இடுகைகள்

ஜூலை 23, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொ(ல் )லைக்காட்சி ஆதிக்கம் ....!!!

நீண்டுகொண்டே போகிறது ... தொலைகாட்சி தொடர்கள் .... சுருங்கிக்கொண்டே போகிறது ... உறவுகளின் தொடர்பு ....!!! வந்த உறவை வரவேற்க ..... நேரமற்று... விருப்பமற்று .... படலையுடன் திருப்பியனுப்பும்.... தொ(ல் )லைக்காட்சி ஆதிக்கம் ....!!! + கே இனியவனின்  பல்வகை கவிதைகள்  வாழ்கை கவிதை

கொடுமையை உணர்கிறேன் ....!!!

காதலுக்கு தெரியவில்லை எல்லை ... அதிகம் நேசித்துவிட்டேன் .... விஷத்தை பருகிய ... அவஸ்தை படுகிறேன் ....!!! நீ என்னை விலக்கும் போதெலாம் -தனிமையின் கொடுமையை உணர்கிறேன் ....!!! + கே இனியவனின் பல்வகை கவிதைகள் காதல்தோல்வி  கவிதை

உன்னோடு எடுத்த செல்ஃ யும் ..

உன்னோடு .... எடுத்த செல்ஃ யும்  நீ பேசிய வார்த்தையின் .... கைபேசி பதிவும் .... உன் ப்ரோஃ பைல் படமும் ... நாம் பிரிந்திருந்தாலும் ..... நினைவுகளை உயிர்கிறது ...!!! + கே இனியவனின்  பல்வகை கவிதைகள்  கைபேசி கவிதை

பூ மாலை

வாழ்கை தொடக்கம் வாழ்கை முடிவு பூ மாலை + கே இனியவனின் பல்வகை கவிதைகள் ஹைக்கூ

நட்பு ஒரு தராசு ....!!!

நட்பு , நண்பன் .... ஒன்று இல்லாவிட்டால் .. மயான உலகில் .... வந்திருப்பேன் ....!!! எந்த துன்பம் வந்தாலும் .... அருகில் இருந்து ஆறுதல் ..... எந்த இன்பம் வந்தாலும் .... வஞ்சகம் இல்லாத உறவு .... இன்பத்திலும் .... துன்பத்திலும்  நட்பு ஒரு தராசு ....!!! + கே இனியவனின்  பல்வகை கவிதைகள்  நட்பு கவிதை

கே இனியவனின் பல்வகை கவிதைகள்

நீ சிரித்த சின்ன சிரிப்பு ... என் சிந்தைவரை ... நிலைத்துவிட்டது ....!!! எத்தனை துன்பம் வந்தும் ... அத்தனைக்கும் மருந்து .... உன் கன்னகுழி சிரிப்புதான் ... உன்னை நினைக்காத இதயம் .... எனக்கு தேவையே இல்லை ...!!! + கே இனியவனின் பல்வகை கவிதைகள் காதல் கவிதை 

வாஸ்து பார்த்து கட்டிய வீடுகள்

வாஸ்து பார்த்து கட்டிய .... வீடுகள் அழகானவை அல்ல ... வீடு கட்டிய தொழிலாளியின் .... வயிறு குளிர கூலி கொடுத்த .... வீடுகளே அழகானது ....!!! அளவான மண் கல் .... அதற்கேற்ப சிமென்ற் .... மட்டுமல்ல கலவை ...! தொழிலாளியின் வியர்வையும் .... கலந்திருக்கிறது .... வீடுகளின் உறுதிக்கு அதுவும் ... காரணம் மறந்து விடாதீர் ....!!! + கே இனியவன் சமுதாய சிறு கவிதைகள்

வெல்ல முடியவில்லை ....!!!

பயந்து பயந்து செய்த .... காதல் - பாடையில் .... கொண்டுபோய் முடித்தது ..... பாழாய் போன சாதியை .... வெல்ல முடியவில்லை ....!!! பள்ளியில் சேர்ப்பதற்கு .... சாதி சான்றிதழ் போல் .... காதலுக்குமா எடுக்கமுடியும் ..? பாழாய் போன காதலுக்கு .... புரியமாட்டேன் என்கிறதே ....!!! + கே இனியவன் சமுதாய சிறு கவிதைகள்

சமுதாய சிறு கவிதைகள்

ஈரமாக இருந்த நிலம் .... வறண்டு வருவதுபோல் .... விவசாயியின் மனமும் .... வறண்டு வருகிறது .....!!! கடனை கொடுக்கமுடியாமல் ..... உயிரை கொடுகிறார்கள் .... உலக மயமாக்கலின் ..... ஈர்ப்பு உலக முதலீட்டை .... அதிகரிக்க செய்கிறது ..... உணவளிப்பவனை.... உதறி தள்ளி விடுகிறது .....!!! + கே இனியவன் சமுதாய சிறு கவிதைகள்