இடுகைகள்

அக்டோபர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆன்மீக கவிதை

அரியும் சிவனும் சேர்ந்து.... "அரிசி" ஆனாய் ....... உடலும் உயிரும் சேர்ந்து...... கோயிலானாய்......... உணர்வும் செயலும் சேர்ந்து..... இறைவனானவனே....... என்னுள் இருப்பவனே....... எனக்குன்னை காட்டிவிடு........!!! என்னவனே....... நீ ஒளிவடிவமானவனா.....? நீ ஒலிவடிவானவனா.........? நீ தீ வடிவானவனா.........? நீ காற்று வடிவானவனா .....? நீ திண்ம வடிவானவனா......? நீ திரவடிவமானவனா ....? உன் வடிவம் என்னவென்று...... அறியாமல் என்னை பாடாய்....... படுத்துபவனே.......... நீ என்னவாகவும் இருந்துவிடு...... என்னை எப்போதும் உன்னோடு..... வைத்துகொண்டே இரு..........!!! & கவிப்புயல் இனியவன் ஆன்மீக கவிதை

இனியவனின் இனியதீபாவளி வாழ்த்து

தீப திரு நாளில் ..... தீய எண்ணங்கள் தீயாகட்டும்..... தீய செயல்கள் தீயாகட்டும்..... தீய குணங்கள் தீயாகட்டும்......!!! தீயை போல் நிமிர்ந்து நிற்ப்போம்....... தீயவற்றுக்கு தீயை மூட்டுவோம்...... தீண்டாமைக்கு தீயூட்டுவோம்......!!! தீபாவளி அன்று...... தீனி இல்லாதோருக்கு ..... தீனி போடுவோம்.... தீபத்தை ஏற்றும்போது .... ஒளிரட்டும் அகம்...... அகம் மட்டுமல்ல உள்ளகமும் ...... ஒளிரட்டும்.............!!! & இனிமையான....... இன்பமான....... இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இனியவன்

இன்னும் இதயக்கதவை .....

நீ என்னை மறந்ததை .... நினைத்து கவலைப்படவில்லை ..... நீ மறந்து விட்டாய் என்று .... பல முறை இதயத்துக்கு .... சொல்லி விட்டேன் ..... இன்னும் இதயக்கதவை ...... திறந்து காத்துக்கொண்டு .... இருக்கிறது ..............!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

ஒருமுறை சொல்லிவிடு

எத்தனை முறை கவிதை ..... எழுதுகிறேன் சம்மதம் .... கேட்டு ............!!! கவிதைக்கு பதில் சொல்கிறாய் ...... எனக்கு எப்போது பதில் ..... சொல்வாய் ......? ஒருமுறை என்றாலும் ..... சொல்லிவிடு உன் கவிதையை .... மட்டுமல்ல உன்னையும் ..... காதலிக்கிறேன் என்று ......!!! & என்னவளே என் கவிதை 47 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் காதல் கவி நேசன் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

இனியது இனியது

நீ வல்லினமான சொல்......!!! மெல்லினமான செயல் ......!!! இடையினமான வலி ...........!!! @@@ கவிப்புயல் இனியவன் உலக அதிசயம் கேள் என் கண்ணுக்குள் -நீ வானவிலாய் இருக்கிறாய் ....!!! @@@ கவிப்புயல் இனியவன் இனியது இனியது தனிமை இனியது அதனிலும் இனியது உன்னால் நான் தனிமையானது @@@ கவிப்புயல் இனியவன்

மறுபக்கத்தை காட்டுகிறேன் ....!!!

ஒருமுறை என்னை காதலித்து பார் ... காதலில் நீ காணாத .... மறுபக்கத்தை காட்டுகிறேன் ....!!! & கவிப்புயல் இனியவன் @@@ காதல் வதையாகவும் வாகையாகவும் .... இருக்கும் ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் @@@ காதல் மட்டும்தான் ... கண்ணீரில் ... பூக்கும் பூ ....!!! ^^^ கவிப்புயல் இனியவன்

என் பிரியமான மகராசி......!!!

