்ளான் ....!!! நான் சோகத்தில் நிற்கிறேன் ....!!!

கற்பனையில் வாழ்ந்துவிட்டேன் ......!!!

இப்போதுதான் .... புரிகிறது -நீ என் இதயத்தை .... கண்ணாடியாய் ..... பார்த்திருக்கிறாய் ......!!! அதுதான் அப்பப்போ .... வந்து உன்னை அழகுபடுத்த ..... என்னை பயன்படுத்தி ..... இருக்கிறாய் .........!!! நான் என்னுள் நீ காதல் செய்கிறாய் ..... என்று கற்பனையில் ..... வாழ்ந்துவிட்டேன் ......!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

இதயத்தையே நனைக்கிறது ..!!!

உன் தொலைபேசி ... அழைப்பு என்னை ..... சந்தேகிக்கவைக்கிறது ....??? என்னை ..... மறந்து விடு என்று .. சொல்லியபின்  மௌனமானாய் ... அப்படிஎன்றால் நீ அழுகிறாய் ....!!! உலகில் எந்த காதலர்கள் .. அழாமல் காதலை மறுத்தார்கள் ...??? உன் தொலைபேசியில் .... இருந்து வரும் கண்ணீர் ... இதயத்தையே நனைக்கிறது ..!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் 

உன் முகம் பார்க்கவே ......!!!

தாயே ... கருவறையில் இருந்து .... உதைத்தேன் உன் முகம் ..... பார்க்கவே ........!!! அடிக்கடி பசியால் .... அழுதேன் பால் குடிக்கும் .... போதும் உன் முகம் ..... பார்க்கவே ........!!! தூக்கத்தில் எழுந்தும் ..... அழுதேன் ..... உன் முகம் பார்க்கவே ......!!! நீங்கள் .... என்னை யாருடனும்... விட்டு விட்டு சென்றால்.... அழுதேன் ..... பயத்தினால் அல்ல,, பாசத்தை பிரிந்திடுவனோ...... என்ற பயத்தினால்....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - அம்மா கவிதை கவிப்புயல் இனியவன்

கல்லூரியின் கடைசிநாள் ....

கல்லூரியின் கடைசிநாள் .... உன் பயணப்பொதியை.... தம்பி ஓடிவந்து தூக்கிறான்.....!!! உன் அருகே இருந்துவர .. உன் அம்மா இருக்கையை .... சரிசெய்கிறார் .....!!! இறங்கும் இடத்தில் ... வரவேற்க உன் உறவினர் ...!!! உன்னை அனுப்பிவிட்டு .... நான் மட்டும் அனாதையாக ... தனியே திரும்புகிறேன் ......!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

ஏன் படைத்தான் ......?

உனக்கும் இறைவனுக்கும் ..... என்ன தகராறு .......? பூவைப்போல் உடலையும் ..... பஞ்சைப்போல் பாதத்தையும் ..... படைத்தவன் ..... சுட்டெரிக்கும்  சூரியனையும் .... வலியை தரும் முள்ளையும்..... ஏன் படைத்தான் ......? & இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன் 

முடியவில்லை ......!!!

முடியவில்லை ...... பிரிவை தாங்க முடியவில்லை ......!!! தெரியவில்லை .... வேறுமுகம் எனக்கு.... தெரியவில்லை.....!!! பிரியவில்லை .... மனத்தால் நாம்... பிரியவில்லை...!!! புரியவில்லை நீ .... ஏன் வெறுத்தாய் என்று .. புரியவில்லை ...!!! நம்புகிறேன் ..... மீண்டும் வருவாய் என்று .. நம்புகிறேன் ...!!! & கவிப்புயல் இனியவன் 

