இடுகைகள்

ஏப்ரல் 22, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தப்புதான் உயிரே ....!!!

என்னை தயவு செய்து ..... மரணமாக்கி விட்டு .... நீ மௌனமாக இரு ...!!! காதலையும் ..... காதலியையும் ...... மலரோடு ஒப்பிட்டது ... தப்புதான் உயிரே ....!!! உன் நினைவுகளால் ... துருப்பிடித்து விட்டது ... என் இதயம் - திருத்துவதும் துரத்துவதும் உன் கையில் ...!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;795

எங்கிருந்தாலும் வாழ்க .

உன் சிரிப்பால் மலர்ந்த ... காதல் - ஊர் சிரிக்கும்படி ஆகிவிட்டது ....!!! ஓட்டபந்தயத்தில் ... இறுதிநேரத்தில் இரண்டாம் ... இடத்தை அடைந்ததுபோல் ... என் காதல் ....!!! என்னோடு வாழ்வாய் ... என்றிருந்தேன் ... எங்கிருந்தாலும் வாழ்க .. என்று வாழ்க என வாழ்த்தவைத்துவிட்டாய் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;794

ஏன் வாடி விழுந்தாய் ...?

உலகமே காதலால் ... இயங்குகிறது .... அப்படிஎன்றால் நம் காதல் தோற்றதேன் ...? பூவை தந்து காதல் செய்த நீ - ஏன் வாடி விழுந்தாய் ...? அழவும் ஆசையாய் இருக்கிறது - நீ சுட்டுவிரலால் கண்ணீரை துடைத்து விடுவதுபோல் .. உன் நினைவால் ...!!!  + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;793

கண்ணீரால் அணைக்கிறேன் ....!!!

காதல் தோற்றத்துக்கு  குற்றம் சொல்லேன் ... உன்னை படைத்த ... இறைவனை நிந்திக்கிறேன் ...!!! என் கவிதைகள்  உன்னை பற்றிய தீ  பந்தங்கள் - கண்ணீரால்  அணைக்கிறேன் ....!!! நீ அழகு ... உன் காதல் ..... அழகாகவில்லை... காத்திருப்பேன் -உன்  அழகு மறைந்தாலும்  காதலுக்காய் ....!!! + கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை ;792

காதலே விழுந்துவிட்டதே ...

என் கவிதையின் விசிறி எழுத்து - நீ விசிறி விட்டு போய் ... விட்டாய் .....!!! விட்டு கொடுப்பது நல்லது ... என்னை விட்டு கொடுத்தது ... தப்பாய் போயிற்றே ...!!! காதலில் விழலாம் ... காதலே விழுந்துவிட்டதே ... நமக்கு ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;791