முழு ...... நிலா வெளிச்சத்தில் ...... கருவானவள் .........!!! பூக்கள் மலரும் போது...... பிறந்தவள் .............!!! தென்றல் வீசியபோது ...... பேசியவள்...........!!! விண்மீன்கள் துடித்த போது..... சிரித்தவள் ...........!!! கொடி அசைந்தபோது ..... நடந்தவள் .........!!! புல் நுனியில் பனி படர்கையில் ...... பருவமடைந்தவள் .........!!! இத்தனை அழகுகொண்டவளே ..... என் பிரியமான மகராசி......!!! & கவிப்புயல் இனியவன் என் பிரியமான மகராசி காதல் கவிதை

தந்தையின் அறிவுரைகளை ....

உயிருடன் வாழும் ..... காலத்தில் தந்தையின் ..... அறிவுரைகளை ..... செவிசாய்க்க மனம் .... விரும்புவதில்லை ..... கட்டிளமை பருவம் ...... தன்முனைப்போடு ...... பேசும் ,கருதும்.......!!! தந்தையின் மறைவுக்கு ..... பின்னர் அவரின் அறிவுரை ..... மனதை கொல்லும்...... வாழ்க்கையின் ஒவ்வொரு ..... துன்பமும் வரும்போது ..... தந்தையின் அறிவுரைகளை .... ஞான கூற்றாய் தெரியும் ......!!! & குடுப்ப கவிதைகள் தந்தை  கவிதை கவிப்புயல் இனியவன்

கவிப்புயலின் குடும்ப கவிதைகள்

பிஞ்சு விரலை பஞ்சு...... போல் நினைத்து மெல்ல ..... மெல்ல அமர்த்தி சுகம் ..... காணும் உயிரே .........!!! மார்பிலே ...... போட்டுக் கொண்டே... மனம் நிறைந்து மகிழ்ந்து மனத்தால் வளர்த்த உயிரே ....!!! மளமளவென வளர்ந்தேன் .. மணமுடித்து வைத்தாள்... நான் விரும்பிய உயிரை..!! அன்னை அவள் கண் மூடியதால்... அனாதையானேன் அன்பென்னும் உறவிலிருந்து ...!!! உள்ளத்தால்  சொல்லுகிறேன்... தாயை நினைத்து கவிதை எழுதும் எந்த கவிஞனும் ...... கண்ணீரை சிந்தாமல் ....... எழுதவே முடியாது ........!!! & குடுப்ப கவிதைகள் அம்மா கவிதை கவிப்புயல் இனியவன்

எல்லாமே நட்புதான்

மழலைப் பருவத்தில் நட்பு : ------------- உனக்கு என்னைத்தெரியாது ....... என்னை உனக்கு தெரியாது........... நீயும் கையசைத்தாய் நானும் ...... கையசைத்தேன் ....... அதில் புரியாத சுகம்.........!!! குழந்தைப் பருவத்தில் நட்பு : ------------ நீயும் நானும் விளையாடுவோம் ..... கிடைத்தவற்றால் அடிபடுவோம்.... மீண்டும் சந்திப்போம் ...... பகமையென்றால் .... என்ன என்றே தெரியாத நட்பு ..!!! காளைப் பருவத்தில் நட்பு : ---------- சுற்றுவதற்கு நட்புத்தேவை ..... வீண் சண்டைக்கு நட்புத்தேவை .. இளங்கன்று பயமறியாத நட்பு ...!!! வாலிபப் பருவத்தில் நட்பு : _________ என் வலியையும் சுகத்தையும் .... சொல்லவும் கேட்கவும் ஆறுதல் .... தரவும் நட்புத்தேவை ....!!! முதிர்ந்த பின் நட்பு : ------------ வாழ்க்கையின் துன்பங்கள் ... துயரங்கள் இழப்புக்களை ... அனுபவங்களைப்பகிர்ந்து .... கொள்ளஒரு நட்பு தேவை ..! & நட்புடன் உங்கள் கவிப்புயல் இனியவன் 

