இடுகைகள்

ஜூன் 14, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா...?

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா...? ----------------------- கோயிலில்லா ஊரில் ... குடியிருக்கலாம் .... காதல் இல்லா ஊரில் ... குடியிருக்காதீர்கள்...! உப்பில்லா பண்டம் ... குப்பையிலே .... காதல் இல்லா இதயம் .... குழியினிலே .....! ------- அதிகாலையில் .... காதலோடு துயிலெழுங்கள்.... அதுவே உன்னத தியானம் ...! இரவில் .... காதலோடு உறங்குங்கள் .... அதுவே உன்னத நிம்மதி ....! ------- எங்கும் ... நிறைந்த காதலே .... நீ என்னோடு இருக்கிறாய் .... என்ற தைரியத்தில்தான் .... கவிஞனாக இருக்கிறேன்....! நீதிமன்ற கூண்டில் நின்று .... சொல்வதெல்லாம் உண்மை.... உண்மையை தவிர வேறு.... எதுவுமில்லை -என்று ... சொல்வதுபோல் -நானும் ... உறுதிமொழி சொல்கிறேன்....! ^^^ கவிப்புயல் இனியவன்