இடுகைகள்

பிப்ரவரி 1, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கனவாய் கலைந்து போன காதல்

எல்லோர் பருவத்திலும் ... வந்த காதல் இவனுக்கும் .... வந்து தொலைந்தது .... யார் இவன் .....? காதலுக்காய் காதல் ... செய்தான் காதோடு .... வாழ்ந்தான் இப்போ .... காதலி இல்லாமல் .... காதலோடு வாழ்கிறான் ....!!! காதல் இளவரசன் .... என்பதா ..? காதல் தோல்வி .... தேவதாஸ் என்பதா ...? இரண்டுக்கும் .... இடைபட்டவன் தான் ... இந்த கவிதை தொடரின் ... நாயகன் - கதாநாயகன் ... " பூவழகன் " தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் ....!!! ^ கனவாய் கலைந்து போன காதல் கவிப்புயல் இனியவன் வசனக்கவிதை 

அதிசயக்குழந்தை - வீடு

அதிசயக்குழந்தை - வீடு ------ எப்போதுமே .... தெருகில் நிற்கிறாயே .... உனக்கு வீடே இல்லையா ...? குழந்தாய் ...? எனக்கு சிறையில் ... இருப்பது பிடிக்காது ... என்றான் சட்டென்று ...!!! வீட்டையேன் ... சிறை என்கிறாய் ...? அது பாதுகாப்பான ... இடமல்லவா ....? இருள் மழை காற்று ... மின்னல் வெயில் .... எல்லாவற்றிலும் இருந்து .... பாதுகாக்கிறதே..... அது எப்படி சிறை ....? ஆசானே .... வாழ்நாள் முழுதும் ... இருள் மழை காற்று ... மின்னல் வெயில் .... எல்லாவற்றிலும் பேராடி ... வாழும் மிருகத்துக்கு ... எங்கே வீடு ....? குழந்தாய் .... அவை இவற்றிலிருந்து .... வாழ்வதற்கான திறனில் ... படைக்கப்பட்டுள்ளன .... அவற்றுக்கு வீடு ...... தேவையில்லை ...!!! அப்போ பலவீனமாக .... படைக்கப்பட்ட மனிதனுக்கே ... வீடு தேவைப்படுகிறது .... அப்படிதானே ஆசானே ...? பலவீனமாய் படைக்கபட்ட ... மனிதனே இயற்கையை .... அழித்தும் வாழ்கிறான் .... எல்லா விடயத்திலும் ... இருந்து வெளியில் வாருங்கள் .... ஆசானே சுதந்திரமாய் .... வாழ்வோம் .....!!! ^ அதிசயக்குழந்தை வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் தொடர் - 0

இதயம் கருகிவிடும்

இயற்கை பூவை .... காட்டிலும் .... நம் காதல் பூ விரைவாக வாடிவிட்டது .....!!! நீ கவலையோடு .... மூச்சு விடாதே .... இதயம் கருகிவிடும் ....!!! நாகம் கொடிய விஷம் யார் சொன்னது ...? உன் நகம் சுண்டும் .... ஓசையை விட வா ..? ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 955

காதலுடன் வாழ்வேன் .

நான் சிப்பிக்குள் இருக்கும் முத்து நீ சிப்பிக்கு வெளியே சேறு.....!!! உன்னுடன் சேகரித்த காயங்களுடன் .... காலமெல்லாம் காதலுடன் வாழ்வேன் ....!!! உன்னால் .... அழுது அழுது இமைகள் .... கூட அழுவதற்கு .... கற்று விட்டன ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 954

நீ ஆயுத எழுத்து

எதற்கும் அஞ்சாதவன் .... உன் கண்ணுக்கு ... அஞ்சுகிறேன்......!!! நான்.... காதலில்  .... உயிரெழுத்து ...... நீ ஆயுத எழுத்து ....!!! அரசியலில் -நீ பேசியிருந்தால் ... வென்றிருப்பாய் .... காதலில் பேசியதால் ... தோற்று விட்டாய் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 953

என்னை உன்னில் புதைத்துவிடு

நீ காதலை .... சொல்லமுதல் .... நான் இன்பமாய் .... இருந்தேன் ....!!! உன் பார்வை எனக்கு அவசர சிகிச்சை மருத்துவ மனை .... உன் வார்த்தை நோய் காக்கும் மருந்து ...!!! நீ சவக்குழி .... நான் சவம் என்னை ... உன்னில் புதைத்துவிடு ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 952

உன் பார்வை எனக்கு பாடை

உன் கண்கள் ... எனக்கு கை விலங்கு.... உன் பார்வை எனக்கு பாடை ....!!! காதல் ஒரு வினோத உலகம் ... கவலைகள் மூலதனம் கண்ணீர் அதன் சொத்து .... மூலதனம் சொத்துக்கு சமன் ........!!! கண்ணீர் துளியால் கவிதை எழுதுகிறேன் பன்னீர் தெளிக்க ஆசைப்படுகிறாய் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 951