இடுகைகள்

டிசம்பர் 29, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!

சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! பேச்சுத்தமிழ் கவிதைகள்  ---------------------------------------------- வெத்தலைய வாய்நிறைய போட்டு .... வீராப்பாய் வெறும் வார்த்தைபேசி .... ஒத்தரூபா காசுகூட இல்லாமல் .... சுத்தி திரியிறாயே சித்தப்பு .... இது தப்பெண்னு தெரியல்லையோ .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! ஊராருக்கு ஞாயம் சொல்லி ... நாட்டாமை என்ற பெற்றெடுக்கும் .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு ..... உன் வீட்டு ஞாயத்தை எந்த .... நாட்டாமை சொல்லப்போறாறோ ...? சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! வேட்டியை மட்டும் மடிச்சுகட்டி .... வெள்ளத்துரைபோல் நடிப்பு காட்டி .... வேசம் கலைந்தால் வெளுத்துபோகும்.... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! ^^^ மொழிக்கவிதை  கவிப்புயல் இனியவன்  யாழ்ப்பாணம்  மாணவர்களுக்கு உதவும் கவிதை

பேச்சுத்தமிழ் கவிதைகள்

சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! பேச்சுத்தமிழ்   கவிதைகள் ---------------------------------------------- வெத்தலைய வாய்நிறைய போட்டு .... வீராப்பாய் வெறும் வார்த்தைபேசி .... ஒத்தரூபா காசுகூட இல்லாமல் .... சுத்தி திரியிறாயே சித்தப்பு .... இது தப்பெண்னு தெரியல்லையோ .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! ஊராருக்கு ஞாயம் சொல்லி ... நாட்டாமை என்ற பெற்றெடுக்கும் .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு ..... உன் வீட்டு ஞாயத்தை எந்த .... நாட்டாமை சொல்லப்போறாறோ ...? சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! வேட்டியை மட்டும் மடிச்சுகட்டி .... வெள்ளத்துரைபோல் நடிப்பு காட்டி .... வேசம் கலைந்தால் வெளுத்துபோகும்.... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! ^^^ மொழிக்கவிதை கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம் மாணவர்களுக்கு உதவும் கவிதை 

அடுக்கிடுக்குத் தொடர்கவிதை

அடுக்கிடுக்குத் தொடர்கவிதை  காதல் கவிதை  --------------------------------------------------- கன்னங்கரிய முடியழகி...... செக்கச் சிவந்த உடலழகி..... சின்னஞ்சிறிய கண்ழகி ..... பென்னம் பெரிய பின்னலழகி ....!!! வெட்டவெளி பாதையிலே .... தன்னந்தனியே வந்தவளே ... நடுநடுங்க வைக்கிறாயே .....  பதைபதைத்து போனானே ,,,,,,!!! பென்னம் பெரிய ஆசையுடன் ..... தன்னந்தனியே தவிக்கிறேன் .... பச்சைப்பசேரென ஒரு பதிலை .... திக்குத்திணற சொல்வாயோ ....? ^^^ மொழிக்கவிதை  கவிப்புயல் இனியவன்  யாழ்ப்பாணம்  மாணவர்களுக்கு உதவும் கவிதை 

அடுக்கு தொடர் கவிதைகள்

புத்தாண்டு கவிதை அடுக்கு தொடர் கவிதை ----------------------------------------- வருக வருக புத்தாண்டே வருக ...... தருக தருக  இன்பவாழ்க்கை தருக...... பொழிக பொழிக  வளம் பொழிக ..... வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!! போ போ பழைய ஆண்டே போ ..... ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு ..... போதும் போதும் துன்பங்கள் போதும் .... ஐயோ ஐயோ தாங்காது மனம் ஐயோ....!!! அணு அணுவாய் பெற்றோம் இன்பம் ..... வண்ண வண்ண கனவுகள் கண்டோம் .... விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் .... ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!! இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே .... அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே... உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே... நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!! ^^^ மொழிக்கவிதை கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம் மாணவர்களுக்கு உதவும் கவிதை

இதுவே காதல் தண்டனை ...!!!

உன்னை மன்னித்து விடுவேன்..... என்னை மன்னிக்கவே மாட்டேன்.... காதலுக்காய் அனைத்தையும் ..... இழந்த என்னை மன்னிக்கேன்  ..... இதுவே  காதல் தண்டனை ...!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 35

உன் நினைவுகளே ஆறுதல்

நீ அமைதியாக இருந்து ... எனக்கு சமாதி கட்டுகிறாய் .... நான் சமாதியாக இருந்தே .... அமைதி குலைகிறேன்..... உன் நினைவுகளே ஆறுதல் .....!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 34

ஐந்து வரி கவிதைகள் ......!!!

கண்ணீர்த்துளிகள் உனக்கு .... முத்துக்களாய் தெரிகிறது ..... கண்கள் ஆழ்கடலாய் தெரிகிறது .... எதற்காக இதயத்தை பறிக்கிறாய் .... நானே உனக்கு சிறந்த காதலன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 33

வறுமை விவசாயி

வறுமை விவசாயி  ------------------------------ பானை வினைபவன் வீட்டில் .... பானை யுண்டு அரிசியில்லை .... அரிசியை விளைவிப்பவன் வீட்டில் .... பானையுமில்லை அரிசியு மில்லை .... விதைத்து விதைத்து உயிர் காத்தவன் ... விழி பிதுங்கி கிடக்கிறான் மூலையிலே ..... ..........................................உண்பதும் உடுப்பதும் ...வயலிலே .......!!! ..........................................உறங்கி விழிப்பதும்........வயலிலே .......!!! ..........................................குடும்பமே உழைக்குது ...வயலிலே ......!!! ..........................................நஞ்சுடன் வாழ்கிறான் ...வயலிலே .......!!! வறுமை ஒரு கொடுமை ........ கடுமையாய் உழைத்தும் .... கடுகளவேணும் குறையவில்லை ..... கடன் பட்ட விவசாயி வீட்டில் ..... ................................................................கை கால் மறத்துபோக...... ................................................................மெய் உடல் இழைத்து போக ..... ................................................................கண்கள் மறைந்து போக ..... .................................

சொல்லாடல் கவிதைகள்

புரட்சி  ----------- இனி  ஆயிரம் கவிஞர்கள் தோன்றினாலும் ... ஆயிரம் ஆயிரம் கவிதைகள் பிறந்தாலும் .... ஓராயிரம் பாராட்டுகள் கிடைத்தாலும் ..... பல்லாயிரம் ரசிகர்கள் வந்தாலும் ........ ................................................................அத்தனை அத்தனை புகழ் வந்தாலும்.....  ................................................................அஃது ஒன்றும் பயனே இல்லை......  ................................................................உலக விடுதலைக்காய் போராடிய...... ................................................................எழுச்சிமிகு புரட்சி கவிஞர்களின் ...... ................................................................தீப்பொறி பறக்கும் வரிகளுக்கு முன் .... ................................................................நாமெல்லாம் ஒரு தூசி தூசி தூசி ........!!! பிரான்சில் அடிமை புரட்சி ..... இங்கிலாந்தில் கைதொழில் புரட்சி ...... இந்தியாவில் சுதந்திர புரட்சி ...... சோவியத் ரசியாவில் தொழில் புரட்சி .... இலங்கை தீவில் வாழுருமை புரட்சி ........ .................................