இடுகைகள்

நவம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீயும் மாறுவாய்

உன்னைப்போல் .... பிறக்கவேண்டும் ... இதயத்தை கல்லாக ... மாற்றி வைக்கும் .... உன்னத பிறப்பாக  .... பிறக்கவேண்டும் ...!!! அடிமேல் அடியடித்தால் ... கருங்கல்லும் குழியும் .... நீ என்ன விதிவிலக்கா ...? நீயும் மாறுவாய் ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

நம்பிக்கை ஊட்டுகிறது இதயம்

உன் வரவுக்காய் ..... நீ வரும் தெருவில் ... கால் வலிக்க ...... காத்திருக்கிறேன் .... கண்டும் காணாமல் .... போகிறாய் ....!!! போகட்டும் விடு.... என்கிறது இதயம் ....! கண்கள் தன்னை .... அழுகின்றன ...... அதற்கு நம்பிக்கை .... நம்பிக்கை ஊட்டுகிறது .... இதயம்....! கலங்காதே சிந்திப்பாள் ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

என் மூச்சு நிற்கவும்

அன்று நீ சொன்ன .... ஒரே ஒரு .... வார்த்தைதான் .... நான் இன்றுவரை .... மூச்சோடு இருக்க ... காரணம் ....!!! இன்று நீ சொல்ல இருக்கும் ஒரே ஒரு .... வார்த்தைதான் .... என் மூச்சு நிற்கவும் ... காரணம் மறந்துவிடாதே ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

கனவுகளை கண்ணீர் ஆக்குகிறாய்

நினைவுகளை .... வியர்வையாகும் - நீ கனவுகளை கண்ணீர் .... ஆக்குகிறாய் ....!!! நான் விண் சென்றபின் .... நீ மண்ணில் வாழ்வதும் .... நீ விண் சென்றபின் ..... நான் மண்ணில் வாழ்வதும் ... என்றுமே நிகழ போவதில்லை ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

இதயத்தை கிழிக்காதே

என் கவிதையை கிழிப்பதும் ... இதயத்தை கிழிப்பதும் ... ஒன்றுதான் அன்பே ....!!! உனக்கு .... என் கவிதைகள் .... ரசிப்பதற்காக இருக்கும் ... எனக்கோ ஒவ்வொரு வரியும் .... உன்னோடு வாழ்ந்து கொண்டும் .... உனக்காக இறந்துகொண்டும் .... இருக்கும் வாழ்க்கை வரிகள் ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

அவள் தந்த நினைவு

அவள் தந்த நினைவு .... பரிசுகள் ஒவ்வொன்றும் .... இதயத்தின் அருங்காட்சி .... பொக்கிஷங்கள்...... அவளின் ஒவ்வொரு வார்த்தையும் .... ஒவ்வொரு கவிதைகள் ....!!! + எனக்கு கல்லறை .... கட்டதேவையில்லை .... என் இதயமே கல்லறை .... ஆகிவிட்டது ....!!! எனக்கு கல் வெட்டு ... அடிக்கதேவையில்லை .... என் கவிதைகளே .... கல் வெட்டுக்களாகிவிட்டன ...!!! @ கவிப்புயல் இனியவன்  காதல் ஒன்று கவிதை இரண்டு

காதல் ஒன்று கவிதை இரண்டு

உன்னை .... காதல் செய்த நாளே .... காதலில் கருத்தரித்த நாள் .... என்னை .... காதலித்த நாளே .... காதலின் பிறந்த நாள் ....!!! + உன்னை ..... மறக்கும் நாள் வரின் .... என்னை இழக்கும் நாள் .... தொடங்கும் ..... உன்னை .... இழக்கும் நாள் தோன்றின் .... என் ......... மரிக்கும் நாள் தோன்றும் ....!!! @ கவிப்புயல் இனியவன்  காதல் ஒன்று கவிதை இரண்டு 

காதலையும் விட்டுவிட்டேன்

என்னவள் கோபப்பட்டாள்... என் கோபத்தை விட்டேன் .... என்னவள் ஆசைபட்டாள்.... என் ஆசைகளை விட்டேன் .... காதலையும் விட்டுவிட்டேன் ...!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 32