என்ன செய்ய சொல்லுகிறீர்கள் - பொருளாதார கவிதை

தொடர்ச்சியான வரட்சி .... மறு புறம் விவசாய கடன்.... நதிநீர் பிரச்சனை .... நியாய விலை இன்மை ... விவசாயி எங்களை என்ன செய்ய சொல்லுகிறீர்கள் ...? நாங்கள் பொறுத்தது போதும் .. போராடப் போகிறேம்  ...... நாளை முதல் என் மனைவியும் ..... பிள்ளைகளும்...... வீதிக்கு வருவார்கள் .....!!! எங்களுக்கு துப்பாக்கி தாருங்கள்... அரசுக்கு எதிராக போராட என்று ..... கேட்கமாடோம் ........!!! ஒரு நெல் மூடை தாருங்கள் ...... இல்லையே ஆக குறைந்தது....... ஒரு பானை சோறு தாருங்கள் ..... எங்கள் வறுமையோடு ...... போராடுவதற்கு ..................!!! & பொருளாதார கவிதை கவிப்புயல் இனியவன் 

முக நூல்பற்றிய கவிதைகள்

பாட நூலுக்காக செலவிட்ட... நேரத்தைவிட உனக்காக... முகநூலுக்காக செலவிட்ட .. நேரம் அதிகம் -இப்போ ..... கிழிந்த ஆடையின் நூல் .... விட்ட தவறை காட்டுகிறது ....!!! @ முக நூல்பற்றிய கவிதைகள் கவிப்புயல் இனியவன் (மாணவர்களுக்கு விழிப்புணர்வுக்காக ) @ முகம் பார்க்காமல்.... முகவரியை -மட்டும்.... கொண்ட நம்..... முகநூல் காதல்....! முகம் நூராமல்.... பார்த்துக்கொள் .... நூலை நூற்று விடாதே ....!!! @ முக நூல்பற்றிய கவிதைகள் கவிப்புயல் இனியவன் ( முக நூல் காதலருக்கு சமர்ப்பணம் ) @ முகநூலில் நீ .. அடுத்ததாக ...... என்ன சொல்வாய் ...... என்ன கேட்பாய் ........ மிகநீண்ட நேரம் ....... காத்திருந்தேன் ... நீயோ இரக்கம்..  இல்லாமல் ....... முக நூலை மூடி சென்றாய்  உன்னை எப்படி திட்டுவது ...? @ முக நூல்பற்றிய கவிதைகள்  கவிப்புயல் இனியவன்  ( முக நூல் காதலருக்கு சமர்ப்பணம் ) @ முகநூலை பார்த்தவுடன் .. நீலவானதேவதையே.. உன் நினைவுதான் .. எத்தனை நண்பர்கள் ... முகநூலில் நட்சத்திரமாக ... இருந்தாலும் -விடி வெள்ளி-நீ  முகநூலை திறந்தால் -நீ  ம

மரணத்தை நோக்கி ...

மரணத்தை நோக்கி ... நகரும் வாழ்க்கையில் ... நம்மை வாழ சொல்லி .... வற்புறுத்துவது ..... காதலும் நட்பும் தான்,.... காதலை நேசி ....... .நட்பை சுவாசி........ வாழ்க்கை வசந்தம் ...!!! @@@ தெரியாத காற்றும்… புரியாத கவிதையும்… சொல்லாத காதலும்… கலையாத கனவும்.. என்றும் இனிமை....!!!

சிதறவைத்த கண்ணிவெடி ....!!!

ஏய் இதய ராணி ..... அதிசயங்கள் பலவற்றுடன் ..... எனக்காக பிறந்திருக்கிறாய் ..... உனக்கு உன் கண் -கண் ... எனக்கு என் இதயத்தை .... சிதறவைத்த கண்ணிவெடி ....!!! உன்னை நினைத்து நினைத்து கவிதை எழுதவில்லை ..... உன்னோடு கவிதையால் ...... வாழ்கிறேன் ...............................!!! மழைதுளியாய் மாறப்போகிறேன்..... உன் உடல் தோளால் படைத்தாதா ..... மெழுகால் வடிக்கப்பட்டதா ...... பரிசோதித்து பார்க்கவேண்டும் ......!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

இனிக்கும் ​இன்பகாதல் கவிதை

இரவில் ,,,,, நீ தரும் இன்பமும் ..... நினைவுகளும்.... நான் காணும் கனவும்.... என் ஏக்கமுமே...... பகலில்........ வரிகளாக வந்து..... வார்த்தைகளாய் உருவாகி.... கவிதையாய் படைக்கிறேன்.....!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

சித்திரமே என் சிங்காரியே .....!!!

