இடுகைகள்

அக்டோபர் 30, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அது என் மூச்சு ....!!!

என் இதயத்தை ... எங்கு என்றாலும் வீசி விடு ... என் கவிதையை வீசி விடாதே ...!!! கவிதை எனக்கு பேச்சு அல்ல அது என் மூச்சு ....!!! காதல் கண்ணில் ஆரம்பிக்கும்.... அது மாயையாய் மாறலாம் ... கவிதை உணர்வால் வரும் ... என்றும் என்னோடு இணைந்து ... கொண்டே இருக்கும் ...!!! 

உதட்டால் வலிகளை

காதலில் உதட்டால் இன்பம்  தந்து ... இதயத்தில் வலிதருவதே ... வழமை ....!!! நீ ஏனடி ... இதயத்தில் இன்பம் தந்து உதட்டால் வலிகளை தந்துகொண்டிருக்கிறாய் ...!!!

கதிர் வீச்சு கண்ணாடி நீ ...!!!

என் காதலை என்னிடம் .... ஒப்படைத்த போதுதான் ... புரிந்தது உனக்கு .... காதலிக்க தெரியாது ......!!! எல்லோருக்கும் கண்ணீர் ... கவலையை தரும் ... எனக்கு கவிதை தருகிறது ....!!! என்னையே உன்னில் பார்க்கும்..... கதிர் வீச்சு கண்ணாடி நீ ...!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 740

உணர்ந்து கொண்டேன்...!!!

நிமிட கம்பி போல் .... உன்னை தொடர்கிறேன் ... நீ ஓடாத மணிக்கூடு ... உணர்ந்து கொண்டேன்...!!! என் இதயம் நீர் குமுழி ... விரும்பிய நேரத்தில் ... ஊதி உடைத்து விளையாடு ....!!! நானும் ஏழைதான் ... உன் முன்னால் காதல் .. பிச்சை பாத்திரம் ஏந்தி ... பலகாலம் நிற்கிறேன் ....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 739

தமிழ் இனம் எப்போதும் இறப்பதில்லை....!!!

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு 300 மேற்பட்ட  இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி! -------------------------------------------------------- + என் இனமே எமக்கு ... எங்கு போனாலும் மரணம் ...!!! இயற்கை அன்னைக்கும் ... தமிழனின் உடலங்கள் ... நன்றாக பிடித்திருக்குதோ .....? மலையகத்தின் முதுகெழும்பு ... தேயிலை -அது என் இனம் ... முதுகை கூனி கூனி ...... உழைக்கும் வியர்வைக்கு ... கிடைக்கும் வருமானம் ....!!! தேயிலையின் திரவம் சிகப்பு ... என் இனம் வியர்வையை .... இரத்தமாய் உழைத்த உழைப்பு ...! உழைப்புக்கு ஏற்ற கூலியில்லை .. இரத்தத்துக்கு சமனான நிறத்தில் ... தேயிலையின் நிறம் உண்டு ...!!! இதுவரையும் வியர்வையை .... கொடுத்த என் இனம் இப்போ ... தன் உயிரையும் உடலையும் .... உரமாய் கொடுத்துவிட்டதே  ...? தமிழ் இனம் எப்போதும் .... இறப்பதில்லை - அவர்கள் .. ஏதோ ஒரு வடிவில் ..... விதைக்கவே படுகிறார்கள் ,,,,,!!!