இடுகைகள்

கவிப்புயல் இனியவன் கவிதைகள்

துடிக்கும் இதயம்

  காதல்....... ஆனந்த கண்ணீரில்... ஆரம்பித்து....... ஆறுதல் கண்ணீரில்..... முடிகிறது..........!!! முகில்களுக்கிடையே.... காதல் விரிசல்....... வானத்தின் கண்ணீர்...... மழை..........................!!! நான் வெங்காயம் இல்லை.... என்றாலும் உன்னை..... பார்த்தவுடன் கண்ணீர்.... வருகிறது................!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் (பதிவு 01)

மாமியார் மருமகள்

குடும்ப ஒற்றுமையில் மாமியார் மருமகள்  :::::::::::::::::: வண்டியின் சக்கரங்கள்..  மாமியாரும் மருமகளும்.... / பொறுமையும்  ஏற்றலும்...  வண்டியின் அச்சாகும்.... / முதுமை இளமையின்...  பாசப்பிணைப்பு உறவாகும்.... / பிறந்தவீடு புகுந்தவீடு.... எண்ணம் வேண்டாம்... /  மருமகள்  விட்டுக்கொடுக்கணும்.... மாமியார்  தட்டிக்கொடுக்கணும்.... / முதுமையில் பெற்ற... குழந்தை  மருமகள்.../ இளமையில் கிடைத்த...  தாயே மாமியார்.... / முதலாளி எண்ணங்கள்...  விலக்குதல் நன்று... / இல்லம் என்னும்...  ஆலயம் மிளிரும்... / உறவும் அயலும்..  போற்றி வாழ்த்தும்... / @ கவிப்புயல் இனியவன்  (யாழ்ப்பாணம்)

ச - வரி கவிதை

  அகராதி தமிழ் சொற்கள் கவிதை  "ச " வரிகள்  .......  சதியை மதியால் வெல்...  சங்கடங்களை திறனாய்வு செய்... சகுனம் பார்த்து வீணாகாதே....  சாத்தியம் தவறாமல் வாழ்...  சங்கற்பம் கொள் வெற்றி நிச்சயம்.... !!! சத்துருவை நீயே உருவாக்காதே...  சந்தர்ப்பங்களை தவறவிடாதே...  சந்தேகம் கொண்ட செயல் செய்யாதே...  சமூக நோக்குடனும் வாழ்....  சந்ததி வழி நீடுடுடி வாழ்வாய்.... !!! சம்பிரதாய சடங்கில் மூழ்காதே....  சரணடைந்து மானம் இழக்காதே....  சரீரம் கெடும் பொருள் தொடாதே....  சவால்களை எதிர்கொள்... சரித்திரம் படைப்பாய் பாரினில்.... !!! @ கவிநாட்டியரசர்,  கவிப்புயல் இனியவன்  (யாழ்ப்பாணம்)

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்

  உன்னில்.....  அதிகமாக அன்பு...  வைத்தேன்....  அவதிப்படுகிறேன்.... ! அதிகமாக....  நம்பிக்கை வைத்தேன்....  துடிக்கிறேன்..... ! என் தவறு...  என்னில் அதிகமான அன்பையும்...  நம்பிக்கையும்...  வைக்க தவறிவிட்டேன்....! காதல்...  காதலிக்க மட்டும்...  அல்ல....  வாழ்க்கையையும். கற்றுத்தரும்..... !!! ......... உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள் (01) .....  காதல் கவிதைகள்  .....  கவிப்புயல் இனியவன்  யாழ்ப்பாணம்

சரயோகம்

 சரயோகம்....  உடலுக்கு ஆலய... தரிசனத்துக்கு....  நிகரானது....... !!! உயிருக்கு  இறை  தரிசனத்துக்கு.....  நிகரானது....... !!! @ கவிப்புயல் இனியவன் 

யோகா கவிதைகள்

  செய்யாதே செய்யாதே  ............ வலது நாடி ஓடும் போது..! திருமணம் செய்யாதே...  திருமணபேச்சும் செய்யாதே... வேலைக்கு ஆளை அமர்த்தாதே....  சமாதானம் பேச செல்லாதே...  சூரியநாடி சுடும் நாடி..  அனைத்தும்..  கெட்டுவிடும்...... !!! @ கவிப்புயல் இனியவன்  யோகா கவிதை 

வேண்டாம் வேண்டாம்

  வேண்டாம் வேண்டாம்  ......... இடது நாசி ஓடும் போது....  மருத்துவம் செய்ய வேண்டாம்...  மருந்து உண்ண வேண்டாம்...  ஆசீர்வாதம் பெற வேண்டாம்...  உணவு உண்ண வேண்டாம்....  உறக்கம் செய்ய வேண்டாம்...  அதிகாரியை சந்திக்க வேண்டாம்....  @ கவிப்புயல் இனியவன் 