சித்திரமே என் சிங்காரியே .....!!! ------ இதயத்தில் சிற்பமாய் ..... சிந்தனையில் சித்திரமாய் ..... நிந்தையில் இருப்பவளே ..... சித்திரமே என் சிங்காரியே .....!!! செந்தேன் சிந்தும் ..... உதட்டழகியே ...... உள்ளத்தில் முழுநிலவாய் ...... பிரகாசிப்பவளே ...... சிலம்பே என் சிலப்பதிகாரமே...... வந்தேன் திகைத்தேன் தந்தேன் .... இதயத்தை .........!!! அல்லியை போல் அள்ளி .... கொள்வாயா -இல்லையேல் .... கீரையை போல் கிள்ளி .... எறிவாயா.......................? & கவிப்புயல் இனியவன்  தேனிலும் இனியது காதலே 

காதல் கஸல் கவிதை

எதிரும் புதிருமாய் ..... காதலில் பேசினாய் .... நீரும் நெருப்புமாய் .... அணைந்துவிட்டோம் ....!!! முள்ளும் மலருமாய் ..... உன் நினைவுகள் ..... இரவும் பகலும் ..... வந்து கொல்கிறது.........!!! வாழ்க்கை மேடு பள்ளம் தான் .... அதற்காக பள்ளத்திலேயே ..... வாழ்வதா ......? &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1051 கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலரும் பூக்கள்

எதிரும் புதிருமாய் ..... காதலில் பேசினாய் .... நீரும் நெருப்புமாய் .... அணைந்துவிட்டோம் ....!!! முள்ளும் மலருமாய் ..... உன் நினைவுகள் ..... இரவும் பகலும் ..... வந்து கொல்கிறது.........!!! வாழ்க்கை மேடு பள்ளம் தான் .... அதற்காக பள்ளத்திலேயே ..... வாழ்வதா ......? &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1051 கவிப்புயல் இனியவன்

காதல் கஸல் கவிதை 1051

எதிரும் புதிருமாய் ..... காதலில் பேசினாய் .... நீரும் நெருப்புமாய் .... அணைந்துவிட்டோம் ....!!! முள்ளும் மலருமாய் ..... உன் நினைவுகள் ..... இரவும் பகலும் ..... வந்து கொல்கிறது.........!!! வாழ்க்கை மேடு பள்ளம் தான் .... அதற்காக பள்ளத்திலேயே ..... வாழ்வதா ......? &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1051 கவிப்புயல் இனியவன்

சமூக சிந்தனை கவிதைகள்

புகையிரத பாதை ..... சமாந்தரமாக செல்கிறது ..... மின்சார வடமும் ..... சமாந்தரமாக செல்கிறது ..... சமாந்தரங்கள் சந்தித்தால் ...... அழிவுதான் ...... வாழ்க்கையை சமந்தரமாய் ..... கொண்டு செல்லாதீர்கள் ..... விரக்தியில் முடிந்துவிடும் .....!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கண் அழகு போதும் ....!!!

அவள் மெல்ல கண் ... அசைத்தாள் நான் ..... அகராதியெல்லாம் .... தேடுகிறேன் .......!!! காதலில் தான் கண்ணால் ..... ஒருவரை காயப்படுத்த ..... முடிகிறது .....!!! காதலுக்கு உடல் .... அழகு தேவையில்லை .... கண் அழகு போதும் ....!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

ஒரு ஜீவாத்மாவின் கவிதை 02

படம்
ஒரு ஜீவன் வதைக்கபடும் ..... போது உன் உயிரும் வதை ..... படனும் அப்போதான் நீ ஜீவன் ..... வதைக்கப்படும் ஜீவனை.... பார்த்து பதபதக்கும் ஜீவன்.... ஜீவாத்மா அல்ல பரமாத்மா......!!! படைப்புகள் எல்லாம் ஒன்றே...... வடிவங்களே வேறுபடுகின்றன...... உயிரெல்லாம் ஒன்றே உடல் வேறு......!!! எல்லவற்றையும் விரும்பு ....... அளவோடு  விரும்பு ...... எல்லா வற்றிலும் சமனாக... பற்றுவை‍ _ எதில் அளவு ..... அதிகமாகிறதோ அதுவே..... உனக்கு மரணத்தின்...... நுழைவாயில்............................!!! அன்பு ..பாசம்.. கருணை... இரக்கம்..பற்று..காதல்.... தியாகம்....எல்லமே அளவாக.... இருக்கவேண்டும் அளவுக்கு..... மீறும் போது நீ மட்டுமல்ல..... அவர்களும் துன்ப படுகிறார்கள்......!!! & ஒரு ஜீவாத்மாவின் கவிதை கவிப்புயல் இனியவன்

