இடுகைகள்

ஜூன் 27, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்பை காட்டவிலையே

ஏனடி பிரிந்த பின் இவ்வளவு அன்பு காட்டுகிறாய் .................?  உன்னோடு இருந்தபோது இவ்வளவு அன்பை காட்டவிலையே .......? இருந்த போது நான் பட்ட துன்பத்தை விட பிரிந்த பின் துன்பம் சுகமாக உள்ளது ....!!! பிரிந்து இருந்து அன்பு காட்ட வேண்டாம்! நீ அருகில் இருந்து சண்டை போடு அது போதும்!!!...

இருதய மாற்று சிகிச்சையா செய்து விட்டாய்

நீ என்ன இருதய மாற்று சிகிச்சையாசெய்து விட்டாய் ..? இத்தனைகாலம் பழகி எத்தனையோ நினைவுகளை தந்துவிட்டு .. எதுவுமே இல்லததுபோல் .. தலையை குனிந்துகொண்டோ செல்லுகிராயே நீ என்ன ? இருதய மாற்று .... சிகிச்சையா செய்து விட்டாய் ?

சொல்வதாயின் சொல்லிவிடு

நீ ஓடி விளையாடுவது என் இரத்த ஓட்டத்தில் நீ ஒழித்து என் மூட்டு எலும்புகளில் நீ வீணை வாசிப்பது என் நரம்பு தொகுதியில் நீ  நடந்து திரிவதுஎன் இதய வீதியில் நீ கூதல் காய்வது என் மூச்சு காற்றில் நீ கோபப்படுவது என் வியர்வையில் தெரியும் நீ சந்தோசப் படும் போது என் உடல் சிலுக்கும் நீ தூங்கி எழுவது இதய அறையில் நீ சொல் நான் இல்லாமல் நீ வாழமுடியுமா ..? நீ இல்லாமல் நான்தான் வாழமுடியுமா ..? செலவதாயின்சொல்லி விட்டு செய் ...!