இடுகைகள்

அக்டோபர் 21, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யாரிடம் சொல்லி கதறுவேன் ...?

யாரிடம் சொல்லி கதறுவேன் ...? என்னவனே .... நீ என்னை விட்டு பிரிய .. விடைகொடுத்தது நானே ... அன்று தெரியவில்லை .. இதனை துன்பத்தை ....!!! இப்போ நான் படும் ... துன்பத்தை -என் உடல் ... படும் வேதனையை யாரிடம் ... யாரிடம் சொல்லி கதறுவேன் ...? திருக்குறள் : 1181 + பசப்புறுபருவரல் + நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்  பண்பியார்க்கு உரைக்கோ பிற. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்  கவிதை எண் - 101

மன்னிப்பு கேட்கிறாய் ...!!!

கூட்டத்தோடு போகின்றாய்   ... என்னை திரும்பி பார்க்காமல் .. போகின்றாய்....!!! அருகில் உன் உறவினர் ... துடித்து கொண்டு  போகின்றாய்... நான் கோபத்தில் இருப்பேனோ ... என்று தனியே வந்து மன்னிப்பு .. கேட்கிறாய் ...!!! நான் சிரித்துக்கொண்டே உன்னை  பார்க்கிறேன்...!!! காரணம் ...... நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!

நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!

வீட்டார் எல்லோரும் சுற்றுலா  செல்கிறார்கள் - உனக்கும் ... அது நன்றாக பிடிக்கும் ...!!! வேண்டுமென்றே  பிடிக்காததுபோல் - நான் ... வரவில்லை என்று மறுக்கிறாய் ... படிக்க வேண்டும் என்று நடிக்கிறாய் ... என்னை விட்டு ஒரு நொடி  இருக்க மாட்டாய் .... !!! காரணம் ...... நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!

நீ எதை செய்தாலும் அது காதல்

மற்றவர்களுக்கு கற்கண்டை ... கொடுத்து விட்டு -எனக்கு  வேண்டுமென்றே உப்பை ... தந்தாய்......!!! நான் துப்பவில்லை .... வியந்து நின்றாய் ..... நான் சிரித்து நின்றேன் ... நீ எதை தந்தாலும் இனிக்கும் ... காரணம் ...... நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!

உன்னை நேசிப்பதற்காக ....

உன்னை நேசித்த நொடியில் .... இருந்து ஒன்றையே இன்றும்  ஜோசிக்கிறேன் ....!!! உன்னை நேசிப்பதற்காக .... என்னை நான் நேசிக்காமல் .. விட்டதேன் ...? + கே இனியவனின் சின்ன கிறுக்கல்

எல்லாம் காதல் தான் ...!!!

என்  ஜனனம் தாயின் ... மடியில் ..... என்  மரணம் உன் ... மடியில் .... பிறப்பும் பெண்ணால் .... இறப்பும் பெண்ணால்... எல்லாம் காதல் தான் ...!!! + கே இனியவனின் சின்ன கிறுக்கல்

நீயே வேதனை படுவாய் ....!!!

நீ என்னை தூக்கி எறிந்து .... விட்டாய்- உனக்கு ... நான் குப்பையானேன் ...!!! என் காதல் குப்பையில் ... தோன்றிய குண்டுமணி ... நிச்சயம் நீ உணர்வாய் ... நீயே வேதனை படுவாய் ....!!! + கே இனியவனின் சின்ன கிறுக்கல்

கண் ஏறி படக்கூடாது ..

கல் எறி பட்டாலும் ... கண் ஏறி படக்கூடாது .. சும்மா சொல்லவில்லை ... உன் பார்வையில் புரிந்து ... கொண்டேன் - அதன்  உண்மையை .....!!! + கே இனியவனின் சின்ன கிறுக்கல்

கே இனியவனின் சின்ன கிறுக்கல்

பிரிவுக்கு பின் .... பிரியமானவர்கள் சந்திப்பது ... பிண அறையில் இருக்கும் ... சடலங்கள் போல் ....!!! பேசவும் முடியாது ... பார்க்கவும் முடியாது ....!!! + கே இனியவனின்  சின்ன கிறுக்கல்