காதலில்லாமல் வாழ்ந்திடாதே

காதல் ஒரு காவியம்....... காவியகதைகளில்......... சோகங்கள் உண்டு........ சோகத்தை தாங்க ......... தயாராக இரு .............!!! காதல் ஒரு சமுத்திரம்...... விழுந்தால் மூழ்குவாய்....... மூழ்காமல் இருக்க......... கற்றுக்கொள் .............!!! காதல் ஒரு கத்தரிக்காய்....... சிலவேளை புரியும் ............... சில வேளை ருசிக்கும் ........... சில வேளை கருகும் ............!!! காதல் ஒரு கானல் நீர்.... உண்மைபோல் ..... சில விடையங்கள் தெரியும் ........ ஆனால் அது முழுப்பொய்..........!!! காதல் ஒரு கண்ணாடி ........ உன்னையே நீ பார்த்து........ சிரிப்பாய் அழுவாய் ........!!! காதல் ஒரு கற்பூரம்............ காதல் வெற்றியோ தோல்வியோ............ அடைந்தால் இறுதியில் ................ ஒன்றுமே இல்லை என்று ............... உணரப்பண்ணும்.........!!! காதல் ஒரு காற்று.............. தென்றலும் உண்டு .............. புயலும் உண்டு ...............!!! காதல் ஒரு நட்பு ........... தியாகம் செய்யத்தயாராக ............ இரு நட்புதான் கலங்காமல்.......... தியாகம் செய்யும்..............!!! காதல் ஒரு கற

நண்பா அறிவுரை கேட்பாயா ...?

நண்பா .... அறிவுரை கேட்பாயா ...? மனம் திறந்து பேசு .... மனதில் பட்டதெல்லாம் .. பேசாதே .... சிலர் புரிந்து கொள்வார்கள் ... சிலர் பிரிந்து செல்வார்கள் .... இரண்டிலும் நன்மைகளும் ..... தீமைகளும் உண்டு ..... & கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

வலிக்கிறதா

இதயத்தை ..... கிள்ளிப்பார்த்துவிட்டு ...... வலிக்கிறதா என்று கேட்டால் ... காதல் ...!!! இதயத்தை ...... கிள்ளிப்பார்காமலே ... வலிக்கிறதா என்று கேட்டால் ... நட்பு ...!!! இதயத்தில் .... இருந்துகொண்டு .... கிள்ளிக்கொண்டே .... இருந்தால் ....... மனைவி ..........!!! & கவிப்புயல் இனியவன்

முன்னோர் சொன்னது ..!!!

இயந்திர உலகில் ......... ஓடிக்கொண்டிருப்பது .. கடிகாரமில்லை ...! நீதான் பெரியமுள் - உன் ஆயுள்... சிறியமுள் -உன் உயர்வு... வினாடி முள் -உன் முயற்சி... வேக வேகமாக முயற்சி செய் .. நேரம் பொன்னானது ..... முன்னோர் சொன்னது ..!!! & சமுதாய கவிதை கவிப்புயல் இனியவன் 

அழகான வீடு கட்டும் மனிதா ..

கருங்கல் மலையை உடைத்து .... கற்துகள் கொண்டு கட்டுகிறாய் .. அழகான வீடு - அப்பாப்பா என்ன ..? வலிமை மனிதா உனக்கு ...? கருங்காலி மரத்தை வெட்டி ... அழகழகான கதவு ஜன்னல் செய்து ... அழகான வீடு கட்டும் மனிதா .. என்ன வலிமையப்பா உனக்கு ...? நதிகொண்டு நீர் வந்து .... நயனங்கள் பலகொண்டு... கலைனயங்களோடு.... அழகான வீடு கட்டும் மனிதா .. என்ன கலைநயமப்பா உனக்கு ...? குடியிருக்காப்போகும் ... குடியிருப்பில் நிம்மதியை எங்கிருந்து கொண்டுவரப்போகிறாய் ...? & வாழ்க்கை கவிதை கவிப்புயல் இனியவன் 

முயற்சித்தாலும் வெற்றிக்கு ..

எவ்வளவு தான் ... முயற்சித்தாலும் வெற்றிக்கு .. என் வாசல் படி தெரியவில்லை ... குட்டியை வீடு வீடாக வாவிவரும் பூனைபோல் தோல்வி மட்டும் .. தொடர்ந்து வருகிறது .. விடமாட்டேன் ...? விஞ்ஞானிகள் .... பலரின் வாழ்க்கையை.... கற்றிருக்கிறேன் தோல்வி .... என்னும்... கயிற்றில் தூக்கு .... போட்டு வென்றவர்கள் ....! & கவிப்புயல் இனியவன் 

மனதில் இரக்கத்தையே .....