முகம் புகைப்படமாய்

உன்னை பிரிந்து பலகாலம் .... உன் முகம் புகைப்படமாய் ..... உன் நினைவுகள் திரைப்படமாய் .... உன் கனவுகள் ஒளிதிரையாய்.... வந்துகொண்டே இருக்குதடி ....!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 31

என்னை கருக்கி விட்டாள்

பார்வையில் நெருப்பாய் இருந்தாள்.... பேசுவதில் தீயாய் இருந்தாள் .... கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் .... அன்பில் அழகான சுடராய் இருந்தாள் .... காதலால் என்னை கருக்கி விட்டாள்....!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 30

அதிகமாக நம்பினேன்

அதிகமாக நம்பினேன் .... அளவுக்கு மீறி அன்புகொண்டேன் ..... அகிலத்தையே மறந்தேன் .... ஆதரவற்று நிற்கிறேன் .... அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ....!!! + கவிப்புயல் இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 29

எப்போது ஒரு இனம் அழிகிறது ...?

எப்போது ஒரு இனம் அழிகிறது ...? ------ விடுதலை  போராட்டங்கள் .... எதுவும் பொழுதுபோக்கு செயளல்ல.... மடிந்தவர்கள்  மண் பொம்மைகளல்ல..... போராடிய காலம் எந்தளவோ.... விடுதலைக்காக காத்திருக்கும் காலமும் ....!!! எப்போது ஒரு இனம் அழிகிறது ...? பொருளாதார வளங்கள் அழியும்போது .... பொருளாதார தடை விதிக்கும் போது .... பொருளாதாரமே வாழ்கை எனநினைக்கும் போது.... பொருளாதாரத்தை வாழ்க்கையாக நினைக்காதபோது .... யாவற்றுக்கும் மேலாக ஒரேஒரு காரணம் .... இனத்தின் அடையாளங்களை அடமானம் .... வைக்கும்போதும்  இனம் வரலாற்றை மறக்கும் போதும் ....!!! தந்து விட்டுப்போன சுதந்திரத்தை .... தட்டிகழிக்காமல் புத்திகொண்டு போராடுவோம் .... பக்திகொண்டு போராடுவோம் ..... உணவோடு உணர்வையும் ஊட்டி வளர்ப்போம் .... எமகென்னெ யாரும் போராடட்டும் என்ற .... எண்ணத்தை எண்ணை ஊற்றி எரிதுடுவோம் ......!!!

ஏமாறமாட்டேன்

ஏமாறமாட்டேன் .... எப்படி ஏமாற்றுவது ... என்பதை உன்னிடம் .... கற்றுகொண்டேன் .... இனியாரும் என்னை .... ஏமாற்ற முடியாது ....!!! காதலிக்க மாட்டேன்.... யாரையும் காதலிக்க மாட்டேன் .... இதயமில்லாத உன்னைப்போல் ... யாரையும் காதலிக்க மாட்டேன் ...!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

என்னோடு இருந்தவளே ....!!!

என் ஆனந்த காற்றாய் .... ஆரோக்கிய காற்றாய் .... என்னோடு இருந்தவளே ....!!! சிரிக்கும்போது .... உன்னோடு சத்தமாய் .... சிரித்தேன் .... அழும்போது தனியே .... உனக்கு கூட தெரியாமல் .... அழுகிறேன் .... என் அழுகையால்.... உன்கண்கள் கலங்கிட கூடாது ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

கருகாத பூக்கள் .....!!!

கருகாத பூக்கள் .....!!! ------- எம் ..... மண்ணில் தான் .... கறுப்பு பூக்கள் அழகழகாய் .... பூத்தது - பூத்த பூக்கள் .... வாடிவிட்டதே - நினைக்காதீர் .... எம் மனதில் என்றும் வாடாமலர் .... உலகில் என்றும் வாடாமலர்கள் ....!!! எம்  மண்ணில்தான் கடலில் .... நீலபூக்கள் பூத்தன .... பூத்த பூக்களை அலை .... அடிதுவிட்டதே - நினைக்காதீர் .... கடல் நீரில் பூத்த செந்தாமரைகள் .... காலத்தால் அழியாத தாமரைகள் ...!!! கறுப்பு எண்ணங்களாலும் .... கருப்பு ஜூலையாலும் .... கருத்தரித்ததே எம் கருப்பு பூ .... கறுப்பு சிந்தனைகளால் .... கருக்கபட்டபூக்கள் காலத்தால் .... கருகாத பூக்கள் .....!!!