கவிபுயலின் போன்சாய் கவிதை

  போன்சாய் என்பது ஜப்பான் மற்றும் சீனாவில் மரம் வளர்க்கும் முறையாகும். பெரிய மரங்களை சிறிய தொட்டிக்குள் வளர்க்கும் முறையாகும். ஆலமரம் கூட அப்படி வளர்க்கப்படுகிறது. அந்த எண்ணக்கருவை கொண்டு அமைக்கப்படும் ஒருவகை ஹைக்கூவே போன்சாய் கவிதை ஆகும். எனினும் ஹைக்கூவுக்கும் போன்சாய் ஹைக்கூவுக்கும் அடியேன் கூறும் வேறுபாடுகள்.  1) ஹைக்கூவிற்கு ஒரு மரபு உண்டு. ஓரடி ஈரடி, ஈற்றடி, என்ற மரபு உண்டு. ஆனால் போன்சாய்க்கு அப்படி இல்லை. ஆனால் முடிவு திருப்பமாக அமையும்.  2) ஹைக்கூவில் நகைச்சுவையாக அமைந்தால் அது சென்றியு ஆகிவிடும். இங்கு சமூக விழிப்புணர்வு, நகைச்சுவை எல்லாம். ஒன்றாகவே கருதப்படும்.  3) ஹைக்கூவில் மொழிக்கலப்பு ஏற்பதில்லை. இங்கு அது தவறில்லை.  இவை தவிர வேறுபாடு இருப்பின் நீங்கள் கூறுங்கள் நானும் அறிய விரும்புகிறேன்.  .....  கவிஞன் நிகழ்காலத்தை படம் போட்டு காட்டுபவன். அதற்கேப்ப  தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப போன்சாய் அமைத்துள்ளேன்.  ......  1) உலகமே       வைத்தியசாலை ஆக்கியது        கொரோனா  .......  2) காற்றுக்கு என்ன வேலி       யார் சொன்னது        முகக்கவசம்  ......  3) குற்றம் செய்யாதவருக்கும்.    

கவிதைக்கும் கவிதை நீ

 வியாழன், 17 நவம்பர், 2016 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவிஞன் (கவிப்புயல்)..... அறிவியலுக்கும் கவிதை..... அரசியலுக்கும் கவிதை..... அன்புக்கும் கவிதை..... அம்மாவுக்கும் கவிதை..... காதலுக்கும் கவிதை..... கல்விக்கும் கவிதை..... கடவுளுக்கும் கவிதை..... கவிதைக்கும் கவிதை..... பொல்லாதவருக்கும் கவிதை..... பொருளாதாரத்துக்கும் கவிதை..... பொன்னுக்கும் கவிதை..... பொம்மைக்கும் கவிதை..... எழுதுகிறாய் நீ கவிதை , கவிதை , கவிதை..... உன் திறமைக்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்குமானால்  "வைரமுத்து, வாலி " எல்லோரையும் தள்ளியிருப்பாய் உன் பின்னே..... கவிதையை வாசித்துவிட்டு, எப்படித்தான் இதை எழுதுகிறார்களோ?..... என ஒருவகையான ஆச்சரியம் கலந்த ஏக்கத்துடன் பார்த்த நானும் அரைக்(1/2) கவிஞனானது உன் கவிதையை வாசித்து வாசித்துத் தான். போதாது உனக்குக் கவிப்புயல் பட்டம்..... தொடரட்டும் கவிதைக்கும் தமிழுக்கும் உனது சேவை..... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஆ.இராஜ்மோகன். ஆ. இராஜ்மோகன். நேற்று, 05:21 AM ·  16.11.2016

யோகா கவிதை

 செய்யாதே செய்யாதே  ............ வலது நாடி ஓடும் போது..! திருமணம் செய்யாதே...  திருமணபேச்சும் செய்யாதே... வேலைக்கு ஆளை அமர்த்தாதே....  சமாதானம் பேச செல்லாதே...  சூரியநாடி சுடும் நாடி..  அனைத்தும்..  கெட்டுவிடும்...... !!! @ கவிப்புயல் இனியவன்  யோகா கவிதை 

பஞ்சபூதமும் மனித உறுப்பும்.