நீதான் என் வாழ்வு.... நீதான் என் காதல்.... நீதான் என் சந்தோசம்.... நீதான் என் சோகம்.... நீயின்றி போனால் ..... வாழ்வில்லை....... என்றிருந்தேன்...!!! இப்போ ....??? குரல் கேட்க ஆசை தான்.. ஏனோ கேட்க மறுக்கிறேன்.... முகம் பார்க்க ஆசை தான் .. ஏனோ பார்க்க மறுக்கிறேன்.. உன்னுடன் பேச ஆசை தான்.. ஏனோ பேச மறுக்கிறேன்... அத்தனை வலிகளை தந்து .... மனதில் இரக்கத்தையே ..... கொன்று விட்டாய் ...........!!! + கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

சமூதாய கவிதை

எத்திசை பார்த்தாலும் ..... செத்து கொண்டிருக்கிறது..... உலகம்- குற்றுயிரும்..... குறையுயிருமாய் செத்துகொண்டிருக்கிறது...... உலகம்........!!! பத்திரிகையை விரித்தால்.... பத்துவயது சிறுமி ...... வண்கொடுமை ......... தொலைக்காட்சியை போட்டால்..... கள்ளதொடர்பால் ....... மனைவி வெட்டிகொலை ...... சமூகதளங்களை....... பார்த்தால் கூட்டமாக..... சுட்டுகொல்லும் வீடியோ...........!!! வயிற்றை நிரப்ப பட்டினி போராட்டம்....... தற்பெருமை  அரசியல் போராட்டம்..... மதவெறி போராட்டம்...... இனவெறி போராட்டம்...... சுயநல போராட்டம்...... சுயநலத்துக்காய் அரசியல் போராடம்.......!!! எத்திசை பார்த்தாலும் ..... செத்து கொண்டிருக்கிறது..... உலகம்- குற்றுயிரும்..... குறையுயிருமாய் செத்துகொண்டிருக்கிறது...... உலகம்........!!! & சமூதாய கவிதை கவிப்புயல் இனியவன்

ஒருதுளி நீ ....!!!

பெற்ற ..... தாயின் இழப்பு ... ஒருபுறம் கண்ணீரை .... கொண்டு வருகிறது ...!!! நீ பிரிந்து சென்ற .. வலி கண்ணீரை .. தருகிறது ...!!! இரண்டையும் இரு .. கண்களாக விரும்பினேன் .. என்பதற்காக ... என் இரண்டு கண்ணும் .. அழுகிறது ..!!! நிச்சயம் சொல்வேன் ... வரும் துளிகளில் ... ஒருதுளி நீ ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

தேடுவேன் உயிர் உள்ள வரை,....!!!

நீ உண்மையோ .... பொய்யோ.... பேசினாலும் ..... ரசிப்பேன் ......!!! எத்தனை ... முறை அடித்தாலும்... தாய்மடித் தேடும் ... பிள்ளையாய்... உன்னை மட்டுமே ... தேடுவேன்... உயிர் உள்ள வரை,....!!! நீ பார்வையில் இருந்து விலகி செல்லும் .... போதெல்லாம் .... கண்களுடன் ....... போராடுகின்றது,.. கண்ணீர் .....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ வந்துபோனகனவுகள். . !

கலைந்தே .... போனாலும்..... மறப்பதில்லை... நீ வந்துபோன.... கனவுகள். . ! நீ பிரிந்தே போனாலும்..... விழியோரம் கலையாமல்.... நீ தந்த நினைவின் .... வலிகள் ........!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

மரணத்திற்கு எது அழகு…?