விரும்பி கொண்டே இருக்கிறேன்.....!!!

என்னவளே .... நீ இந்த உலகத்தில் ..... விரும்பாத ஒன்றை... நான் இன்னும் விரும்பி .... கொண்டே இருக்கிறேன்.....!!! ஆண்டுகள் கடந்தும் .... என்னில் உனக்கு காதல் .... வரவில்லை - நானோ .... உன்னை காதல் செய்கிறேன்....!!! 

மரணத்தின் தூரத்தை தூரமாக்கியது

இறைவா என் இதயத்துக்கு..... இரண்டு சிறகுகள் தா.... நீண்ட தூரம் சென்று -அவள்.... நினைவுகளோடு உல்லாசமாக .... அலைவதற்கு ..! மரணத்தின் தூரத்தை .... தூரமாக்கியது என்னவளின் .... அருவியாய் வந்த காதல் .... நரகமாக இருந்த வாழ்கையை .... சொர்க்கமாக்கியவள் .....!!!

அவளின்றி நான் இருக்கமாட்டேன்

கண்டேன்  என் தேவதையை கண்டேன் .... கண் குளிர கண்டேன் என்னவளே ....!!! அவளருகில் ..... ஆயிரம் பட்டாம் .... பூச்சிகள் பறப்பதுபோல் .... ஆயிரம் ஆயிரம் பெண்கள் ... அத்தனைக்கும் மத்தியில் .... தேவதையை கண்டேன் ....!!! அவளுக்கு  நான் யாரென்று தெரியாது.....  அவளின்றி நான் இருக்கமாட்டேன் .......  அவளுக்கு தெரியாது ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 21 கவிப்புயல் இனியவன்

தோல்விகள் தோன்றாவிட்டால் ...

என்னிடம் ... குவிந்து கிடக்குறது....  தோல்விகள் .... கலங்கவில்லை .... தோல்வியை விட .... குவிந்து கிடக்கிறது .... தன்னம்பிக்கை ....!!! தோல்விகள்  தோன்றாவிட்டால் ... தன்னம்பிக்கை என்ற ... சொல்லே இல்லை ...!!!

வெற்றி ஒரு விருட்சம் ....

வெற்றி ஒரு விருட்சம் .... வெற்றி வர வர வளர்ந்து .... கொண்டே போகும் ....!!! தன்னம்பிக்கையே .... வெற்றியின் விதை .... நன்றாக நாட்டிடு .... தன்னம்பிக்கையால் ... உரமிடு .... வியர்வையால் நீர் ஊற்று .... வெற்றி விருட்சமாய் ... வளர்ந்து கொண்டே இருக்கும் ...!!!

இப்போ அடைமழை ....

இப்போ அடைமழை .... வானத்தை எந்த காதலி ... ஏமாற்றினாளோ ...? என்  நினைவுகள் .. உனக்கு தூறல் மழை ... எனக்கு அடைமழை ...!!!

எல்லாம் காதலின் விதி ...!!!

காதல் மனம் ..... விட்டு பேசவேண்டும் .... என்றெல்லாம் இல்லை ... மனதுக்குள் பேசினாலே .... போதும் ....!!! ------ எல்லோருக்கும் .... என்னை பிடிகிறது .... எல்லோரும் என்னில் ... அன்பை பொழிகிறார்கள் .... உனக்கு மட்டும் என்னை ... பிடிக்கவில்லை .... எல்லாம் காதலின் விதி ...!!!

காதல் ஒரு வலி

காதல் ஒரு வலி ---- என் கண்ணீர் துளிகள்..... உன்னில் படும் கூடவா ..? உன் இதயத்தில் ஈரம் ... வரவில்லை ....? என் மூச்சு காற்று ... பட்டும்கூடவா ....? உனக்கு இன்னும் ... காதல் பிறக்கவில்லை ...?

இதுதான் காதல்

இதுதான் காதல் --- நான் எதை பேசினாலும் ... உனக்கு தப்பாய் ..... தெரிகிறது ....!!! நீ தப்பாய் பேசினாலும் ... எனக்கு சரியாய் .... தெரிகிறது ...!!!

உயிர் இருந்தென்ன லாபம் ..?