  பஞ்சபூதமும் மனித உறுப்பும்.... ....... நிலத்தை நேசித்தால்..  மண்ணீரல் வளமாகும்... ! நீரை நேசித்தால்... சிறுநீரகம் வளமாகும்.... ! நெருப்பை நேசித்தால்...  இருதயம் வளமாகும்... ! காற்றை நேசித்தால்... நுரையீரல் வளமாகும்... ! விண்ணை நேசித்தால்...  கல்லீரல் வளமாகும்.... ! @ கவிப்புயல் இனியவன்

யோகா கவிதை

 யோகா கவிதை  ...........  வலது மூச்சு.....  சூரிய கலை.... ! இடது மூச்சு....  சந்திர கலை.... ! இருதுவாரம்....  சுழுமுனை..... ! சூரிய கலையில்....  தியானம் செய்.... ! சந்திர கலையில்...  பயணம் செய்... ! சுழுமுனையில்....  அமைதியாக இரு.... !!! @ கவிப்புயல் இனியவன் 

கவிதை 360 வசனக்கவிதை

  09) வசனக்கவிதை  அதிசய குழந்தை அவன் ... ஆசான் நான் ... என்னைவிட அவனே முன்னுக்கு " அ " நான் "ஆ " இந்த குழந்தை இப்படியெல்லாம் .... பேசுமா....?  சிந்திக்குமா ...? நம்ப முடியவில்லை என்போர் ... இந்த கவிதையை மூடிவிட்டு  போகலாம் ....!!! இந்த குழந்தை என்னதான்  சொல்லப்போகிறது என்பதை ... பார்க்க விரும்புவோர் .... பொறுமையோடு காத்திருந்து .... தொடராக வரும் வசனக்கவிதையை .... பாருங்கள் .....!!! அதிசயக்குழந்தை .... எப்படி இருப்பான் ...? ஆசான் நேரான சிந்தனையில் ... பேசினால் அவன் எதிர் சிந்தனையில்  பேசுவான் . ஆசான் எதிர் சிந்தனையில்  பேசினால் அவன் நேர் நித்தனையில் ... பேசுவான் - ஆனால் அர்த்தம் இருக்கும் ....!!! ஆன்மீகம் பேசுவான்  அரசியில் பேசுவான்  இல்லறம் பேசுவான்  எல்லாமே பேசுவான்  இலக்கண தமிழில் உரைப்பான்  இந்தாங்கோ என்று பேச்சு தமிழிலும்  பேசுவான் .... கசப்ப்னான உண்மைகளை உரைப்பான் ... இனிப்பான பொய்களையும் சொல்வான் ... மொத்தத்தில் அதிசய குழந்தை  இடையிடையே அதிர்ச்சியை .... தருவான் என்பது மட்டும் உண்மை ....!!! ^ அதிசயக்குழந்தை   வசனக்கவிதை  கவிப்புயல் இனியவன்

கவிதை 360 திருக்குறள் கவிதை

திருக்குறள் கவிதைகள்  ......... திருக்குறளை கவிதயாக மாற்றி எழுதும் என் சிறு முயற்சியில் முதலில் " இன்பத்துப்பால்"  எனும் பகுதியை கவிதை ஆக்கியுள்ளேன் இதனை முதல் முயற்சியாக அடியேன் வடிவமைத்துள்ளேன்.  ....   பெண்ணே நீ யார் ....? என் கண்ணில் மின்னலாய்... பட்டவளே - பெண்ணே ....!!! நீ - பிரம்மன் படைப்பில் ... தங்க மேனியை தாங்கிய  நான் கண்ட தெய்வீக தேவதையா ...? தோகை விரித்தாடும் மயில்  அழகியா ..? எனக்காகவே இறைவனால்  படைக்கப்பட்ட .... மானிட பெண் தாரகையோ ...? கண்ட நொடியில் வெந்து  துடிக்குதடி -மனசு  பெண்ணே நீ யார் ....? குறள் - 1081 தகையணங்குறுத்தல் அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை  மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.   திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 01 ....  இவ்வாறு அனைத்தும் வடிவமைத்துள்ளேன்  நன்றி 

கவிதை 360 திருக்குறள் சென்றியு

 08) திருக்குறள் கவிதைகள்  திருக்குறள் சென்றியு  .......... அறத்துப்பால் -கடவுள் வாழ்த்து - அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (01) கவிப்புயல் இனியவன் திருக்குறள் -சென்ரியூ எழுத்தின் தாய் உலகின் தாய் -அகரம் - ..... அறத்துப்பால் -கடவுள் வாழ்த்து - மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் (02) **** கவிப்புயல் இனியவன்  திருக்குறள் -சென்ரியூ 02 ********** இறை சிந்தனை தொடர் சிந்தனை -நீடிய வாழ்வு - ..... இவ்வாறு 50 க்கும் மேற்பட்ட சென்றியு எழுதியுள்ளேன்  நன்றி