கடலுக்கு எது அழகு…? அலை அழகு ,...!!! * அலைக்கு எது அழகு…? கரை அழகு ...!!! * கரைக்கு எது அழகு…..? மண் அழகு ...!!! * மண்ணுக்கு எது அழகு...? வாசம் அழகு ...!!! * வாசத்திற்கு எது அழகு…? பூ அழகு .....!!! * பூவுக்கு எது அழகு…...? பெண் அழகு ...!!! * பெண்மைக்கு எது அழகு…? தாய்மை அழகு ...!!! * தாய்மைக்கு எது அழகு…? பாசம் அழகு ...!!! * பாசத்திற்கு எது அழகு...? உயிர் அழகு ....!!! * உயிருக்கு எது அழகு..? உடல் அழகு ...!!! * உடலுக்கு எது அழகு...? வயது அழகு ...!!! * வயதிற்கு எது அழகு..? காதல் அழகு ...!!!. * காதலுக்கு எது அழகு…? கற்பு அழகு ......!!! * கற்புக்கு எது அழகு…...? வாழ்க்கை அழகு…!!! * வாழ்க்கைக்கு எது அழகு…? மரணம் அழகு….!!! * மரணத்திற்கு எது அழகு…? வாழ்வியல் அழகு ....!!! ^^^ கவிப்புயல் இனியவன்  

நீர் எதற்காய் துன்ப படுகிறீர்

என்னுள் இருந்து கொண்டு .... என்னை வதைப்பவனே ....... நீ வேறு நான் வேறு ..... இல்லை என்ற சித்தர் ..... கூற்றை நம்புபவன் நான் ...... அப்போதேன் என்னை ..... வதைக்கிறீர் ..........? நான் துன்ப படும் போது...... நீரும் வதைக்க படுகிறீர் ..... நான் அவமானப்படும் போது ..... நீரும் அவமான படுகிறீர் ........ என்னுள் இருப்பவனே ..... எதற்காக எனக்காய் ...... நீர் எதற்காய் துன்ப படுகிறீர் ......? விடை தெரியாமல் ஆயிரம் ...... பிறப்புக்கள் - அதில் நானும் ..... ஒருவனே -என்னுள் இருக்கும் .... பரம் பொருளே இந்த வினாவுக்கு ..... விடைதருவீர் ..................!!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன்

நீர் எதற்காய் துன்ப படுகிறீர் ......?

என்னுள் இருந்து கொண்டு .... என்னை வதைப்பவனே ....... நீ வேறு நான் வேறு ..... இல்லை என்ற சித்தர் ..... கூற்றை நம்புபவன் நான் ...... அப்போதேன் என்னை ..... வதைக்கிறீர் ..........? நான் துன்ப படும் போது...... நீரும் வதைக்க படுகிறீர் ..... நான் அவமானப்படும் போது ..... நீரும் அவமான படுகிறீர் ........ என்னுள் இருப்பவனே ..... எதற்காக எனக்காய் ...... நீர் எதற்காய் துன்ப படுகிறீர் ......? விடை தெரியாமல் ஆயிரம் ...... பிறப்புக்கள் - அதில் நானும் ..... ஒருவனே -என்னுள் இருக்கும் .... பரம் பொருளே இந்த வினாவுக்கு ..... விடைதருவீர் ..................!!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன்

உன்னை நினைக்காத இதயம் .....

அரியும் சிவனும் சேர்ந்து ...... அரிசியானவனே ......... உடலும்  உயிரும் சேர்ந்து ..... ஆலயமானவனே ........ உணர்வும் செயலும் சேர்ந்து ...... மறை பொருளானவனே ...... என்னுள் இருப்பவனே ..... எல்லாம் வல்லவனே ........!!! உன்னை வணங்காத மனம் ...... வேண்டாம் ........ உன்னை நினைக்காத இதயம் ..... வேண்டவே வேண்டாம் ....... உன்னை சொல்லாத சொற்கள் ..... வேண்டாம் ...........!!! நீ ஒளி வடிவானவனா ......? நீ ஒலி வடிவானவனா ......? நீ தீ வடிவானவனா ...........? நீ காற்று வடிவானவனா ....? நீ திண்மவடிவானவனா....? நீ திரவ வடிவானவனா ......? உன் ..... வடிவை மாயக்கண்ணால் ..... பார்க்கவே முடியாது ....... மனக்கண்ணால் தான் ...... பார்க்கமுடியும் .................... மனக்கண்ணால் பார்க்கும் ....... மார்க்கங்களை தந்து விடு ........!!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன்