என்னை கண்டவுடன் .... எனக்காக உன் உயிரை .... தருவாயா  என்று கேட்டு ... விடாதே ...? தருவேன் நிச்சயம் ....!!! நீ அடுத்த ஜென்மத்தில் என்னை காதலிப்பாய் ... என்று சத்தியம் செய் ... உயிரையே தருவேன் ... உன்னை காதலிக்காத ... உயிர் இருந்தென்ன லாபம் ..? + கவிதையால் காதல் செய்கிறேன் 20 கவிப்புயல் இனியவன்

எப்போது காதலிக்கிறாய் ...?

கண் ... பட்டால் கூடாது கண் நூறு பட்டிடும் ... உன் கண் எப்போது ... என்னில் படும் ...? உன்னால் காதல் ... நோயாக மாறிடுவேன் ...!!! தினமும் உன்னை .... எதிர்பார்கிறேன் ... எப்போது வருவாய் ...? எப்போது காதலிக்கிறாய் ...? + கவிதையால் காதல் செய்கிறேன் 18 கவிப்புயல் இனியவன்

நிழலாக காதலித்தால் போதும் ....!!!

காதலின் அழகு .... முகத்தில் தெரியும் ... உன் முகம் தெரியாமல் .... காதல் செய்கிறேன் .... உன் அகம் அழகாக ... இருப்பதால் ....!!! உனக்கு ஒரு பெண் .... கிடைக்கவில்லையா ....? கேலிசெய்தவர்கள் .... இப்போ வாய் அடைத்து ... நிற்கிறார்கள் -நீ  காதலானதால் ....!!! அதுவெல்லாம் இருக்கட்டும் .... உயிரே நீ எங்கிருகிறாய் ...? எப்போது என்னை காண்பாய் ...? நம் காதல் எப்போது மலரும் ...? கவிதையால் எப்போவரை .... காதலிப்பேன் ....? + கவிதையால் காதல் செய்கிறேன் 17 கவிப்புயல் இனியவன்

நிழலாக காதலித்தால் போதும் ....!!!

நான் உன்னை முழுமையாய் .... காதலிக்கிறேன் ... நீ என்னை நிழலாக .... காதலித்தால் போதும் ....!!! உன்னை இதயத்தில் ... சுமக்கும் பாக்கியத்தை ... தந்தாய் அதுவே போதும் .... என்னை இமையில் வை ... கண் மூடும் போது... இணைகிறேன் ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 16 கவிப்புயல் இனியவன்

அகராதி என் காதல் அகராதி

அகராதி என் காதல் அகராதி அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ... அகங்காரம் கொண்டவளே நீ அழகு .... அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு .... அகடவிகடம் கொண்டவளே நீ அழகு .... அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!! அகம் முழுதும் நிறைந்தவளே ..... அகமதியால் காதலை இழந்தவளே.... அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ...... அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் .... அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!! அச்சப்படாதேயடா என்னவனே ..... அச்சுதனடா என்றும் நீ எனக்கு ..... அகந்தையும் அகமதியுமில்லை .... அடர்த்தி கொண்டதடா நம் காதல் ...... அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!! அடைமழை போல் இன்பம் தந்தவளே .... அந்தகாரத்தில் வந்த முழுநிலவே ..... அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி .... அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் .... அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!! அகமதி - செருக்கு  அகோராத்திரம் - பகலும் இரவும்  அந்தகாரம் - இருள் கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை  கவிஞர் ; கவிப்புயல் இனியவன்

பூக்களால் கவிதை எழுதுகிறேன்

உன்னை .... காதலித்ததால் .... எனக்கு விஞ்சியது .... ஒன்றே ஒன்றுதான் .... கவிதை ....!!! பூக்களால் கவிதை .... எழுதுகிறேன் .... சோகத்துடன் வாசிக்காதே .... பூக்கள் அழுதுவிடும் ....!!! நீ  எதை பேசினாலும் .... அதில் அர்த்தமில்லை .... அர்த்தமாக்கவே .... கவிதை எழுதுகிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 900

என்னை விட்டுவிடு .....!!!

தத்தளிக்கிறேன் .... என்னை காதலில் இருந்து ... காப்பாற்று ....!!! எனக்காக  வாழ ஆசைபடுகிறேன் .... என்னை விட்டுவிடு .....!!! நான் சிறுகதை .... எழுதுகிறேன் -நீ  தொடர்கதையாய் .... வர ஆசைபடுகிறாய்....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 899

அப்போதே இறந்துவிட்டேன் ...!!!

