இடுகைகள்

ஜூலை 28, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலாய் நுழைந்தேன் ....

காதல் கவர்ச்சியால் ..... உன் இதயத்தில் ..... காதலாய் நுழைந்தேன் .... காதலும் காயபாட்டு விட்டது ....!!! நீங்கள் எப்போது .... காதலிக்க ஆரம்பிக்கிறீர்களோ .... அப்போது மெல்ல மெல்ல .... இறக்கவும் கற்றுகொள்ளுங்கள்...!!! + வலிக்கும் இதயத்தின் கவிதை வலியுடன் நானும் அவளும் ....!!! 

காதல் பிரிவின்பின் ....

காதல் இருக்கும்போது .... ஒவ்வொரு சொல்லுக்கும் ... ஒவ்வொரு காதல் ...... புத்தகம் தோன்றும் .....!!! காதல் பிரிவின்பின் .... கடந்த ஒவ்வொரு செயலுக்கும் .... ஒவ்வொரு காதல் ...... அகராதி  தோன்றும் .....!!! + வலிக்கும் இதயத்தின் கவிதை வலியுடன் நானும் அவளும்

வலியுடன் நானும் அவளும் ....!!!

என்னவளை இதயத்தில் ....  வைத்திருந்தேன் -தப்புதான் ...  என் இதயத்தையுமெல்லா....  கொண்றுவிட்டாள்.....!!!  உயிரோடு இருதயசிகிச்சை .....  காதலில் தோற்ற இதயங்களில் ....  நிகழ்ந்திருக்கும் ....!!!  +  வலிக்கும் இதயத்தின் கவிதை  வலியுடன் நானும் அவளும் ....!!!

"அன்பு உறவாகும் .....!!!

ஒவ்வொரு பிறந்தநாளும் .... மனிதனுக்கு அனுபவபதிவுகள் ..... கடந்த வருடத்தில் நிகழ்ந்தவை .... கசப்பாகவும் இனிப்பாகவும் .... இருந்திருக்கும் .....!!! இயன்றவரை இனிமையாக .... வாழ்வதற்கு பழகிக்கொள்ள வேணடும் ..... கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் .... வருங்காலத்திலும் நாம் எண்ணும் ... எண்ணத்தில்தான் நம் வாழ்கை உண்டு ....!!! எல்லோருக்கும் உதவிசெய்யும் மனம் ..... எல்லோரையும் தன்னைப்போல் வாழ .... வேண்டும் என்ற சிந்தனை .... ஒரு கை கொடுத்தால் மறு கை .... தடுக்காத பழக்கம் கொண்ட உறவே .... "அன்பு உறவாகும் .....!!! தங்களும் தங்கள் குடும்பமும் .... இன்றுபோல் என்றும் இன்பமாக .... நிச்சயம் வாழ்வீர்கள் இறைவன் உங்களை ஆசீர்வதித்தபடியே.... இருப்பான் - வாழ்க வளமுடன்

இதயத்தை பூட்டும் சாவி

எங்கே வாங்கினாய் ....? இதயத்தை பூட்டும் சாவியை .... இரட்டை சாவியிருந்தால் .... எனக்கும் ஒன்றை தந்துவிடு ....!!! இந்த நிமிடத்தில் இருந்து ..... உன்னை நினைக்கமாட்டேன் .... தோற்றுவிட்டேன் பலமுறை .... உன்னை காணும் ஒவ்வொரு ... நொடியும் ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை 41

காதலின் வலி புரியும் ....!!!

சுலபமாக தந்துவிட்டாய் ..... உன்னிடம் இருந்த என் .... இதயத்தை ...!!! என்னிடம் இருக்கும் .... உன் இதயம் வரமறுக்கிறது .... உன்னுடன் சேர மறுக்கிறது .... இதயத்துக்குத்தான் காதலின் ... வலி புரியும் ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை 40

காலம் ஆனார் கலாம்

காலம் ஆனார் கலாம்  காலம் ஆனார் கலாம் ... மனிதர்களே காலமாவார்கள் .... மா மனிதர்கள் காலம் ஆவார்கள் .... மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!! தன்  உடலுக்குள் அடக்கி வைத்த ..... உயிரை ஆன்மாவை ..... தமக்காகவே வாழ்ந்தவர்கள் .... காலமாகிறார்கள்......!!! தனக்காக வாழாமல் ..... சமூகத்துக்காக வாழ்பவர்களின் .... ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு .... காலம் ஆவார்கள் -அவர்களுக்கு  இறந்தகாலமே இல்லை -எப்போதும்  நிகழ் காலம் தான் ....!!!

தற்காலபாரதியார் அய்யா கலாம்

தற்காலபாரதியார் அய்யா கலாம்  பாரதியார்  சுதந்திர தாகத்தில் .... அக்கினிகுஞ்சு பிறந்தது .... அய்யா கலாமின் .... அறிவியல் தாகத்தில் .... அக்கினி சிறகு பிறந்தது .....!!! அக்கினி குஞ்சு .... அந்த இடத்தையே பரவும் ..... அக்கினி சிறகு உலகம் ..... முழுவதும் பரவும் ..... அய்யா கலாமின் எண்ணம்.... உலகம் முழுதும் பரவும் ....!!! ஒருவனுக்கு  உணவில்லையேல் .... ஜெகத்தினை அழித்திடுவோம் .... என்றார் மகாகவி ..... ஒவ்வொருனனுக்கும் .... அறிவினை கிடைத்திட ..... ஜெகத்தினில் பாடுபடு என்றார் .... அய்யா கலாம் ....!!!

கலாம் அறிவியலின் ஆன்மீகத்தின் தந்தை

உலகின் அன்னை " அன்னை திரேசா " தந்தை     " அய்யா கலாம் " அறிவியலில் காலடிவைத்து .... அறிவியலோடும் மறைந்தவரே .... அகில உலகில் அதிகம் ...... அய்யா கலாம் அவர்களே .... அறியியலையும் ஆன்மீகத்தையும் .... இணைந்தே வளர்த்தவர் .....!!! எம் திருநாட்டுக்கு வந்தபோது ..... யாழ்ப்பாண பல்கலை கழகதில் .... உரையாற்றியபோது -இந்தியாவில் .... மட்டுமல்ல உலக இளைஞருக்கே .... அறிவியலின் தந்தை என்பதை .... அறியவைத்த அறிவியல் தந்தை  ....!!!