கொல்கிறேன் மன்னித்துவிடு ....!!!

என்னை கவிதையால் .... கொல்லாதே என்று .... அடிக்கடி கூறுகிறாய் ..... நீ என்னை நினைவாலும் .... கனவிலும் கொல்லுகிறாய்..... அதனால் நான் கவிதையால் ... கொல்கிறேன் மன்னித்துவிடு ....!!! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கொல்கிறேன் மன்னித்துவிடு ....!!!

என்னை கவிதையால் .... கொல்லாதே என்று .... அடிக்கடி கூறுகிறாய் ..... நீ என்னை நினைவாலும் .... கனவிலும் கொல்லுகிறாய்..... அதனால் நான் கவிதையால் ... கொல்கிறேன் மன்னித்துவிடு ....!!! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

இதயத்தில் சுமக்கும் தாய் ......!!!

நீ பேசாமல் இருக்கும் .... நாட்களை விட ..... பேசிய நாட்கள் ...... வலி அதிகம் .........!!! உன்னை பற்றி ஒன்றுமே பேசாமல் .... என்னைப்பற்றியே பேசி ..... வலியை தருகிறாய் ..... நீ என்னை இதயத்தில் ..... சுமக்கும் தாய் ......!!! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

தவித்துக்கொண்டு இருக்குதே ......!!!

செயற்கை சுவாசம் .... கொடுத்து உயிரை .... காப்பாற்றுவதுபோல் .... உன் மூச்சு காற்று பட்டு ..... நான் வாழ்கிறேன் ....!!! துடித்து கொண்டிருந்த ..... என் இதயத்தில் என்ன .... மாயம் செய்தாய் .....? இப்போ தவித்துக்கொண்டு .... இருக்குதே ......!!! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

காதல் அழகிய கதிர் ......!!!

உணர முன் காதல் .... புரியாத புதிர் ....... உணர்ந்த பின் காதல் .... அழகிய கதிர் ......!!! காதலுக்கு வலியும்.... ஒரு வேலிதான்..... தாங்க முடித்தவர்கள் .... தாண்ட மாட்டார்கள் .....!!! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

ஒரு ஜீவாத்மாவின் கவிதை

ஒரு ஜீவாத்மாவின் கவிதை ----------------- என்னை அவர்கள் மதிக்கவில்லை...... என்று கோபப்படாமல்...... அவர்கள் மதிக்கும்படி........ நான் மாறவில்லை என்று ...... கவலைப்படு - காரணத்தை..... தேடு மதிக்கப்படுவாய்.......!!! பாராட்டும் போது...... துள்ளி குதிக்கும் மனம் ....... விமர்சிக்கும் போது....... துவண்டு விழுகிறாய்....... அப்போ உன் மனத்தை ...... கடிவாளம் போட்டு .... வழிநடத்துகிறாய்.......... கடிவாளத்தை கழற்று ...... சவாரிசெய் நிச்சயம் விழுவாய்...... காயப்படுவாய்....... ஆனால் வாழ்க்கையில் ...... வெற்றி பெறுவாய்,............!!! கரையில் நின்று கடலை ...... பார்த்தால் தப்புக்கடலும்..... சமுத்திரமாய் தெரியும்....... ஆழ்கடலில் நின்று கரையை.... பார்ப்பவனுக்கு கடலும் கரையும்..... ஒன்றுதான் ......... எல்லவறையும் சமனாக....... நோக்குபவனே ....... சாதனையாளனாகிறான்.....!!! & ஒரு ஜீவாத்மாவின் கவிதை கவிப்புயல் இனியவன்