நீ பனிகட்டி ... என்னை உறைய ... வைத்துவிட்டாய் ......!!! நீ எப்போது என்னிடம் வந்தாயோ .. அப்போதே  இறந்துவிட்டேன் ...!!! உன்னோடு இருக்கையில் ... இரவெல்லாம் பகல் .... இப்போ பகல் எல்லாம் .... இரவு விடியமாட்டேன் ... என்கிறது இரவு ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 898

நான் கண்ணீர் விட்டதை .

நீ காற்று .... எப்படி வருகிறாயோ ...? ஆனால் வருகிறாய் .... நீ இல்லாமல் எப்படி ....? வாழ்வது ...? நான் கண்ணீர் விட்டதை .... புற்கள் பனித்துளியாய் .... எடுத்துவிட்டன .....!!! நான் மூச்சு ... விட்டதை பஞ்சுகள் ... உல்லாசமாய் எடுத்து ... மகிழ்கின்றன ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 897

நான் அழத்தயார்....!!!

நீ தீபமாய் இரு .... அப்போதும் நான் .... விட்டில் பூச்சியால் .... உன்னால் இருப்பேன் ...!!! என் கண்ணீர்த்துளிகள் ... வைரக்கல் போல் தெரிகிறதா ...? அப்போ உனக்காய் .... நான் அழத்தயார்....!!! நீ கற்பனையாய் இரு .... அப்போதுதான் எனக்கு .... கவிதை வரும் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 896

எப்போது வருவாய்

எப்போது வருவாய்  .... காத்திருந்து கலைத்து விட்டது .... இதயம் ...!!! என்றாலும் .... அது உன்னை பாராமல் .... உறங்கமாட்டேன் என்று ... அடம்பிடிக்கிறது....!!! இதயத்தின் வலி .... இன்னொரு இதயத்துக்கதான் புரியும் ....!!!

பகலில் நிலாதெரியும்..

காதலரின் பயிற்சி களம் நிலகண்ணாடி..... காதலரின் முயற்சி களம் முக கண்ணாடி ...!!! @@@ காதலித்துப்பார் பகலில் நிலாதெரியும்.. காதலில் தோற்றுப்பார் இதயத்தில் சூரியன் எரியும் ....!!! + கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

காதலில் துன்பம் ...!!!

இதயத்தில் வருவது முக்கியம் இல்லை .. இதயமாக இருப்பதே முக்கியம் .....!!! ### காதலில் சின்ன சண்டை இன்பம்.... சின்ன சந்தோகம் காதலில் துன்பம் ...!!! + கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

மீன் தொட்டியில் இருக்கும் மீனைப்போல் .... உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் காதலால் ...!!! @@@ நீ என் காதல் பூவா...? முள்ளா ..? உண்மை காதல் உண்மை சொல்லும் ....!!! + கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை ###### என்னை சுற்றி அடைக்க பட்ட முள் வேலி நீ ...!!! உன்னை சுற்றி வரையப்பட்ட வட்டம் நான் ...!!! $$$ காதல் ஒரு மாதுவால் வரும் மது....!!! கவிதை மாதுவால் வந்த வலி ....!!! + கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

ஒரு நாள் அழுவாய் ....!!!

காதலித்துப்பார் ஆரம்பத்தில் சிரிப்பாய் .... என்னைப்போல் ஒரு நாள் அழுவாய் ....!!! @@@ இதமாக இருந்த இதயத்தை .... இதய சோலையாக மாற்றும் காதல் ...!!! + கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

வாழ்க்கை சிறக்கும்

அன்று வேப்பெண்ணெய் தந்தாள் இனித்தது .... இன்று கற்கண்டு தந்தாள் கசக்கிறது ....!!! ----- காற்றிருந்தால் தான் பட்டம் பறக்கும் காதல் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும்

கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

காதல் ஒரு வழி பாதை புரிந்து கொள்  நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!!! ----- உன்னோடு வாழவும் துடிக்கிறேன்.... மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!!! ----- உதடு சிரிக்கிறது ... இதயமோ அழுகிறது ......!!! ------ + கவிப்புயல் இனியவன்  இரு வரிக்கவிதை

