இடுகைகள்

ஜூன் 3, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதையின் ரசனை ...

நீ ஏன் என்னை காதலித்தாய் .. காரண காரியம் கேட்காதீர் ... காதல் ரசனையற்று விடும் ....!!! கவிதைக்கும் .... காரண காரியம் கேட்காதீர் .... கவிதையின் ரசனை ... கெட்டு விடும் ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

உன்னோடு வாழ ஆசை ....!!!

உனக்காக உயிர் .... துறக்கமாட்டேன் .... ஆனால் உன்னோடு ... உயிர் துறக்க ஆசை ... உயிர் வாழ ஆசையில்லை ... உன்னோடு வாழ ஆசை ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

காதல் பரிசு ...

என் காதலி எனக்கு .... தந்த காதல் பரிசு ... துடித்து கொண்டிருந்த.... இதயத்தை வலித்து .... கொண்டிருக்க செய்தது ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

நண்பன்

என் கவிதைக்கும் ... என் காதலுக்கும் ... எப்போது உதவுபவன் ... உயிர் நண்பன் தான் ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

பொய் சொல்லாதே ....!!!

நீ என்னை விட்டு பிரிந்தது .... எந்தளவு உண்மையோ ... அதைவிட உண்மை .... நீ என்னை  காதலித்தது.... உன்னிடம் காதல் இல்லை ... என்று பொய் சொல்லாதே ....!!! + காதல் சிதறல் கே இனியவன் 

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... ஒரு கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....!!! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள்   என்னை ஊனமாக்கி என் மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறிய செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....!!! # என் இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்கு தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும் இதயத்துக்கு ... புரியும் ..... ரசிகனே உனக்குத்தான் புரியும் .... நான் படுகின்ற வலியின் வலி ......!!! # ஒருதலையாக காதலித்தேன் ... காதலின் இராஜாங்கம் என்னிடம் .... காதலை சொன்னேன் .... என் இராஜாங்கமே சிதைந்தது ..... காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் .... பரகசியத்தில் இன்னொரு துன்பம் .... காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் .... கண்டு கொல்லாதே ரசிகனே .....!!! # என் காதலுக்கு காதலியின் முகவரி ... இன்னும் தெரியவில்லை ... அதனால்தான் இதுவரை .....