இடுகைகள்

அக்டோபர் 6, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொருந்தாதவளா...?

பொருத்தமில்லாதது .. பொருந்தாது .. பொருந்தக்கூடியது பொருந்தாமல் இருக்காது பொருத்தமானவளா ...? பொருந்தாதவளா...? தாமைரை இலையில்.... தண்ணி நிற்காது என்கிறாய்... தாமரையே தண்ணீரில் தான்... இருக்கிறது..... நான் உன்னோடு கண்ணீரில் ... நிற்பதுபோல் ....!!! நீ என் பகலும் இரவும்..... மீண்டும் என்னிடம் நீ... வரத்தான் வேண்டும் .... பகலில் இருளாய் இருக்கிறேன் .... இருளில் பகலாய் இருக்கிறேன் ...!!! + கே இனியவன் - கஸல் 88

உலகில் வாழ்ந்து பயனில்லை

ஊரின்.... நாக்கை நீ அடைக்கமுதல் உன் நாக்கை  நீ அடக்கு ..... தானாக அடங்கும் உலகம் ...!!! சிந்தித்து பேசத்தெரியாத உன்னைவிட ... வேதனைப்படுத்தி பேசும்  உன்னைவிட ... பண்பாக்க பேசதெரியாத உன்னைவிட ... பேசவே முடியாமல் இருக்கும் உயிர்கள் .... எத்தனையோ மடங்கு மேல் ...!!! உறுதியில்லாத மனம் உள்ளவன் .. உலகில் வாழ்ந்து பயனில்லை ... மனம் திறந்து பேசத்தெரியாதவன் .... மனிதனாக வாழ தகுதியில்லாதவன் ...!!!

கே இனியவன் - கஸல் 87

நீ எனக்காக  படைக்க பட்டவள் ... நான் உனக்காக ... இறக்கபோகிறவன்...!!! உன்னை .. அடையமுடியாத ... அதிஸ்ரசாலி ....!!! இரவுக்கு இருள் அழகு .. இருண்ட காதலுக்கு நீ  அழகு ....!!! காதலுக்கு கவிதை அழகு .... கண்ணீருக்கு நீ அழகு ...!!! + கே இனியவன் - கஸல் 87

காதலை நேசி நட்பை சுவாசி

கண்ணுக்குதெரியாத காற்றும்… அவளுக்கு புரியாத கவிதையும்… சொல்லாத முடியாத காதலும்… கலையாத கனவும்.. என்றும் இனிமை ....!!! மரணத்தை நோக்கி ... நகரும் வாழ்க்கையில் .... நம்மை வாழ சொல்லி .... வற்புறுத்துவது .... காதலும் நட்பும் தான்,... காதலை நேசி ....... நட்பை சுவாசி........ வாழ்க்கை வசந்தமாகும் ...!!!

நீ தான் என் உயிர்

நான் வெறும் கடதாசி .. நீ தான் அதில் உள்ள .. கவிதை வரிகள் ... நீ இல்லையென்றால் ...? நான் வெறும் .. துரிகை -நீ தான் ... அதில் ஓவியம் .... கொஞ்சம் சிரித்துகொள் ...!!! நான் ... வெறும் உடல்.... நீ தான் என் உயிர் ... நீ பிரியப்போகிறாய் என்கிறாயே -என்னை பற்றி கொஞ்சமேனும் சிந்தித்தாயா ....??? + கே இனியவன் - கஸல் 86