SMS அனுப்புங்கள்

நேசிப்பாதாய் மட்டும் ..... இருக்காதே -என்னை ... சுவாசிப்பாதாய் -இரு ...!!! + குறுங்கவிதை SMS அனுப்புங்கள் 

கெட்ட நடத்தையால் கெட்டுப்போகாதே

கெ டுதி கொண்ட உணவுகள் வேண்டாம் .... கெ டுதி கொண்ட உணர்வுகள் வேண்டாம் .... கெ டுதி என தெரிந்த செயல்கள் வேண்டாம் .... கெ டுதி கொண்ட எண்ணங்கள் வேண்டாம் .... கெ டுதிக்கு கெடு வைக்காமல் வாழ்ந்திடுவோம் .....!!! கெட்ட  உணர்வால் கெட்டார் கோவலன் .... கெட்ட  எண்ணத்தால் கெட்டனர் கௌரவர் ..... கெட்ட  செய்யலால் கெட்டார் ராவணன் .... கெட்ட  நடத்தையால் கெட்டுப்போகாதே ..... கெட்ட வன் என்றபெயர் சடுதியில் நீங்காது ....!!! கெச்சை க்கு தேர் கொடுத்தான் பாரி .... கெட்டி யாய் வள்ளல் பெயர் பெற்றான் பாரி .... கெம்பி  செய்யும் செயல்களால் கெட்டவர் அதிகம் ...... கெக்கலி த்து சிரிக்கவைக்கும் செயல்வேண்டாம் .... கெடி யுடன்  கெழி  கொண்ட வாழ்க்கை வாழ்வோம் ....!!!

நீ அதை கவிதை என்கிறாய் ...!!!

என் காதல் வலிகளை.... வார்த்தையால் தர .... முடியவில்லை .....!!! வரிகளாய் தருகிறேன் ....!!! நீ அதை கவிதை என்கிறாய் ...!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

அடிக்கடி பார்த்திருகிறாய்....?

நீ என்னை எத்தனை முறை .... அடிக்கடி பார்த்திருகிறாய்....? நான் எத்தனைமுறை உன்னை ... பார்த்து கண்சிமிடினேன் ....? வானத்து நட்சத்திரங்கள் .... தான் பதில் சொல்லனும்...!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

ஏமாற்றம் அதிகம் ....!!!

ஒரு.... தலை காதலில் .... ஏக்கம் அதிகம் .... இரு...... தலை காதலில் .... ஏமாற்றம் அதிகம் ....!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

கனவில் காண விரும்பவில்லை

உன்னை கனவில் காண ..... விரும்பவில்லை உயிரே .... கனவுபோல் களைந்து .... விடகூடாது என்பதால் ....!!! நினைவிலும்  வாழ விரும்பவில்லை ..... தூக்கத்தில் நீ தொலைந்து .... விடுவாய் என்பதற்காக ..... உயிரே உன்னை உயிராய் .... காதல் செய்யவே தவிக்கிறேன் .... உயிர் உள்ளவரை காதல் செய்ய ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 15 கவிப்புயல் இனியவன்

உணர்வு தெரியும் உயிரே

உன்  வருகைக்காக தினமும் .... காத்திருக்கிறேன் .... நீ வந்தாயா ..? என்னை .... கடந்து சென்றாயா ,,,,,? யார்கண்டது ....? நிச்சயம் என்னை - நீ  கடந்து சென்றிருக்க மாட்டாய் .... கடந்து சென்றிருந்தால் ..... இதயத்தில் ஒரு பாரம் .... ஏற்பட்டிருக்கும் ..... முகம் தெரியாவிட்டால் என்ன ....? மூச்சுகாற்றின் உணர்வு .... தெரியும் உயிரே ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 14 கவிப்புயல் இனியவன்

மூச்சு உள்ளவரை வாழ்வேன்

ஒருமுறை .... காதல் செய் உயிரே .... மறு ஜென்மம் வரை ... உன்னையே காதல் .. செய்வேன் ......!!! என்னை நிழலாக .... ஏற்றுகொள் உன்னையே .... பின்தொடர்ந்து வருவேன் .... என்னை மூச்சாக ஏற்றுக்கொள் .... உன் மூச்சு உள்ளவரை .... வாழ்வேன் .....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 13 கவிப்புயல் இனியவன்