என்னை உன்னுடனேயே வைத்திரு

என்னை எப்போதும் ..... உன்னுடனேயே  வைத்திரு ...... உயிர் பிரியும் வேளைவரை ..... என்னை உன்னுடனேயே ..... வைத்திரு - உன்னை விட ..... யாரும் துணையில்லை ...... எனக்கு - மற்றவர்களில் ..... நம்பிக்கையுமில்லை ............!!! யான் பெற்ற அறிவு ...... யான் பெற்ற செல்வம் ..... யான் பெற்ற புகழ் ....... எல்லாம் உன்னிடமிருந்தே ....... கிடைத்தவை என்பதை ..... யான் நன்றாக புரிவேன் .......!!! மாயையில் மயங்காமல் இருக்க ....... போதையில் பேதலிக்காமல் இருக்க ..... ஆணவத்தில் நடனமாடாமல் இருக்க ...... என்னை எப்போது உன்னோடு ....... வைத்திரு இறைவா ...... என்னை எப்போதும் ..... உன்னுடனேயே  வைத்திரு ...... உயிர் பிரியும் வேளைவரை ..... என்னை உன்னுடனேயே ..... வைத்திரு இறைவா ....................!!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன் 

என் இதய வலி கவிதை

நெருப்பில்  கருகியிருக்கலாம்  உன் சிரிப்பில்  கருகி தவிக்கிறேன்  & ஒன்றில் நீ பேசு.... அல்லது உன் கண்.... பேசட்டும் ...... இரண்டும்.... பேசினால் நான் எப்படி பேசுவது ...? & அவளுக்கு இதயம்.... இருக்கும் இடத்தில்..... முள் கம்பிகள் .... இருக்கிறதுபோல் ........ இப்படி வலி தருகிறாள் ..? & நான் எழுதுவது உனக்கு ஒருவரி கவிதை - அது என் இதய வலி கவிதை & உன்னை அணு அணுவாக காதலிக்கிறேன் -உனக்கு அணுக்கவிதை எழுதுகிறேன்

கவிதைக்கு ஒரு கவிதை

க - பிரமன் வி - அழகு தை - அலங்காரம் பிரமனை போல் படை ..... அழகு தமிழை இணை ..... அலங்காரமாய் பிறக்கும் .... கவிதை ...........!!! கவி - குரங்கு தை - அலங்காரம் குறும்பு தனங்களுடன்...... அலங்காரம் செய்தால் .... கவிதை பிறக்கும் .....!!! க - பிரமன் விதை - நடுகை படைப்புகளை ...... நட்டு விட்டால் ...... விருட்ஷமாகும் .... கவிதை ...........!!! க - பிரமன் (வி ) தை - அலங்காரம் படைப்புகள் என்பது ..... ஏதோ ஒரு கதை அதுவே கவிதை ........ ஆகிவிடுகிறது ...........!!! & கவிப்புயல் இனியவன் தமிழோடு விளையாடு 

பஞ்ச வர்ண கவிதைகள்

எனக்கு வாழ்க்கையே ..... வெறுத்து விட்டது ...... எனக்கு வாழ்க்கையே ....... பிடிக்கவில்லை ...... என்று வாழ்க்கை வெறுத்து ..... பேசுபவர்கள் ....... வாழ கற்று கொள்ளவில்லை ...... வாழ்க்கையை ஒரு வட்டத்துக்குள்   ..... கொண்டுவர துடிக்கிறார்கள் .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - வாழ்க்கை கவிப்புயல் இனியவன்

நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!

ஓடுகின்ற பேரூந்திலே ஓடி ஓடி  ஏறினாய் .... ஒற்றை கையால் உன்னை .... நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!! வேகமாய் வரும் ரயிலை ...... எதிராய் நின்று உன்னை .... நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!! பாழடைந்த கிணற்றுக்குள்  ...... நுனிவிரலில் நின்றுஉன்னை நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!! ஊட்டி வளர்த்த தாயை .......... நினைத்துப்பார்த்தாயா ...? தூக்கி வளர்த்த தந்தையை .... நினைத்தாயா...? உன்னை ...... நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!! உன்னை நாம் புகை படமாய் ...... பார்க்கிறோம் .......!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன் 

அறுதியான நம் காதல் .....!!!

