இடுகைகள்

டிசம்பர் 22, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கே இனியவன் - சிந்தனை கிறுக்கல்கள்

கண்ணால் வளர்த்து ... கண்ணீரால் கருகும் ... வாழ்க்கை வேண்டாம் ...!!! @@@@@ கண்ணீருக்குதான் ... சிந்தவும் தெரியும் .... சிந்திக்கவும் தெரியும் ....!!! @@@@@ எல்லா இடத்திலும் ... உண்மை பேசியவனும் ... துன்பத்தை அனுபவிப்பான் ....!!!'

ஒரு சிந்தனை கவிதை

நான் அரசியல் வாதியாவேன் .... அடுத்த வேளை உணவுக்கு ... போராடினாலும் என்  கர்வம் ... விட்டு கொடுக்கமாட்டேன் இறந்தாலும்..இறப்பேன் என் வறட்டு கர்வத்தை விடவே மாட்டேன் .....!!! இஸ்ரப்பட்டு கஸ்ரப்பட்டு ... நல்லவனாக நடிக்க நாள் தோறும் ... ஒவ்வொரு வேடம் போடுவேன் ... முட்டாள்கள் நான் உண்மையானவன் ... என்று ஏமார்ந்து கொண்டிருக்கிறார்கள் .... சிலகாலத்தில் குறுக்கு வழியால் .... பணம் சம்பாதிப்பேன் - அதில் ஒரு பகுதியை சமூக தொண்டு செய்வேன் ...!!! சமூக சிப்பி.. சமூக பற்றாளன் ... சமூகத்தில் பிரதி நிதி என்று ... சமூகம் பட்டம் தரும் -அதுவே ...... அரசியலுக்கான அடிப்படைத்தகுதி ... அரசியல் வாதி ஆவேன் - அப்போதான் சொன்னதை செய்யதேவையில்லாத ... சமூக தொண்டன் ஆவேன் .....!!! உண்மை அரசியல் வாதிகளை ... ஏளனம் செய்வேன் .வாழதெரியாத .. பச்சோந்திகள் என்பேன் .....! இறப்பேன் எனக்கு சிலை வரும் .... இறந்தபின்னும் சமூக தொண்டனாக ... என் சார்பு மக்களுக்கு தலைவனாக ... வாழ்ந்து கொண்டிருப்பேன் ......!!!    

காட்சியும் கவிதையும் 02

படம்
தெய்வத்தை நாம் தான் ... வணங்கவேண்டும் ... தெய்வம் எங்களை வணங்க ... கூடாது ....!!! தாயே நீங்கள் ... இருகரம் கூப்பி நிற்கும் ... போது அடிவயிறுவரை ... வலிக்கிறது ...!!! எந்த தாயும் ... கரம் கூப்பி வரம் கேட்க ... வைக்காதீர் - அது எமக்கு ... சாபம் ....!!!

காட்சியும் கவிதையும் - 01

படம்
நாம்  நடை பழகும் போது ...  எமக்கு ஊன்று கோல்...  நம் தாய் - நடை இடறி ...  நாம் விழுந்தாலும்...  தன்னையே நிந்திப்பார் ...  தாய் .....!!!  தாயே ....  நீங்கள் நடை இடறும் போது...  நாங்கள் தானே உமக்கு ...  ஊன்று கோல் - எதற்காக  இந்த பட்டவயத்தில் ஏன்...  இந்த பட்ட தடி ...?  தாயே புரிகிறது ...  உங்கள் சிந்தனை ...  பிள்ளையை சுமந்த நீங்கள் ...  பிள்ளைக்கு சுமையாய் இருக்க ...  விரும்பவில்லை போலும் ...!!!

என் தனிமை ....!!!

தனிமையில் இருந்து ... என்னையே நினைத்தேன் ... தனிமை இனிமையாக இருந்தது ...!!! இப்போ ... தனிமையில் இருந்து .. உன்னை நினைக்கிறேன் ... கொடுமையாக இருக்கிறது ... என் தனிமை ....!!! + உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

என் வலி புரியும் உயிரே ....!!!

பிரிந்து விட்டோம் என்று ... நீ எப்படி சொல்வாய் ....? பிரித்தெடுக்க உன் நினைவுகள் ... என் இதயத்தில் பசையால்... ஒட்டப்படவில்லை ....!!! நீ தந்த நினைவுகள் ... உனக்கு கடுகாய் இருக்கலாம் ... எனக்கு அது கருங்கல் ...!!!  + உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

அழைப்பிதல் தருகிறாய் ....!!!

காதல் கடிதத்தை எதிர் பார்த்தேன் திருமண அழைப்பிதல் தருகிறாய் ....!!! + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

காதல் மரமாக ...

காதல் மரமாக ... தோன்றுவதில்லை ..... தளிராகதான் தோன்றும் ...!!! + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

நம்காதல் ....!!!

கருங்கல்லில் .... ஆணி அடிப்பது போல் .... நம்காதல் ....!!! + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

( SMS ) கவிதை

காதலில் ஓடி விளையாடியது நீ தடக்கி விழுந்தது - நான் + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

உன் நினைவு ....!!!

தொலைவில்  இருக்கும் .... போது அனலாய்கொதிக்குது ... உன் நினைவு ....!!! + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை