திங்கள், 6 ஜூலை, 2015

உலகில் ஏதும் உண்டோ ...?

அம்மா....!!!

நடை பழகும்போது ...
கை கொடுத்தாயம்மா .....
இடறி விழும்போது ...
இடுப்பில் சுமந்தாயம்மா ....
பள்ளி செல்லும் போது ....
கால் வலிக்க நடந்தாயம்மா ....
புத்தகப்பையுடன் என்னையும் ...
தோள் சுமந்தாயம்மா ....!!!

அம்மா ....!!!

கருவறை சுமைமட்டும் ....
நீ சுமக்கவில்லை ....
உன் உடலின் அத்தனை ....
உறுப்புகளிலும் என்னை ....
சுமந்தாய் ...........!!!

அம்மா .....!!!

மடியில் வைத்து பாடம் ....
தந்தாய் இப்போ நான்....
பலபடிகள் தாண்டி பலநாடு ....
சென்றேன் - புரிந்தேன் ...
அன்னையின் மடியைவிட ....
எந்த ஒரு பல்கலை கழகமும் ...
இல்லவே இல்லை ......!!!

அம்மா ....!!!

கவிதை எழுத முனைவேன் ....
வார்த்தைகள் வந்து தடுக்கும் ....
அம்மா என்றவுடன் அத்துணை ...
சிந்தனையும் வெற்றிடமாய் ....
மாறிவிடும் - தாயே உம்மை ...
எதனோடு ஒப்பிடுவது ...
தாயை தாண்டி ஒப்பிட ....
உலகில் ஏதும் உண்டோ ...?
இப்போதும் பாரம்மா ...
ஏதோ உளறிக்கொண்டே ...
இருகின்றேன் .....!!!என் இதயமோ வலிக்குதடி ......!!!

எனக்கு
இறந்தகாலம் ....
நிகழ் கால காலம் ....
எதிர்காலம் எல்லாமே ....
நீதான் உயிரே ....!!!

இறந்தகாலம் -நீ
என்னை காதலித்தது ....
நிகழ்காலம் உன் நினைவோடு ....
நான் வாழ்ந்துகொண்டிருப்பது ....
எதிர்கால உன் கல்லரையோடு ....
நான் உறங்குவது ....!!!

எல்லோருடைய இதயமும் ....
துடிக்கிறது - என் இதயமோ ....
வலிக்குதடி ......!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

பேசதுடிக்கிறது மனசு ....!!!

உன்னை கண்டவுடன் ....
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் ...
பேசதுடிக்கிறது மனசு ....!!!

எங்கே என்னை நீ ...
தவறாக புரிந்து விடுவாயோ ...?
பயத்தால் என் எண்ணங்களை ...
குழி தோண்டி புதைத்து ....
விடுகிறேன் ......!!!

என்னை எரித்து கொல்....!!!

என்னவளே ....
எங்கு வேண்டுமென்றாலும் ...
உன் கோபபார்வையில்...
என்னை எரித்து கொல்....!!!

என் இதயத்தை ...
உன் கோபபார்வையால் ...
பார்க்காதே - உள் இருப்பது ...
நீ .....!!!

உன்னோடு வாழ்வதே காதல் ....!!!

அருகில் 
இருக்கும் போது ....
காதல் இனிப்பதை விட ...
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!!!

யாரோடும் வாழ்வது வாழ்கை ....
உன்னோடு வாழ்வதே காதல் ....!!!

உனக்கு தெரியுமா ..?

என் 
கவிதையை ரசிக்கும் ..
உனக்கு தெரியுமா ..?
]
நான் 
உன்னை ரசிப்பதால் ...
என் கவிதையை எல்லோரும் ...
ரசிக்கிறார்கள் என்று ...

ஞாயிறு, 5 ஜூலை, 2015

"கவி நாட்டியரசர் "

"கவி நாட்டியரசர் " என்ற
விருது அளிக்க படுகின்றது !
---------------------------------------------
இனியவருக்கு ஒரு இனிய பதிவு
------------------------------------------------

யாழ்ப்பாண எழுத்தரே !

கற்பித்தல் தொழிலா ?
கவி படைத்தல் தொழிலா ?

ஆய்வில் பதிவுகள்
பல ஆயிரம் !

அலுப்பிலா பதிவில்
அம்சமான நடையில்
ஆணித்தரமான எழுத்துக்கள் !

வாக்களர் பட்டியலில்
வாக்குகள் உமக்கு ஏராளம் !

சுவாசம் கவி !
எழுத்து கவி !
எண்ணங்கள் கவி !
உணர்வுகள் கவி !
கவிதைகளில்
அரங்கேற்றம் படைத்த உமக்கு

"கவி நாட்டியரசர் " என்ற
விருது அளிக்க படுகின்றது !

தொடரட்டும்
இனியவரின்
இனிய
இளமையான
கவி நாட்டியம் !

நன்றி ; எழுத்து தளம்
நான் முதல் முதலில் கவிதை படைத்த என் அருமை தளம்
மிக்க நன்றி ;: கிருபா  கணேஷ் (கவி எழுதி பாராட்டியமைக்கு )

-------------------------------------------------------
பாராட்டிய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி
----------------------------------------------------
1) JINNA • 11-May-2015 12:41 am
நல்ல முயற்சி...
நல்ல புகழ்ச்சி...
நல்ல மனிதருக்கு சென்று சேரட்டும்...

வாழ்த்துக்கள் தொடருங்கள்...

2) Mohamed Sarfan • 11-May-2015 12:04 am
எனது தளத்திலா?
வாழ்த்துக்கள் கே.இனியவன் அவர்களுக்கு

3)
HARI HARA NARAYANAN.V • 11-May-2015 12:01 am
கவிதைக்கொரு கவிதையென என்
கருத்திலிதை இயற்றி வைத்தேன்....!

முத்தமிழால் கிரீடம் செய்தே கவி
முழுமைக்கு சூட்டக் கண்டேன்.........!!

அருமை இது அருமை ஆனந்தித்தேன்
அழகுதமிழ் நடை கண்டு நான் ரசித்தேன்...!!

கவிநடையை கண்டதுண்டு - இங்கு இனியவரின்
கவிநாட்டியம் கண்டு களித்தேன்.....!!

கிருபை அது இறை மனது கவிச் சிகரம் புகழ்ந்திடவே - என்
சிறுமனதும் பழகியதே பாராட்டும் நற் குணத்தை....!!

தகுந்த பாராட்டு - அதற்கு என் மனம்
திறந்த நன்றிகள் - பூச்செண்டு....!!


அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி
கே இனியவன் 

சிறப்புடைய இடுகை

உள்ளத்தில் பூவை.....

உள்ளத்தில் பூவை..... மலர வைக்காவிட்டாலும்.... பரவாயில்லை..... பூமரத்தின் வேரை.... சேதமாக்கும்செயல்களை நினைக்காதீர்....... என்றோ ஒருநா...