நீ ... எனக்கு ... கிடைக்க போவதில்லை ..... உறுத்தியாகி விட்டது ..... அறுதியான நம் காதல் .....!!! என்னதான் ...... சொன்னாலும் ..... உன்னை கண்டவுடன் ..... பாழாய் போன மனசு ...... உன்னுடன் பேச துடிக்கிறது ..... அற்ப ஆசையுடன் ..... ஏங்குகிறது .........................!!! + கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

மறக்க நான் முயற்சிக்கிறேன் ....!!!

உன்னை மறப்பதற்கு ....... என்னை மறக்கவேண்டும் ..... என்னை மறப்பதற்கு ..... உன்னை மறக்க வேண்டும் ...... என்ன சொல்கிறேன் என்று ..... புரியவில்லையா ......? எனக்கும் புரியவில்லை ..... உன்னை எப்படி மறப்பது ....? முடிந்தால் ஒரு உதவி செய் ..... என்னை நீ மறக்க என்ன ..... செய்தாய் ...? சொல் உன்னை ..... மறக்க நான் முயற்சிக்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

சமூக சிந்தனை கவிதைகள்

நல்ல பழங்களை ..... தட்டில் அடுக்கி வைத்து ..... நலிந்த பழங்களை....... கொடையாய் கொடுக்கும் ..... கலியுக தர்மவான்கள்.......!!! பகட்டுக்கு பிறந்தநாள் ..... பலவிதமான அறுசுவை ..... உணவுகள் - நாலுபேர் ....... புகழாரம் ....... விடிந்த பின் பழைய சாதம் ..... ஏழைகளுக்கு அள்ளி.... கொடுக்கும் ....... கலியுக தர்மவான்கள்.......!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன்

அழவைக்கக்கூடாது ....!

காதல் இதயத்தை ..... தொடவேண்டும் .... இதயத்தை கிள்ளி .... எறியக்கூடாது ....! இதயத்தை காதல் .... அலங்கரிக்கணும் ..... அழவைக்கக்கூடாது ....! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

நீ அப்படி நினைத்து விடாதே .....!!!

என்னவளே ...... உயிரற்ற ஓவியமாக்கி ...... உணர்வற்ற உடலாக்கி ...... செயலாற்ற மனிதனாகி .... உன்னால் அலைகிறேன்....!!! மற்றவர்கள் என்னை ..... காதல் பைத்தியம் .... என்கிறார்கள் .... சொல்லிவிட்டு போகட்டும் ...... நீ அப்படி நினைத்து விடாதே .....!!! முடிந்தால் எனக்கு ... ஒரே ஒரு உதவி செய் ..... எனக்காக ஒரு துளி ..... கண்ணீர் விடு ...... அதை விட எனக்கு ...... உன்னிடம் இருந்து வர ..... ஒன்றுமில்லை ..........!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

ஒரே ஒரு கண் சிமிடலால் ....!!!

நீயும் நானும் ...... ஒரே குழாயில் ..... இளநீர் குடிக்க வேண்டும் .... வயிறு நிரம்ப அல்ல .... என் இதயம் நிரம்ப ......!!! உன் அழகை .... எல்லோரும் புகைப்படம் ..... எடுக்கிறார்கள் .... நானும் எடுக்கிறேன் .... ஒரே ஒரு கண் சிமிடலால் ....!!! & என்னவளே என் கவிதை 46 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் காதல் கவி நேசன் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

உலக அதிசய பிறவி

லியானோ டார்வின்சி ...... முன்னரே பிரிந்துவிட்டார் ..... உன் காலத்தில் .... பிறந்திருந்தால் ....... நீ தான் உலக அழகியாய் .... வரையப்பட்டிருப்பாய் .....!!! சில வேளை உலகம் .... அழிந்து மீண்டும் வந்தால் ...... நீ தான் உலக அதிசய பிறவி ....!!!  & என்னவளே என் கவிதை 45 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் காதல் கவி நேசன் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

என்ன புண்ணியம்

எனக்கு அடுத்த .... ஜென்மம் இருந்தால் .... உன் அழகு சாதனா .... பொருட்களாக பிறக்க ..... வரம் கிடைக்கணும் .....!!! என்ன புண்ணியம் ..... செய்தவையோ .....? உன் உதட்டிலும் ...... கருவிழியில் ..... கண்டபடி ...... விளையாடுகின்றன ....!!! & என்னவளே என் கவிதை 44 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் காதல் கவி நேசன் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

