சனி, 10 ஆகஸ்ட், 2013

நீ நினைப்பதை

உன்னை தொலைவில் 
பார்க்கும் தொலை நோக்கி 
என்னிடம் இல்லை ....!!!
அருகில் பார்க்கும் 
நுண்பெருக்கியும்-இல்லை ...!!!

இதயத்தால் பேசக்கூடியது 
பார்க்கக்கூடியது 
உன்னையும் உன் 
காதலையும் தான் ....!!!

நீ நினைப்பதை 
நான் எழுதுகிறேன் 
நான் நினைத்தவற்றை 
நீ வீசுகிறாய் .....!!!

கஸல் ; 332   

வெளியில் தேடுகிறேன் ...!!!

உன்னை இதயத்தில் 
தேடி களைத்துவிட்டேன் 
வெளியில் தேடுகிறேன் ...!!!

தங்கத்தை 
உருக்கினாலும் 
குணம் மாறாது 
நம் காதல் போல் ...!!!

நீ 
என் சுவாசம் 
உனக்கு ஏன் என் மீது 
அசுவாசம்....?

கஸல் 335 

எட்டி உதைக்கிறது உன் இதயம் .....!!!

எனக்கும் உனக்கும் 
சின்ன வேறுபாடுதான் 
நான் உன்னை காதலிக்கிறேன் 
நீ காதலிக்கவில்லை ....!!!

நாள் தோறும் 
கைநீட்டுகிறேன் 
உன் நினைவுக்காக 

உன்னருகில் வருகையில் 
எட்டி உதைக்கிறது 
உன் இதயம் .....!!!

கஸல் 334  

நாம் மட்டும் விதிவிலக்கா ...?

மரணத்தின் 
பின் பேசப்படுவது 
காதல் தோல்விதான் ....!!!
நாம் மட்டும் விதிவிலக்கா ...?

என் மனம்  நிரம்பி விட்டது 
உன் நினைவுகளால் -இனி 
பேசிப்பயனில்லை 
உன்னுடன் ......!!!

அடிமேல் அடியடித்தால் 
அம்மியும் நகரும் ...!!!
நீ இரும்பு -எப்படி ...?
நகர்வாய் .....?   

கஸல் 333 

நீ காதலை சுமையாக நினைக்கிறாய் ....!!!

காற்றில் திரியும் 
கண்ணுக்கு தெரியாத 
தூசிபோல் -நம் 
காதல் .......!!!

கிளிக்கு தெரிவதில்லை 
பொறிவைகப்படுவது 
தான் கூட்டில் 
அடைபடுவதற்கு-என்று 
காதலைப்போல் ....!!!

பனித்துளியை புல்
நுனி சுமையாக 
நினைப்பது இல்லை 
நீ காதலை சுமையாக 
நினைக்கிறாய் ....!!!

கஸல் 331   

எத்தனை நவீனத்தாலும்

அன்பே நீண்டநாள் 
கடிதம் போடாமல் விட்டுவிடாதே 
தந்திக்கு நடந்த பரிதாபம் 
கடிதத்துக்கும் வந்துவிடும் ...!!!

நாம் என்றாலும் மரபுகளை 
வாழவைப்போம் 
குறுஞ்ச்செய்தி அனுப்பினாலும் 
கடிதத்தையும் நிறுத்திவிடாதே ....!!!

கடிதத்தில் காணும் சுகம் 
எத்தனை நவீனத்தாலும் 
அழித்துவிட முடியாது ....!!!


நிலவே உனக்கும்

நிலவே உனக்கும் 
எனக்கும் என்ன வேறுபாடு ...?
உன் அருகில் ஒரு காதலன் .....
இல்லை நீ காதல் சொல்ல ......
என்னருகில் காதலன் ......
இருக்கிறான் ....!!!

என்ன ஒற்றுமை தெரியுமா ...?
நீ காதலன் இல்லாமல் 
தவிக்கிறாய் ...
நான் காதலன் இருந்தும் 
தவிக்கிறேன் ......!!!


சென்று விட்டாய் ....!!!

தனிமையில் இருந்தேன் 
தானாக வந்தாய் 
காதல் கொண்டாய்
இப்போ 
தனிமைப்படுத்தி 
சென்று விட்டாய் ....!!!
இரு எண்ணத்துடன் ..
தனிமையாக 
இருப்பதில் சுகம் 
உண்டுதான் கண்ணே ....!!!

காட்சியும் கவிதையும் ...28

வீட்டை கலைக்காதீர்


தயவு செய்து எம் 
வீட்டை கலைக்காதீர் 
அழகுக்காக எம் வீட்டை 
அபகரிப்பவர்களே 
உங்கள் செயலால் 
அருகி வரும் இனத்தில் 
நாங்களும் 
ஒன்றாகி விட்டோம் ....!!!

காட்சியும் கவிதையும் 3

விலக்கிக்கொண்டவன் ஞானி ....!!!


அன்புக்கு கட்டுப்பட்டால் 
அது உனக்கொரு விலங்கு...!!! 

ஆசைக்கு கட்டுப்பட்டால் 
அதுவும் உனக்கு விலங்கு ....!!!

கோபப்பட்டால் தானாக வரும் 
விலங்கு .....!!!

வாழ்க்கையில் ஒரு 
விலங்கு வந்தே தீரும் 
விலக்கிக்கொண்டவன் 
ஞானி ....!!!

காட்சியும் கவிதையும் 29

ஆபத்தும் உண்டு ....!!!


அழகையும் 
சிரிப்பையும்
பார்க்கும் 
உள்ளங்களே 
ஆபத்தும் உண்டு ....!!!
மறந்து விடாதே ....!!!

காட்சியும் கவிதையும் 27

அற்புத கலை நாங்கள்...!!!

கட்டிட கலையின் 
அற்புத கலை நாங்கள்...!!!

கட்டப்பட்ட கட்டிடத்தை 
ரசிப்பவர்களே ....!!!!

கற்களை இப்படி 
அடுக்குவதும் 
ஒரு கலைதான் ...!!!


மாயக்கண்கள்
எம்மை கூலியாக தான் 
பார்க்கும் ....!!!


காட்சியும் கவிதையும் 26 

சிறப்புடைய இடுகை

அழுதவலி வலி புரியவில்லை .....

பிறந்தவுடன் ..... அழுங்குழந்தையே.... உயிர் வாழும் .....!!! இப்போதுதான் .... புரிகிறது ..... உன்னை பிரியும்போது .... அழுவதற்கு ..... ...