நீ என்னை கிள்ளிய

என் உடம்பில் .... எத்தனை மறுக்கள்..... எத்தனை மச்சங்கள் ..... என்று கேட்க்கிறாய் ....? நீ என்னை கிள்ளிய ...... அத்தனை இடங்களிலும் ..... மறுக்கலும் மச்சங்களும்..... தான் உயிரே .......!!!  & என்னவளே என் கவிதை 43 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் காதல் கவி நேசன் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

சின்ன கிறுக்கல்கள்

நீ ..... அருகில் இருந்தால் ... நீதந்த வலி கூட ....... தெரியவில்லை ......!!! நீ அருகில் .... இல்லாததால்..... இதயத்தின் துடிப்பு கூடவலிக்கிறது ...!!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

சென்றியூ - கவிப்புயல் இனியவன்

நகைத்தாள் நகையை இழந்தேன் நகை திருட்டு $ சென்றியூ கவிப்புயல் இனியவன் 

கற்றுதந்த விலங்குகள்

கற்றுதந்த விலங்குகள் ஹைக்கூ வடிவில் சில *********************************** உடம்பையே வளர்க்காதே நம்பிக்கையையும் வளர் யானை காப்பவனை காப்பாற்று கற்றுதந்தது நாய் குறிக்கோளுடன் வாழ் தன்னிலை இழக்காதே புலி வாழ்க்கை ஒரு சுமை அழாமல் சுமந்துகொள் கழுதை உழைக்காமல் சாப்பாடு மெத்தையில் தூக்கம் பூனை இனப்பெருக்கம் கற்றுத்தந்தது பன்றி

சிந்திக்க வைப்பதே ஹைக்கூ

இறந்த பின்னரும்  நிம்மதியில்லை மர்ம மரணம் & மனித வடிவில் சுற்றும் எமதர்மர்கள் போலி டாக்டர் & சிந்திக்க வைப்பதே ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

சின்ன (S) மன (M) சிதறல் (S) 04

சிலநேரம் ..... கனவு கன்னியாய் .... வருகிறாய்.... சில நேரம் .... கணத்த கண்ணீயாய் வருகிறாய் ....!!! @@@ நீ என்னை பிரிந்து சென்றபின் -ஏன் திருமணத்தை மறுக்கிறாய் ....!!! @@@ நீ வார்த்தையால் .... காதல் செய்ததை .... நான் இதயக்காதல் .... என்று நம்பி விட்டேன் ....!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

சின்ன (S) மன (M) சிதறல் (S) 03

உன் முடிவு சிரிப்பா...? அழுகையா ...? காத்திருப்பது ..... சுகம் - காதலிப்பாய் என்றால் ...??? $$$ உன்னிடம் என் காதல் அடகு வைத்தத்தால் மீட்க வழியின்றி தவிக்கிறேன் ....!!! $$$ காதல் சிலருக்கு சூரிய உதயம் சிலருக்கு அஸ்தமனம் &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

சின்ன (S) மன (M) சிதறல் (S) 02

சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் ------------------------------------ காதல் அழகும் ... அழுக்கும் நிறைந்தது ... ஆனாலும் அழகு ...!!! ^^^^^ கண்ணுக்குள்.... கண்ணீர் மட்டுமல்ல ... இரத்தமும் இருக்கிறது ... மறந்து விடாதே ....!!! ^^^^^ என் காதல் நினைவு உன் காதல் நினைவு எப்படி தாங்கும் என் இதயம் ....!!! ^^^^^^ கவிப்புயல் இனியவன்

சின்ன (S) மன (M) சிதறல் (S)

இதயத்தை முள்ளாய் .... வைத்துக்கொண்டு ... கண்ணை மலராய் .... வீசுகிறாய் ....!!! ^^^^^ நான் விடுவது கண்ணீர் .... என்று நினைக்கத்தே .... நீ தந்த நினைவுகள் ....!!! ^^^^^ காதலில் கண்ணீர் ... வரவில்லையென்றால் ..... இன்பமில்லை .....!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்